பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / பொதுவான தகவல்கள் / சிக்கன மின் செலவுக்கான நவீன உபகரணம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிக்கன மின் செலவுக்கான நவீன உபகரணம்

சிக்கன மின் செலவுக்கான நவீன உபகரணம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

வீடுகள் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மின் உபகரணங்களில், சில வகைகள், அதன் மின் இணைப்பை துண்டித்த பிறகும், குறிப்பிட்ட அளவு மின்சாரத்தைத் தொடர்ந்து பயன்படுத்துகிறது. டி.வி.டி பிளேயர், பிரிண்டர், தொலைக்காட்சிப் பெட்டி, கணினிகள் போன்றவை அதற்கு உதாரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.

மின்சார பயன்பாடு

மேற்கண்ட நிலையில், வீட்டு உபயோக பொருட்களின் மின்சார பயன்பாட்டை கச்சிதமாக அறிந்து, அவசியமில்லாத சூழலில் அதன் மின் பயன்பாட்டை தடுப்பதற்கான கருவி பயன்பாட்டில் இருந்து வருகிறது. ‘ஸ்மார்ட் பவர் ஸ்ட்ரிப்’ (Smart Power Strips) என்று குறிப்பிடப்படும் கருவி, மின் சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளனவா என்பதை உணரும் தன்மை கொண்டது. ஒரு வேளை சம்பந்தப்பட்ட மின் சாதனம் பயன்பாட்டில் இல்லை என்பதை உணரும் பட்சத்தில், அதற்கு செல்லும் மின்சாரத்தை முழுமையாக ‘ஸ்மார்ட் ஸ்ட்ரிப்’ கருவி நிறுத்திவிடும்.

செலவில் சிக்கனம்

ஒரு சில ‘ஸ்மார்ட் ஸ்ட்ரிப்’ கருவிகள் தொலைக்காட்சி பெட்டி உபயோகத்தில் இல்லை என்பதை உணரும் நிலையில், மின்சாரத்தை டி.வி.டி பிளேயருக்கும் சேர்த்து நிறுத்திவிடும் தொழில்நுட்ப அம்சம் கொண்டவையாக உள்ளன. இந்த கருவியை பயன்படுத்துவதன் மூலம் மின் கட்டணமானது கிட்டத்தட்ட 6 முதல் 10 சதவிகிதம் வரை குறைகிறது.

ஆதாரம் : உங்கள் முகவரி - நாளிதழ்

3.11904761905
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top