பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / மொபைல்வழி சேவைகள் / இண்டர்நெட் இல்லாமலேயே வங்கி சேவைகளை பயன்படுத்தும் முறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இண்டர்நெட் இல்லாமலேயே வங்கி சேவைகளை பயன்படுத்தும் முறைகள்

இண்டர்நெட் இல்லாமலேயே வங்கி சேவைகளை பயன்படுத்தும் முறைகள்

வங்கி சேவை

இந்தியாவில் கடந்த 10 வருடங்களில் வாடிக்கையாளர் மற்றும் நுகர்வோர் சேவைகளின் தரம் மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளன. நாளுக்கு நாள் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுச் சேவைகள் எளிதாக்கப்பட்டுக் கையடக்கத்தில் அனைத்தும் கிடைக்கின்றன. இந்நிலையில் இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் மொபைல் வாயிலாக வங்கி சேவைகளை பெறமுடியும்

99#  டயல் நம்பர்

இது அவசர காலங்களில் அதிகளவில் உங்களுக்கு உதவும். Auto Play 1/16 99# டயல் பண்ணுங்க இந்த வரிசையில் தற்போது ஒரு வாடிக்கையாளர் தன் வங்கியிடமிருந்து சேவையைப் பெற வங்கியில் தான் தொடர்புக்காக அளித்திருந்த தன்னுடைய மொபைல் எண்ணில் இருந்து *99# என்று டயல் செய்வதன் மூலம் சேவைகளைப் பெற முடியும்.

இந்த வசதியை தற்போது அனைத்து மொபைல் போன்களிலும் அனைத்து ஜிஎஸ்எம் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களிலிருந்தும் பெற முடியும்.

*99# என்பது என்பிசிஐ எனப்படும் தேசிய செலுத்துகை நிறுவனம் மூலம் வழங்கப்படும் யுஎஸ்எஸ்டி தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு சேவையாகும்.

முன்னேற்பாடுகள்

மொபைல் பாங்கிங்

வாடிக்கையாளர் தன்னுடைய வங்கியில் மொபைல் பாங்கிங் வசதியைப் பயன்படுத்த பதிவு செய்துகொள்ள வேண்டும்.

முக்கியத் தகவல்கள்

மொபைல் எண், எம்எம்ஐடி (MMID), ஐஎப்எஸ் குறியீடு, கணக்கு எண், பயனாளியின் ஆதார் எண் எம்பிஐஎன் (MPIN) ஆகிய விவரங்களை விண்ணப்பிக்கும் முன் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

இணைப்பு

எந்த ஒரு பரிவர்த்தனையும் தொடங்குவதற்கு முன் மொபைல் போன் இயக்கத்தில் அல்லது தொடர்பில் உள்ளதா எனப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எம்எம்ஐடி

எம்எம்ஐடி என்பது மொபைல் பணப்பரிவர்த்தனைக் குறியீட்டைக் குறிக்கும் குறுஞ்சொல். இது வங்கியால் தன் வாடிக்கையாளர்களுக்கு ஐஎம்பிஎஸ் சேவையைத் தருவதற்காக வழங்கப்படும் ஒரு 7 இலக்க எண் ஆகும். இந்த எம்எம்ஐடி எண் தன் மொபைல் என்னை வங்கியில் பதிவு செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

*99# சேவை

இந்த *99# சேவையை டயல் செய்யவேண்டிய அவசியம் என்ன?

 1. இதற்கு இன்டர்நெட் வசதி தேவையில்லை - குரல் தொடர்பு மூலம் வேலை செய்யும்
 2. இந்தப் பொதுவான எண்ணை எந்த ஒரு தொலைத்தொடர்பு சேவை மூலமாகவும் தொடர்பு கொள்ள முடியும்
 3. இதற்கு ரோமிங் கட்டணங்கள் எதுவும் கிடையாது
 4. அனைத்து ஹேண்ட் செட் மற்றும் தோளைத் தொடர்பு சேவை மூலமாகவும் வேலை செய்யும்
 5. 24 மணிநேர சேவை (விடுமுறை நாட்கள் உட்பட)
 6. இதற்காக உங்கள் மொபைலில் பிரத்தியேக செயலிகள் அமைக்கத் தேவையில்லை
 7. வங்கி மற்றும் நிதிச்சேவையைப் பெற இது ஒரு கூடுதல் வசதியாக இருப்பதுடன் உறுதுணையாகவும் இருக்கும்

சேவைகள்

இந்த *99# எண்ணை டயல் செய்வதன் மூலம் எந்தெந்த சேவைகளைப் பெறலாம் என்பதைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படிக்கவும்.

நிதிச் சேவைகள்

 1. மொபைல் எண் மற்றும் எம்எம்ஐடி மூலம் வாடிக்கையாளர் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.
 2. ஐஎப்எஸ்சி மற்றும் கணக்கு எண் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பயனாளர் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்
 3. பயனாளிகள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தியும் பணப்பரிமாற்றம் செய்யமுடியும்

இருப்பு (பேலன்ஸ்)

பயனாளர் தான் பதிவு செய்திருக்கும் மொபைல் எண்மூலம் கணக்கில் உள்ள இருப்பை அறிய முடியும். நாம் பெரும்பாலும் இணைய வங்கியைப் பயன்படுத்துவது இதற்காகத் தான், இனி இண்டர்நெட் இல்லாமல் மொபைல் இணைப்பு இல்லாமலே கணக்கின் இருப்பு அளவை தெரிந்துகொள்ளலாம்.

மினி ஸ்டேட்மென்ட்

மினி ஸ்டேட்மென்ட் எனப்படும் கணக்குக் குறித்த குறுந் தகவல் அறிக்கையைப் பெற முடியும். இதில் நாம் செய்யக் கடைசிச் சில பரிமாற்றங்கள், கணக்கின் இருப்பு போன்ற அனைத்தும் தெரிந்துகொள்ள முடியும்.

மொபைல் மணி ஐடெண்டிபையர்

எம்எம்ஐடி அறிய (மொபைல் மணி ஐடெண்டிபையர்) தன்னுடைய பதிவுசெய்த மொபைல் எண்ணிற்கு வங்கி வழங்கும் எம் எம் ஐ டி குறியீட்டை வாடிக்கையாளர் அறிய முடியும்

மொபைல் வங்கியியல் கடவுச்சொல் (MPIN)

எம்பின் எனப்படும் மொபைல் ரகசியக் குறியீட்டை ஒருவர் உருவாக்கவோ மாற்றவோ முடியும். இது பணப் பரிமாற்றங்களைச் சரிபார்த்து உறுதி செய்ய உதவும்.

ஒன் டைம் பாஸ்வேர்ட்

ஒடிபி அல்லது ஒன் டைம் பாஸ்வேர்ட் எனப்படும் ஒருமுறைக்கான பரிமாற்றங்களை உறுதிசெய்யப் பயன்படும் ரகசியக் குறியீட்டு எண்ணைப் பெறவும் இது உதவும்.

வீட்டின் அருகாமையில் வங்கி சேவை

ஆதாரம் : தேசிய செலுத்துகை நிறுவனம்

2.97777777778
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
Sowri Apr 03, 2019 12:01 PM

சரியாக வேலை செய்வில்லை . இன்னும் திறம்பட செய்ய வேண்டும் .

Kaviyarasan Jun 25, 2018 08:48 AM

Thanks

M.MOHAMED NASURUDEEN Dec 23, 2016 08:24 AM

இண்டர்நெட் இல்லாமலேயே வங்கி சேவைகளை பயன்படுத்தும் முறைகள், மேலும் விளக்கம் தேவை, எனது மொபைல் எண் 81*****26

Ananthan Jun 27, 2016 07:22 AM

MMID பெறுவது எப்படி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top