অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ஊழியர் வருங்கால நிதி அமைப்பு(EPFO)

ஊழியர் வருங்கால நிதி அமைப்பு(EPFO)

ஊழியர் வருங்கால நிதி அமைப்பு(EPFO) ஆன்லைனில் வருங்கால வைப்பு நிதியின்(PF) கணக்கு விவரங்களை வெளியிடத் தொடங்கியுள்ளது. அதாவது விரல் நுனியில் இணையத்தில் வருங்கால வைப்பு நிதியின் நிலுவைத் தொகையை உட்பட பல்வேறு விபரங்களை தெரிந்து கொள்ளலாம். சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் / முன்னேற்றங்கள் / உள்-பரிமாற்றங்கள்/ வெளி-பரிமாற்றங்கள் போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் நிலுவை தொகையை சரிபார்க்க உதவும் செயல்முறை

  • உங்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் நிலுவைத் தொகையை அறிய இணைய இணைப்பை கிளிக் செய்திடுங்கள் * கணக்கை பராமரித்து வரும் இபிஎஃப்ஒ(EPFO) அலுவலகத்தை தேர்ந்தெடுத்து பிஎஃப் கணக்கு எண்ணை கொடுத்திடுங்கள்.
  • கணக்குக்கு விரிவாக்க துறை எண் இல்லையெனில் அதை காலியாக விடவும்.
  • பெயர் மற்றும் மொபைல் எண் உள்ளிட்டவற்றை கொடுக்கவும். அவ்வாறு கொடுக்கப்பட்ட மொபைல் எண் பிஎஃப் கணக்கு எண்ணுடன் சேர்த்து பதிவு செய்யப்படும்.
  • உங்களுடைய சமர்ப்பிப்பு வெற்றி பெற்ற பின் உங்களூடைய விபரங்கள் நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
  • உரிமை நிலையை தெரிந்து கொள்ளலாம்
  • இந்த வசதி வருங்கால வைப்பு நிதி உறுப்பினர் / சந்தாதாரர்கள் / ஓய்வூதியம் பெறுவோர் போன்றவர்கள் இந்தியா முழுவதும் உள்ள ஏதேனும் ஒரு இபிஎஃப்ஒ(EPFO) அலுவலகத்தில் சமர்ப்பித்த உரிமை நிலையைதெரிந்து கொள்ள உதவுகிறது. இந்த வசதி மூலம் ஒரு சமர்ப்பிக்கப்பட்ட உரிமை நிலையை தொடர்ந்து கண்காணிக்க முடியும். இந்த உதவியை பயன்படுத்த உங்களுடைய பிஎஃப் கணக்கு எண்ணை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்
  • உரிமை நிலையை பற்றிய தகவல் பக்கத்தில், உங்களுடைய முதலாளி எந்த பிராந்திய வருங்கால நிதி அலுவலகத்தில் கணக்கு வைத்திருக்கிறரோ அந்த அலுவலகத்தை தேர்ந்தெடுத்து பிஎஃப் கணக்கு எண்ணை தெரிவிக்கவும்.
  • உங்கள் உரிமை நிலையை அறிய இணைப்பை கிளிக் செய்திடுங்கள் * நீங்கள் உரிமை நிலையை தாக்கல் செய்துள்ள பணியாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தைப் பற்றி தெரியும் என்றால், அதை தேர்வு பட்டியலில் இருந்து தேர்ந்து எடுங்கள்
  • அலுவலகத்தை தேர்வு செய்த பின், அலுவலக பிராந்தியம் எண் மற்றும் அலுவலகம் எண் போன்றவை அந்தந்த பெட்டிகளில் தானாக உருவாகும்
  • மூன்றாவது பெட்டியில் எஸ்டாபிளிஸ்மெண்ட் எண்ணை கொடுத்திடுங்கள். அந்த எண் அதிகபட்ச 7 இலக்குகள் வரை இருக்க முடியும்.
  • சில நேரங்களில் எஸ்டாபிளிஸ்மெண்ட் எண்ணிற்கு துணை அல்லது இணை எண்கள் இருக்கலாம். அவ்வாறெனில் அதையும் கொடுத்திடுங்கள். அது ஒரு எண்ணாகவோ அல்லது ஒரு எழுத்தாகவோ இருக்கலாம். அது எப்படி இருந்தாலும் 3 இலக்கத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்டாபிளிஸ்மெண்ட் எண்ணிற்கு துணை அல்லது இணை எண்கள் இல்லை எனில் அந்த இடத்தை காலியாக விட்டு விடுங்கள்.
  • அதிகபட்சமாக 7 இலக்குகள் உடைய கணக்கு எண்ணை உள்ளிடவும்.
  • அதன் பின்னர் சமர்ப்பிக்கும் பட்டனை கிளிக் செய்யவும் இறுதியாக உங்கள் கணக்கு நிலை திரையில் தோன்றும். நீங்கள் நீண்ட நாட்கள் உங்களுடைய பிஎஃப்யிற்கு காத்திருக்கிறீர்கள் என்றால் அதை குறைகளுக்கான இணைப்பை கிளிக் செய்து உங்கள் குறைகளை பதிவு செய்யலாம்.

கேள்வி பதில்

1. இறந்துபோன வங்கி ஊழியரது மைனர் குழந்தை அல்லது குழந்தைகள் பெயரில் உள்ள வைப்புத் தொகைக்கு வங்கி ஊழிர்களுக்குரிய சலுகையான கூடுதல் வட்டி வழங்கலாமா?

இல்லை. வங்கி ஊழியர், வங்கிப் பணியிலிருந்து ஒய்வு பெற்றவர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் கூடுதல் வட்டி பெற அவர்கள் குழந்தைகள் எவருக்கும் (மைனர் குழந்தைகள் உட்பட) தகுதி இல்லை.

2. வயது வராத குழந்தைக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தொகையை குழந்தைக்கும் அதன் பெற்றோருக்கும் சேர்த்து கூட்டு வைப்புத் தொகைக் கணக்கு தொடங்கினால் வங்கி ஊழியருக்கு வழங்கக்கூடிய கூடுதல் வட்டியை அக்கணக்கிற்கு வழங்கலாமா?

முடியாது. காரணம் அப்பணம் வயது வராத குழந்தைக்குச் சொந்தமானது. வங்கி ஊழியர் யாருக்கும் சொந்தமானதல்ல. எனவே கூடுதல் வட்டி வழங்க இயலாது.

3. வேறு வைப்புத் தொகைகளுக்கு வங்கி வேறுபட்ட வட்டி வீதம் வழங்கலாமா?

வங்கிகள் சிறப்பு வைப்புத்தொகைச் செயல் திட்டங்களில், குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான வைப்புகளில், வைப்புகளின் தொகை அளவு எதுவானாலும் வழக்கமாக வழங்கப்படும் வட்டியை விட கூடுதலான வட்டியை வழங்கலாம்.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate