பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தகவல் தொழில்நுட்பம் (Information Technology)

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் ஆற்றும் பணிகளை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கணனிகளுடன் தகவல்களை ஒழுங்கமைப்புச் செய்தல், கணினியியல், இலத்திரனியல், தொலைத்தொடர்பு போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை ஒரு செய்முறைக்கு உட்படுத்தி ஒழுங்கமைப்புச் செய்தல், பரிமாற்றம் செய்தல், போன்ற செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும்.

தகவல் தொடர்பால் தொழிநுட்பம் பொருளாதாரத்துக்கு ஆற்றும் பங்களிப்புகள்.

 • கல்வித்துறை
 • போக்குவரத்துச் சேவை
 • பொறியியல் துறை
 • மருத்துவத் துறை
 • இராணுவ, பாதுகாப்புத்துறை
 • பொழுதுபோக்கு
 • தொலைத்தொடர்பு சேவை

வங்கித்துறை (Banking)

வங்கித்துறையில் தொழில்நுட்பமானது தன்னியக்க வங்கி கணக்கு கணித்தல் முறை, தன்னியக்க அட்டை (ATM Card) பயன்பாடு என்பவற்றை குறிப்பிடலாம்.

கல்வித்துறை (Education)

  தகவல் தொழில்நுட்பமானது பின்வரும் வழிகளில் கல்வித்துறைக்கு உதவுகின்றது

 • கணினி வழிகாட்டலில் கற்றல் (computer assisted learning) கணினி வழிகாட்டலிலான பாடசாலை நிர்வாகம் (computer assisted school administration)

உதாரணம்

கணினி வழிகாட்டலில் கற்றல் என்பது வினாக்கள் தொகுத்தல், செயற்பாடு மற்றும் பயிற்ச்சி அளித்தல், விளையாட்டு, பிரச்சினைக்கு தீர்வு காணல் என்பவற்றுக்கு உதவுகின்றது

போக்குவரத்து (Transport)

போக்குவரத்துத் துறையில் தகவல் தொழில்நுட்பமானது பின்வரும் வழிகளில் உதவுகிறது

 • புகையிரத மற்றும் விமானபோக்குவரத்து ஆசனங்களை பதிவு செய்தல்.
 • வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தல்.
 • ஊழியர்களின் கடமை நேர அட்டவணை தயாரித்தல்.
 • வான்வெளி பயணங்களின் போது கணினியானது பல்வேறு வழிகளில் உதவுகிறது.

பொறியியல் (Engineering)

பொறியியலாளர்கள் தகவல் தொழிநுட்பத்தை பயன்படுத்தி இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள் போன்றவற்றிற்கான வரைப்படங்களை தயாரிக்கின்றனர்.

Example: Computer Aided Drawing (CAD)

மருத்துவத்துறை (Medicine)

வைத்தியசாலையில் தகவல் தொழில் நுட்பமானது பின்வரும் வழிகளில் உதவுகிறது

 • வைத்தியத்துறையில் புதிய கருவிகளின் வருகை.
 • நோயாளர்களின் பதிவுகளை மேற்கொள்ளல், மேம்படுத்தல்.

பாதுகாப்பு (Defence)

தகவல் தொழில்நுட்பமானது குற்றவாளிகளை கண்டுபிடிப்பதை இலகுவாக்குகின்றது. (மேலைத்தேச நாடுகளில் இதன் பயன்பாடு அதிகமாகவுள்ளது

உதாரணம்: மோட்டார் வேகத்தை நெறிப்படுத்த உதவுகிறது

பொழுதுபோக்கு (Entertainment)

தகவல் தொழில்நுட்பமானது இன்று எல்லோராலும் ஒரு பொழுது போக்குச்சாதனமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

உதாரணம்:

 • கணனி மூலமான விளையாட்டுக்கள்
 • கணனி மூலமான படம் பார்த்தல்
 • கணனி மூலமான பாட்டுக்கேட்டல்

தொடர்பாடல் (Communication)

தகவல் தொழில்நுட்பமானது தொடர்பாடல் துறையிலே புதிய தொடர்பாடல் தொழில்நுட்பங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. இதனால் குறைந்த செலவுடனும் விரைவாகவும் தகவல்களை பரிமாறக்கூடியதாக உள்ளது.

ஆதாரம் : புத்திசாலி

3.11320754717
Naages Jan 28, 2020 03:01 PM

முடிவுரை ப்ளஸ் upload

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top