பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சமையல் எரிவாயு இணைப்பு

சமையல் எரிவாயு இணைப்பு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் வரும் ஜனவரி 1ம் ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. எனினும், நேரடி மானியத் திட்டத்தில் அனைவரும் இணைவதற்கு வரும் மார்ச் 31ஆம்  தேதி வரை மத்திய அரசு கால அவகாசம் அளித்துள்ளது.

பெயர் மாற்றம் அவசியம்

நேரடி மானியத் திட்டத்தில் இணைந்து மானியத் தொகையைப் பெறுவதற்கு சமையல் எரிவாயு இணைப்பு உள்ள நுகர்வோர் பெயரில் வங்கிக் கணக்கு இருப்பது அவசியம்.  குடும்பத் தலைவராக இருந்து மறைந்தவர் பெயர் அல்லது பல காரணங்களால் வேறு ஒருவர் பெயரில் உள்ள சமையல் எரிவாயு இணைப்பை கடந்த பல ஆண்டுகளாக வைத்துக் கொண்டு எரிவாயு உருளையைப் பெற்று வருவோர் நேரடி மானியத் திட்டத்தில் சேர பெயர் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

தங்களுக்குத் தொடர்புடைய சமையல் எரிவாயு விநியோகஸ்தரை அணுகி இவ்வாறு பெயர் மாற்றம் செய்த பிறகு மட்டும் நேரடி மானியத் திட்ட விண்ணப்பத்தை இரண்டு இடங்களிலும் (விநியோகஸ்தர், வங்கி) அளிக்க முடியும்.

கட்டணம்

சமையல் எரிவாயு இணைப்பை வழங்கி வரும் ஐஓசிஎஸ் (இண்டேன்), பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்) ஆகியவற்றைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நுகர்வோர், நேரடிமானியத் திட்டத்தில் சேர்ந்து பலன் அடைவதற்காக இத்தகைய வாரிசு பெயர் மாற்றத்துக்கு அவர்களுக்கு உரிய சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடம் விண்ணப்பித்து வருகின்றனர். இத்தகைய வாரிசு பெயர் மாற்றதுக்கு கட்டணம் ஏதுவும் இல்லை.

பெயர் மாற்றம் செய்ய

சமையல் எரிவாயு இணைப்பை வாரிசுதாரரின் பெயருக்கு மாற்றம் செய்ய உங்களது வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் என அழைக்கப்படும் “கேஒய்சி’ படிவத்தை புர்த்தி செய்து அளிக்க வேண்டும். இந்தப் படிவத்தை www.mylpg.in என்ற இணைதளத்திலிருந்து பதவிறகம் செய்து கொள்ளலாம்.

இந்தப் படிவத்துடன் இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், சமையல் எரிவாயு புத்தகத்தின் முதல் பக்க பிரதி, இறந்தவர் இணைப்புப் பெற்றபோது  சமையல் எரிவாயு விநியோஸ்தர் அளித்த இரண்டு ரசீதுகளின் அசல், முகவரிச் சான்று (குடும்ப அட்டை அல்லது ஆதார் அட்டை உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்று) ஆகியவற்றை சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடம் வாரிதாரர் அளிக்க வேண்டும்.

ஆதாரம் : தினமணி

Filed under:
3.10185185185
selvam Jan 14, 2015 01:35 PM

அருமையான தகவல்கள்
நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top