பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / பொதுவான தகவல்கள் / பராமரிப்பு கட்டணத்தை நிர்ணயிக்கும் முறை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பராமரிப்பு கட்டணத்தை நிர்ணயிக்கும் முறை

பராமரிப்பு கட்டணத்தை நிர்ணயிக்கும் முறைகளை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

 • இன்றைக்கு வாடகை வீட்டில் வசிப்பவர்களின் முக்கியமான நோக்கம் சொந்த வீடு வாங்கி குடியிருக்கவேண்டும் என்பதுதான். அதற்கு அடுத்தபடியாக மாதம்தோறும் கொடுக்கின்ற வாடகை தொகையை மிச்சப்படுத்தி சேமிப்பது. அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவதால் சொந்த வீட்டுக் கனவு நிறைவேறினாலும் அங்கு பராமரிப்புத் தொகையாக வசூலிக்கப்படும் தொகை சில சமயங்களில் அவர்களை மிரட்சி அடைய வைக்கிறது.
 • வீடு வாங்கும்போதே அங்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று அறிந்துகொள்ள வேண்டும். அவற்றின் அடிப்படையில் வருங்காலத்தில் பராமரிப்புத் தொகை என்னவாக இருக்கும் என்பதையும் முடிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், பராமரிப்புத் தொகை எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டால்தான் அது சரியான தொகையா என்று சரிபார்த்துக்கொள்ள முடியும்.

குடியிருப்போர் சங்கம்

பில்டர் என்னென்ன வசதிகளை வழங்குவதாக அறிவித்துள்ளாரோ அந்த வசதிகள் அனைத்தும் முழுமையாக தயாரான பிறகுதான் பராமரிப்பு கட்டணம் கணக்கிடப்பட வேண்டும். பொதுவாக ப்ராஜெக்ட் முடிந்த பிறகு ஓராண்டு காலத்திற்கு பில்டரே பராமரிப்பு வேலைகளை பொறுப்பேற்றுக் கொள்கிறார். அதன்பிறகு குடியிருப்போர் சங்கம் பராமரிப்பு பணிகளைக் கவனித்துக் கொள்கிறது.

குடியிருப்போர் சங்கங்கள் ஒவ்வொன்றும் பராமரிப்பு பணிகளுக்கான கட்டணங்களை வெவ்வேறு விதமாக கணக்கிடுகின்றன. ஆனால் அனைத்து சங்கங்களும் பொதுவாக சில வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன. அவற்றைப் பற்றி பார்ப்போம்.

பராமரிப்பு சேவைகள் என்னென்ன?

குடியிருப்போர் சங்கங்கள் பெரும்பாலும் வீடுகளின் அடிப்படையில் அல்லது சதுர அடி கணக்கில் பராமரிப்பு கட்டணங்களை நிர்ணயிக்கின்றன. பொதுவான இடங்கள், எலிவேட்டர், கார் பார்க்கிங், கட்டிட பழுதுபார்ப்புகள், தண்ணீர்க் கட்டணம், சொத்து வரி, இன்சூரன்ஸ் பிரிமியம், பொது பயன்பாட்டு இடங்களுக்கான மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக பராமரிப்புக் கட்டணங்கள் அமைந்துள்ளன.

அதிகபட்ச கட்டண அளவு

 • பராமரிப்பு சேவைகள் ஒவ்வொன்றுக்கும் கட்டுமானத்துறை நிபுணர்கள் பரிந்துரை செய்யும் அதிகபட்ச கட்டணம் எவ்வளவு என்று பார்க்கலாம்.
 • கட்டிடப் பழுதுகளை சரிசெய்வதற்கான கட்டணமானது ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டொன்றுக்கு அதன் கட்டுமானச் செலவில் 0.75 சதவீத தொகைக்குள் இருக்க வேண்டும்.
 • ஹவுஸ் கீப்பிங், பாதுகாப்பு, பொது பயன்பாடுகளுக்கான மின்சாரம் ஆகியவற்றுக்கான சேவை கட்டணம் அனைத்து வீடுகளாலும் சரிசமமாக பிரித்துக்கொள்ளப்பட வேண்டும். எலிவேட்டர் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் செலவுகளும் அவ்வாறே அனைத்து வீடுகளாலும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
 • ‘சிங்கிங் பண்ட்’ எனப்படும் அவசர காலத்திற்கான தனிக் கணக்கிற்கு ஒவ்வொரு வீட்டின் மொத்த கட்டுமானச் செலவிலும் ஆண்டொன்றுக்கு 0.25 சதவீத தொகை மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.
 • வாடகைக்கு விடப்படும் வீடுகளில் யாரும் குடியிருக்காத பட்சத்தில் சேவைக் கட்டணத்தில் பத்து சதவீதத்தை மட்டுமே கட்டணமாக விதிக்க வேண்டும்.
 • பார்க்கிங் கட்டணமானது ஒருவருக்கு எத்தனை வாகனங்கள் நிறுத்தவதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது என்பதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
 • தண்ணீருக்கான சேவைக் கட்டணத்தை ஒரு வீட்டிற்கு அளிக்கப்பட்டிருக்கும் குடிநீர் இணைப்புகளின் அடிப்படையிலும் பயன்பாட்டின் அடிப்படையிலும் நிர்ணயிக்க வேண்டும்.
 • குடியிருப்போர் சங்கங்கள் அமைக்கப்படும் வரைக்கும் பில்டரே பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார். அப்போது பராமரிப்பு கட்டணம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை குடியிருப்பவர்களிடம் விளக்க வேண்டியது அவரது கடமையாகும்.

ஆதாரம் : சென்னை நலத்தகவல் காலாண்டு இதழ்

3.04545454545
முத்அரசு Jul 23, 2019 11:09 AM

சட்டம் உன்மையாக நேர்மையாக உள்ளது, ஆனால் பில்டர் பணம் பறிப்பதில் திறமையை வளர்த்துக் கொண்டார்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top