பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / பொதுவான தகவல்கள் / மனை அமைவிடத்தின் நான்கு பக்க சர்வே எண்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மனை அமைவிடத்தின் நான்கு பக்க சர்வே எண்கள்

மனை அமைவிடத்தின் நான்கு பக்க சர்வே எண்களுக்கான முக்கியத்துவம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

வீடு அல்லது மனைகள் வாங்கும்போது சொத்து விபரத்தில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்குரிய மனை என்று குறிப்பிட்டு அதன் எண்ணையும் குறிப்பிட்டு கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு பக்க மனை அல்லது இடத்தை குறிப்பிடுவது நல்லது. வீடுகள் அல்லது மனைகளை வாங்கும் சமயத்தில், அவற்றிற்கான ஆவணங்களில் சம்பந்தப்பட்ட சொத்துக்கான அமைவிடம் பற்றிய விபரங்கள் சரியாகவும், தெளிவாகவும் குறிப்பிடப்பட்டிருப்பதை கவனித்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக, மனை அல்லது சம்பந்தப்பட்ட இடத்தின் சர்வே எண், அதன் நீளம், அகலம் மற்றும் அதன் நான்கு பக்கங்களிலும் உள்ள மற்றவர் மனை அல்லது இடம், அது அமைந்துள்ள ஊராட்சி அல்லது நகராட்சி போன்ற விபரங்கள் தெளிவாக இருப்பது அவசியம்.

ஆவணங்களில் சொத்து விபரம்

ஒவ்வொரு பத்திரத்திலும் சம்பந்தப்பட்ட சொத்து பற்றிய விபரங்கள் பத்திரத்தின் இறுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவற்றில் சொத்து அமைந்துள்ள மாவட்டம், தாலுக்கா, கிராமம், சர்வே எண், சப்–டிவி‌ஷன் எண்கள், மொத்த ஏரியா, அதில் பத்திரத்திற்கு கட்டுப்பட்ட சொத்தின் அளவு, அது மொத்த ஏரியாவில் எந்தப் பக்கம் உள்ளது மற்றும் சொத்துக்கான சுற்றுப்புற பூமி பற்றிய விபரங்கள் தரப்பட்டிருக்கும்.

அடிக்கடி சொத்து மாற்றம்

15 அல்லது 20 வருடங்களுக்கு முன்னர் பத்திரங்கள் எழுதும்போது, சம்பந்தப்பட்ட சொத்துக்கு நான்கு புறமும் அமைந்துள்ள பூமியின் சொந்தக்காரர் பெயரைக் குறிப்பிட்டு, அவருக்குப் பாத்தியப்பட்ட பூமிக்கும் கிழக்கு, வடக்கு என்று எழுதப்பட்டிருக்கும். அந்த விபரங்கள் இன்றைய வளர்ச்சி அடைந்த நகர்ப்புறங்களில் நிலையாக அமைந்திருப்பதில்லை. நகரங்களில் சொத்து பரிமாற்றம் அடிக்கடி நிகழ வாய்ப்புள்ள நிலையில், ஒவ்வொரு முறையும் பெயர்கள் மாறிக்கொண்டே இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

நான்கு பக்க சர்வே எண்கள்

வீடு அல்லது மனைகள் வாங்கும்போது சொத்து விபரத்தில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்குரிய மனை என்று குறிப்பிட்டு அதன் எண்ணையும் குறிப்பிட்டு கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு பக்க மனை அல்லது இடத்தை குறிப்பிடுவது நல்லது. அதாவது, சொத்து அமைந்துள்ள இடத்தின் நான்கு பக்கங்களில் உள்ள மற்ற சொத்து உரிமையாளர்கள் பெயரை குறிப்பிடாமல், அந்த இடங்களுக்கான சர்வே எண்ணை குறிப்பிடும் பட்சத்தில் பல்வேறு சிக்கல்கள் தவிர்க்கப்படும்.

ஆதாரம் : உங்கள் முகவரி - நாளிதழ்

Filed under:
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top