பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / பொதுவான தகவல்கள் / வலைதள ஆளுகை மூலம் மக்களை அணுகுதல்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வலைதள ஆளுகை மூலம் மக்களை அணுகுதல்

வலைதள ஆளுகை மூலம் மக்களை அணுகும் முறை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

வலைதளம் உருவானதற்குப் பின்பு அதானால் ஏற்பட்ட மிகவும் முக்கியமான முன்னேற்றம் வலைதள ஆளுகையின் வளர்ச்சியாகும். வலைதளம் மூலமாக மக்கள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வது நம் நாட்டிலும், பிற நாடுகளிலும் வளர்ந்து கொண்டே வரும் நிலையில் ஒவ்வொரு நாட்டு அரசுக்கும் LIGU சவால்களையும், வாய்ப்புகளையும் இது வழங்குகிறது. ஜனநாயக நாடுகளில் ஒரு அரசு செயல்படுவது, மொத்த நாட்டு மக்களின் பிரதிநிதிகளான சிலர் விவாதித்து ஒரு சட்டத்தை கொண்டு வருவதே ஆகும். இந்த சூழலில் உள்ள பல நிலைகள் வலைதள ஆளுகைக்கு முக்கியமானவைகளாகும்.

1990களில் உலகளாவிய வலைதளம் உருவானதற்குப் பிறகு பல அரசுகள் தங்களுடைய செயல்பாட்டிற்கு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்கள். அதன்பிறகு, மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வலைதள தொடர்பு மற்றும் செல்லிடபேசி இணைப்பு பல மடங்கு பெருகிவிட்ட நிலையில் இவைகளின் மூலம் பலவகையில் தொடர்பு கொள்வதை மக்கள் கற்றுக்கொண்டுள்ளனர். அரசு மற்றும் தனி நிறுவனங்களிலிருந்து தங்களுக்குத் தேவையான சுகாதார, அவர்களின் சொந்த வேலைகளுக்கு ஏற்ற மற்றும் தனிநபர் வாழ்க்கைக்கு தேவையான தகவல்களை வலைதளம் மூலம் பெற நினைக்கிறார்கள். இதனால், வலைதளம் சார் குடிமக்கள் உருவாகி இருக்கிறார்கள் என்பது நிரூபணம் ஆகிறது.

இராணுவ சேவைகளுக்கு விண்ணப்பித்தல், பொருளாதார திட்டமிடுதல், தேசிய அளவிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல்கள் மற்றும் வரி சேகரிப்பு ஆகிய துறைகளில் 1960 மற்றும் 1970களில் இந்தியா கணினிசார் ஆளுகையை அறிமுகப்படுத்தியது. ஆனால், 1990களின் துவக்கத்திலிருந்து வலைதள ஆளுகை, பரவலாக்கப்பட்டு பல துறைகளில் கிராமப்பகுதிகளிலுள்ள மக்களுக்கு சென்றடையும் வண்ணமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளிலிருந்த அதிகப்படியான தகவல்களை பெறும் இது துவக்கத்தில் கணினிமயமாக்கலுக்கும், இயந்திரமயமாக்கலுக்கும் அழுத்தம் கொடுக்கப் பட்டாலும், போகப்போக தொடர்புகளை ஏற்படுத்தி அந்த தொடர்புகளை பயன்படுத்தி, மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கான தகவல்களை ஆராய்வதற்காகவும் படுத்தப்பட்டது. மே 2006ல் செயல்படுத்தப் பட்ட தேசிய வலைதள ஆளுகை திட்டத்தின் மூலம் எல்லா அரசு சேவைகளும் சாதாரண மக்களுக்கு தாங்கள் வாழும் பகுதியிலேயே ஒரு பொதுவான சேவை மையம் மூலம் வழங்குவதற்காகவும் இந்த சேவைகள் திறமையாக விஸ்தரிக்கப்பட்டது.  வெளிப்படையாகவும், உறுதியாகவும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் மலிவாகவும் இருப்பதற்காக செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டம், தற்போது, முனைப்பாக இயங்கும் 27 திட்டங்களையும் 8 துணைதிட்டங்களையும் உள்ளடக்கி மத்திய, மாநில மற்றும் கிராமப்புற அளவில் செயல்படக்கூடியதாக உள்ளன. இதில், வருமான வரி, சுங்க வரி, கலால் வரி, கடவு சீட்டு வழங்குவதில் மத்திய அரசுப்பணிகள், நிலப்பதிவேடுகள், விவசாயம், மாநில அளவில் வலைதள மாவட்டங்கள் மற்றும் ஊராட்சி, நகராட்சி சார்ந்த பணிகள் உள்ளடங்கும். மத்திய அரசின் பணிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தியிருப்பதால் தற்போது வழங்கப்படும் சேவைகளின் தரம் மேன்மையடைந்து தொடர்புக்கான செலவுகள் குறைந்து, பல்வேறு துறைகளில் செயல்பாடு ஒளிவு, மறைவின்றி காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல், பொது மக்கள் வலைதளம் மூலம் படிவங்களை சமர்ப்பிப்பது, தங்களுக்கு வரவேண்டிய சேவைகளை சரிபார்ப்பது, கட்டணம் செலுத்துவது, தொலைதூரக் கல்வி மற்றும் தொலைதூர மருத்துவ சேவை ஆகியவைகளை பெறுவதற்கு எளிதான அணுகுமுறை வழங்கியுள்ளது.

சமீப காலத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள வலைதள நடவடிக்கைகளை இப்போது பார்க்கலாம்.

சமையல் எரிவாயு மானிய திட்டம்

ஜூன் 1, 2013ல் முந்தைய மத்திய அரசு, சமையல் எரிவாயுவுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை 291 மாவட்டங்களில் ‘பஹல் திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்தியது. தற்போதைய அரசு இந்த திட்டம் செயல்படுவதில் பயனாளிகளுக்கு உள்ள இடர்பாடுகளை ஆராய்ந்து இந்த திட்டத்தை புதிய வடிவில் 2/2 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 54 மாவட்டங்களில் நவம்பர் 15, 2014ல் இருந்து செயல்படுத்தினார்கள். இந்த திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கம் ஜனவரி 1, 2015 முதல் எல்லா மாவட்டங்களிலும் செயல்படுகிறது. முந்தைய திட்டத்தில் இதில் பயன்பெற பயனாளிகளுக்கு ஆதார் எண் தேவையானதாக இருந்தது. அப்போதுதான் அவர்களுக்கு சமையல் எரிவாயு மானியம் இதனால், ஆதார் இல்லாதவர்கள் மானியம் பெற முடியாத நிலையில் பல பிரச்சினைகள் இருந்தன.

இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் சமையல் எரிவாயு பதிவோடு ஆதார் இணைக்க வேண்டும். அவர்களிடம் ஆதார் அட்டை இல்லையென்றால், தங்களுடைய எண்ணை வங்கிக் கணக்கு எண்ணை சமையல் எரிவாயு பதிவிலிருக்கும் 17இலக்கு எண்ணுடன் சேர்க்க வேண்டும். இந்த திட்டத்தில் சேர்ந்தவுடன் பயனாளிகளுக்கு சந்தை விலையில் சமையல் எரிவாயு உருளை கிடைக்கும். மானியத் தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த திட்டத்தில் பயனிட்டாளர் முதன்முறையாக உருளைக்கு பதிவு செய்யும் போது அவருடைய வங்கிக் கணக்கில் முன்னதாகவே ரூ.568 செலுத்தப்படும். ஏனெனில் இந்த மானியத் தொகையை வைத்து அவர் முழுமையான சந்தை விலையை கொடுத்து உருளையை பெற முடியும். இது ஒவ்வொரு உருளைக்கும் கொடுக்கப்படும் மானியத்தைவிட கூடுதலாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நடவடிக்கைக்கான தகவல்களும் பயனிட்டாளர்களுக்கு எஸ் எம் எஸ் மூலம் அனுப்பப்படும். ஆகவே, எல்லா எல்.பி.ஜி களுடைய செல்லிடப்பேசி எண்ணை இதுவரை பதிவு செய்யாமல் இருந்தால் பதிவு செய்ய வேண்டும். பயனிட்டாளர்கள் பணம் கொடுத்து தங்களுடைய முகவர்களிடம் தங்கத்திற்கு ரசீதையும் வாங்கி வைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்து கொள்ளமுடியும்.

இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டின் 676 மாவட்டங்களில் உள்ள 15.3 கோடி பயனிட்டாளர்கள் பயன்பெறுவர். தற்போது 6.5 கோடி பயனிட்டாளர்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் சேர்ந்து தங்களுடைய வங்கி கணக்குகள் மூலம் மானியத் தொகையை பெறுகிறார்கள்.

இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் உண்மையான பயனிட்டாளர்கள் நேரடியாக மானியத் தொகையை பெறுவார்கள். இதை திசை திருப்ப முடியாது. இதனால், பொதுப் பணம் சேமிப்படையும். மேற்கண்ட திட்டத்தில் எல்லா பயனிட்டாளர்களும் உடனடியாக சேர வேண்டும்.

இந்த திட்டம் நவம்பர் 15, 2014ல் துவக்கப்பட்ட பின் 30.12.2014 வரை 20 லட்சம் எரிவாயு பயனிட்டாளர்களுக்கு ரூ.624 கோடி அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒருவர் மானியம் பெற விரும்பாவிட்டால் அதை அவர் தானே முன்வந்து விட்டுக் கொடுக்கலாம். இந்திய அரசு இந்த “விட்டுக் கொடுக்கும் திட்டத்தை" மார்ச் 2015ல் துவக்கியது. ஏப்ரல் 2016வரை மத்திய தர மற்றும் ஒய்வு பெற்றவர்கள் உள்ளிட்ட ஒரு கோடி மக்கள் எரிவாயு, சமையல் எரிவாயு மானியத்தை தாங்களே முன்வந்து விட்டுக் கொடுத்துள்ளனர்

கணிணிமய இந்தியா

அரசு முதன்மை திட்டங்களை செயல் படுத்தத் தேவையான வலைதள மற்றும் செல்லிடப் பேசி சார்ந்த தொடர்புகள் குறைவாக உள்ளதை நிறைவு செய்யும் வகையில் இந்தக் கணினிமய இந்திய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், ரெயில் டெல் மற்றும் பவர் க்ரிட் கார்ப்பரேஷனின் தொடர்பு திட்டங்கள் மூலம் ஒரளவு செலவு செய்யப்படும். இந்தியாவில் மொத்த மக்கள் எல்லோருடனான தொகையில் கிராமப்புற பகுதியில் வாழும் 68 சதவிகிதத்தினரோடு தொடர்புகளை ஏற்படுத்த மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.

கணிணிமய இந்தியா திட்டத்தின் மூலம் தொழில்நுட்ப சேவைகள், பொருள் உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த பணிகளில் எல்லா மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி காண்பதே நோக்கமாகும். இதன் மூன்று முக்கிய அம்சங்களாவன:

 • எல்லா குடிமக்களும் பயன்பெறும் வகையில் கணிணிசார் உள் கட்டமைப்பு வசதிகள்.
 • ஆளுகை நடவடிக்கைகள் மற்றும் சேவைகள் தேவைப்படும் போது உடனுக்குடன் கிடைக்கும் வசதி.
 • குடிமக்களுக்கு கணிணிசார் அதிகாரம் அளித்தல்.

மேற்கூறப்பட்ட எண்ணங்களோடு கணிணிமய இந்தியா திட்டத்தின் மூலம் ப்ராட்பேண்ட் தொலை தொடர்பு வசதிகள், எல்லோருக்கும் கையிடப்பேசி வசதி தொடர்பு, எல்லோருக்கும் வலைதள அணுகு திட்டம், வலைதள ஆளுகை, தொழில் நுட்பத்தின் மூலம் அரசை புனரமைப்பது, வலைதளம் மூலம் சேவை வழங்குவது, எல்லோருக்கும் தகவல்கள், மின்னியல் பொருட்கள் உற்பத்தி, இறக்குமதிகளை முழுமையாக குறைக்கும் திட்டம், வேலைவாய்ப்பு வழங்குவது மற்றும் இளமையில் வேலைவாய்ப்பு என்ற திட்டத்தில் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன. கணிணிமய இந்தியா திட்டம் அரசின் பல முயற்சிகளை ஒன்றிணைத்து ஒரு சாளர மூலம் வலைதளத்தின் உதவியோடு சேவைகளை வழங்கவும் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்கவும், எல்லாத் துறைகளையும் ஒன்றிணைத்து மக்களுக்கு சேவைகளை வழங்கவும், சிறந்த குடிமக்கள் சேவை செய்யவும் உதவுகிறது.

இந்த திட்டம் மத்திய அரசின் மின்னியல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையால் உருவாக்கப்பட்டு மத்திய அரசின் இதர துறைகள் மற்றும் அமைச்சகங்களோடும், மாநில அரசுகளோடும் இணைந்து ஒருங்கிணைக்கப்படுகிறது. கணிணிமய இந்தியா திட்டத்தின் கண்காணிப்பு குழுவின் தலைவராக பிரதமர் இருப்பதால் இந்த திட்டத்தின் செயல்பாடு கவனமாக கண்காணிக்கப்படுகிறது. தற்போதைய மற்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எல்லா வலைதள ஆளுகை முறைகளும் மாற்றியமைக்கப்பட்டு கணிணி மய இந்தியா திட்டத்திற்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.

கணிணிமய இந்தியா திட்டத்தில் பல அம்சங்கள் இருந்தாலும் அதில் மிக முக்கியமானது, கடைசி கட்ட தொடர்பு செயலாக்கம் ஆகும். எல்லா கிராம பஞ்சாயத்துக்களையும் இணைத்து, அங்கு ஃபைபர் ஆப்டிக்ஸ் உதவியுடன் பொது சேவை மையங்கள் துவக்கப்பட இருந்தாலும், அது மட்டும்தான் முக்கிய இலக்கு அல்ல.

ஒவ்வொரு கிராமப்புற பகுதிக்கும் ஃபைபர் ஆப்டிக்ஸ் இணைப்புக்களை ஏற்படுத்த அரசு ஒரு குறிப்பிட்ட பொதுத்துறை நிறுவனத்தை நியமித்துள்ளது. ஆனால், இதில் வியாபாரம் சார்ந்த ஒரு முக்கிய இலக்கு, விடுபட்டுள்ளது. கிராமப்புறங்களில் தொலை தொடர்பு இறுதிகட்ட இணைப்பை வழங்க அரசு வலைதள சேவை வழங்கும் தொழில் முனைவோர்களை எதிர்பார்த்திருக்கிறது. வலைதள சேவை இணைப்புகளை வழங்கும் சிறு வியாபார நிறுவனங்கள் உரிமம் பெற்றவுடன் இந்த திட்டம் வேகம் அடையும். இந்த நிலையை எட்ட சில ஆண்டுகள் ஆகலாம். இந்த இணையதள சேவை வழங்குபவர்கள், ஃபைபர் ஆப்டிக்ஸ் தொடரை பயன்படுத்தி கணிணிசார் உள் கட்டமைப்பு வசதிகளை வழங்க முடியும்.

இதற்கிடையே, கணிணிமய இந்தியா முயற்சி மற்றும் நிலையாக வளர்ந்துவரும் இந்திய பொருளாதாரம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, இந்திய நிறுவனங்கள் தொழில்நுட்பத்திற்கு அதிக அளவில் முதலீடு செய்வார்கள் என்று தனியார் துறை மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறது. ஒரு அறிக்கையின்படி இந்தியாவின் தொழில்நுட்ப பயன்பாட்டுத் தேவைகள், அதாவது கணிணிகள், அவைகளோடு தொடர்பு கொண்டுள்ள மற்ற உபகரணங்கள் தொலைதொடர்பு கருவிகள், மென் பொருள்கள், தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள், வெளிநாடுகளிலிருந்து இத்தகைய தொழில்நுட்பத்தை பெறும் தொழில்கள் மற்றும் கணிணிசார் கருவிகளை பழுதுபடாமல் பார்த்துக்கொள்ளுதல் ஆகியவற்றின் தேவை 2016-17ஆம் ஆண்டுகளில் ரூபாய் மதிப்பில் 12 சதவிகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தொழில்நுட்பத்திற்கான செலவினம், 2015ல் இருந்த ரூ.2.08 டிரில்லியனிலிருந்து 2016ல் ரூ.2.32 டிரில்லியனாகவும் 2017ல் ரூ.2.59 டிரில்லியனாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 3ல் ஒரு பங்கு கணிணிசார் கருவிகளுக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நிறுவனங்களின் மிகப்பெரிய செலவினம் இந்த வகையில்தான் இருக்கும். ஆனால், தொலைத் தொடர்புசார் கருவிகளுக்கான செலவினம் மற்ற பிரிவினங்களைவிட மெதுவாகவே உயரும். இந்த நிலைமை சந்தை உறுதி பெற்று விலைகள் குறையும் வரை இருக்கும். இந்த நிலைமை, கணிணிமய இந்தியா வேகம் பெற்று தொலைபேசி நிறுவனங்கள் 4G போன்ற நவீன தொலைதொடர்பு வசதிகளை வழங்கும் போது உதவும்.

2014-15ல் மத்திய அரசு, ஆரம்பத்தில் 100,000 கிராமப் பஞ்சாயத்துக்களை ஃபைபர் ஆப்டிக்ஸ் மூலம் இணைக்க திட்டமிட்டு இருந்தது. பிறகு இது 50,000மாக குறைக்கப் பட்டது. மார்ச் 2015க்கான தகவல்களின்படி தேசிய ஃபைபர் ஆப்டிக்ஸ் தொடர்பு கட்டமைப்பு திட்டத்தின்கீழ் 20,000 கிராம பஞ்சாயத்துக்களுக்கே இணைப்பு கிடைத்துள்ளது. இந்த திட்டம் இப்போது, பாரத்னெட் என்ற பெயரில் செயல்படுகிறது.

அரசு தகவல்களின்படி டிசம்பர் 2015வரை 32,272 கிராம பஞ்சாயத்துக்களுக்கு இணைப்பு 76.624 கிமீ தூரம் வரை ஃபைபர் ஆப்டிக்ஸ் இணைப்பு பதிக்கப்பட்டிருக்கிறது. பாரத் நெட் திட்டத்தின்படி 2017க்குள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு, மக்கள் வாங்கக்கூடிய விலையில் ப்ராட்பேண்ட் தொடர்பை எல்லா கிராம குடும்பங்களுக்கும், அமைப்புகளுக்கும் 2Mbps லிருந்து 20 Mbps வரை வழங்க உத்தேசிக்கப் பட்டுள்ளது.

கணிணிமய இந்தியாவின் செயல்திட்டங்கள்

ஏற்கனவே, பல திட்டங்கள் / பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அல்லது கீழ் கண்டுள்ளபடி துவக்கப்பட உள்ளது;

 1. கணிணிசார் பாதுகாப்பு அமைப்பு: இதனால், ஆவணங்களை அப்படியே, பயன் படுத்துவது, குறைக்கப்பட்டு அவை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வலைதளம் மூலம் பரிமாறிக்கொள்ள முடியும். இதற்காக, பதிவு செய்யப்பட்ட வலைதளம்சார் ஆவணம் அனுமதிக்கப்பட்டு வலைதளம் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் ஆவணங்களின் நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படும்.
 2. மக்கள் அரசுடன் ஆளுகையில் தொடர்பு கொள்ள MyGov.in என்ற வசதியை செயல்படுத்தியுள்ளது. அதில் விவாதிக்க, "செய்க மற்றும் பறப்புக வழிமுறைகள் உள்ளன. செல்லிடப்பேசிகளில் இந்த MyGo in "செல்லிடப்பேசி செயலி வசதியை பெற்றுபயன்பெறலாம்.
 3. சுத்தமான பாரதம் திட்டம் (SBM) செல்லிடப்பேசி செயலி வசதியை பயன்படுத்துவர்.
 4. மக்கள் தங்களுடைய கையெழுத்தை மென்பொருள் மூலம் பதிவு செய்து வலை தளம் மூலம் பயன்படுத்தலாம்.
 5. மருத்துவ வசதிக்கான செல்லிடப்பேசி செயலியின் மூலம் வலைதளம் மூலம் பதிவுகள் செய்துகொண்டு, மருத்துவ சேவை சார்ந்த சேவைகளான பதிவு செய்தல், கட்டணங்களை செலுத்துதல், மருத்துவர்களின் சந்திப்புகளை உறுதி செய்தல், மருத்துவ பரிசோதனை படிவங்களை பெறுதல், தேவையான இரத்தம் இருக்கிறதா என்று தெரிந்து கொண்டு விண்ணப்பித்தல் ஆகிய பணிகளை செய்து கொள்ளலாம்.
 6. தேசிய கல்வி உதவித்தொகை வலை தளம் என்பதன் மூலம் ஒரே இடத்தில் மத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தின் அனைத்து பணிகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல், அதனின் ஆய்வு, ஒப்புதல் மற்றும் பண வினியோகம் ஆகியவற்றை செய்து கொள்ளலாம்.
 7. Deity என்ற கணினிமய / இந்திய வலை தளம் (DIP) முயற்சியால் நம் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பலவகையான ஆவணங்களை மென்பொருள் பதிவு செய்து மக்களின் பல வகையான சேவைகளை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
 8. மத்திய அரசு 'பாரத்நெட் என்ற முயற்சியின் மூலம் நாடெங்கும் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிவேக மின்னஞ்சல் வழிப்பாதையை அமைக்க உள்ளது. ஃபைபர் ஆப்டிக்ஸ் மூலம் கிராமப்புற பகுதிகளை இணைக்க செயல்படுத்தப்படும் உலகளாவிய திட்டங்களில் இதுவே மிகப்பெரியதாகும்.
 9. பி.எஸ்.என்.எல் நிறுவனம், செயல்படுத்தி நாட்டில் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தொலைபேசி எக்ஸ்சேஞ்சுகளை மாற்றி கணிணிசார் தொழில்நுட்பமாக மாற்றி அதன்மூலம் ஒலி, தகவல்கள், பல ஊடக மற்றும் வீடியோ காட்சிகள் மற்றும் பிற சேவைகளை வழங்க உள்ளது. 10. பி.எஸ்.என்.எல் நிறுவனம், நாடெங்கிலும் பெருமளவு வைஃபை வசதிகளை செய்துள்ளது. செல்லிடப்பேசியிலிருந்து ஒருவர் இந்த வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
 10. மக்களும் அரசு அமைப்புகளும் எளிதாக நேரடி தொடர்பு கொள்ளவும், பொதுமக்கள் சேவைகளை வழங்கவும் சிறப்பாக செயல்படும் தொடர்பு அமைப்பு அவசியம். அரசு இதை உணர்ந்து கணிணிமய இந்தியா திட்டத்தின் ஒரு முக்கிய பங்காக பிராட்பேண்ட் அமைத்துள்ளது. வசதிகளை ஏற்படுத்துவது ஒரு புறம் இருந் தாலும், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்களுக்கான சேவைகளை வழங்குவது என்பது மற்றொரு செயலாகும்.

கொள்கை முயற்சிகள்

வலைதள ஆளுகைக்காக பல கொள்கை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை களாவன: இ-க்ரான்தி அமைப்பு மத்திய திறந்த வெளி ஏற்பு திட்டம், வலைதள ஆளுகைக்கு தேவையான மென்பொருட்களை திறந்த வெளி ஏற்பு திட்ட அமைப்பு, மத்திய அரசுக்கான பல சேவைகளை இணைக்கும் மென்பொருள் இந்திய அரசின் மின்னஞ்சல் கொள்கை, மத்திய அரசின் தகவல் தொழில் நுட்ப வளங்களை பயன்படுத்துதல் சார்ந்த கொள்கை, மத்திய அரசின் செயலிகளின் ரகசிய எண்களை உருவாக்கி செயல்படுத்தும் மற்றும் அதிநவீன வலைதள தொலைதொடர்பு திட்டங்களாகும்.

 • வடகிழக்கு மாநிலங்களிலும், மற்ற மாநிலங்களில் சிறிய கிராமப்புற பகுதிகளில் சார்ந்த  பிபிஓ மையங்களை அமைப்பது கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
 • மென்பொருள் மேம்பாட்டு நிதியின் கொள்கை வலைதள கணிணிசார் மேம்பாடுகளில் புதியனவற்றை கண்டுபிடித்தல், ஆய்வு மற்றும் வடிவமைப்பு, பொருள்கள் உருவாக்கல் மற்றும் புது முனைவுகளுக்கான நிதியம் தொடர்ந்து செயல்படும் வண்ணம் அதற்குண்டான வலைதள வளங்களை உருவாக்குதல்.
 • வளைந்து கொடுக்கும் மென்பொருளியல் தேசிய மையம் ஒன்றை மத்திய அரசு துவக்கியுள்ளது. எந்த நிலைக்கும் ஏற்றவாறு செயல்படும் மென்பொருள் உத்திகளில் ஆய்வுகள் மற்றும் புதியன கண்டுபிடித்தல் ஊக்குவிக்கப்படும்.
 • எல்லாவற்றிற்கும் வலைதளம்சார் மேன் மிகு மையம் என்ற நிறுவனத்தை மென்பொருள் மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை, எர்நெட் (ERNET) LDög)|Lb இணைந்து துவக்கியுள்ளன.

முடிவாக, வலைதள ஆளுகை, சீர்திருத்தங்களால் இந்தியாவின் ஏழ்மை ஒழிப்பு திட்டங்களுக்கு பேருதவி கிடைத்துள்ளது. இவ்வகையான செயல்களால் ஏழை மக்கள் ஆரோக்கியமான திறமையான வாழ்வை வாழ முடியும். இந்தியாவில் ஏழை மக்கள் இந்தத் திட்டங்களை அதிகபட்சமாக எப்படி பெற வைப்பது என்பது நமக்குள் இப்போதைய இந்த வலைதள ஆளுமை திட்டம், எல்லா பங்குதாரர்களுக்கும் மிகுந்த பயனளிக்கும், அதாவது, அரசுகள், பயனிட் டாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள்.  ஒவ்வொரு பயனிட்டாளருக்கும் பொருளாதார சமத்துவத்தை இது உறுதி செய்யும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.03571428571
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top