பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உச்ச நீதிமன்றம் தொடர்பான சேவைகள்

உச்ச நீதிமன்றம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் மற்றும் சேவைகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.

உச்ச நீதிமன்றத்தில் இணைய வழி வழக்கு தாக்கல்

இந்தியாவின் உச்ச நீதிமன்றமும், இணையதள நிர்வாகம் மூலமாகத் தனது சேவைகளை இந்தியக் குடிமகன்களின் வீடுகளுக்கே எடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது சம்மந்தமாக அக்டோபர் 2, 1996ஆம் ஆண்டில் உச்சநீதி மன்றம் இணையதளம் மூலமாக வழக்கைத் தாக்கல் செய்யலாம் என்ற நடைமுறையை அமலுக்குக் கொண்டுவந்தது. வீட்டில் இருந்தபடியே வலைதளம் மூலமாக வழக்கு தாக்கல் செய்ய இது மிகவும் எளிய வழியாகும். இணையதளம் வலையகம் மூலமாக வழக்கு தாக்கல் செய்ய எந்த வழக்கறிஞரின் உதவியும் தேவையில்லை. இந்தச் சேவையை சாதாரண குடிமகனிலிருந்து, வழக்கறிஞர் வரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தச் சேவையைச் செய்ய, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

 • உச்சநீதிமன்றத்தின் இணையகம் மூலம் முதல் முறையாக வழக்குத் தாக்கல் செய்பவர்கள், தங்களது பெயரை உபயோகிப்பாளர் கையொப்பப் பகுதியில் பதிவுசெய்ய வேண்டும்
 • இணையகம் மூலமாக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டுமானால், அவர் அதிகாரப்பூர்வமான வழக்கறிஞராகவோ, அல்லது வழக்குத் தொடரும் நபராகவோ மட்டுமே இருக்க வேண்டும்.
 • நீங்கள் பதிவு பெற்ற வழக்கறிஞராக இருந்தால் மட்டுமே, வழக்கறிஞர் என்ற விருப்பத் தேர்வு இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் வழக்குத் தொடர்பவரே தனது பெயரை அதற்காண இடத்தில் பதிவு செய்ய வேண்டும்.
 • முதல் முறையாகப் பதிவு செய்யும்போது, அவசியமான தகவல்களான, விலாசம், தொடர்பு கொள்ள ஏதுவான விவரங்கள், இணையக மெயில் அடையாளம், போன்றவைகள் பதிவு செய்வது அவசியம்.
 • தொழில்முறை வழக்கறிஞர் அவரது சங்கேத எண்ணை (பதிவுபெற்ற வழக்கறிஞராக இருந்தால்) இணையதள நுழைவு சொல்லை குறிப்பிட வேண்டும். தனிநபராக, சொந்தப் பொறுப்பில் வழக்குத் தாக்கல் செய்பவர் அவரது நுழைவு சொல்லை புதிதாக உருவாக்கி நுழைவுக் கட்டத்தில் குறிப்பிட வேண்டும். இதையடுத்து, தேவையான விவரங்கள் பதிவு செய்யப்பட்டவுடன், நுழைவு சொல் மற்றும் ரகசியகச் சொல் சேர்க்கப்படும்.
 • இவ்வாறாக வெற்றிகரமாக இணையதளத்தில் நுழைந்தவுடன், பொறுப்பாகாமை அறிவிப்பு, கணினித் திரையில் தோன்றும்
 • "இந்த அறிவிப்பின் விவரத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்ற குறியீட்டை தேர்வு செய்தவுடன், அடுத்த நிலைக்கு செல்லலாம். "இதற்கு நான் ஒப்பவில்லை" என்ற பதிலைத் தேர்வு செய்யும் பட்சத்தில், மறுபடியும் நுழைவு பக்கத்திற்கு சென்று விடும்.
 • அடுத்த கட்டமாக, உபயோகிப்பாளர், தனது வழக்கின் விவரங்களைக் கணினியில் பதிவுசெய்து, வழக்கு தாக்கல் செய்யலாம்.
 • 'புதிய வழக்கு’ என்ற விருப்பநிலை குறியீட்டை தேர்வு செய்வதன் மூலம் புதிய வழக்கைத் தாக்கல் செய்ய முடியும்.
 • ‘திருத்தம்’ என்றே தேர்வுக் குறியீடு உபயோகித்து, ஏற்கனவே தாக்கல் செய்து முடித்த வழக்கு விவரங்களில் மாறுதல்கள் செய்ய முடியும். அதே சமயத்தில் நீதிமன்றக் கட்டணத்தைக் கட்டுவதை துவங்காதவரை திருத்தங்கள் செய்யலாம்.
 • நீதி மன்றக் கட்டணம் கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலமாக மட்டுமே செலுத்த முடியும்
 • கணினி மூலமாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விவரங்களில் தவறுகள் இருப்பின், உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம், சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கோ அல்லது வழக்கைப் பதிவு செய்த தனி நபருக்கோ அவைகளைச் சுட்டிக்காட்டி இ-மெயில் மூலம் அனுப்பப்படும்.
 • மேலும் உதவி தேவைப்பட்டால் ‘உதவி’ என்கிற விருப்பத் தேர்வுக் குறியீட்டைப் பயன்படுத்தலாம்.
வழக்கு நிலவரம் http://www.casestatus.nic.in என்கிற இணைய தளச் சேவையின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகள் பற்றிய விவரங்களை மனுதாரர்கள் / எதிர் மனுதாரர்கள் / வழக்கறிஞர்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த "வழக்கு நிலவரம்" பற்றிய இணைய தளத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்பட்ட / ஒத்தி வைக்கப்பட்ட வழக்குகள், கீழ் நீதிமன்ற விவரங்கள், மனுதாரர்கள் / எதிர் மனுதாரர்கள் / வழக்கறிஞர்கள் பற்றிய விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். நீதிமன்றத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்ட அடுத்தகணமே அவ்வழக்கின் நிலவரம் இணையதளத்தில் கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட வழக்கில் அதுவரை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஆணைகளின் விவரங்களும் 'வழக்கு நிலவர' இணைய தளத்தில் கிடைக்கும். நிலுவையிலுள்ள வழக்குகள் பற்றிய விவரங்களை வீட்டிலிருந்தே இணைய தளம் மூலம் தெரிந்துகொள்ள முடிவதால், இச்சேவைக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புக் கிடைத்துள்ளது. இதன் மூலம் மக்கள் தங்களது இருப்பிடத்திலிருந்து தில்லிக்கு வந்துதான் வழக்கின் நிலவரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலைமை மாறியிருக்கிறது. நீங்கள் பதிவுசெய்துள்ள வழக்கின் நிலவரத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கான இணைய தளம்:

இணையதளத்தில் கிடைக்கும் நீதி மன்றங்களில் தினமும் பிறப்பிக்கும் ஆணைகள்

உச்சநீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் கையெழுத்திடும் ஆணைகள், உடனுக்குடன் வலைத்தளத்தில் கிடைக்கபெறுகின்றன. கையெழுத்திட அலுவலக ஆணை நகல்கள் பெறுவதற்கு வழக்கமான அலுவலக முறையை பின்பற்ற வேண்டியிருப்பதால், வழக்கு சம்பந்தபட்டவர்கள், மேலே குறிப்பிட்ட வலைதளத்தில், உடனடியாக தகவல்களை பெறலாம். இது வழக்கு சம்மந்தப் பட்டவர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடையே மிகப்பெரிய ஆதரவை அடைந்துள்ளது. தகவல்கள் அந்தந்த நீதிமன்றங்கள் சேகரித்து வைத்துக்கொள்ளும் பலரும், இந்த வலைதளத்தில், இலவசமாக ஆணை சம்பந்தமான குறிப்பை பெறலாம். வழக்கு எண் மற்றும் வாதி பிரதிவாதி பெயர்கள் தெரியாமலும், ஆணைக்குறிப்பை பெறலாம்.

உச்ச நீதிமன்றத்தில் இணையம் மூலம் வழக்குப் பதிவு செய்தல்

தினசரி தீர்ப்புகள் - இணையதளத்தில்

உச்ச நீதிமன்றத்திலும் தில்லி உயர் நீதிமன்றத்திலும் தினசரி பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் நீதிபதிகள் கையெழுத்திட்ட வுடன் உடனடியாக இணையதளத்தில் கிடைக்கப் பெறுகின்றன. இவைகள் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தகவல் தரும் ஒரு சாதனமே ஆகும்; ஏனெனில், கையெழுத்திடப்பட்ட உத் தரவுகளின் நகல்களை அவர்கள் வழக்கமான அரசு வழிமுறையின்படித்தான் பெற்றாக வேண்டும். வாதி, பிரதிவாதி மற்றும் வழக்கறிஞர்களிடையே இச்சேவை குறுகிய காலத்திற்குள் மிகவும் பிரபலமாகிவிட்டது. அந்தந்த நீதிமன்றங்கள் அந்தந்த வழக்குகள் தொடர்பான விவரங்களைத் தருகின்றன. ஒரே வழக்கு சம்பந்தப்பட்ட பல்வேறு உத்தரவுகளை தேவைக்கேற்பத் தேட வழிசெய்யும் தேடல் எனப்படும் 'ஸ்ர்ச்' ஏற்பாடும் இவ்விணைய தளத்தை உபயோகிப்பவர்களுக்குக் கிட்டும். வழக்கு எண் அல்லது வழக்கில் தொடர்புடையோரின் பெயர் ஆகியன பற்றித் தெரியாமலேயே தேவைப்படும் நீதிமன்ற உத்தரவுகளை நம்மால் பார்க்க முடிகிறது.

உச்ச நீதி மன்றத்தின் வாரம் மற்றும் அன்றன்றைய வழக்குப் பட்டியலை அறிந்துகொள்ளுதல்

உச்ச நீதிமன்றத்தில் ஒவ்வொரு நாளும் நடக்க இருக்கும் வழக்குகளின் பட்டியலை ஒரு வாரத்திற்கு முன்பாகவே இணையதளத்தில் நேர்முகமாகத் (online) தருகிறது.

 

விருப்பமுள்ள வழக்கறிஞர்களும், வழக்குத்தொடுக்கும் மக்களும் இப்பட்டியலை

படி 1. வழக்குகளின் பட்டியலை பின்வருமாறு மீட்கலாம் (retriered)

• நீதிமன்றம் வாரியாக (court wise)

• வழக்கறிஞர் வாரியாக (Lawyer wise)

• வழக்கு எண் வாரியாக (Case Number wise)

• நீதிபதி வாரியாக (Judge wise)

• வாதி/பிரதிவாதி வாரியாக (Respondent/Petitioner wise)

நீதிமன்ற வாரியாக வழக்குகளின் பட்டியல் (Cause list through Court wise)

• நீதிமன்ற வாரியான பட்டியலை (Cause list through Court wise) கிளிக் செய்யவும்

• கீழிறங்குபட்டி பெட்டியிலிருந்து நீதிமன்ற எண்ணைத் தேர்வு செய்து சமர்ப்பிக்கவும்.

வழக்கறிஞர் வாரியாக வழக்குகளின் பட்டியல் (Cause list through Lawyer wise)

• வழக்கறிஞர் வாரியான பட்டியலை (Cause list through Lawyer wise) கிளிக் செய்யவும்.

• வழக்கறிஞரின் பெயரைப் பதிவு செய்து சமர்ப்பிக்கவும்.

வழக்கு எண் வாரியான வழக்குப்பட்டியல் (Cause list through Case number wise)

• வழக்கு எண் வாரியான பட்டியலை (Cause list through Judge wise) கிளிக் செய்யவும்.

• வழக்கு எண்ணைப்பதிவு செய்து சமர்ப்பிக்கவும்

நீதிபதி வாரியான வழக்குப்பட்டியல் (Cause list through Judge wise)

• நீதிபதி வாரியான பட்டியலை (Cause list through Judge wise) கிளிக் செய்யவும்

• கீழிறங்கு பெட்டியிலிருந்து (drop down box) நீதிபதியின் பெயரைத் தேர்வு செய்து சமர்ப்பிக்கவும்.

பிரதிவாதி/வாதி வாரியான வழக்குப் பட்டியல் (Cause list through Respondent/Petitioner wise)

• பிரதிவாதி/வாதி பட்டியலை (Cause list through Respondent/Petitioner wise) 'கிளிக்' செய்யவும்.

• பிரதிவாதி அல்லது வாதியின் பெயரைப் பதிவு செய்து சமர்ப்பிக்கவும்.

அனைத்து வழக்கு பட்டியலையும் கண்டுபிடித்தல் (Find out the Entire cause list)

• Entire cause list என்ற பட்டியலை 'கிளிக்' செய்யவும்.

உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட உங்கள் வழக்குகளின் நிலையை அறிந்து கொள்க

இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் மற்றும் தீர்க்கப்பட்ட வழக்குகள் குறித்த தகவல்களை, வழக்கறிஞர்கள், வழக்கு தொடுத்தவர்கள் மற்றும் கீழ் நீதிமன்ற (Lower court) நீதிபதிகள் ஆகியோர் தெரிந்து கொள்ளும் வகையில் இத்தகவல் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றின் மூலம், வழக்குகள் குறித்த செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

• வழக்கு எண் வாரியாக (Case Number wise)

• தலைப்பு வாரியாக (வாதி/பிரதிவாதியின் பெயர்) (Title wise (Petitioner or Respondent’s Name))

• வழக்கறிஞரின் பெயர் வாரியாக (Advocate’s Name wise)

• உயர்நீதிமன்ற வழக்கு எண் வாரியாக (High Court Number wise)

• நாட்குறிப்பு எண் வாரியாக (Diary Number wise etc.)

1. வழக்கின் நிலையை CASE STATUS PORTAL OF SUPREME COURT OF INDIA (http://www.courtnic.nic.in/courtnicsc.asp)) என்ற இணைய முகவரியில் அறிந்து கொள்ளலாம்

2. வழக்கின் நிலையை பின்வரும் வழியின் மூலம் நீங்கள் அறியலாம்.

• மேலே கூறப்பட்டுள்ள அனைத்து செய்திகளும் இடது பக்கத்தில் இருக்கும். தேவையானதைத் தேர்ந்தெடுத்து வழக்கின் நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

வழக்கு எண் வாரியாக (Case Number wise)

• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (drop down box) வழக்கின் வகையைத் தேர்வு செய்யவும்.

• வழக்கின் எண்ணைப் பதிவு செய்யவும்.

• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (drop down box) வருடத்தைத் தேர்வு செய்து சமர்ப்பிக்கவும்.

தலைப்பு (வாதி/பிரதிவாதியின் பெயர்) வாரியாக. (Title (Petitioner or Respondent’s Name) wise)

• வாதி அல்லது பிரதிவாதியின் பெயரைப் பதிவு செய்யவும்

• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (drop down box) ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யவும்

• தெரியாது (Don’t Know)

• மனுதாரர் (Petitioner) அல்லது

• பிரதிவாதி (Respondent)

• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (drop down box) வருடத்தைத் தேர்வு செய்து சமர்ப்பிக்கவும்.

வழக்கறிஞர் பெயர் வாரியாக (Advocate’s Name wise)

• வழக்கறிஞரின் பெயரைப்பதிவு செய்யவும்

• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (drop down box) வருடத்தைத் தேர்வு செய்து சமர்ப்பிக்கவும்.

உயர்நீதிமன்ற எண் வாரியாக (High Court Number wise)

• உங்கள் மாநிலத்தை கீழிறங்குப்பெட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.

• கீழ் நீதிமன்ற எண்ணைப் பதிவு செய்யவும்.

• தீர்ப்பு தேதியைக் கீழிறங்குப் பெட்டியிலிருந்து தேர்ந்தெடுத்துச் சமர்ப்பிக்கவும்.

நாட்குறிப்பு வாரியாக (Diary Number wise)

• நாள் குறிப்பு எண்ணைப் பதிவு செய்யவும்.

• கீழிறங்கு பெட்டியிலிருந்து (drop down box) வருடத்தைத் தேர்வு செய்து சமர்ப்பிக்கவும்.

இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் காணுதல்/கண்டுபிடித்தல்

தீர்ப்புத்தகவல் அமைப்பு, (JUDIS) பல உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும் தன்னுள் அடக்கியுள்ளது. தீர்ப்புகளை (Judgment Information System (JUDIS)) (http://judis.nic.in/) என்ற இணையதள முகவரியில் காணலாம். உச்சநீதிமன்றத்தீர்ப்புகளை பின்வரும் முறையில் மீட்டெடுத்துக் காணலாம்.

• வாதி/பிரதிவாதி வாரியாக

• நீதிபதி பெயர் வாரியாக

• வழக்கு எண் வாரியாக

• தீர்ப்புத் தேதி வாரியாக.

• அரசியலமைப்புக் குழு வாரியாக

• அகரவரிசைப்படுத்தப்பட்ட வழக்குப்பட்டியல் வாரியாக

• தீர்ப்பு வாரியாக (Held wise)

• பொருள்/சொற்றொடர் வாரியாக (Text/phrase wise)

• சட்ட வாரியாக (Act wise) போன்றன.

மேற்குறிப்பிடப்பட்ட அனைத்துப்பட்டியலுகளும் இணையதளத்தின் இடது பக்கவாட்டில் இருக்கும். தேவைப்படும் தீர்ப்பினைக் குறித்து அறிய உரிய பட்டியலை கீழ்க்காணும் முறையில் கிளிக் செய்ய வேண்டும்.

வாதி/பிரதிவாதி வாரியாக (Petitioner/Respondent wise)

• வாதி/பிரதிவாதி பெயரைப்பதிவு செய்யவும்

• கீழிறங்குப் பெட்டி (drop drown box)யிலிருந்து ஏதேனும் ஒன்றைத்தெரிவு செய்யவும். அதாவது, 'தெரியாது' அல்லது வாதி அல்லது பிரதிவாதி.

• கீழிறங்குப் பெட்டியிலிருந்து இரண்டு தேதிகளையும் (From – To) குறிக்கவும்.

• இறுதியாக அறிக்கையின் நிலையை அறிய Reportable status ஐ தேர்ந்தெடுக்கவும் அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்கவும்.

நீதிபதி வாரியாக (Judge name wise)

• நீதிபதி பெயரைப்பதிவு செய்யவும்

• கீழிறங்குப் பெட்டியிலிருந்து இரண்டு தேதிகளையும் (From – To) குறிக்கவும்.

• இறுதியாக அறிக்கையின் நிலையை அறிய status ஐ தேர்ந்தெடுக்கவும் அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்கவும்.

வழக்கு எண் வாரியாக (Case number wise)

• கீழிறங்குப்பெட்டி (drop drown box) யிலிருந்து வழக்கின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

• வழக்கின் எண்ணை பதிவு செய்யவும்.

• கீழிறங்குப்பெட்டியிலிருந்து வருடத்தைத் தெரிவு செய்யவும்.

• இறுதியாக, (drop drown box) ஐ தேர்ந்தெடுக்கவும் அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்கவும்.

தீர்ப்பு வழங்கிய நாள் வாரியாக (Date of judgment wise)

• கீழிறங்குப் பெட்டியிலிருந்து இரண்டு தேதிகளையும் (From – To) குறிக்கவும்.

• இறுதியாக அறிக்கையின் நிலையை அறிய Reportable status ஐ தேர்ந்தெடுக்கவும் அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்கவும்.

அரசியலமைப்புக் குழு வாரியாக (Constitutional bench wise)

• கீழிறங்குப்பெட்டியிலிருந்து (drop drown box) இரண்டு தேதிகளையும் From – To) தேர்ந்தெடுக்கவும்.

• இறுதியாக, Reportable status ஐ தேர்ந்தெடுக்கவும் அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்கவும்.

அகர வரிசைப்படுத்தப்பட்ட வழக்குப்பட்டியல் வாரியாக (Alphabetical case indexing wise)

• வாதி அல்லது பிரதி வாதியின் பெயரைப் பதிவு செய்யவும். உதாரணமாக (Amar)

• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (drop drown box) இரண்டு தேதிகளையும் தேர்வு செய்யவும்.

• இறுதியாக, Reportable status ஐ தேர்ந்தெடுக்கவும் அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்கவும்.

தீர்ப்பு வாரியாகவும். பொருள்/சொற்றொடர் வாரியாகவும் சட்டம் வாரியாகவும், தற்குறிப்பு வாரியாகவும் தீர்ப்புகளை இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

2.79166666667
V pravinkumar Nov 07, 2019 03:54 PM

என்னுடைய வழக்கு principal District sessions court in Coimbatore வழக்கு நடக்கிறது அதைப்பற்றி முழுவிவரம் தெரிந்து கொள்வது எப்படி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top