பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / பொதுவான தகவல்கள் / மின் ஆளுமை ஆணையரகம் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மின் ஆளுமை ஆணையரகம் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை

மின் ஆளுமை ஆணையரகம் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை

முன்னுரை

மின் ஆளுமை ஆணையரகம், மாநில அளவில் மின்ஆளுமை முயற்சிகளை ஊக்குவித்து, தகவல் தொழில்நுட்பத்தின் இணையம் மற்றும் நம்பகமான அணுகுமுறைகள் வாயிலாக மின் ஆளுமை செயற்பாடுகளைத் தொலைதூரக் கிராமப்பகுதிகளுக்குக் கொண்டு செல்ல உருவாக்கப்பட்டுள்ளது.

தொலைநோக்கு பார்வை 2023-இன் படி அனைத்து அரசு சேவைகளையும் குடிமக்களுக்கு அவர் தம் வசிப்பிடத்தில் வழங்குவதே அதன் குறிக்கோளாகும். மேலும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் இணைந்து மாநில அரசின் மின் ஆளுமை முயற்சிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி, தகவல் தொழில்நுட்பச் செயல்திட்டங்களை மாநில அளவில் செயல்படுத்துகிறது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNEGA) பல்வேறு மின் ஆளுமை திட்டங்களைத் திறம்படவும், வெளிப்படையாகவும் பொது மக்களுக்கு வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு அரசின் ஆளுமையைச் செயல்படுத்தி வருகிறது. இந்த எளிமையான முறையில் அரசின் சேவைகளை வழங்குவதன் மூலம் குடிமக்களின் அன்றாட வாழ்க்கை எளிதாக்கப்பட்டுள்ளது.

நிர்வாகக் கட்டமைப்பு

மாநில உயர்மட்டக்குழு

மாநில அளவில் மின் ஆளுமை முயற்சிகளை முழுமையாக ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு கொள்கை முயற்சிகள் மற்றும் தேசிய மின் ஆளுமை திட்டத்தின் (NeGP) குறிக்கோள் திட்டங்கள் மூலம் மின் ஆளுமை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தலைமை செயலாளரின் தலைமையின் கீழ் அமைந்த உயர்மட்டக் குழு (State Apex Committee) மாநில அளவிலான மின் ஆளுமை முயற்சிகளை மேற்பார்வையிடவும், அரசு துறைகளுக்குக் கொள்கை ரீதியில் வழிகாட்டுதலை வழங்கி அரசு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பை உறுதிபடுத்துகிறது. திட்ட மேலாண்மை மூலம் தரநிலை மற்றும் நிலைத்தன்மையை வழங்க மாநில மின் ஆளுமை குழு (State e-Governance Group) துணைபுரிகிறது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (Tamil Nadu eGovernance Agency)

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் 1975 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட தன்னாட்சி அமைப்பாகும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் (TNeGA) ஆளுமை குழுவானது தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் தலைமையில் 11 குறிக்கோள் திட்டத் துறைகளின் செயலாளர்களை உறுப்பினர்களாகவும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் முதன்மை செயல் அலுவலரை உறுப்பினர் செயலராகவும், தேசிய தகவலியல் மையம் (NIC) சென்னையின் மாநில தகவலியல் அலுவலரை முதன்மை தொழில்நுட்ப அலுவலராகவும் கொண்டுள்ளது.

நிறுவன கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பபணியாளர் தொகுப்பு

தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்களின் தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசு துறைகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. ஒருங்கிணைந்த பாதுகாப்பான தகவல் தொழில்நுட்ப சூழலை உருவாக்கி அவற்றிற்கு வழிகாட்டவும், நிலைப்படுத்தவும் நிறுவனத்தை வலுப்படுத்துவது அவசியமாகிறது. அதனைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பத் தொகுப்பில்
(IT Cadre) 98 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தேர்வாணையத்தின் வாயிலாக 60 உதவி கணினி பகுப்பாய்வாளர்கள் / உதவி கணினி பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநில மின் குறிக்கோள் குழு (State e-Mission Team)

மாநில மின் குறிக்கோள் குழு (SeMT), மாநில அரசுகளின் மின் ஆளுமை திறனை மேம்படுத்தும் நோக்கில் தேசிய மின் ஆளுமை திட்டத்தின் (NeGP) திறன் மேம்பாட்டு முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. SeMTயில் திட்ட மேலாண்மை , தொழில்நுட்ப மேலாண்மை, நிதி மேலாண்மை மற்றும் மாற்று மேலாண்மை போன்ற ஆலோசகர்களைக் கொண்டுள்ளது. மாநில அளவில் செயல்படுத்தப்படும் மின் ஆளுமை முயற்சிகளுக்குத் திட்ட மேலாண்மை மூலம் ஒட்டுமொத்த வழிகாட்டுதல், தரநிலை, நிலைத்தன்மை ஆகியவற்றை இக்குழு வழங்கி வருகிறது.

மாவட்டமின் ஆளுமை சங்கங்கள் (DeGS) மாவட்ட மின் ஆளுமை சங்கங்கள் (DeGS) அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இயங்கி வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் தலைமையில் இயங்கி வருகிறது. மாவட்ட அளவிலான மாநில மின்-ஆளுமைத் திட்டங்களைச் செயல்படுத்த மற்றும் மேம்படுத்துவதற்கு மாவட்ட மின் ஆளுமை சங்கங்கள் உதவுகின்றன. மாவட்டங்களில் மின் ஆளுமை சேவைகளை வழங்கும் துறை சார்ந்த மாவட்ட அலுவலர்கள் இச்சங்கத்தின் உறுப்பினர்களாவர்.

"தொடக்க நிலையில் ஒவ்வொரு சங்கத்திற்கும் (10 லட்சம்ஆதார நிதியுதவியை அரசு வழங்கியுள்ளது. மேலும், இச்சங்கங்கள் நன்முறையில் இயங்கிட அனைத்து  சங்கங்களுக்கும் ஒரு வருவாய் பங்கு மாதிரி உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டங்கள்

மின் மாவட்ட திட்டம் (e-District)

மின் மாவட்ட திட்டமானது தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ் மாநில அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டது. இது மாநில அளவில் செயல்படும் குறிக்கோள் திட்டங்களில் ஒன்றாகும். மின் மாவட்ட திட்டம் பொதுமக்களை மையப்படுத்திய சேவைகளை, இ. சேவை மையங்கள் மூலம் இணைய வழியில் வழங்குகிறது.

மத்திய அரசு, மின் மாவட்ட திட்டத்தைச் செயல்படுத்த மாதிரி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாட்டைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில், மின் மாவட்ட மென்பொருள் உருவாக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ சீர் மரபினர் நலத்துறை மற்றும் ஆதி திராவிடர் நலத்துறையின் கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

மின்மாவட்டம், இ-சேவை மற்றும் அப்னா CSC திட்டங்கள் வாயிலாக மொத்தம் 209 சேவைகள் இணையவழியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. வழங்கப்படும் சேவைகளின் விபரம்:

வழங்கப்படும் சேவைகளின் பெயர் துறைகள்

 • வருமானச் சான்றிதழ்
 • பிறப்பிடச் சான்றிதழ் / இருப்பிடச் சான்றிதழ்
 • சாதிச் சான்றிதழ் வருவாய்
 • குடும்பத்தில் பட்டதாரி இல்லை பேரிடர் என்பதற்கான சான்றிதழ்
 • மேலாண்மை துறை கணவனால் கைவிடப்பட்டவர் என்ற (மொத்த சான்றிதழ்
 • சேவைகளின் கிராமப் பிறப்பு சான்றிதழ் அச்சிடுதல் எண்ணிக்கை -34)
 • கிராம இறப்பு சான்றிதழ் அச்சிடுதல் குடும்ப இடப்பெயர்வு சான்றிதழ்
 • வேலையில்லா சான்றிதழ்
 • விதவை சான்றிதழ்
 • விவசாய வருமானச் சான்றிதழ்
 • கல்வி ஆவணங்கள் தொலைந்தமைக்கான சான்றிதழ்
 • ஆண் வாரிசு இன்மைச் சான்றிதழ்
 • திருமணம் ஆகவில்லை என்பதற்கான சான்றிதழ்
 • கலப்புத் திருமணச் சான்றிதழ்
 • வாரிசு சான்றிதழ்
 • சொத்து மதிப்பு சான்றிதழ்
 • அடகு பிடிப்போர் சட்டத்தின் உரிமம் கீழ் வழங்குதல்
 • வட்டிக்கு பணம் கொடுப்போர் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்குதல்
 • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ்
 • சிறுகுறு விவசாயி சான்றிதழ்
 • இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்.
 • இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதிய திட்டம்
 • இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம்
 • மாற்றுதிறனாளி ஓய்வூதியத் திட்டம் ஆதரவற்ற , கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம்
 • மணமாகாத பெண்கள் ஓய்வூதியத் திட்டம்
 • ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம்
 • தமிழ் நிலம் - முழுநில பட்டா
 • மாறுதல் தமிழ் நிலம் - கூட்டு பட்டா மாறுதல்
 • தமிழ் நிலம் - உட்பிரிவு குறைதீர் நாள் மனு தமிழ் நிலம்
 • அ,பதிவு விவரம் தமிழ் நிலம்- சிட்டா விவரம்
 • அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் 1
 • முதலமைச்சரின் பெண் சமூக நலம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் II சத்துணவுத்
 • டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் திட்டத்துறை நினைவு விதவை மறுமண (மொத்த உதவித் திட்டம் சேவைகளின் எண்ணிக்கை -7)
 • டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்
 • ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண உதவித் திட்டம்
 • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்
 • பொது விநியோகத் துறை அல்லாத நுகர்வோர் புகார்கள் பொது விநியோக துறை தொடர்பான புகார்கள் புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல்
 • அட்டை மாற்றல் (முகவரி மாற்றம், உணவுப் பொருள் கார்டு வகை மாற்றம், சிலிண்டர் வழங்குதல் துறை மாற்றம், குடும்பத் தலைவர் (மொத்தஉறுப்பினர் மாற்றம், பயனாளியின் சேவைகளின் புகைப்படம் மாற்றம்) எண்ணிக்கை 8)
 • குடும்ப அட்டை ஒப்படைத்தல் / ரத்து செய்தல் புதிய பயனர் பதிவு செய்தல் குடும்ப அட்டை தடுத்தல் / விடுவித்தல் மின்னணு அட்டை அச்சிடுதல்
 • சமூக சேவை பதிவேடு நிலை முதல் தகவல் அறிக்கை நிலை நிகழ்நிலை புகார் பதிவு செய்தல்
 • புகார் நிலை அறிதல் காவல் துறை வாகன விவரம் அறிதல் (மொத்த சேவைகளின் முதல் தகவல் அறிக்கை பார்வையிடுதல் எண்ணிக்கை - 8)
 • சாலைவிபத்து வழக்குகளில் ஆவணங்களை பதிவிறக்கம் செய்தல் தொலைந்த ஆவணங்களின் அறிக்கை ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான
 • நியமன பதிவு போக்குவரத்து ற்கும் உரிமம் பெறுவதற்கான துறை(மொத்த நிகழ்நிலை விண்ணப்பம் சேவைகளின் எண்ணிக்கை - 3)
 • கற்கும் உரிமம் பெறுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பம் மறு அச்சசிடுதல் பதிவுத் துறை (மொத்த சேவைகளின் எண்ணிக்கை - 4)
 • அகல்நிலையில் கட்டணம் செலுத்துவதற்கு விண்ணப்பித்தல் அகல்நிலை கட்டண செலுத்துசீட்டு அச்சிடுதல் நிகழ்நிலை திருமண ஆவண முன் பதிவு முன்பதிவு ஒப்புகை அச்சிடுதல்
 • தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான பள்ளிமேற்படிப்பிற்கு, மைய அரசின் கல்வி உதவித் திட்டம்.
 • பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளி மேற்படிப்பிற்கு, மைய அரசின் கல்வி உதவித் திட்டம்.
 • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை (மொத்த சேவைகளின் எண்ணிக்கை 4)
 • பள்ளி மேற்படிப்பிற்கான மாநில அரசின் சிறப்புக் கல்வி உதவித் திட்டம்.
 • மேற்படிப்பிற்கான சிறப்பு கல்வி உதவித் திட்டம்.
 • பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்
 • திட்டங்கள். பிற்படுத்தப் பட்டோர், மிக தொழிற்கல்வி பயிலும் பிற்படுத்தப் பிற்படுத்தப்பட்ட பட்டோர் மற்றும் மாணவர்களுக்குக் கல்வி உதவி சிறுபான்மை பிற்படுத்தப்பட்ட யினர் நலத் துறை மாணவர்களுக்கான (மொத்த பட்டப்படிப்பிற்கான நிதியுதவித் சேவைகளின் திட்டம். எண்ணிக்கை 4)
 • பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான பட்டயப்படிப்பிற்கான நிதியுதவித் திட்டம்.
 • சுகாதாரத்துறை (மொத்த மகப்பேறு முன்பதிவு சேவைகளின் எண்ணிக்கை -1)
 • கொதிகலன் சட்டத்தின் கீழ் உரிமம் பதிவு செய்தல்
 • கொதிகலன் இயக்குனரகம் (மொத்த சேவைகளின் எண்ணிக்கை 4)
 • கொதிகலன் சட்டத்தின் கீழ் உரிமம் புதுப்பித்தல்
 • உற்பத்தி மற்றும் புதுப்பிப்பு அனுமதி கோரி விண்ணப்பித்தல் கட்டடம் புதுப்பிப்பு அனுமதி கோரி விண்ணப்பித்தல்
 • வரி இல்லா இதர கட்டணங்கள்
 • நகராட்சி நிர்வாக ஆணையரகம் (மொத்த சேவைகளின் எண்ணிக்கை -5)
 • தொழில் வரி வசூலித்தல் சொத்து வரி வசூலித்தல் பாதாள வடிகால் வரி வசூலித்தல் குடிநீர் வரி வசூலித்தல்
 • சென்னை பெருநகர் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் (மொத்த சேவைகளின் எண்ணிக்கை - 1)
 • நீர் மற்றும் கழிவுநீர் வரி
 • பிறப்பு சான்றிதழ் அச்சிடுதல்
 • இறப்பு சான்றிதழ் அச்சிடுதல்
 • சென்னை மாநகராட்சி (மொத்த சேவைகளின் எண்ணிக்கை - 6)
 • வர்த்தக உரிமம் புதுப்பித்தல்
 • தீ மற்றும் மீட்பு இயக்குநரகம் (மொத்த சேவைகளின் எண்ணிக்கை - 5)
 • நிறுவன வரி வசூலித்தல்
 • தொழில் வரி வசூலித்தல்
 • சொத்து வரி வசூலித்தல்
 • பல மாடிக் கட்டிடத்திற்கான தடையின்மை இணக்கச் சான்றிதழ்
 • பல மாடிக் கட்டடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி கோரும் தடையின்மைச் சான்றிதழ்
 • பல மாடிக் கட்டிடம் அல்லாத கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி கோரும் தடையின்மைச் சான்றிதழ்
 • பல மாடிக் கட்டடத்திற்கான தீ பாதுகாப்பு உரிமம் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல்
 • பல மாடிக் கட்டடம் அல்லாத கட்டடம் கட்டுவதற்கான தீஉரிமம் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல்
 • மின் கட்டணம் செலுத்துதல் தமிழ்நாடு மின்சார
 • புதிய குறைந்த மின் அழுத்தம் வாரியம்
 • இணைப்பு பதிவு செய்தல் (மொத்த சேவைகளின் புதிய குறைந்த மின் அழுத்தம் எண்ணிக்கை -3) இணைப்புக்கான கட்டணம் செலுத்துதல்
 • அண்ணாப் பல்கலைக்கழகம்  தமிழ்நாடு பொறியாளர் சேர்க்கை (மொத்த நிகழ்நிலை பதிவு சேவைகளின் எண்ணிக்கை -1)
 • பதிவு அடையாள அட்டை அச்சிடுதல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகம் (மொத்த சேவைகளின் எண்ணிக்கை 4)
 • சுயவிவர புதுப்பித்தலுக்கான விண்ணப்பம் சுய விவரம் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பித்தல்
 • மருந்து கட்டுபாட்டு நிர்வாக இயக்குநரகம் (மொத்த சேவைகளின் எண்ணிக்கை - 5)
 • அலோபதி மருந்துகளை வழங்குவதற்கான உரிமம் / புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் ஓமியோபதி மருந்துகளை வழங்குவதற்கான உரிமம் /
 • புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் தடைசெய்யப்பட்ட மருந்துகளை வழங்குவதற்கான உரிமம் / புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் (அலோபதி)
 • மருந்துகளை வழங்குவதற்கான உரிமம் புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் (அட்டவணை x-ல் குறிப்பிட்ட மருந்துகள்) உரிமம் நகல் பெறுவதற்கான விண்ணப்பம்
 • தமிழ்நாடு மின்ஆளுமை முகமை பொது விநியோக திட்டத்திற்கான (மொத்த ஆதார் ஒருங்கிணைப்பு சேவைகளின் எண்ணிக்கை - 1)
 • மேற்கண்ட சேவைகளைத் தவிர அப்னா சில்க் வாயிலாக பொது மக்களை மையமாகக் கொண்ட பயன்பாட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன,

அரசு இ-சேவை மையங்கள்

இணைய வழியில் இ-சேவை மையங்களின் மூலமாக, தொலைதூர கிராமத்திலிருக்கும் பொதுமக்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே அனைத்து சேவைகளையும் வழங்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் நிறைவேறியுள்ளது. தற்போதைய நிலையில் அரசு இ-சேவை மையங்கள் மின் மாவட்டம் மற்றும் இதர பயன்பாட்டு சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றன. கிராமப்புற பொது சேவை மையங்களின் பயன்களைக் கருத்திற்கொண்டு, இத்திட்டம் நகர்ப்புறப்பகுதிகளிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் வெவ்வேறு அரசுத் துறைகளின் மின் சேவைகளை ஒருங்கிணைந்த முறையில், நகர்ப்புறப் பகுதிகளில் ஒரு பொதுவான இடத்தில் வழங்கும் நோக்கில் நகர்ப்புற அரசு இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.

தற்போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் (PACCS), புது வாழ்வு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கிராமப் புற வறுமை ஒழிப்பு சங்கங்கள் (VPRC) மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV), கிராமப் புற தொழில் முனைவோர் (VLE) மற்றும் வேளாண்மை அபிவிருத்திக்கான சர்வதேச நிதி நிறுவனம் (IFAD) ஆகியவற்றின் மூலம் இ-சேவை  மையங்கள் நடத்தப்படுகின்றன.

நகர்ப்புற அரசு இ-சேவை மையங்களை அமைப்பதற்கான முதல் நிலை மாதிரி செயல் திட்டம் கடந்த 24-02-2014 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது, மாநில முழுவதும் 10,423 அரசு இ-சேவை மையங்களில் 10,862 செயலிட முகப்புகள் இயங்கி வருகின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் துறை

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top