பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தேசிய மக்கள் தொகை பதிவேடு

தேசிய மக்கள் தொகை பதிவேடு பற்றிய குறிப்புகள்

மக்கள் தொகை ணக்கெடுப்பு

தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது, பலவித தகவல்களை அறிந்து கொள்ள பயன்படுகிறது. மேலும், நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கவும், நடுவண் மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு செய்ய வேண்டிய நலப்பணிகள் தொடர்பாக நிதி ஒதுக்கவும், திட்டத்தை அமலாக்கவும் முடியும். இது முதல் முறையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்தில், பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம், தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி, தந்தையின் பெயர், தாய், கணவன் அல்லது மனைவி உள்ளிட்ட பல தகவல்கள் இருக்கும். குடியிறுப்புகளில் இருப்பவர்கள் இந்த கணக்கெடுப்புக்கு தகுதி உள்ளவர்கள் ஆவர். வீடுகளில் கணக்கெடுப்பு முடிந்தபின், கணக்கெடுப்பு எடுத்ததற்கான அத்தாட்சி சீட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுக்கப்படுகின்றன.

இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் எடுக்கப்படும் புள்ளி விவரங்கள் கணினியில் உள்ளூர் மற்றும் ஆங்கில மொழியில் அந்தந்த மாநிலங்களில் பதிவு செய்யப்படுகின்றன. 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் புகைப்படத்துடன் கூடிய பயோமெட்ரிக் புள்ளிவிவரங்கள், பத்து விரல்களின் ரேகைப்பதிவு மற்றும் கருவிழிப்படலத்தின் அமைப்பு ஆகியவையும் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு கிராமத்திலும், நகரங்களில் வார்டு அளவிலும் முகாம்கள் அமைத்து விவரங்கள் சேகரிக்கப்படும். முகாம்களில் விவரங்கள் சேகரித்ததற்கான அத்தாட்சி சீட்டு அளிக்கப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து, சேகரிக்கப்பட்ட கணக்கெடுப்பு விவரங்களை தொகுத்து முக்கிய இடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைத்து, விவரங்களில் குறைபாடுகள் இருப்பின் அதை திருத்தி இறுதி செய்கின்றனர். கணக்கெடுப்பு விவரப்பட்டியல், கிராமங்களில் கிராம சபைக் கூட்டத்திலும், நகரங்களில் வார்டு கமிட்டியிலும் வைக்கப்படுகின்றன.

இந்த கட்டத்திலும், கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்பட்டு, அவற்றை சரிசெயகின்றனர். குறிப்பிட்ட காலத்திற்குள் ஆட்சேபனைகள் சரி செய்யப்பட்டு பட்டியல் இறுதி செய்யப்படுகின்றது. தேசிய மககள் தொகை பதிவேட்டில், பயோ மெட்ரிக் முறையில், பதியப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், பதிவாளர் மற்றும் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தில் இருந்து அனுப்பும் தேசிய அடையாள அட்டை ஒவவொரு வீட்டிற்கும் கொடுக்கப்படுகின்றது.

எந்த மாதிரியான தகவல்கள் சேகரிக்கப்படுகிறது?

ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு விதமான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. வீட்டில் உள்ள பொருட்களின் விவர பட்டியல் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் குறித்த விவரம. வீட்டில் உள்ள பொருட்கள், வீட்டின் பயன்பாடு, குடிநீர், எந்த கழிப்பறை பயன்படுத்தப்படுகிறது, மின்வசதி, சொத்துவிவரம் உள்ளிட்ட 35 கேள்விகள் கேட்டு விவரங்கள் சேகரிக்கப்படுகின்றது.

விடுபட்டவர்கள் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?

உள்ளூர் வட்டாட்சியர்/வார்டு அதிகாரி அல்லது அதற்கென உள்ள அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். முற்றிலும் இலவசமான இந்தச் சேவையில் ஒவ்வொரு நபரையும் பதிவு செய்ய அரசுக்கு 31 ரூபாய் செலவாகிறது. நாம் பதிவு செய்த 90 முதல் 120 நாட்களுக்குள் ஆதார் அட்டை கிடைக்கும். இதுகுறித்து மேலும் தகவல்கள் அறிய, 18001801947 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தகவல்களை எவ்வாறு பதிவு செய்வது?

என்.பி.ஆர்., படிவத்தில் கையெழுத்திட வேண்டும். தகவல் சேகரிப்பவர், உங்களுக்கு தகவல்களை படித்து காண்பித்தபின் கையெழுத்தோ அல்லது கைநாட்டோ இட வேண்டும். இதனால் சரியான தகவல்களை பதிவு செய்யலாம். தகவல் சேகரிப்பவர், கொடுக்கும் எல்லா தகவல்களையும் பதிவு செய்து கொள்வர். இதற்காக எந்த சான்றுகளையும் அவரிடம் காண்பிக்க வேண்டியதில்லை. கொடுக்கும் தகவல்கள் சரியானதாகவும், உண்மை யானதாகவும் இருக்கட்டும். தகவல்கள் தவறாக இருக்கும் பட்சத்தில், மக்கள் தொகை மற்றும் குடியுரிமை சட்டப்படி தண்டனை உண்டு.

ஆதாரம் :  தேசிய மக்கள் தொகை பதிவேடு

3.03488372093
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top