অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பண்டங்களின் எதிர்கால ஒப்பந்தச் சந்தை

பண்டங்களின் எதிர்கால ஒப்பந்தச் சந்தை

பொருள்

பண்டங்களின் சந்தை என்பது அடிப்படையான விளைபொருள்கள், உலோகங்கள், மூலப்பொருள்கள் போன்றவை வியாபாரமாகும் சந்தையாகும். அடிப்படைப்பண்டங்கள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் சந்தையில் வியாபாரம் செய்யப்படுகின்றன. இந்தச் சந்தையில் தரமான பண்டங்களை வாங்கி விற்பனை செய்வதால் ஒப்பந்தங்கள் தரப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றது. பண்டங்களின் சந்தை என்பது விவசாயப் பொருள்கள், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பண்டங்கள் வியாபாரம் செய்யப்படும் இடமாகும்.

இந்தியாவில் பண்டங்களின் சந்தைகள் உருவான வரலாறு

இந்தியாவில் பண்டங்களின் சந்தைக்கு நீண்டதொரு வரலாறு இருக்கின்றது. இந்தியாவில் பஞ்சு வியாபாரம் தான் முதல் எதிர்கால சந்தையில் கொண்டுவரப்பட்டது. அதற்காக மும்பைப் பஞ்சு வியாபரிகளின் கூட்டமைப்பு (வரையறுக்கப்பட்டது) என்ற நிறுவனம் 1875இல் தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1893இல் மும்பைப் பஞ்சு மாற்றகம் என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், ஏற்கனவே மும்பைப் பஞ்சு வியாரிகளின் கூட்டமைப்பில் முன்ணனிப் பஞ்சாலைகளும், பஞ்சுத் தரகர்களும் வியாபாரம் செய்து வந்தபடியால் அவர்கள் மீது பெரிய அளவில் அதிருப்தி நிலவியதால், இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்குப் பின்னால் இந்திய அளவில் பல்வேறு பண்டங்களின் மாற்றகங்கள் துவங்கப்பட்டது. 1900ஆம் ஆண்டு குஜராத் வியாபாரி மண்டலி என்ற அமைப்பின் கீழ் எண்ணைய் வித்துகளாகிய நிலக் கடலை, ஆமணக்கு மற்றும் பஞ்சு போன்ற பண்டங்கள் வியாபாரம் செய்யப்பட்டது. பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் பல இடங்களில் கோதுமைக்கான பண்டங்களின் சந்தை நடந்து வந்தது. ஹாபூரில் 1913ஆம் ஆண்டு துவங்கப்பட்ட வர்த்தக சபை இவற்றில் மிக முக்கியமானதாக இருந்து இரண்டாம் உலகப்போரின் ஆரம்பமாகிய 1939 வரை கோதுமையின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றி வந்தது. மும்பையில் 1920ஆம் ஆண்டு நாணயமாக்கப்படாத பொன் மற்றும் வெள்ளிப் பாளங்களில் (bulion) எதிர்கால ஒப்பந்தங்களில் வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின்னர் ராஜ்காட், ஜெய்ப்பூர், ஜாம் நகர், கான்பூர், தில்லி மற்றும் கொல்கொத்தாவிலும் இந்த வர்த்தகம் நடைபெறத் துவங்கியது.

கொல்கொத்தா ஹெஸ்ஸியன் மாற்றகம் (வரையறுக்கப்பட்டது) என்ற நிறுவனத்தால் 1919ஆம் ஆண்டு கச்சா சணல் மற்றும் சணலினாலான பொருள்களின் வியாபாரம் துவங்கப்பட்டது. எனினும், 1927ஆம் ஆண்டில் கிழக்கிந்திய சணல் கூட்டமைப்பு நிறுவனம் (வரையறுக்கப்பட்டது) என்ற மாற்றகத்தில்தான் ஒழுங்கு செய்யப்பட்ட சணல் எதிர்கால வர்த்தகம் முழுமையாகத் துவங்கப்பட்டது எனலாம். 1945ஆம் ஆண்டு இந்த இரண்டு நிறுவனங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு கிழக்கிந்தியச் சணல் மற்றும் ஹெஸ்ஸியன் நிறுவனம் (வரையறுக்கப்பட்டது) என்ற புதியதொரு நிறுவனம் துவங்கப்பட்டு சணல் மற்றும் சணலினாலான பொருள்களில் வியாபாரம் நடைபெற்றது.

பண்டங்களின் எதிர்காலச் சந்தையில் வியாபாரமாகும் பொருள்கள்

பண்டங்களின் எதிர்காலச் சந்தையில் வியாபாரமாகும் பொருள்களை விவசாயம் சார்ந்த பொருள்கள் மற்றும் விவசாயம் சாராத பொருள்கள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

விவசாயம் சாராப் பொருள்கள்

விவசாயம் சார்ந்த பொருள்கள்

ஆற்றல் (கச்சா எண்ணை, இயற்கை வாயு (முதலியன)

பயறு வகைகள் (கொண்டைக் கடலை, முதலியன) பாசிப் பயறு முதலியன)

விலை உயர்ந்த உலோகங்கள்

தங்கம், வெள்ளி முதலியன)

நவமணி (பார்லி மற்றும் கோதுமை

முதலியன

அடிப்படை (செம்பு, காரீயம் முதலியன)

உலோகங்கள் எண்ணைய் மற்றும் எண்ணைய் வித்துகள்

(ஆமணக்கு எண்ணைய், பருத்திக் கொட்டை மற்றும் எண்ணைய் முதலியன)

இரும்பு அடங்கிய உலோகங்கள் (எஃகு, கடற்பஞ்சு, இரும்பு முதலியன)

நறுமணச் சரக்கு (ஏலக்காய், மஞ்சள் முதலியன

மீச்சேர்மம் (பாலியெத்திலீன் மற்றும் பாலிப்ரொப்பிலின் முதலியன)

உணவாக சமைக்காத விவசாயப்

பொருள்கள் (கச்சா சணல், சணல்

பைகள், ரப்பர் முதலியன)

 

மற்றவை முந்திரி மற்றும் காப்பிக்கொட்டை முதலியன)

சட்ட திட்டங்களும் ஒழுங்கு முறைப்படுத்துதலும்

அத்தியாவசியப் பொருள்கள் சட்டம், 1955 மற்றும் முன்னோக்கிய ஒப்பந்த வணிகச் சட்டம், 1952 என்ற இரண்டு முக்கிய சட்டங்களும் பண்டங்களின் சந்தையை வரையறைப் படுத்துகின்றன. பொருள்களைக் கொடுத்து உடனடியாகப் பணம் பெற்றுக்கொள்ளும் வசதியைத்தரும் உடனடிச் சந்தையை அந்தந்தச் சந்தைகள் செயல்படும் மாநிலங்களில் உள்ள மாநில அரசுகள் ஒழுங்கு செய்து நிர்வகித்து வருகின்றன.

அகில இந்திய அளவில் நடைபெறும் எதிர்கால ஒப்பந்தச் சந்தைகளையும் மற்றும் தேசியச் சந்தையையும், இந்தியாவில் முன்னோக்கிய சந்தைகளின் குழு என்ற அமைப்பு (Forward Market Commission) கண்காணித்து வருகின்றது. இந்தியாவில் தற்சமயம் கிட்டத்தட்ட 25 பண்டங்களின் சந்தைகள் இருக்கின்றது. இவற்றில் மல்டி கமாடிட்டி எக்சேஞ்ச் ஆப் இந்தியா லிட், மும்பை, நேஷனல் கமாடிட்டி மற்றும் டெரிவேட்டிவ்ஸ் எக்சேஞ்ச் ஆப் இந்தியா லிட், மும்பை மற்றும் நேஷனல் மல்டி கமாடிட்டி எக்சேஞ்ச் ஆப் இந்தியா லிட், அஹமதாபாத் போன்றவை முக்கியமான பண்டங்களின் மாற்றகங்களாகும்.

பண்டங்களின் எதிர்கால ஒப்பந்தங்களுக்கும், பத்திரங்களின் எதிர்கால ஒப்பந்தங்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசங்கள்

பண்டங்களின் எதிர்கால ஒப்பந்தம்

பத்திரங்களின் எதிர்கால ஒப்பந்தம்

பண்டங்களை விற்றவர் கொடுப்பதன் மூலமும் வாங்குபவர் பெற்றுக் கொள்வதன் மூலம் தீர்வு செய்யப்படுகின்றது. இதனைப் பொருள் தொடர்பான தீர்வு எனக் கூறலாம்.

எதிர்காலச் சந்தை விலைக்கும், உடனடிச் சந்தை விலைக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைப் பணமாகக் கொடுப்பதன் மூலம் தீர்வு செய்யப்படுகின்றது. இதனை ரொக்கம் தொடர்பான தீர்வு எனக் கூறலாம்.

பண்டகச் சாலைகள் தேவைப்படுகின்றது.

பண்டகச் சாலைகள் தேவையில்லை.

பொருள்கள் கைமாறும் தருணத்தில் அதன் தரத்தின் தன்மை குறித்த சிக்கல்கள் வரும்.

பொருள்கள் கைமாறும் தருணத்தில் அதன் தரம் குறித்த சிக்கல்கள் வாராது.

ஆதாரம் : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/5/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate