பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பிற சேவைகள்

இ - டிக்கெட் பெறுதல், வங்கிகளில் உங்கள் குறைகளை பதிவு செய்தல் என பல்வேறு தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இரயில் மின்-டிக்கெட் (இ - டிக்கெட்) பெறுதல்

மின் டிக்கெட் பற்றி

மின் டிக்கெட் அல்லது இ-டிக்கெட் என்பது இரயில் நிலைய கவுண்டர்களுக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தோ, அல்லது தகவல் கியோசுகள் மூலமோ பெறுதல் ஆகும். இது இரயில் நிலைய கவுண்டர்களில் பெறப்படும் டிக்கெட் போன்றதே ஆகும். பெறுபவர்கள் பயணத்தின் போது, அடையாளச் சான்று வைத்திருக்க வேண்டும்.

தேவை

 • சரியான மின்னஞ்சல் முகவரி
 • வங்கிக் கணக்கு (ATM மற்றும் டெபிட் அட்டை அல்லது வலைதள வங்கி பரிவர்த்தனை வசதி அல்லது கிரடிட் அட்டை)
 • வலைதளம் இனைக்கப்பட்ட கணினீ
 • www.irctc.co.in யுடன் பதிவு செய்யப்பட்டு, சரியான பயனாளர் ID மற்றும் இரகசிய சொல்

யார் டிக்கெட் பெறலாம் ?

 • மேலே கூறப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் கொண்ட நபர், இந்தியன் இரயில்வே மூலம் பயணம் செய்ய விரும்பினால் டிக்கெட்டைப் பெறலாம்
 • மேலும் குடும்ப நபர்கள் அல்லது நண்பர்களுக்காகவும் டிக்கெட்டை பெறலாம்

அடையாள அட்டை தேவை

இ-டிக்கெட்டுடன் பயணம் செய்யும் பயணியர், அடையாள அட்டையை பெற்றிருக்க வேண்டும். கீழே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாளத்திற்கு உபயோகிக்கலாம்.

 1. பாஸ்போர்ட்
 2. வாக்காளர் அடையாள அட்டை
 3. Pan அட்டை
 4. வாகன ஓட்டுரிமை
 5. மத்திய/மாநில அரசின் புகைப்பட அடையாள அட்டை

எவ்வாறு இ-இரயில் டிக்கெட்டை பெறுவது ?

வழி. 1 IRCTC இணையதளத்துடன் பதியவும்

வழி 2 www.irctc.co.in இணையதளத்திற்கு சென்று உள்ளே நுழைவதற்கான மெனுவை தேர்வு செய்யவும்

வழி. 3 IRCTC இணையதளத்துடன் பதிவு செய்த பின்னர், உங்களுக்கான பயனாளர் மற்றம் இரகசியச் சொல்லை பெறுவீர்கள்.

வழி. 4 www.irctc.co.in என்ற வலைதளத்திற்கு சென்று உங்களின் பயனாளர் ID மற்றும் இரகசியச்சொல்லை டைப் செய்து உள்ளே நுழையவும்

வழி. 5 உங்களின் பயணம் ஆரம்பிக்கும் நிலையத்தை ஃப்ரம்(From) மெனுவில் டைப் செய்து, அந்த நிலையத்தின் கோடை தேர்வு செய்யவும்

வழி. 6 உங்களின் பயணம் முடியும் நிலையத்தை To மெனுவில் டைப் செய்து, அந்த நிலையத்தின் கோடை தேர்வு செய்யவும்

வழி. 7 பயணத்தின் தேதி மற்றும் பயண வகுப்பினை (அதாவது இரண்டாம் வகுப்பு சிலிப்பர், மூன்றாம் ஏ.சி, இரன்டாம் ஏ.சி)

வழி. 8 இ-டிக்கெட்டுக்கான பெட்டியை தேர்வு செய்யவும் தட்காலில் பதிவு செய்ய வேண்டுமென்றால் தட்காலுக்கான பெட்டியையும் தேர்வு செய்யவும்.

வழி. 9 Find Train மெனுவை கிளிக் செய்யவும், இதன் பின்னர் இவ்விரு நிலையங்களுக்கிடையேயான அனைத்து இரயில்களும் பட்டியல் இடப்படும்

வழி. 10 உங்களின் வசதிக்கேற்ப தேவையான இரயிலை தேர்வு செய்யவும். பின்னர் அந்த இரயிலில், இருக்கை இருக்கின்றதா என்று பார்ப்பதற்கு Availability மெனுவை கிளிக் செய்யவும்

வழி. 11 இருக்கைகள் இருப்பின், Book Ticket மெனுவை கிளிக் செய்யவும்

வழி. 12 யார் பயணம் செய்யவேண்டுமோ, அவரின் பெயர், வயது, பாலினம் மற்றும் இருக்கை வகுப்பினை டைப் செய்யவும்.

வழி. 13 பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Go மெனுவை அழுத்தவும்

வழி. 14 டிக்கெட்டின் முழுவிபரமும் திரையில் உங்கள் முன்னர் தோன்றும். விபரங்கள் சரியாக இருப்பின், Make Payment பட்டனை கிளிக் செய்யவும்

வழி. 15 எல்லா வங்கியின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை தேர்வு செய்தவுடன், வங்கியின் இணையதளத்திற்கு செல்லப்படும்.

வழி. 16 பயனாளர் ID , இரகசிய சொல், மற்றும் ஏதேனும் கேட்கப்பட்ட விபரத்தை அளித்து, தொகையை கட்டவும்

வழி. 17 அதன் பின்னர் இரயில் டிக்கெட் தோன்றும். இதனை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.

வழி. 18 இரயில் டிக்கெட் பதிவு மற்றும் PNR போன்ற விபரங்களுடன் உங்கள் கைபேசிக்கு SMS அனுப்பப்படும்

வழி. 19 இ-டிக்கெட் பிரிண்ட் செய்தவுடன் Log Out வலை தளத்திலிருந்து வெயியே வரவும்

பெறப்பட்ட டிக்கெட்டை எவ்வாறு நீக்குதல்

வழி. 1 வலை தளத்தினை திறந்து பயனாளர் ID மற்றும் இரகசிய சொல்லுடன் உள்ளே நுழையவும்

வழி. 2 Cancel E-Ticket மெனுவை தேர்வு செய்யவும் அல்லது My Transaction மெனுவில் உள்ள Booked History மெனுவை தேர்வு செய்யவும்.

வழி. 3 IRCTC யின் இரகசிய சொல்லை டைப் செய்து, Go பட்டனை அழுத்தவும்.

வழி. 4 எந்த டிக்கெட்டை நீக்க வேண்டுமோ அதனை தேர்வு செய்து, Cancel E-Ticket மெனுவை தேர்வு செய்யவும்.

எவ்வாறு உங்கள் டிக்கெட்டின் PNR நிலையை அறிவது ?

கைபேசி மூலம்

வழி. 1 உங்களுடைய 10 இலக்க PNR எண்ணை 139 என்ற எண்ணுக்கு SMS அணுப்பவும்

வலைதளம் மூலம்

வழி. 1 www.indianrail.gov.in அல்லது www.irctc.co.in என்ற வலைதளத்தில் பத்து இலக்க PNR எண்ணை டைப் செய்து நிலையை அறியலாம்.

வங்கிகளில் உங்கள் குறைகளை பதிவு செய்வது

வங்கிகள் குறை தீர்ப்பாயத் திட்டம் 2006-ஆம் ஆண்டு வணிக மயமாக்காப்பட்ட வங்கிகள் (பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை), பிராந்திய ஊரக வங்கிகள், முறைப்படுத்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றின் சேவையில் உள்ள வாடிக்கையாளர்களின் மனக்குறைகளை அவர்கள் தெரிவிப்பதற்கு வழி வகுக்கிறது. வங்கிகள் வாடிக்கையாளர்களின் மனக்குறையினை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்த்துவைப்பது கட்டாயமாகும். வங்கிகளின் பதிலில் வாடிக்கையாளர் திருப்தி அடையாவிட்டாலோ அல்லது வங்கிகள் வாடிக்கையாளரின் குறைகளை தீர்த்து வைக்காவிட்டாலோ வாடிக்கையாளர்கள் வங்கிகள் குறை தீர்ப்பாயத்திடம் மேல் முறையிடலாம்.

வங்கி வாடிக்கையாளர்கள் கீழ்க்கண்ட வங்கி சேவைகள் தொடர்பான தங்களது குறைகளை விண்ணப்பமாக தெரிவிக்கலாம்

 • ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பண மாற்றம்
 • வரைவோலைக்கு பணம் பெறுதல்
 • ஏடிஎம் மற்றும் பணம் பெறும் அட்டை
 • கடன் அட்டை
 • இணையதளம் மூலம் வங்கி வசதி
 • வங்கிக்கடன்
 • நடமாடும் வங்கி மற்றும் இதர

குறைகளின் அடிப்படை

வங்கி குறைதீர்ப்பாயம் அல்லது வங்கியிடம் எந்த ஒரு நபரும் கீழ்க்கண்ட எந்த வங்கி அல்லது இணையதள வங்கி சேவை குறைகள் அல்லது இதர சேவைக்குறைபாடுகளின் அடிப்படையில் தங்களுடைய குறைகளை பதிவு செய்யலாம்.

 • பணம் கொடுக்காமல் இருத்தல் அல்லது பணம் கொடுப்பதில் தேவையற்ற காலதாமதம், வரைவோலை, இதர பில்கள் மூலம் பணம் பெறுவதில் காலதாமதம்
 • ஏடிஎம், கடன் அட்டை, பணம் பெறும் அட்டை போன்றவை சம்பந்தமான சேவை குறைபாடுகள்
 • எந்த ஒரு சேவைக்காகவும் குறைந்த அளவு தொகையினை முறையான காரணமின்றி ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல், தேவையில்லாமல் கட்டணம் வசூலித்தல்
 • பணம் திரும்ப தராமல் இருத்தல் அல்லது பணம் திரும்ப தருவதில் காலதாமதம்
 • வரைவோலை, டிராப்ட்கள், மற்றும் பண ஆணை போன்றவற்றை தராமல் இருத்தல் அல்லது இவற்றை தருவதில் காலதாமதம்
 • வேலை நேரத்தினை முறையாக பின்பற்றாதது
 • கடன் மற்றும் முன்பணம் போன்றவற்றைத் தவிர இதர வங்கி சேவைகள் அளிக்காமை அல்லது கால தாமதம் செய்தல்
 • டெபாசிட் தொகையினை திரும்ப தராமல் இருத்தல், வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் பணம் போடுதல், போன்றவற்றில் கால தாமதம், வட்டி விகிதம், டெபாசிட், நடப்புக்கணக்கு மற்றும் இதர கணக்கு போன்றவற்றில் ரிசர்வ் வங்கியின் வரைமுறைகளை பின்பற்றாமல் இருத்தல்
 • ஓய்வூதியம் தராமல் இருத்தல் அல்லது ஓய்வூதியம் தருவதில் காலதாமதம்
 • ரிசர்வ் வங்கி, இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு வரி செலுத்தும் போது ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல் அல்லது ஏற்றுக்கொள்ளுவதில் காலதாமதம்
 • அரசாங்க பிணையப்பத்திரங்கள் போன்றவற்றை விநியோகிக்காமல் இருத்தல், விநியோகிப்பதில் ஏற்படும் குறைபாடுகள், விநியோகிப்பதில் காலதாமதம்
 • போதுமான காரணங்களின்றியும், முன்னறிவிப்பின்றியும் டெபாசிட் கணக்குகளை முடித்தல்
 • கணக்குகளை முடிப்பதில் அல்லது மூடுவதற்கு ஒப்புக்கொள்ளாதது அல்லது காலதாமதம் செய்தல்
 • வங்கியால் வரையறுக்கப்பட்ட செயல்முறைகளை பின்பற்றாததது
 • கடன் விண்ணப்பங்களை பரிசீலித்து கடன் வழங்க ஒப்புக்கொள்ளுதல் மற்றும் கடன் வழங்குதலில் காலதாமதம்
 • முறையான காரணங்கள் இல்லாமல் கடன் விண்ணப்பங்களை விண்ணப்பதாரரிடமிருந்து பெற்றுக்கொள்ள மறுத்தல்
 • வாடிக்கையாளர்களிடன் வங்கிகள் நடந்து கொள்ளவேண்டிய விதி முறைகளை பின்பற்றாமல் இருத்தல்
 • கடன்களை வசூலிக்க முகவரை நியமிப்பது போன்றவற்றில் ரிசர்வ் வங்கியின் வரைமுறைகளை பின்பற்றாமல் இருத்தல்

எங்கு குறைகள் பற்றிய விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பது ?

 • உங்கள் கணக்கு இருக்கும் குறிப்பிட்ட வங்கிகளில் குறைகள் அடங்கிய விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்
 • குறைகள் பற்றிய விண்ணப்பத்தினை அதற்குரிய அதிகாரியிடம் சமர்ப்பிக்கவேண்டும்
 • குறைகள் பற்றிய விண்ணப்பம் ஒரு வெள்ளைத்தாளிலோ அல்லது அதற்குரிய வரையறுக்கப்பட்ட விண்ணப்பமாகவோ வங்கிகளில் சமர்ப்பிக்கப்படவேண்டும்
 • குறைகள் பற்றிய விண்ணப்பத்தினை பெற்றுக்கொண்டவுடன் அதற்குரிய அதிகாரி விண்ணப்பத்தினை பெற்றுக்கொண்டதற்கான உறுதிஅட்டையினை விண்ணப்பதாரரிடம் தரவேண்டும்

குறைகள் பற்றிய விண்ணப்பத்தினை வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டிய செயல்முறை

 • குறைகள் பற்றிய விண்ணப்பத்தினை கடிதமாகவோ அல்லது இணையம் மூலமாகவோ வங்கியிடம் சமர்ப்பிக்கலாம்
 • கடிதம் வாயிலாக நீங்கள் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதாக இருந்தால் கீழ்க்கண்ட ஆவணங்களை உங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்
  1. உங்களுடைய வங்கிக்கணக்கு பாஸ் புத்தகம் – அடையாள ஆவணமாக
  2. உங்களுடைய வேண்டுகோளுக்கான சாட்சிக்கான ஆவணங்கள்
 • குறிப்பிட்ட வங்கி அதிகாரியிடமிருந்து விண்ணப்பத்தினை சமர்ப்பித்தவுடன் விண்ணப்பத்தினை சமர்ப்பித்ததற்கான உறுதி அட்டையினை பெற்றுக்கொள்ளவும்

இணையம் மூலம் உங்கள் குறைகளை பதிவு செய்தல்

 • பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் இணையம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்ய வசதியினை ஏற்படுத்தியுள்ளன
 • உங்களுடைய குறைகளை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
 • சில வங்கிகள் இன்னும் இணையம் மூலம் வாடிக்கையாளர் குறைகளை பதிவு செய்வதற்கு வசதிகள் ஏற்படுத்தவில்லை. உங்களுடைய வங்கி அத்தகையாதக இருப்பின் கடிதம் வாயிலாகவே உங்கள் குறைகள் பற்றிய விண்ணப்பத்தினை பதிவு செய்யமுடியும்.

குறைகளை பற்றிய விண்ணப்பத்தினை பதிவு செய்தவுடன் என்ன செய்வது?

 • வாடிக்கையாளர்கள் குறைகளை தீர்க்க வங்கிகள் பொதுவாக 2-3 வார காலம் எடுத்துக்கொள்ளும். ஆனால் இந்த கால இடைவெளி வங்கிகளுக்கு வங்கி வேறுபடும்
 • உங்களுடைய விண்ணப்பத்திற்கு வங்கி பதிலளிக்காமலோ அல்லது குறைகளை தீர்ப்பதில் காலதாமதம் செய்தாலோ நீங்கள் வங்கியினை தொடர்பு கொண்டு உங்கள் விண்ணப்பத்தினை பற்றி நினைவூட்டலாம். இதற்கு பின்பும் வங்கிகள் பதிலளிக்காமல் இருந்தால் நீங்கள் ‘ வங்கி குறை தீர்ப்பாயத்தினை’ அணுகலாம்
 • வங்கிகள் உங்களுக்கு அளித்த பதிலில் நீங்கள் திருப்தி அடையாமல் இருந்தாலும் நீங்கள் வங்கி குறை தீர்ப்பாயத்தினை அணுகலாம்
 • உங்களுடைய குறைகள் பற்றிய விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள வங்கிகள் குறை தீர்ப்பாயம் நாடெங்கிலும் 15 மண்டல அளவிலான அலுவலகங்களைக் கொண்டுள்ளது

வங்கி குறை தீர்ப்பாயத்திற்கு எவ்வாறு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது?

 • ஒவ்வொரு வங்கிகள் குறை தீர்ப்பாயமும் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அதிகாரத்தினை கொண்டுள்ளன
 • உங்கள் மாநிலம் அல்லது வங்கிக்கு மேலுள்ள வங்கிகள் குறை தீர்ப்பாயத்திடம் உங்களது விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்
 • வங்கிகள் குறை தீர்ப்பாயத்திடன் உங்கள் குறைகள் பற்றிய விண்ணப்பங்களை கடிதம் வாயிலாகவோ அல்லது இணையம் வாயிலாகவோ நீங்கள் தெரிவிக்கலாம்
 • கடிதம் வாயிலாக நீங்கள் உங்கள் விண்ணப்பத்தினை தீர்ப்பாயத்திடம் அளிக்க விரும்பினால் அதன் இணைய தளத்தில் ‘விண்ணப்பம்’ என்ற பொத்தானை சொடுக்கி விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம்
 • உங்களுடைய விண்ணப்பத்துடன் உங்களுடைய வேண்டுகோளுக்கு ஆதாரமாக கீழ்க்கண்ட ஆவணங்களையும் இணைக்கவேண்டும்
  • சேவைக்குறைபாடு பற்றி வங்கிக்கு நீங்கள் தெரிவித்ததற்கு வங்கி வழங்கிய சான்று
  • உங்களுடைய வங்கிக்கணக்கு புத்தக பாஸ் புத்தகத்தின் நகல்- அடையாளத்திற்கான சான்றாக
  • வங்கிக்கு அவற்றின் சேவைக்குறைபாட்டினை நீங்கள் தெரிவத்ததற்கான நகல்
  • வங்கிக்கு நீங்கள் சேவை குறைபாடு பற்றிய விண்ணப்பம் குறித்து நீங்கள் வங்கிக்கு நினைவூட்டியதற்கான சான்று
  • உங்களுடைய முறையீட்டுக்கு ஆதாரமாக இருக்கும் எந்தவொரு ஆவணமும்
 • உங்கள் மாநிலத்திலுள்ள வங்கிகள் குறை தீர்ப்பாயத்தின் முகவரியினை அறிய கீழ்க்கண்ட இணைய தள முகவரியினை சொடுக்கவும்
 • வங்கிகள் தீர்ப்பாயத்திடம் நீங்கள் உங்களுடைய விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது உத்திரவாத அட்டை இணைக்கப்பட்டு விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்

இணையம் மூலம் வங்கிகள் குறை தீர்ப்பாயத்திற்கு விண்ணப்பித்தல்

 • இணையம் மூலம் வங்கிகள் தீர்ப்பாயத்திற்கு விண்ணப்பிக்க இங்கே சொடுக்கவும்
 • குறையினை தெரிவிப்பதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்தவுடன் உங்களுடைய வங்கியின் சேவை குறைபாட்டிற்கான ஆதாரத்தினை இணைக்கவும். இது பிடிஎப் அல்லது டெக்ஸ் பார்மெட்டாக இருக்கவேண்டும்
 • உங்களுடைய விண்ணப்பத்துடன் மேற்கூறிய ஆவணங்களையும் இணைக்கவும்
 • நீங்கள் உங்களுடைய விண்ணப்பத்தினை மின்ணணு அஞ்சலாக வங்கிகள் குறை தீர்ப்பாயத்திற்கு அனுப்பலாம்
 • வங்கிகள் குறை தீர்ப்பாயத்தின் மின்ணணு அஞ்சல் முகவரியினை தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்

KVIC படிப்புக்கு, ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

கதர் மற்றம் கிராமபுற தொழிற் கழகமானது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை சார்ந்த தேவையான பயிற்சியை அளித்து வருகிறது. இதனால் இவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு அதிகம் ஆகிறது. தற்பொழுது இந்த படிப்பானது, பின்வரும் 10 மாநிலங்களில் அளிக்கப்படுகிறது. பீகார், டெல்லி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒரிசா, தமிழ்நாடு, உத்தராஞ்சல், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம். இந்த கழகமானது பின்வரும் பயிற்சிகளை அளித்து வருகிறது.

 1. பானை தயாரிப்பு தொழில்நுட்பம்
 2. பாலிவஸ்திரா தொழில்நுட்பம்
 3. பட்டுநுால் உற்பத்தி மற்றும் நெய்தல்
 4. நுால்இழை கண்கானிப்பு
 5. சலவை சோப்பு தயாரித்தல்
 6. தேனீ வளர்ப்பு
 7. பிளாஸ்டிக் பதனிடு தொழில்நுட்பம்
 8. தையற்கலை மற்றும் எம்பிராய்டரி
 9. கணினி மென்பொருள் பயன்பாடு
 10. ஊதுபத்தி தயாரித்தல்
 11. டிடர்ஜெண்ட் சலவை பவுடர்
 12. அப்பளம் தயாரித்தல்
 13. பினாயில் தயாரித்தல்
 14. மெழுகுவர்த்தி தயாரித்தல்
 15. சுத்தம் செய்யும் பவுடர்
 16. பிளாஸ்டிக் பதனீட்டு வணிகம்
 17. கணினி பயன்பாடு
 18. பூ தாயாரித்தல் மற்றும் அழகு கலை பயிற்சி
 19. பட்டன் தயாரித்தல்
 20. வணிகதிறன் மேம்பாட்டு திட்டம்

கல்வி தகுதி

 • யார் ஒருவர் பத்தாம் வகுப்பு தேறியவரோ அவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பயிற்சிகளுக்கு, படிக்க எழுத மட்டும் தெரிந்தால் போதும்
 • அவர்கள் வயது 18-25-க்குள் இருக்க வேண்டும்
Filed under:
3.01923076923
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top