பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சமையல் எரிவாயு மானியம்

சமையல் எரிவாயு மானியம் திட்டத்தின் நடைமுறைகள்

விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?

சமையம் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பித்ததற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பது பற்றி விளக்கங்களை காணலாம்.

ஜனவரி 2015 முதல் அமல்

சமையல் எரிவாயு சிலிண்டரருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம், இந்தியாவில் 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1-ம் தேதியியிருந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த நேரடி மானியத்தை பெறுவதற்காக அடுத்த ஆண்டு 2015-ம் ஆண்டு மார்ச் 31ந் தேதி வரை வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தவறவிட்டால், எரிவாயுக்கான நேரடி மானியத்தை பெற முடியாமல் போய்விட வாய்ப்புள்ளது.

வங்கியிம் மானியம்

மானியத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால் , எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு, அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு இருக்கவேண்டும். அவர்கள் முழுத்தொகை செலுத்தி எரிவாயு வாங்கினாலும், மத்திய அரசு அளிக்கும் மானியத்தொகை, அந்த வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு விடும்.

அந்த வகையில் எரிவாயுக்கான மானியத்தை இதன் மூலம் வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் சேர்ந்ததில் இருந்து மானியத்தொகை கிடைக்கத் தொடங்கிவிடும். எரிவாயு சிலிண்டரை வாங்கிய 3 அல்லது 4 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் மானியத் தொகை வந்து சேர்ந்துவிடும்.

விண்ணப்பிக்கும் முறை

யார் பெயரில் சிலிண்டர் இருக்கிறதோ, அவர் தனது எரிவாயு சிலிண்டர் முகவரை அணுகவேண்டும். தன்னிடமுள்ள ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அவர் கொடுக்கும் படிவம்-1 மற்றும் படிவம் -2 ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். படிவம் 1-ஐ வங்கியிலும், படிவம் -2 –ஐ முகவரிடமும் வழங்க வேண்டும்.

ஆதார் இல்லாவிட்டால்

ஆதார் அட்டை அல்லது எண் இல்லை என்றால், வங்கிக்கணக்கு புத்தகதை காட்டி முகவரிடம் இருந்து படிவம் -3 மற்றும் படிவம்-4 ஆகியவற்றை வாங்கி பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் படிவம் 3-ஐ வாங்கியும், படிவம் -4-ஐ முகவரிடமும் கொடுக்கவேண்டும்.

வங்கியில் படிவம் செலுத்தப்பட்டது என்பதற்கு அத்தாட்சியாக, படிவத்தின் கடைசி பகுதியை கிழித்து, அதில் வங்கி முத்திரையை பதித்தும், கையயெழுத்திட்டும் வழங்குவார்கள். அதை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த நடைமுறைகள் மூலம்  எரிவாயுக்கான நேரடி மானியத்திட்டத்தில் சேர்ந்துவிடலாம். அதன்பின்னர் எப்போதும் போல் பணத்தை செலுத்தி சிலிண்டரை  வாங்கிக்கொள்ளலாம். அதற்கான மானியத் தொகை வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்து விடும்.

ஆதாரம் : மத்திய எண்ணெய் மற்றும் எரிபொருள் நிறுவனம்

Filed under:
3.09459459459
து. பாஸ்கர் Dec 03, 2016 11:38 AM

மாற்றுத்திறனாளிகளுக்கு சமையல் எரிவாயு வாங்க ஏதேனும் சலுகை இருக்கிறதா ஐயா

TASNA Mar 14, 2016 12:24 PM

சமையல் எரிவாயு மானியம் சார்ந்த உதவித் தொலைபேசி எண் - 18*****947 - ஐ தொடர்புக் கொண்டு விவரங்கள் பெறவும்.

புகழேந்தி Mar 11, 2016 08:47 PM

வங்கியில் படிவம் பூர்த்தி செய்து கொடுத்தபின் இரண்டு சிலிண்டர் வாங்கி விட்டேன் மானியம் இன்னும் கிடைக்கவில்லை.இதற்கு யாரை அனுகணும்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top