பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / குடிமக்களுக்கான சேவைகள் / ஆன்லைன் சேவைகள் / ‘ஆதார் எண்’ணை ‘பான் எண்’ணுடன் இணைக்கும் விதம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

‘ஆதார் எண்’ணை ‘பான் எண்’ணுடன் இணைக்கும் விதம்

‘ஆதார் எண்’ணை ‘பான் எண்’ணுடன் இணைக்கும் விதம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

'ஆதார் எண்' இன்று அனைத்துக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. இந்நிலையில், 'பான் எண்'ணுடன் 'ஆதார் எண்'ணை இணைத்தல் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் எப்படி இணைப்பது என்பதில் பலருக்கும் குழப்பம். அதை ஆன்லைன் மூலம் எளிதாகச் செய்துவிடலாம். முதலில், வருமான வரித்துறையின் 'லாக் இன்' பக்கமான https://incometaxindiaefiling.gov.in/#innerlink -க்குச் செல்ல வேண்டும். உங்களுக்கு 'லாக் இன் ஐடி', 'பாஸ்வேர்டு' நினைவில் இருந்தால் நீங்கள் நேரடியாக 'லாக் இன்' செய்யலாம். இல்லாவிட்டால், 'பர்காட் பாஸ்வேர்டு'-ஐ கிளிக் செய்து அடுத்த பக்கத்துக்குச் செல்ல வேண்டும். உங்களின் பான் எண்தான் உங்களுடைய 'யூசர் ஐடி' என்பதால் அதையும், 'கேப்சா கோடு'-ஐயும் டைப் செய்து அடுத்த பக்கத்துக்குச் செல்லுங்கள். அங்கே 'டிராப் டவுன்' பாக்சில் நான்கு ஆப்ஷன்கள் இருக்கும். அதில் மூன்றாவது ஆப்சனான 'ஓடிபி'-ஐ தேர்வு செய்யுங்கள்.

அடுத்த பக்கத்தில் உங்களின் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால், அதற்கு ஓடிபி அனுப்பப்படும். அதை வைத்து உங்கள் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளலாம். செல்போன் எண் பழையதாக இருந்தால், புதிய எண்ணைக் கொடுத்து அதையும் இங்கே மாற்றிக்கொள்ளலாம். பாஸ்வேர்டை மாற்றிய பிறகு 12 மணி நேரம் கழித்துத்தான் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியும். 12 மணி நேரம் கழித்து மீண்டும் 'லாக் இன்' செய்ய வேண்டும். அப்போது வரும் 'பாப் அப் விண்டோ'வில், ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா எனக் கேட்கப் படும். அதன் மூலம் 'லிங்' செய்ய முடியும். 'பாப் அப் விண்டோ'வை விட்டுவிட்டால், புரொபைல் செட்டிங் சென்று அங்கும் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்கலாம். புரொபைல் செட்டிங்கில் நமது பெயர், பிறந்த தேதி ஆகிய தகவல்களை கவனமாகப் பதிவு செய்ய வேண்டும்.

நாம் கொடுக்கும் தகவல்கள், முன்பு கொடுத்த தகவல்களுடன் பொருந்தினால் ஆதார் எண் கேட்கப்படும். அந்த எண்ணை இட்டு, 'லிங் நவ்' என்பதை கிளிக் செய்தால் போதும். உங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும். நீங்கள் கொடுக்கும் பெயர் அல்லது இனிஷியல் போன்றவை பொருந்தவில்லை என்று 'மெசேஜ்' வந்தால், உடனே, கட்டணமில்லா ஆதார் உதவி தொலைபேசி எண்ணான '1947'-ஐ தொடர்புகொண்டு, என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு அதன்படி செய்யுங்கள்.

ஆதாரம் : கல்விச்சோலை

3.07142857143
R.S.சண்முகம் May 21, 2020 10:16 AM

மக்களுக்கு மிகவும் அருமையான தகவல் நன்றி 🙏 நண்பரே

durai Jan 25, 2018 11:10 AM

இன்னும் நிறைய தகவல்கள் வேண்டும்

babu Jan 25, 2018 11:08 AM

சூப்பர் பயனுள்ள தகவல்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top