பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / பொதுவான தகவல்கள் / கணினி சார்ந்த தகவல்கள் / நமது கணினி இயங்கும் வேகத்தை அதிகரிப்பது எப்படி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நமது கணினி இயங்கும் வேகத்தை அதிகரிப்பது எப்படி

நமது கணினி இயங்கும் வேகத்தை அதிகரிப்பது எப்படி என இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக நாம் கணினியை ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் டெம்ப்ரவரி பைல்கள் (Temp Files) உருவாகிக் கொண்டே இருக்கும், இவை அனைத்தும் நமது கணினி இயங்குவதை சிறிது தாமதப் படுத்திக் கொண்டே இருக்கும். இவ்வாறு நமது கணினியில் உருவாகும் டெம்ப்ரவரி பைல்கள் (Temp Files) அனைத்தையும் நாம் ஒவ்வொரு முறையும் கணினியை இயக்கும் போது அழித்து விட்டுப் பின்னர், நமது கணினியை இயக்கலாம்.

டெம்ப் பைல்களின் வகைகள்

1. temp

2.%temp%

3.prefetch

4.recent

மேற்கூறிய நான்கு வகைகளும் டெம்ப்ரவரி பைல்கள் (Temp Files) ஆகும்.

டெம்ப்ரவரி பைல்கள் (Temp Files) அழிப்பது எப்படி?

விசைப் பலகையில் விண்டோஸ் கீ மற்றும் எழுத்து R (Windows Key + R ) இரண்டு கீக்க்ளையும் ஒரு சேர அழுத்திப் பிடிக்கவும். இப்போது ரன் பெட்டி தோன்றும்.

தோன்றும் ரன் பெட்டியில் temp என்று தட்டச்சு செய்யவும். இப்போது மேலும் ஒரு பாப் அப் பெட்டி தோன்றும்,

இதில் உள்ள பைல்கள் அனைத்தும் நாம் ஒவ்வொருமுறை கணினியை இயக்கும் போது உருவாகும் டெம்ப்ரவரி பைல்கள் (Temp Files) ஆகும்.

இதனை தங்களது விசைப் பலகலையில் CTRL + A கீ யை அழுத்தி மொத்தமாக அழிக்கவும்.

மேலும் இவ்வாறு அழிக்கும் போது விசைப்பலகையில் SHIFT கீ யையும் அழுத்திப் பிடிக்கவும், இவ்வாறு SHIFT கீ யை பயன்படுத்தும் போது பைல்கள் அனைத்தும் அளிக்கப் படும், Recycle Bin இல் செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைப் பயன்படுத்தியது போன்றே மீதம் உள்ள மூன்று வகைகளையும் பயன்படுத்தி டெம்ப் பைல்கள் அனைத்தையும் அளித்து விட்டு, கணினியை பயன்படுத்திப் பார்த்தால் நமது கணினி இயங்கும் வேகம் அதிகரித்து இருக்கும்.

ஒவ்வொரு முறை கணினியை உபயோகப் படுத்தும் போதும் டெம்ப்ரவரி பைல்கள் (Temp Files) அனைத்தையும் அழித்து விட்டு பயன்படுத்தவும்.

ஆதாரம் : velkumar

3.18181818182
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top