பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இண்.டி.ஜி தயாரிப்புகள் மற்றும் சேவைகள்

இண்.டி.ஜி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வல்லுநரை கேளுங்கள்

குறுந்தகடுகள்

'ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம்'

இந்திய மருத்துவக் கவுன்சிலின் (Indian Council of Medical Research - ICMR) கீழ் இயங்கும் ஹைதராபாத்திலுள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் (National Institute of Nutrition), உதவியுடன், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் பற்றிய விரிவான இக்குறுந்தகடு உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் உணவை அறிந்து கொள்ளுங்கள் (Know your food), ஊட்டச்சத்து தேவைகள் மற்றும் அவை கிடைக்கும் மூலங்கள் (Nutrient requirement and their sources);, உணவு மற்றும் நோய்கள் (Food and diseases), உணவுப் பாதுகாப்பு (Food safety) ஆகிய முக்கிய தலைப்புகளின் கீழ் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், பள்ளிக் மாணவர்கள், குடும்பத்தலைவிகள் மற்றும் தங்கள் உணவைப் பற்றியும், அவற்றின் முக்கிய பங்கு ஆகியவை பற்றியும் அறியும் ஆர்வமுள்ள அனைவருக்கும் இக்குறுந்தகடு பயனுள்ளதாக இருக்கும்.

கிடைக்கும் மொழிகள்

 1. ஆங்கிலம் – ஹிந்தி
 2. ஆங்கிலம் – தெலுங்கு
 3. ஆங்கிலம் – தமிழ்
 4. ஆங்கிலம் – மராத்தி
 5. ஆங்கிலம் – வங்காளம்
 6. ஆங்கிலம் – அசாமி

எங்கு வாங்குவது?

 • வெளியீட்டு மையம், ஈ.டி பிரிவு, தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், இந்திய மருத்துவக் கவுன்சில், ஜமாய் ஓஸ்மேனியா அஞ்சல், ஹைதராபாத் – 500 604, ஆந்திரப் பிரதேசம் (Publication Counter, ET Division, National Institute of Nutrition, ICMR, Jamai Osmania P.O., Hyderabad – 500 604, Andhra Pradesh.), தொலைபேசி - 040-27197345 என்ற முகவரியில் இக்குந்தகடுகள் விற்பனைக்கு சிடைக்கும்
 • இக்குறுந்தகடு ஒவ்வொன்றின் விலை ரூ. 75.00
 • ரூ. 75.00 –ஐ, இயக்குனர், தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (“Director, National Institute of Nutrition”) என்ற பெயரில், ஹைதராபத்தில் மாற்றத்தக்க வரைவோலையாக செலுத்த வேண்டும். குறுந்தகடு, மதிப்பு செலுத்தத்தக்க (VPP) பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
 • மதிப்பு செலுத்தத்தக்க (VPP) பதிவுத்தபால் செலவை மட்டும் பெறுபவர் செலுத்த வேண்டும்.
 • உங்கள் சந்தேகங்களை, ninpub@hotmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி தெளிவு பெறுங்கள்

'மூலிகை, நறுமண மற்றும் சாயப்பயிர்கள் – சாகுபடிக் குறிப்புகள்'

தேசிய மூலிகை தாவரங்கள் வாரியத்தால் (National Medicinal Plants Board) முன்னுரிமைபடுத்தப்பட்ட, வியாபாரரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த 54 மூலிகை, நறுமண மற்றும் சாயப்பொருட்கள் அளிக்கும் பயிர்களைப் பற்றிய விபரத்தை இக்குறுந்தகடு அளிக்கிறது. உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான விரிவான விபரங்களை, வட்டார மொழிகளில் வழங்குகிறது.

குறுந்தகட்டின் விபரங்களைக் காண, அந்தந்த மொழிகளில் கிளிக் செய்யவும்

மேலும் விபரங்களுக்கு indg@cdac.in முகவரிக்கு எழுதவும்.

'கடைமடை நெல் சாகுபடிநில் பேரிடர் அபாயங்களை குறைக்கும் வழிமுறைகள்'

மதுரை சி.சி.டி நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பன்மொழி குறுந்தகடு, பேரிடர்களால் கடைமடை நெல் விவசாயத்தில் ஏற்படும் இடர்பாடுகளை குறைப்பதற்காக செயல்படுத்தத்தக்க ஒரு நான்கு முனை யுக்திகள் பற்றிய தகவல்களை அளிக்கிறது. இந்த யுக்திகள், சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் கடைமடை விவசாயிகள் பங்கேற்புடன் நான்கு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் அடிப்படையில் அமைந்துள்ளன. இவ்வழிமுறைகளை செயல்படுத்தத் தேவைப்படும் வழிமுறைகளைப் பற்றியும் இதில் கூறப்பட்டுள்ளது. இக்குறுந்தகடு, களப்பணியில் உள்ள மேம்பாட்டுப் பணியாளர்கள், ஆய்வாளர்கள், விரிவாக்கப் பணியாளர்கள் ஆகியோருக்கு உபயோகமான வளமாகும்.

கிடைக்கும் மொழிகள்: தமிழ் – ஆங்கிலம்

மேலும் விபரங்களுக்கு indg@cdac.in முகவரிக்கு எழுதவும்.

'நீடித்த நிலைத்த விவசாயம்'

அனேக படங்கள் மற்றும் காணொளிகள் மூலம், நீடித்த நிலைத்த விவசாய முறைகள் பற்றி இக்குறுந்தகடு விளக்குகிறது. விவசாயிகள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களுக்கு இது மிகவும் உபயோகமானது. நீடித்த விவசாயத்திற்கான மையம் (Centre for Sustainable Agriculture) மற்றும் SERP, ஹைதராபத் ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது.

கிடைக்கும் மொழி: தெலுங்கு

மேலும் விபரங்களுக்கு indg@cdac.in முகவரிக்கு எழுதவும்.

3.11111111111
கங்கா Nov 14, 2014 05:52 AM

மிகவும் உபயோகமாக இருந்த்தது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top