பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர்

வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள பல்வேறு மாநிலங்களின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, ஒவ்வொரு மாநில தேர்தல் ஆணையமும், ‘வாக்காளர் பட்டியல்களை’, இணையத்தில் பதிப்பித்திருக்கின்றன. உங்களுடைய மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் தேட முடியும்

வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயரை தேடுவதற்கு உங்களுடைய மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும்
சண்டிகார் அருணாச்சல பிரதேசம்
தாத்ரா & நாகர் ஹவேலி பீகார்
குஜராத் ஹிமாச்சல பிரதேசம்
ஜார்க்கண்ட் கேரளா
மத்திய பிரதேசம் மிசோரம்
நாகாலாந்து ஒரிசா
பஞ்சாப் சிக்கிம்
தமிழ்நாடு

பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பம்

 • ஒவ்வொரு வருடமும் ஜனவரி 01, அன்று ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடைந்திருந்தால், தன்னுடைய பெயரை சேர்ப்பதற்கு ஒருவர் விண்ணப்பிக்க முடியும்.
 • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் - 6 ஐ பயன்படுத்தவேண்டும்.
 • படிவம்- 6 டன், 2 வண்ணப் புகைப்படம் அல்லது கருப்பு வெள்ளை புகைப்படம் இணைக்கவேண்டும்.
 • பிறப்பு சான்றிதழின் நகல் இணைக்க வேண்டும் (அதாவது மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ் அல்லது மெட்ரிகுலேஷன் சான்றிதழ் அல்லது பள்ளி / கல்லூரியால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ்)
 • விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் (அதாவது வங்கி / அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம் அல்லது குடும்ப அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் / வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர் / தொலைபேசி / மின்சாரம் / எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற / பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகலை சான்றாக இணைக்க வேண்டும்.

பெயரை நீக்குவதற்கான விண்ணப்பம்

 • வேறு வாக்காள பகுதிக்கு அல்லது தொகுதிக்கு வாக்காளர் குடிபெயர்தல், மரணம், அல்லது தவறுதலான பதிவு செய்யப்பட்டிருந்தால், ஒருவர் பெயர் நீக்கத்திற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கமுடியும்.
 • இதற்காக, படிவம்-7 – ஐ பயன்படுத்தவேண்டும்.

பெயர் திருத்தத்திற்கான விண்ணப்பம்

 • உங்களுடைய தேர்தல் அடையாள அட்டையில் (எபிக்) அல்லது வாக்காளர் பட்டியலில் ஏதாவது தவறு ஏற்படும்போது (எ.கா - பெயரில், வயதில் அல்லது தகப்பனார் பெயரில் தவறு ஏற்படுதல்) தேவையான திருத்தங்கள் வேண்டி நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
 • தவறான பதிவின் திருத்தத்திற்க்கு படிவம்-8 –ஐ பயன்படுத்துங்கள்
 • அடையாளச் சான்றாக பிறப்பு சான்றிதழின் நகலை சமர்பிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பதிவின் இடமாற்றத்திற்க்கான விண்ணப்பம்
 • வேறு வாக்காள பகுதிக்கு அல்லது தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்த பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும்.
 • இதற்காக படிவம்-8A வை பயன்படுத்தவேண்டும்.
 • விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் அதாவது வங்கி / அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம் அல்லது குடும்ப அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் / வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர் / தொலைபேசி / மின்சாரம் / எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற / பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகலை சான்றாக இணைக்க வேண்டும்.

விண்ணப்ப படிவங்கள்

விண்ணப்பத்தை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்

நகராட்சி பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால், உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க:

 • துணை ஆணையர் அலுவலகம் (நகராட்சி அலுவலகம்)
 • அஞ்சல் அலுவலகங்கள்
 • வணிக வளாகங்களில் அமைந்திருக்கும் இடுபெட்டிகள்.
 • பெட்ரோல் விற்பனை நிலையங்கள்

நகராட்சி எல்லைக்குள் நீங்கள் வசிப்பவராக இருந்தால், உங்களுடைய மாவட்டங்களில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க:

 • துணை ஆட்சியரின் அலுவலகம்
 • வருவாய் டிவிசன் அலுவலரின் அலுவலகம் (வாக்காளர் பதிவு அலுவலர்)
 • வட்டாட்சியர் அலுவலகம் ( துணை வாக்காளர் பதிவு அலுவலர் )
3.0350877193
தங்கப்பாண்டி s /ஓ தங்கவேல் Dec 27, 2019 09:04 AM

பட்டியலில் வரிசை எண் கண்டறிதல்

சுஜிதா Dec 25, 2019 08:52 PM

வாக்காளர் பட்டியலில் எனது பெயரை எப்படி சேர்ப்பது

நஞ்சப்பன் Dec 22, 2019 05:37 PM

வார்டு மாறி வாக்கு உள்ளது எப்படி மாற்றுவது8597

நித்யா Dec 19, 2019 11:56 PM

வாக்காளர் அடையாள அட்டையில் முகவரிமற்றம்

பிலால் Dec 04, 2019 02:30 AM

வாக்காளர் பட்டியலில் எனது பெயர் உள்ளதா என்று பார்த்தால் எப்படி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top