অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

விசா(visa) பெறுவது எப்படி?

விசா(visa) பெறுவது எப்படி?

விசா பெறுவதற்கான வலைதளம்

  1. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும்.
  2. விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும்.
  3. ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை.
  4. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம்.
  5. பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.
  6. குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.
  7. இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com) வலைத்தளம் அமைந்துள்ளது.
  8. எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.
  9. இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.
  10. ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது.
  11. உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?
  12. அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, 'நான் இந்த நாட்டு குடிமகன்' என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
  13. விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
  14. இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net) எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  15. வெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கும், போக இருப்பவர்களுக்கும் இந்தத் தளங்கள் பயனுள்ளவைகளாக இருக்கின்றன.

அமெரிக்க விசா தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கே.1. ஒரு அமெரிக்க வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் எனது கடவுச்சீட்டு எவ்வளவு காலத்திற்குச் செல்லுபடியாவதாக இருக்க வேண்டியுள்ளது?

உங்களிடம் அமெரிக்காவில் நீங்கள் தங்குவதற்கு எண்ணம் கொண்டுள்ள காலத்திற்கு அப்பால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகிற, அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கான செல்லுபடியாகிறதோர் கடவுச் சீட்டு (நாடு-குறிப்பான ஒப்பந்தங்கள் விதிவிலக்குகளை வழங்கினால் ஒழிய) இருந்தாக வேண்டும்.

கே. 2. ESTA-விற்கு கட்டணம் எவ்வளவு மற்றும் அதனை யார் செலுத்த வேண்டும்?

வீசா தள்ளுபடித் திட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்குப் பயணம் செய்கிற அனைவருக்கும் ESTA பதிவு அவசியமாகிறது. ESTA பதிவிற்கு US$14 கட்டணமாக விதிக்கப்படுகிறது. டெபிட் கார்டு அல்லது பின்வரும் கிரெடிட் கார்டுகள் எதையேனும் உபயோகித்து கட்டணத்தைச் செலுத்தலாம்: வீசா, மாஸ்டர்கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரெஸ், அல்லது டிஸ்கவர். உங்களிடம் சரியான வகை கிரெடிட் கார்டு இல்லை என்றால், மூன்றாம் தரப்பினர் (பயண முகவர்கள், குடும்ப உறுப்பினர்கள் போன்றோர்) உங்களுக்காக உங்கள் ESTA கட்டணத்தைச் செலுத்தலாம். ESTA பதிவு மறுக்கப்பட்டால், கட்டணம் US$4 மட்டுமே.

கே. 3. எனக்குக் இரட்டைக் குடியுரிமை உள்ளது. அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய நான் எந்தக் கடவுச்சீட்டை உபயோகிக்க வேண்டுமா?

அமெரிக்கர் என்றில்லாத பட்சத்தில், நீங்கள் விரும்புகிற நாட்டை உபயோகித்து விண்ணப்பித்துக் கொள்ளலாம், ஆனால் உங்களது விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் அனைத்து குடியுரிமைகளையும் அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்கு வெளிப்படுத்தியாக வேண்டும். அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள், இரட்டைக் குடியுரிமை  பெற்றவர்களும் கூட, ஒரு அமெரிக்கக் கடவுச்சீட்டை உபயோகித்தே அமெரிக்காவிற்குள் நுழையவும், வெளியேறவும் வேண்டும்.

கே.4 எனது வீசாவை நான் எவ்விதம் நீட்டிக்கலாம்?

ஒரு வீசாவின் செல்லுபடியாகும் காலத்தை, அதன் வகையைப் பொருட்படுத்தாமல், நீட்டிக்க முடியாது. நீங்கள் ஒரு புதிய வீசாவிற்கு விண்ணப்பித்தாக வேண்டும்.

கே.5 எனது வீசா விண்ணப்பப் படிவத்தை நான் மின்னணு ரீதியாக சமர்ப்பித்தாக வேண்டுமா?

ஆம், நீங்கள் DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்து, அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் நடைபெறுகிற உங்களது நேர்காணலுக்கு நீங்கள் போகும் போது உங்களோடு DS-160 படிவத்தின் உறுதிப்படுத்தல் பக்கத்தின் அச்சிட்ட நகலைக் கொண்டு வந்தாக வேண்டும்.

ஆதாரம் : விசா மேப் வலைதளம்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/5/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate