অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

இந்தியாவில் மொபைல் சேவா

இந்தியாவில் மொபைல் சேவா

மொபைல் பேங்கிங்

இந்தியாவில் உள்ள வங்கிகள் தங்களின் சேவைகளை மொபைல் மூலமாக அளிப்பதில், அதிலும் குறிப்பாக எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலம் கொடுப்பதில் முனைப்புடன் செயல்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் பணப்பரிமாற்ற விபரங்கள் & அக்கவுண்ட் விபரங்களை அறிதல் போன்றவற்றுக்காக வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இச்சேவையைப் பெறுவதற்கான சேவைக்கட்டணம் வங்கிக்கு வங்கி மாறுபடும். சில வங்கிகள் இச்சேவையை இலவசமாகவும், சில வங்கிகள் வருடாந்திர கட்டணத்தை வசூலித்தும் அளிக்கின்றன. ஆனால் வங்கிகளின் மொபைல் வழிச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு ஆகும் மொபைல் கட்டணங்களை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சில வங்கிகள் தனிப்பட்ட ஒரு மென்பொருளை ஒவ்வொருவருடைய கைபேசியிலும் (மொபைல் போனில்) உட்செலுத்தி தனி நபர் மொபைல் பேங்கிங் சேவையை அளிக்கத் துவங்கி உள்ளன. ஆனால் ஜிபிஆர்எஸ் வசதி கொண்ட செல்போன்களில் மட்டுமே இது சாத்தியம். ஆனால், இம்முறையைச் செயல்படுத்துவது மிகவும் சுலபம். வங்கிகளின் இந்த புதிய முறையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.

மொபைல் வழி வங்கிச் சேவைகளை அளிக்கும் வங்கிகளில் சில பின்வருமாறு:

ஆக்ஸிஸ் வங்கி

அளிக்கப்படும் சேவைகள்

  • இருப்பு விபரம்
  • சமீபத்திய 3 பணப்பரிமாற்றங்கள்
  • காசோலை நிலவரம்
  • டீமெட் அக்கவுண்ட்டின் குறைந்தபட்ச இருப்புத் தொகை
  • மொபைல் பேங்கிங் சேவையின் செயல்பாட்டைத் துவக்குதல்.
  • மொபைல் பேங்கிங் வசதியை வேண்டாம் என்று ரத்து செய்தல்

சேவைக்கான கட்டணங்கள்

  • ஒவ்வொரு நிதியாண்டுக்கும் ரூ.150 (மற்றும் வரிகள்) வசூலிக்கப்படும்.
  • இச்சேவையைப் பயன்படுத்துவதற்காக முதன்முறையாகப் பதிவு செய்யும் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட காலங்களுக்கு இச்சேவை இலவசமாக அளிக்கப்படும். வாடிக்கையாளர், பதிவு செய்த 60 நாட்களுக்குள் இச்சேவையைப் பெற விரும்பவில்லை எனத் தெரிவித்தாலும் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது.

மொபைல் சேவைகளைப் பெறுவதற்கான வழிமுறைகள்

சேவைகள்

எஸ் எம் எஸ் அனுப்பும் வழிமுறை.
5676782 அல்லது 9717000002 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்புக

வங்கியிடமிருந்து பெறப்படும் குறிப்பிட்ட சேவை சார்ந்த தகவல்கள்

இருப்பு விபரம்

BAL <இடைவெளி> வங்கிக்கணக்கு எண்

குறிப்பிட்ட அக்கவுண்ட் எண்ணில் உள்ள பண இருப்பு விபரம் தரப்படும்.

சமீபத்திய 3 பணப்பரிமாற்றங்கள்

MINI <இடைவெளி> வங்கிக்கணக்கு எண்

அக்கவுண்ட்டில் நிகழ்ந்த சமீபத்திய 3 பணப்பரிமாற்றங்கள் தரப்படும்.

காசோலை நிலவரம்

CHQSTATUS <இடைவெளி> வங்கிக்கணக்கு எண் <இடைவெளி> காசோலை எண்

நீங்கள் குறிப்பிட்ட காசோலையின் தற்போதைய நிலவரம் தெரிவிக்கப்படும்.

டீமெட் அக்கவுண்ட்டின் குறைந்தபட்ச இருப்புத் தொகை

DMAT <இடைவெளி> Client ID <இடைவெளி> ISIN Number

டீமெட் அக்கவுண்ட்டின் பங்கு வர்த்தகம் சம்பந்தப்பட்ட பண இருப்பு விபரம் தரப்படும்.

மொபைல் பேங்கிங் சேவையின் செயல்பாட்டைத் துவக்குதல்

ACT <இடைவெளி> Full வங்கிக்கணக்கு எண்

பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் பேங்கிங் செயல்பாடு துவக்கப்படும்.

மொபைல் பேங்கிங் வசதியை வேண்டாம் என்று ரத்து செய்தல்

SUSPEND <இடைவெளி> வங்கிக்கணக்கு எண்

மொபைல் எண்ணுடன் தொடர்புடைய அக்கவுண்ட்ற்கு மொபைல் பேங்கிங் வசதி முடக்கி வைக்கப்படும்.

பதிவு செய்யும் செயல் முறை

தொலைபேசி வழி போன் பேங்கிங் வாயிலாக

  • வாடிக்கையாளர்கள் சார்ந்துள்ள வங்கிக்குரிய போன் பேங்கிங் எண்ணின் மூலம் தொடர்பு கொண்டு மொபைல் பேங்கிங்ற்குப் பதிவு செய்யலாம்
  • இங்கே கிளிக் செய்க தங்கள் நகரத்திற்குரிய போன் பேங்கிங் எண்ணை அறிய

ஏடிஎம் மையத்தில்

  • பற்று அட்டையுடன் (டெபிட் கார்டு) தொடர்புடைய முதன்மை வங்கிக் கணக்கில் மட்டுமே மொபைல் பேங்கிங் சேவையைப் பெற வாடிக்கையாளர்கள் பதிவு செய்யவோ புதுப்பிக்கவோ முடியும்.
  • ஏ டி எம் அட்டையைச் செருகி, இரகசிய எண்ணான 'பின்' எண்ணை டைப் செய்யவும்.
  • 'இதர சேவைகள்' என்ற மெனுவைத் தேர்வுசெய்யவும்.
  • மொபைல் பேங்கிங் பதிவு/புதுப்பிப்பு ('Mobile Banking Registration/Update')-என்ற மெனுவைத் தேர்வு செய்யவும்.
  • சேவையைப் பெற விரும்பும் மொபைல் எண்ணை டைப் செய்யவும்.
  • மொபைல் எண்ணை மீண்டும் டைப் செய்யவும்.
  • ஏடிஎம்-லிருந்து பெறப்பட்ட ரசீதைப் பதிவு செய்ததற்கு அடையாளமாக வைத்துக் கொள்ளவும். எந்த அக்கவுண்ட் எண்ணிற்கு மொபைல் சேவையைப் பெறுவதற்கான பதிவு செய்யப்பட்டதோ அந்த எண் ரசீதில் அச்சிடப்பட்டிருக்கும்.
  • மேற்கண்டவற்றை முடித்த 48 மணி நேரத்திற்கு பின் செயல்பாடுகள் நடைமுறைக்கு வரும்.

ஆக்ஸிஸ் வங்கியின் இன்டர்நெட் பேங்கிங் (iConnect) மூலம்

  • உங்களின் நுழைவு சொல்/எண் மற்றும் பாஸ்வேர்டை டைப் செய்து இன்டர்நெட் பேங்கிங்ற்குள் நுழையவும். (இவ்வசதியைப் (iConnect) பெற நீங்கள் முன்னரே பதிவு செய்யவில்லை எனில், அருகில் உள்ள வங்கிக் கிளையினைத் தொடர்பு கொண்டு நுழைவு சொல்/எண் மற்றும் பாஸ்வேர்டைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
  • 'Customize' என்பதை க்ளிக் செய்த பின்னர் 'Mobile Banking' -ஐ க்ளிக் செய்க.
  • உங்களின் மொபைல் எண்ணை அளித்த பின்பு 'Enable for Mobile Banking' என்பதைக் க்ளிக் செய்க. பிறகு ‘submit’பட்டனைக் க்ளிக் செய்தால் நீங்கள் மொபைல் பேங்கிங் வசதியைப் பெறப் பதிவு செய்ததாக எடுத்துக்கொள்ளப்படும்.

வங்கிக் கிளையில்

  • மொபைல் பேங்கிங் வசதி வேண்டும் என்று கைப்பட எழுதப்பட்ட விண்ணப்பத்தை அருகில் உள்ள வங்கிக் கிளையில் சமர்ப்பிக்கவும்

இங்கே கிளிக் செய்க ஆக்ஸிஸ் வங்கியின் மொபைல் பேங்கிங் பற்றி மேலும் தெரிந்து கொள்ள

பாங்க் ஆப் ராஜஸ்தான்

இவ்வங்கி மொபைல் பேங்கிங் மற்றும் எஸ் எம் எஸ்(SMS) வழி சேவைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.வாடிக்கையாளர் இவ்வசதியைப் பயன்படுத்த விரும்பினால், அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையினைத் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.

குறுஞ்செய்தி மூலம் துரிதமான உடனடி தகவல் பெறுதல்

  • பதிவு செய்த வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணுக்கு தன்னிச்சையாகக் குறுஞ்செய்தி(SMS) அனுப்பப்படும்.
  • தற்சமயம் குறுஞ்செய்தி மூலம் வழங்கப்படும் சேவைகள்:
  • ஒவ்வொரு நாளின் இறுதியில் கணக்கில் உள்ள இருப்புத் தொகை
  • குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்தால் அது குறித்த துரிதத்தகவல்.
  • இதர கட்டணங்கள்/வரவு வைக்கப்பட்ட அல்லது கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட வட்டித் தொகை குறித்த உடனடித் தகவல்
  • இணையவழி பேங்கிங் சம்பந்தப்பட்ட விபரங்கள்
  • ஏ டி எம் சம்பந்தப்பட்ட துரிதத்தகவல்.

மொபைல் பேங்கிங்

மொபைல் பேங்கிங் சேவைகளைப்பெற பதிவு செய்த வாடிக்கையாளர் வங்கியால் அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால் கீழ்க்கண்ட தகவல்கள் வாடிக்கையாளரின் மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும்

  • பண இருப்பு விபரம்
  • சமீபத்திய 5 பணப்பரிமாற்றங்கள்
  • காசோலை நிலவரம்
  • காசோலை புத்தகத்தைப்பெற விண்ணப்பித்தல்
  • தனது வங்கிக் கணக்கு விபர அறிக்கையை தபால் மூலம் பெற விண்ணப்பித்தல்

பதிவு செய்யும் முறை

  • மொபைல் பேங்கிங் சேவையைப்பெற பதிவு செய்தல் மற்றும் அது சார்ந்த இதர விபரங்களுக்கு உங்களின் வங்கிக்கிளையை அணுகவும்.

இங்கே கிளிக் செய்க பாங்க் ஆப் ராஜஸ்தான் வங்கியின் மொபைல் பேங்கிங் பற்றி மேலும் தெரிந்து கொள்ள

கார்ப்பரேஷன் வங்கி

கார்ப்பரேஷன் வங்கி அளிக்கும் மொபைல் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி.

எஸ்எம்எஸ் வழியாக மொபைல் மூலம் கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியதில் கார்ப்பரேஷன் வங்கி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் முதன்மையாகத் திகழ்கிறது. கார்ப்பரேஷன் வங்கி அளித்த டெபிட் கார்டு அல்லது ஏடிஎம் கார்டு உள்ளவர்கள் இச்சேவையினைப் பெறலாம். இச்சேவையினைப் பெற வாடிக்கையாளர்கள் கார்ப்பரேஷன் வங்கியின் ஏதேனும் ஒரு ஏடிஎம் மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். மொபைல் எண் உள்ளிட்ட இதர தகவல்களைப் பூர்த்தி செய்ய ஏடிஎம் வழிகாட்டும். முழுமையான பதிவு செய்தபின் 4 இலக்க பின் நம்பரை எஸ்எம்எஸ் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் கைபேசியில் பெறுவார்கள். இந்த பின் நம்பர் வாடிக்கையாளரின் பின்வரும் அனைத்து பரிமாற்றங்களுக்கும் தேவைப்படும்.

பதிவு செய்யும் முறை:

  • பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையில் சமர்ப்பிக்கவும்
  • உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்ட பின் வங்கி ஒரு ‘பின்’ நம்பரை (PIN - தனிநபர் அடையாள எண்) எஸ்எம்எஸ் வழியாக உங்களுக்கு அனுப்பி வைக்கும்.
  • 56767 அல்லது 9986667045 என்ற எண்ணுக்கு பிரத்யேக பார்மட்டில் எஸ்எம்எஸ் அனுப்பி இச்சேவையினை நீங்கள் ஆக்டிவேட் செய்யவேண்டும்.
  • எடுத்துக்காட்டாக உங்களுக்கு வழங்கப்பட்ட ‘பின்’ நம்பர் 7890 மற்றும் உங்கள் கணக்கு எண் SB/01/123456 எனில் பின்வரும் பார்மட்டில் ஆக்டிவேஷன் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் - ACTIVATE 7890 123456
  • ஆக்டிவேஷன் வழிமுறைகளை முடித்தவுடன் எஸ்எம்எஸ் பேங்கிங் சேவையைப் பயன்படுத்தலாம்

மெனு வழியாக எஸ்எம்எஸ் பேங்கிங்:

கைப்பேசியில் இன்ஸ்டால் செய்துகொள்ளும் வகையிலான மெனு வழியான எஸ்எம்எஸ் பேங்கிங் சேவைக்கான செயலியை கார்ப்பரேஷன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்முலம் முதன்மை கட்டளைச்சொற்கள் இல்லாமலேயே மொபைல் பேங்கிங் சேவையினைப் பெற முடியும்.

செயலியை இன்ஸ்டால் செய்யும் முறை:

  • ஜிபிஆர்எஸ் மூலம் கைப்பேசியில் நேரடியாக செயலியை இன்ஸ்டால் செய்க.
  • செயலியை கணிப்பொறி/லேப்-டாப் இல் டவுண்லோட் செய்த பின்னர் டேட்டா கேபிள் அல்லது புளுடூத் மூலம் உங்கள் கைப்பேசியில் செயலியை இன்ஸ்டால் செய்யுங்கள்.

டாய்ஸ் வங்கி

மொபைல் மற்றும் இ-மெயில் மூலம் குறிப்பிட்ட சில சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வசதியை டாய்ஸ் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது. வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நிகழ்ந்த பணப்பரிமாற்றங்கள் குறித்த சமீபத்திய விபரங்களை மொபைல் மற்றும் இ-மெயில் மூலம் அனுப்பிவைக்கிறது.

 

சேவைகள்

 

 

எஸ் எம் எஸ் அனுப்பும் வழிமுறை
561615 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்புக

 

இ-மெயில் முகவரியைத் தெரிவிக்க

Type UPDATE <இடைவெளி> your email ID <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண்

கடன் அட்டை (கிரெடிட் கார்டு)விபரங்கள்

Type ESTMT <இடைவெளி> your e-mail ID <இடைவெளி> கிரெடிட் கார்டு எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள்

இ-மெயிலில் வங்கிக் கணக்கு விபர அறிக்கை பெற

Type UPDATE <இடைவெளி> email ID <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண்

இ-மெயிலில் கடன் அட்டை (கிரெடிட் கார்டு)தொடர்பான கணக்கு அறிக்கை பெற

Type ESTMT <இடைவெளி> email ID <இடைவெளி> கிரெடிட் கார்டு எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள்

இங்கே கிளிக் செய்க டாய்ஸ் வங்கியின் மொபைல் பேங்கிங் பற்றி மேலும் தெரிந்து கொள்ள

தனலஷ்மி வங்கி

அளிக்கப்படும் சேவைகள்

  • வங்கி கணக்கு இருப்பு விபரம்
  • முந்தைய 5 பணப்பரிமாற்ற விவரங்கள்.
  • நிரந்தர வைப்புநிதி கணக்கு பற்றிய விபரம் பெற விண்ணப்பம்.
  • பணப்பரிமாற்ற அறிக்கை பெற விண்ணப்பம்.
  • முதன்மை கணக்கு மாற்றம்.
  • காசோலை புத்தகம் பெற விண்ணப்பம்.
  • காசோலையின் தற்போதைய நிலவரம்.
  • காசோலை பணமாக மாற்றப்படுவதை ரத்து செய்தல்.

பதிவு செய்யும் முறை

தாங்கள் கணக்கு வைத்திருக்கும் அருகாமையில் உள்ள வங்கிக் கிளையில் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தினை மொபைல் எண் உள்ளிட்ட இதர தகவல்களுடன் சமர்ப்பிக்கவேண்டும்.

மொபைல் பேங்கிங் குறுஞ்செய்தி மூலம் துரிதமான உடனடி தகவல் பெறுதல்

வரவு குறித்த செய்தி

  • வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வங்கிக் கணக்கில் ஏற்பட்ட வரவு குறித்த விபரங்கள் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும்.
  • இச்சேவையில் மேலும் ஒரு வசதி உண்டு அதாவது கணக்கில் வரவு வந்த தொகை ரூ.2000 அல்லது அதற்கும்மேல் இருந்தால் மட்டும் எஸ்எம்எஸ் அனுப்பவேண்டும் என்று பதிவு செய்யலாம். (இதற்கான குறைந்தபட்சத் தொகை ரூ.2000/-)

மொபைல் பேங்கிங் சேவையைப் பயன்படுத்தும் வழிமுறைகள்

சேவைகள்

எஸ்எம்எஸ் அமைப்பு.
6161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புக

வங்கி அனுப்பும் குறிப்புகள்

செயல்படுத்தும் முறை

Type DLBREG <இடைவெளி > வாடிக்கையாளர் அடையாள எண்

இச்சேவை செயல்படுத்தப்பட்டதற்கான உறுதிமொழியை வங்கியிலிருந்து பெறுவீர்கள்.

வங்கி கணக்கு இருப்பு விபரம்

Type DLBBAL <இடைவெளி > வாடிக்கையாளர் அடையாள எண்

” என்ற தகவலைப் பெறுவீர்கள்

சுருக்கமான கணக்கு விபர அறிக்கை

Type DLBTXN <இடைவெளி > வாடிக்கையாளர் அடையாள எண்

என்ற தகவலைப் பெறுவீர்கள்.

நிரந்தர வைப்புநிதி கணக்கு பற்றிய விபரம் பெற விண்ணப்பம்

Type DLBFDR <இடைவெளி > வாடிக்கையாளர் அடையாள எண்

என்ற தகவலைப் பெறுவீர்கள்

பணப்பரிமாற்ற அறிக்கை

Type DLBSMR <இடைவெளி > வாடிக்கையாளர் அடையாள எண்

என்ற தகவலைப் பெறுவீர்கள்.

மொபைல் பேங்கிங் மூலம் முதன்மை கணக்கை மாற்றுதல்

Type DLBCPA <இடைவெளி > வாடிக்கையாளர் அடையாள எண் <இடைவெளி > Account No. (Enter the Account No. to be changed as Primary Account No)

என்ற தகவலைப் பெறுவீர்கள்

காசோலை புத்தகம் பெற விண்ணப்பம்

Type DLBCBR <இடைவெளி > வாடிக்கையாளர் அடையாள எண் <இடைவெளி > Account No. (Enter the Account No on which cheque book to be issued)

என்ற தகவலைப் பெறுவீர்கள்

காசோலையின் தற்போதைய நிலவரம்.

Type DLBCSR <இடைவெளி > வாடிக்கையாளர் அடையாள எண் <இடைவெளி > Cheque No

காசோலை மாற்றப்பட்டதா இல்லையா என்ற விபரங்களுடன் குறுங்செய்தி பெறுவீர்கள்

காசோலை விண்ணப்பத்தை ரத்து செய்தல்

Type DLBSCR <இடைவெளி > வாடிக்கையாளர் அடையாள எண் <இடைவெளி > Cheque No.

என்ற தகவலைப் பெறுவீர்கள்

தனலஷ்மி வங்கியின் டெலிபேங்கிங் சேவை

கீழ்க்கண்ட 24 மணி நேர (24X7X365) சேவையைப் பெற 0487-2322095 என்ற எண்ணுக்கு அழைக்கவும்

  • கணக்கு இருப்பு விபரம்
  • வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம்
  • கணக்கு விபர அறிக்கையை குரல்வழியிலோ அல்லது பேக்ஸ் மூலமோ பெறலாம்.
  • பின் நம்பர் (PIN ரகசிய எண்) மாற்றம் செய்தல்.

எச்.டி.எப்.சி. வங்கி

இவ்வங்கியின் மொபைல் பேங்கிங் சேவை மூலம் மொபைல் போனில் தொடர்பு கொள்ளாமலேயே எஸ் எம் எஸ் மூலம் வங்கி சம்பந்தப்பட்ட செயல்பாடுகளை செய்து கொள்ளலாம். மேலும் மொபைல் போனில் உள்ள சிறிய திரையிலேயே பணப்பரிமாற்றங்களைப் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.

அளிக்கப்படும் சேவைகள்

  • வாடிக்கையாளர் அடையாள எண்ணுடன் தொடர்புடைய அனைத்து வகை கணக்குகளின் பண இருப்பு விபரத்தை அறிதல்
  • (அதிகபட்சம் 5 கணக்குகள் வரை)
  • முதன்மை கணக்கில் நிகழ்ந்த சமீபத்திய 3 பணப்பரிமாற்றங்களின் விபரங்கள்
  • காசோலையின் மூலம் நிகழும் பணப்பரிமாற்றத்தை நிறுத்தி வைக்க விண்ணப்பித்தல்
  • காசோலை புத்தகத்தைப்பெற விண்ணப்பித்தல்
  • வங்கிக் கணக்கு விபர அறிக்கையைப் பெறுதல்
  • காசோலையின் தற்போதைய நிலவரம்
  • நிரந்தர வைப்புத்தொகை குறித்த விபரம் அறிதல் முதலியன

பதிவு செய்யும் முறை

  • வங்கியில் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கும் பொழுதே அதே விண்ணப்பத்துடன் மொபைல் பேங்கிங் வசதியும் வேண்டும் என்று விண்ணப்பிக்கவும்.
  • நீங்கள் இவ்வங்கியில் ஏற்கெனவே அக்கவுண்ட் வைத்து இருப்பின், மொபைல் பேங்கிங் வசதி பெற ‘ஒருங்கிணைந்த நேரடியான வங்கி வசதி விண்ணப்பப் படிவத்தின்’ மூலம் விண்ணப்பிக்கவும். படிவத்தைப் பூர்த்தி செய்த பின்னர் அருகாமையில் உள்ள வங்கிக்கிளையில் சமர்ப்பிக்கவும்.
  • நீங்கள் இவ்வங்கியில் ஏற்கெனவே அக்கவுண்ட் வைத்து இருந்து மற்றும் இண்டர்நெட் பேங்கிங் வசதி பெற பதிவு செய்து இருந்தால், ஆன்லைன் வழியாகவே மொபைல் பேங்கிங் வசதி பெற பதிவு செய்யலாம்.

சேவைகள்

எஸ் எம் எஸ் அனுப்பும் வழிமுறை. 5676712 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்புக

வங்கியிடமிருந்து பெறப்படும் குறிப்பிட்ட சேவை சார்ந்த தகவல்கள்

பண இருப்பு விபரம்

Type BAL and send an SMS

வாடிக்கையாளர் அடையாள எண்ணுடன் தொடர்புடைய அனைத்து வகை கணக்குகளில் உள்ள பண இருப்பு விபரங்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.(அதிகபட்சம் 5 கணக்குகள் வரை)

சுருக்கமான கணக்கு விபர அறிக்கை

Type TXN and send an SMS

கணக்கில் நிகழ்ந்த சமீபத்திய 3 பணப்பரிமாற்றங்களின் விபரங்கள்

செலுத்தப்பட்ட காசோலையின் தற்போதைய நிலவரம்

Type CST < இலக்க காசோலை எண்

நீங்கள் வழங்கிய காசோலையின் தற்போதைய நிலவரம் (காசோலை மாற்றப்பட்டதா இல்லையா அல்லது நிறுத்தி வைக்கப்பட்டதா என்பது குறித்த தகவல்)

காசோலை புத்தகத்தைப்பெற விண்ணப்பித்தல்

Type CHQ and send an SMS

என்று எஸ் எம் எஸ் வரும்.

காசோலையின் மூலம் நிகழும் பணப்பரிமாற்றத்தை நிறுத்தி வைத்தல்

Type STP <இலக்க காசோலை எண்> and send an SMS

என்று எஸ் எம் எஸ் வரும்.

வங்கிக் கணக்கு விபர அறிக்கையைப் பெற விண்ணப்பித்தல்

Type STM and send an SMS

என்று எஸ் எம் எஸ் வரும்.

நிரந்தர வைப்பு நிதி குறித்த தகவல்களைப் பெறுதல்

Type FDQ and send an SMS

தற்சமயம் வங்கியில் இருக்கும் நிரந்தர வைப்புத் தொகை குறித்த தகவல் (அதிகபட்சம் 5 கணக்குகள் வரை) தெரிவிக்கப்படும்.

இங்கே கிளிக் செய்க எச்.டி.எப்.சி. வங்கியின் மொபைல் பேங்கிங் பற்றி மேலும் தெரிந்து கொள்ள

ஃபெடரல் வங்கி

மொபைல் வழி பேங்கிங்

மொபைல் பேங்கிங் வசதி வேண்டும் என்று வங்கியில் தனது மொபைல் எண் விபரங்களுடன் பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இவ்வங்கி இச்சேவையை அளிக்கிறது. மொபைல் பேங்கிங் சேவையானது SB, SBNRE, SBONR, CA மற்றும் ODCC வகை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

அளிக்கப்படும் சேவைகள்:

  • பண இருப்பு விபரம்
  • சுருக்கமான கணக்கு விபர அறிக்கை
  • வங்கிக் கணக்கு விபர அறிக்கையைப் பெற விண்ணப்பித்தல்
  • காசோலை புத்தகத்தைப்பெற விண்ணப்பித்தல்

மொபைல் சேவைகளைப் பெறுவதற்கான வழிமுறைகள்

 

சேவைகள்

 

எஸ் எம் எஸ் அனுப்பும் வழிமுறை 9895088888 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்புக

வங்கியிடமிருந்து பெறப்படும் குறிப்பிட்ட சேவை சார்ந்த தகவல்கள்

பண இருப்பு விபரம்

Type BAL <இலக்க அக்சஸ் கோடு > and send an SMS

உங்கள் கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறித்த விபரங்கள் உங்களுக்கு அனுப்பப்படும்.

வங்கிக் கணக்கில் நிகழ்ந்த பணப்பரிமாற்றங்கள்

Type TXN <இலக்க அக்சஸ் கோடு > and send an SMS

கணக்கிலிருந்து செலவழிக்கப்பட்ட தொகை/கணக்கில் வைக்கப்பட்ட வரவுத் தொகை மற்றும் உங்கள் கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படும்.

இரகசியக் குறியீட்டு எண்ணில் ('பின்'எண்) மாற்றம்

Type PIN <இலக்க அக்சஸ் கோடு > இடைவெளி<4 digit New access code> and send an SMS

என்று எஸ் எம் எஸ் வரும்.

சுருக்கமான கணக்கு விபர அறிக்கை

Type TXN <இலக்க அக்சஸ் கோடு > and send an SMS

சமீபத்திய 5 பணப்பரிமாற்றங்கள் குறித்த விபரங்கள் உங்களுக்கு அனுப்பப்படும்

வாடிக்கையாளர் தனது வங்கிக் கணக்கில் நிகழ்ந்த பணப்பரிமாற்றங்கள் குறித்த விபரங்களை தன்னிச்சையான எஸ் எம் எஸ் மூலமும் உடனடியாகப் பெறலாம்.

இங்கே கிளிக் செய்க ஃபெடரல் வங்கியின் மொபைல் பேங்கிங் பற்றி மேலும் தெரிந்து கொள்ள

ஐசிஐசிஐ வங்கி

அளிக்கப்படும் சேவைகள்

  • ஐசிஐசிஐ வங்கி மற்றும் இதர வங்கிகளுக்கு இடையேயான பணப்பரிமாற்றம்
  • பண இருப்பு விபரத்தை அறிய
  • சமீபத்திய 3 பணப்பரிமாற்றங்கள்
  • செலுத்தப்பட்ட காசோலையின் தற்போதைய நிலவரம்
  • காசோலை மாற்றுவதின் மூலமான கணக்குத் தீர்ப்பை நிறுத்தி வைத்தல்
  • காசோலை புத்தகத்தைப்பெற விண்ணப்பித்தல்
  • தண்ணீர்,மின்சாரம்,தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கான கட்டணங்களைச் செலுத்துதல்

துரிதத் தகவல் பெறும் வசதி

இவ்வங்கியினால் வழங்கப்படும் மொபைல் பேங்கிங் சேவையில் நீங்கள் முன்னரே பதிவு செய்தபடி பயன்படுத்த விருப்பம் தெரிவித்த சேவைகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல்கள் உடனடியாகத் தெரிவிக்கப்படும். பின்வரும் சேவைகளுக்கு எஸ்எம்எஸ் பெற நீங்கள் விருப்பம் தெரிவிக்கலாம்

  • கணக்கில் வரவு வைக்கப்பட்ட சம்பளத் தொகை
  • கணக்கிலிருந்து செலவழிக்கப்பட்ட தொகை
  • கணக்கில் வைக்கப்பட்ட வரவுத் தொகை
  • திருப்பி அனுப்பப்பட்ட காசோலை
  • வங்கிக்கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறிப்பிட்ட தொகைக்கு மேல் செல்லும் பொழுது.
  • வங்கிக்கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறிப்பிட்ட தொகைக்கு கீழ் செல்லும் பொழுது.

சேவைகள்

முதன்மை கணக்கு எண் வைத்திருப்போருக்கான எஸ் எம் எஸ் அனுப்பும் வழிமுறை. 5676766 அல்லது 9837142424 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்புக

முதன்மை கணக்கு எண் இல்லாதவருக்கான எஸ் எம் எஸ் அனுப்பும் வழிமுறை. 5676766 அல்லது 9837142424 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்புக

பண இருப்பு விபரத்தை அறிதல்

Type IBAL and send an SMS

IBAL <இடைவெளி > வங்கிக்கணக்கு எண்ணின் கடைசி 6 இலக்கங்கள்

சமீபத்திய 3 பணப்பரிமாற்றங்கள்

Type ITRAN and send an SMS

ITRAN <இடைவெளி > வங்கிக்கணக்கு எண்ணின் கடைசி 6 இலக்கங்கள்

காசோலையின் தற்போதைய நிலவரம்

Type ICSI <இடைவெளி > காசோலை எண் and send an SMS

ICSI <இடைவெளி > காசோலை எண் <இடைவெளி > வங்கிக்கணக்கு எண்ணின் கடைசி 6 இலக்கங்கள்

காசோலை மாற்றுவதின் மூலமான கணக்குத் தீர்ப்பை நிறுத்தி வைத்தல்

Type ISCR <இடைவெளி > காசோலை எண் . and send an SMS

ISCR <இடைவெளி > காசோலை எண் <Space> வங்கிக்கணக்கு எண்ணின் கடைசி 6 இலக்கங்கள்

காசோலை புத்தகத்தைப்பெற விண்ணப்பித்தல்

Type ICBR and send an SMS

ICBR <இடைவெளி > வங்கிக்கணக்கு எண்ணின் கடைசி 6 இலக்கங்கள்

ஏடிஎம் இருக்கும் இடத்தை அறிதல்

Type ATM <இடைவெளி > Pin Code and send an SMS

 

வங்கிக்கிளையின் இருப்பிடம் அறிதல்

Type Branch <இடைவெளி > Pin Code and send an SMS

 

கடன் அட்டை இருப்பு விபரத்தை அறிதல்

IBALCC <இடைவெளி > கிரெடிட் கார்டு எண்ணின் கடைசி 6 இலக்கங்கள் and send an SMS

 

வங்கியின் முதன்மை கணக்கை மாற்ற

Type ICPA <இடைவெளி > வங்கிக்கணக்கு எண்ணின் கடைசி 6 இலக்கங்கள் and send an SMS

 

இங்கே கிளிக் செய்க. ஐசிஐசிஐ வங்கியின் தொலைபேசி வழி வங்கிச் சேவைகளைப் பெற

ஐ டி பி ஐ வங்கி

ஐ டி பி ஐ வங்கி அளிக்கும் மொபைல் பேங்கிங் சேவைகள் பின்வருமாறு:

  • பண இருப்பு விபரத்தை அறிதல்
  • சமீபத்திய 3 பணப்பரிமாற்றங்கள்
  • காசோலையின் தற்போதைய நிலவரம்
  • காசோலை புத்தகத்தைப்பெற விண்ணப்பித்தல்
  • வங்கிக் கணக்கு விபர அறிக்கையைப் பெறுதல்
  • ஆன்லைன் வர்த்தக கணக்கு (டிமெட் கணக்கு)- குறிப்பிட்ட தொகை வரையில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வர்த்தகப்பரிமாற்றம் செய்யலாம் (free balance holding)
  • ஆன்லைன் வர்த்தக கணக்கு (டிமெட் கணக்கு) - சமீபத்திய 2 வர்த்தகப்பரிமாற்றங்கள்
  • தண்ணீர்,மின்சாரம்,தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கான கட்டணங்களைச் செலுத்துதல்

சேவைகள்

எஸ் எம் எஸ் அனுப்பும் வழிமுறை. 9820346920 அல்லது 9821043718 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்புக

பண இருப்பு விபரத்தை அறிதல்

Type BAL <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண் PIN <இடைவெளி> வங்கிக்கணக்கு எண்

நிரந்தர வைப்புத்தொகை குறித்த விபரம் அறிதல்

Type FD <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண் PIN <இடைவெளி> வங்கிக்கணக்கு எண்

சமீபத்திய 3 பணப்பரிமாற்றங்கள்

Type TXN <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண் PIN <இடைவெளி> வங்கிக்கணக்கு எண்

காசோலையின் தற்போதைய நிலவரம்

Type CPS <Space> வாடிக்கையாளர் அடையாள எண் PIN <இடைவெளி> Cheque No <இடைவெளி> வங்கிக்கணக்கு எண்

காசோலை புத்தகத்தைப்பெற விண்ணப்பித்தல்

Type CBR <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண் PIN <இடைவெளி> No of leaves <இடைவெளி> type P for by person or type M for by mail delivery of Cheque book <இடைவெளி> வங்கிக்கணக்கு எண்

ரகசியக் குறியீட்டு எண்ணில் ('பின்'எண்) மாற்றம்

Type CPN <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண் <இடைவெளி> Old PIN <இடைவெளி> New PIN

வங்கியின் முதன்மை கணக்கை மாற்ற

Type CPA <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண் PIN <இடைவெளி> வங்கிக்கணக்கு எண்

பதிவு செய்யும் முறை

வங்கிக் கிளைகள் அல்லது ஏடிஎம் மையங்களில் கிடைக்கும் சேனல் ரெஜிஸ்ட்ரேசன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வங்கிக் கிளையில் இதற்காகவே இருக்கும் பெட்டியில் போடலாம் அல்லது தொடர்பு மேலாளரிடம் கொடுக்கலாம்

இங்கே கிளிக் செய்க சேனல் ரெஜிஸ்ட்ரேசன் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய

இங்கே கிளிக் செய்க ஐ டி பி ஐ வங்கியின் மொபைல் பேங்கிங் பற்றி மேலும் தெரிந்து கொள்ள

ஐஎன்ஜி வைஸ்யா வங்கி

ஐஎன்ஜி வைஸ்யா வங்கி எஸ்எம்எஸ் மூலம் அளிக்கும் மொபைல் பேங்கிங் சேவைகள் பின்வருமாறு

  • அனைத்து வகை வங்கிக் கணக்குகளுக்கும் கணக்கில் உள்ள இருப்புத்தொகையை அறிதல்
  • சமீபத்திய 5,10,15 பணப்பரிமாற்றங்களை அறிதல்
  • காசோலை புத்தகத்தைப்பெற விண்ணப்பித்தல்
  • காசோலையின் மூலம் நிகழும் பணப்பரிமாற்றத்தை நிறுத்தி வைத்தல்
  • காசோலையின் தற்போதைய நிலவரத்தை அறிதல் (காசோலை மாற்றப்பட்டதா இல்லையா என்பதை அறிதல் )

பதிவு செய்யும் முறை

  • ஐஎன்ஜி வைஸ்யா வங்கியில் ஏற்கனவே கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட வங்கிக்கிளையிலிருந்து இச்சேவைக்கான செயல்பாட்டு எண்ணை (ஏக்டிவேசன் கோடு) பெற்றுக்கொள்ளலாம் அல்லது
  • செயல்பாட்டு எண்ணைப் (ஏக்டிவேசன் கோடு) பெற 1800 425 9900 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது 56070 என்ற எண்ணுக்கு ING mobile என எஸ்எம்எஸ் அனுப்பவும்.

இங்கே கிளிக் செய்க ஐஎன்ஜி வைஸ்யா வங்கியின் தொலைபேசி வழி வங்கிச் சேவைகளைப் பெற

கோடக் மஹேந்திரா வங்கி

அளிக்கப்படும் சேவைகள்

  • உங்கள் வங்கிக் கணக்கில் நடைபெறும் செயல்பாடுகளை அறிதல்
  • இவ்வங்கியில் உள்ள உங்களுடைய பல்வேறு அக்கவுண்ட்களுக்கு இடையேயும் இவ்வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இதர வாடிக்கையாளர்களுக்கும் பணப்பரிமாற்றம் செய்தல்.
  • பரஸ்பர நிதி பங்குகளை (மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள்) வாங்குதல்
  • பரஸ்பர நிதி பங்குகளை ஒப்படைத்து அதற்கு இணையான பணத்தைப் பெறுதல்
  • பற்று அட்டை (டெபிட் கார்டு) தொலைந்து விட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ புகார் தருதல் மற்றும் அதற்கு பதிலாக புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல்
  • காசோலையின் தற்போதைய நிலவரத்தை அறிதல்
  • புதிய காசோலை புத்தகத்தைப்பெற விண்ணப்பித்தல்

மொபைல் பேங்கிங் சேவையைப் பெறுவதற்கான வழிமுறைகள்

  • 5676788 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பி கோடக் மஹேந்திரா வங்கியில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யுங்கள் அல்லது
  • உங்கள் மொபைல் போனில் மொபைல் பேங்கிங் வசதியைச் செயல்படுத்த கீழ்க்கண்ட இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.1800 116022 (வட இந்தியா) அல்லது 1800 226022 (இந்தியாவின் இதரப் பகுதிகள்)
  • கோடக் மஹேந்திரா மொபைல் பேங்கிங் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டிய முறை: K MOBILE < வாடிக்கையாளர் அடையாள எண்ணின் கடைசி நான்கு எண்கள் (சி ஆர் நம்பர்)>
  • எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டிய எண்: 5676788
  • உங்களுக்கு வழங்கப்பட்ட நுழைவுச் சொல் மற்றும் பாஸ்வேர்டை டைப் செய்து மொபைல் பேங்கிங் சேவையைப் பயன்படுத்தலாம்.

கரூர் வைஸ்யா வங்கி

கரூர் வைஸ்யா வங்கி பின்வரும் இரண்டு முறைகளில் மொபைல் பேங்கிங் சேவைகளை அளிக்கிறது:

  • எஸ்எம்எஸ் மூலம் விபரங்களைப் பெறுதல்
  • எஸ்எம்எஸ் வழியே தன்னிச்சையான உடனடி தகவல் பெறுதல்

இச்சேவைகளைப் பெற உங்களுடைய மொபைல் எண்ணை வங்கிக் கிளையில் அளிக்கவும். பின்னர் வங்கியில் அளிக்கப்படும் வாடிக்கையாளர் எண்ணை அறிந்து கொள்ளவும். இச்சேவையைப் பெற வங்கியின் இண்டர்நெட் பேங்கிங் மூலமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

கரூர் வைஸ்யா வங்கி பின்வரும் சேவைகளை எஸ்எம்எஸ் மூலம் அளிக்கிறது:

  • கணக்கில் உள்ள இருப்புத்தொகையை அறிதல்
  • பணப்பரிமாற்றங்களை அறிதல்
  • காசோலையின் தற்போதைய நிலவரத்தை அறிதல்
  • காசோலையின் மூலம் நிகழும் பணப்பரிமாற்றத்தை நிறுத்தி வைத்தல்
  • காசோலை புத்தகத்தைப்பெற விண்ணப்பித்தல்
  • வைப்பு கணக்கு குறித்த தகவல்களைப் பெறுதல்.

சேவைகள்

எஸ் எம் எஸ் அனுப்பும் வழிமுறை 56161 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்புக 56161

மொபைல் பேங்கிங் சேவையைப் பெறுவதற்கான பதிவு

Type KVBREG <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண்> and send an SMS

முதன்மை கணக்கில் உள்ள இருப்புத்தொகையை அறிதல்

Type KVBBAL <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண்> and send an SMS

முதன்மை கணக்கு அல்லாத இதர கணக்கில் உள்ள இருப்புத்தொகையை அறிதல்

Type KVBBAL <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண் <இடைவெளி> வங்கிக்கணக்கு எண் and send an SMS

சமீபத்திய 5 பணப்பரிமாற்றங்களை அறிதல்

Type KVBTXN <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண் and send an SMS

முதன்மை கணக்கு அல்லாத இதர கணக்கின் பணப்பரிமாற்றம் குறித்த தகவல்களைப் பெறுதல்

Type KVBTXN <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண் <இடைவெளி> வங்கிக்கணக்கு எண் and send an SMS

காசோலை புத்தகத்தைப்பெற விண்ணப்பித்தல்

Type KVBCHR <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண்

முதன்மை கணக்கு அல்லாத இதர கணக்கில் காசோலை புத்தகத்தைப்பெற விண்ணப்பித்தல்

Type KVBCHR <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண் <இடைவெளி> வங்கிக்கணக்கு எண்

காசோலையின் தற்போதைய நிலவரத்தை அறிதல் (காசோலை மாற்றப்பட்டதா இல்லையா அல்லது நிறுத்தி வைக்கப்பட்டதா என்பதை அறிதல் )

Type KVBCHQ <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண் <இடைவெளி> காசோலை எண்

வழங்கப்பட்ட காசோலைக்குரிய பணப்பரிமாற்றத்தை நிறுத்தி வைத்தல்

Type KVBCHS <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண் <இடைவெளி> காசோலை எண்

வைப்பு கணக்கு விபரங்களைப் பெறுதல்

Type KVBTDQ <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண்

முதன்மை கணக்கு எண்ணை மாற்றுதல்

Type KVBACC <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண் <இடைவெளி> Alternate
வங்கிக்கணக்கு எண்

எஸ்எம்எஸ் வழியாக விபரம் பெறப்படும் துரிதச் சேவை

வாடிக்கையாளர்கள் தங்களுடைய க்ரெடிட் கார்டு/டெபிட் கார்டுகளில் செய்யப்பட்ட பணப்பரிமாற்றங்கள் மற்றும் கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறித்த நிலவரம் போன்ற தகவல்களை எஸ்எம்எஸ் அல்லது இ-மெயில் வழியாக உடனடியாக அறிந்து கொள்ள பதிவு செய்து கொள்ளலாம்.

லட்சுமி விலாஸ் வங்கி

எஸ்எம்எஸ் பேங்கிங் முறையின் சிறப்பம்சங்கள்

  • தினந்தோறும் கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறித்த நிலவரம்
  • கணக்கில் ரூ.5, 000 மற்றும் அதற்கு மேல் வரவு வைக்கப்பட்டதும் உடனடித் தகவல் பெறுதல்.
  • கணக்கிலிருந்து ரூ.5,000 மற்றும் அதற்கு மேல் கழிக்கப்பட்டதும் உடனடித் தகவல் பெறுதல்.
  • முதன்மை நடப்பு கணக்கு-சேமிப்பு கணக்கை(CASA) மாற்றும் வசதி
  • கணக்கில் உள்ள இருப்புத்தொகையை அறிதல் (குறிப்பிட்ட வாடிக்கையாளர் அடையாள எண்ணுடன் தொடர்புடைய கணக்கிலிருந்து)
  • உங்கள் வங்கிக் கணக்கில் நடைபெறும் செயல்பாடுகளை அறிதல் (சமீபத்திய 5 பணப்பரிமாற்றங்கள்)
  • காசோலையின் தற்போதைய நிலவரத்தை அறிதல்
  • நிரந்தர வைப்பு நிதி குறித்த தகவல்களைப் பெறுதல்
  • முதன்மை நடப்பு கணக்கு-சேமிப்பு கணக்கை(CASA) மாற்றுதல்

மொபைல் பேங்கிங் சேவையைப் பெறுவதற்கான வழிமுறைகள்

சேவைகள்

எஸ் எம் எஸ் அனுப்பும் வழிமுறை 56070 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்புக

முதன்மை நடப்பு கணக்கு-சேமிப்பு கணக்குடன் (CASA)தொடர்புடைய எஸ்எம்எஸ் பேங்கிங் வசதி பெற பதிவு செய்தல்

LVB REG <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண் <இடைவெளி> Account No என்ற அமைப்பில் டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பவும்.

முதன்மை நடப்பு கணக்கு-சேமிப்பு கணக்கை(CASA) மாற்றுதல்

Type LVB ACC <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண் <இடைவெளி>
Account No and send an SMS

இருப்புத் தொகை குறித்த நிலவரம்

Type LVB BAL <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண் <இடைவெளி> Account No and send an SMS

ஒரே வாடிக்கையாளர் அடையாள எண்ணின் கீழ் உள்ள முதன்மை நடப்பு கணக்கு-சேமிப்பு கணக்கின் இருப்புத் தொகை குறித்த நிலவரம்

Type LVB BAL <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண் <இடைவெளி>
Account No and send an SMS

வைப்பு கணக்கின் முதல் மூன்று கணக்குச் செயல்பாடுகளின் விபரம் அறிதல்

Type LVB TDQ <வாடிக்கையாளர் அடையாள எண்> and send an SMS

முதன்மை நடப்பு கணக்கு-சேமிப்பு கணக்குடன் (CASA)தொடர்புடைய காசோலையின் தற்போதைய நிலவரம்

Type LVB CHQ <இடைவெளி> வாடிக்கையாளர் அடையாள எண் <இடைவெளி>
Cheque No and send an SMS

முதன்மை கணக்கின் சமீபத்திய 5 பணப்பரிமாற்றங்கள்

Type LVB <இடைவெளி> TXN <வாடிக்கையாளர் அடையாள எண்> and send an SMS

இதர கணக்கின் சமீபத்திய 5 பணப்பரிமாற்றங்கள்

Type LVB <இடைவெளி> TXN <வாடிக்கையாளர் அடையாள எண்> <இடைவெளிNo> Account No and send an SMS

எஸ்எம்எஸ் பேங்கிங் வசதியை முடக்கம் செய்தல்

Type LVB <இடைவெளி> DEL <வாடிக்கையாளர் அடையாள எண்> and send an SMS

இங்கே கிளிக் செய்க லட்சுமி விலாஸ் வங்கியின் மொபைல் பேங்கிங் பற்றி மேலும் தெரிந்து கொள்ள

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

மொபைல் பேங்கிங் மூலம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கீழ்க்கண்ட சேவைகளை அளிக்கிறது

  • பணப்பரிமாற்றம் செய்தல் (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளைகளிலும், தேசிய எலக்ட்ரானிக் நிதிப் பரிமாற்றம் (NEFT) மூலம் பிற வங்கி நிறுவனங்களுக்கும்)
  • பண இருப்பு விபரம்/சுருக்கமான கணக்கு விபர அறிக்கை
  • செக்புக் பெற விண்ணப்பம்.
  • பயன்பாட்டுச் சேவைக் (தொலைப்பேசி, மின்சாரம், குடிநீர்..) கட்டணங்கள் செலுத்துதல்.
  • மொபைல் காமர்ஸ் (மொபைல் டாப்-அப்,வணிகக் கட்டணம் செலுத்துதல்,எஸ்பிஐயின் இன்சுரன்ஸ் பிரிமியம் செலுத்துதல்).

எஸ்பிஐயின் மொபைல் வங்கிச் சேவையின் சிறப்பு அம்சங்கள்

  • மொபைல் வங்கிச் சேவையைப் பெற வாடிக்கையாளர் வங்கியில் தன்னைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • இச்சேவை மூலம் பணப்பரிமாற்றம் மற்றும் கட்டணம் / பொருள் வாங்கிய தொகை செலுத்தலுக்கான உச்சவரம்பு ஒரு நாளுக்கு முறையே ரூ.5000 & ரூ.10000/- ஆகும். இதன் ஒரு மாத உச்சவரம்பு ரூ.30000/- ஆகும்.
  • இச்சேவை இலவசமாக அளிக்கப்படுகிறது. எனினும் எஸ்எம்எஸ் மற்றும் ஜிபிஆர்எஸ் கட்டணங்களை வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும்

பதிவு செய்யும் முறை:

  • மொபைல் போனில் பின்வருமாறு டைப் செய்து 567676 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புக. ‘MBSREG <இடைவெளி> <மொபைலின் கம்பெனி பெயர்> <இடைவெளி> <மொபைல் மாடல்> ‘ எ.கா: MBSREG Nokia 6600
  • உங்கள் கைபேசி ஜாவா மென்பொருள் கொண்டு செயல்படுமெனில் உங்களுக்கான பயனாளர் ஐடியும், எம்பின் நம்பர் (MPIN) எனப்படும் தனிநபர் அடையாள எண்ணும் (ரகசிய எண்) மற்றும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோட் செய்யத் தேவையான இணையதள முகவரியையும் எஸ்எம்எஸ் மூலம் பெறுவீர்கள். இதற்கு ஜிபிஆர்எஸ் இணைப்பு இருக்க வேண்டும்.
  • விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்தவுடன் எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்ட பயனாளர் ஐடியுடன் இணையதளத்தினுள் நுழைக.
  • பயனாளர் ஐடியை எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்டபடியே டைப் செய்க.
  • மொபைல் பேங்கிங் செயலியைத் திறந்தவுடன் உங்களின் எம்பின்(MPIN) எண்ணை மாற்ற கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்.
  • அவ்வாறு கேட்கப்படவில்லையெனில் “Settings" என்ற முதன்மை மெனுவில் உள்ள “Change MPIN” என்பதைத் தேர்வு செய்க.
  • “old MPIN” என்ற இடத்தில் எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்ட 'எம்பின்'எண்ணையும், “new MPIN” என்ற இடத்தில் நீங்கள் விரும்பும் புது 'எம்பின்' எண்ணையும் குறிப்பிடுக. இந்த புது 'எம்பின்' எண்ணை “Confirm new MPIN” என்ற இடத்திலும் குறிப்பிட வேண்டும்.பின்னர் அவற்றை அனுப்புக.
  • நீங்கள் புது 'எம்பின்' எண்ணை மாற்றியது எஸ்எம்எஸ் மூலம் உறுதி செய்யப்படும்.
  • 'எம்பின்' எண்ணை மாற்றியதற்கான உறுதிப்படுத்தும் எஸ்எம்எஸ் பெற்றவுடன் ஒரு ரகசிய கேள்வியைத் தேர்ந்தெடுத்து அதற்கான பதிலை அளிக்க வேண்டும். இதற்கு “Settings" என்ற முதன்மை மெனுவில் உள்ள “Validate Account” என்பதைத் தேர்வு செய்க. இதில் ஏதேனும் ஒரு கேள்வியைத் தேர்ந்தெடுத்து பதில் அளிக்கவும்.
  • இந்த ரகசிய கேள்வியையும் அதற்கான பதிலையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் 'எம்பின்' நம்பரை மறந்துவிட்டாலோ அல்லது இச்சேவையை ரத்து செய்ய விரும்பினாலோ இது உங்களை அடையாளம் காண தேவைப்படும்.
  • பின்னர் அருகாமையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் வழியாக இதனை ஆக்ட்டிவேட் செய்யுங்கள்.
  • ஏடிஎம் கார்டை நுழைத்தபின் ‘Services’ என்ற மெனுவில் ‘Mobile Banking’என்பதை தேர்ந்தெடுங்கள்
  • “Mobile Banking” என்பதன் கீழ் ‘Register’ என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் மொபைல் எண்ணைக் கொடுங்கள். பதிவினை உறுதிப்படுத்த மீண்டும் மொபைல் எண்ணைக் கொடுங்கள்.
  • மேற்கண்ட செயல்முறைகளை முடித்தவுடன் உங்கள் மொபைல் பேங்கிங் கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.
  • இதன் பின்னர் மொபைல் பேங்கிங் சேவையின் கீழ் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பெறலாம்.

இங்கு கிளிக் செய்யவும் எஸ்பிஐயின் மொபைல் பேங்கிங் சேவையைப் பற்றிய மேலும் விபரங்களுக்கு

யூனியன் பாங்க் ஆப் இந்தியா

அளிக்கப்படும் சேவைகள்

  • பணப்பரிமாற்றம்: யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருக்கும் மற்றொருவருக்கு பணப்பரிமாற்றம் செய்யலாம். இதற்கு வாடிக்கையாளர்கள் இருவருமே யூமொபைல் சேவைக்குத் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்க வேண்டும்.
  • பண இருப்பு விபரம் அறிதல் : தற்போது கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை அறியலாம்.
  • சுருக்கமான கணக்கு விபர அறிக்கை: சமீபத்திய 9 பணப்பரிமாற்ற விபரங்களை அறியலாம்.
  • பதிவு செய்தல்: வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஏடிஎம் மூலம் யூமொபைல் சேவைக்குப் பதிவு செய்யலாம்.
  • பதிவை ரத்து செய்தல்: வங்கியின் ஏடிஎம் மூலம் யூமொபைல் சேவைக்கானப் பதிவை ரத்து செய்யலாம்.

பதிவு செய்யும் முறை

  • ஏடிஎம் இல் டெபிட் கார்டை செலுத்தி ‘பின்’ நம்பரைக் கொடுக்கவும்.
  • ஸ்க்ரீனில் உள்ளதில் “others” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதில் “Mobile Payment” பின்னர் “Registration” என்பதைத் தேர்வு செய்யவும்.
  • இங்கு வாடிக்கையாளர்கள் தன் மொபைல் எண்ணை இருமுறை பதிவு செய்யவேண்டும்.
  • இவற்றை முடித்தவுடன் கீழ்க்கண்டவற்றை ஏடிஎம் பிரிண்ட் செய்து கொடுக்கும். “Registered successfully, Activation Code XXXX, http://mobile.fssnet.co.in/MPAYPORTAL/என்ற இணையதளத்திற்குச் சென்று உங்கள் கைபேசிக்குத் தேவையான மொபைல்போனுக்கான செயலியை டவுண்லோட் செய்க.

மொபைல் பேங்கிங் சேவைக்கான செயலியைக் கைபேசியில் அமைக்கும் முறை

வாடிக்கையாளர் யூனியன் பாங்க் ஆப் இந்தியா http://mobile.fssnet.co.in/MPAYPORTAL/ இணையதளத்திற்குச் சென்று யூமொபைல் செயலியை தங்கள் கைபேசியில் டவுண்லோட் செய்யலாம். டவுண்லோட் செய்ய கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்.

  • http://mobile.fssnet.co.in/MPAYPORTAL/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று அங்கு மொபைல் எண் மற்றும் ஆக்டிவேஷன் கோட் ஆகியவற்றைப் பதியவும்.
  • “Download Application” என்பதைக் கிளிக் செய்யவும்.
  • "Model" பட்டியலிலிருந்து மொபைல் மாடலைத் தேர்வுசெய்த பின் "Download" என்பதை கிளிக் செய்க.
  • நிபந்தனைகளை ஏற்றுக்கொள்க.
  • இந்த செயலி உங்கள் கணிப்பொறி/லேப்-டாப் இல் டவுண்லோட் செய்யப்படும்.
  • டேட்டா கேபிள்/புளுடூத்/யூஎஸ்பி/ஜிபிஆர்எஸ் மூலம் கணிப்பொறி/லேப்-டாப்பில் இருந்து செயலியைக் கைபேசிக்கு மாற்றுக.
  • செயலியைக் கைபேசியில் இன்ஸ்டால் செய்க.

யூமொபைல் சேவையைப் பயன்படுத்தும் முறை

சேவைகள்.

பயன்படுத்தும் முறை 9870338500 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புக

பண இருப்பு விபரம்

பண இருப்பு விபரம் பற்றி அறிய " Balance Enquiry " என்பதை தேர்ந்தெடுத்து 4 இலக்க எம்பின் நம்பரைக் கொடுங்கள். “Allow application UMobile to send message?” என்ற வினாவிற்கு “Yes“ என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

சுருக்கமான கணக்கு விபர அறிக்கை

உங்கள் வங்கிக் கணக்கின் சமீபத்திய 9 பரிமாற்றங்களை அறிய "Mini Statement" என்பதை தேர்ந்தெடுத்து 4 இலக்க எம்பின் நம்பரைக் கொடுங்கள்.

“Allow application UMobile to send message?” என்ற வினாவிற்கு “Yes“ என்பதைக் கிளிக் செய்யுங்கள்

பணப்பரிமாற்றம் (வங்கி கிளைகளுக்கிடையே)

பணப்பரிமாற்றம் செய்ய ‘fund transfer “ என்பதை தேர்ந்தெடுத்து 4 இலக்க எம்பின் நம்பரைக் கொடுங்கள். எவ்வளவு தொகை என்பதையும் பணம் பெறுவோரின் மொபைல் எண்ணையும் பதிவு செய்யுங்கள். எஸ்எம்எஸ் அனுப்ப “Send” என்பதை தேர்ந்தெடுங்கள் “Allow application UMobile to send message?” என்ற வினாவிற்கு “Yes “ என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

'எம்பின்' எண்ணை (MPIN) மாற்றம் செய்ய

எம்பின் நம்பரை மாற்ற "Settings" மெனுவில் "Change mPin" என்பதை தேர்ந்தெடுங்கள். பழைய எம்பின் நம்பரை கொடுத்தபின் புதிய எம்பின் நம்பரைப் பதிவு செய்யுங்கள். மீண்டும் அந்த புதிய எம்பின் நம்பரைக் கொடுங்கள். “Allow application UMobile to send message?” என்ற வினாவிற்கு “Yes “என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

ஸ்டான்டர்டு சார்ட்டர்டு வங்கி

அளிக்கப்படும் சேவைகள்

  • பண இருப்பு விபரம்
  • சமீபத்திய 3 பணப்பரிமாற்றங்கள்
  • காசோலை புத்தகத்தைப்பெற விண்ணப்பித்தல்
  • வங்கிக் கணக்கு விபர அறிக்கையைப் பெற விண்ணப்பித்தல்

மொபைல் பேங்கிங் சேவைகளைப்பெற நீங்கள் பதிவு செய்ததும், அதனைப் பயன்படுத்த (உதாரணம்: வங்கிக் கணக்கில் உள்ள பண இருப்பு விபரத்தை அறிதல்)உரிய மொபைல் எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பினால் போதும்.

சேவைகள்

எஸ் எம் எஸ் அனுப்பும் வழிமுறை 9987123123 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்புக

பண இருப்பு விபரம் BAL A1
சமீபத்திய 3பணப்பரிமாற்றங்கள் TXN A1
காசோலை புத்தகத்தைப்பெற விண்ணப்பித்தல் CBR A1
வங்கிக் கணக்கு விபர அறிக்கையைப் பெற விண்ணப்பித்தல் STR A1
முதன்மைச் சொற்களின் பட்டியல் HELP A1

இங்கே கிளிக் செய்க ஸ்டான்டர்டு சார்ட்டெர்டு வங்கியின் மொபைல் பேங்கிங் பற்றி மேலும் தெரிந்து கொள்ள

யூனைடட் பாங்க் ஆப் இந்தியா

அளிக்கப்படும் சேவைகள்

  • கணக்கு இருப்பு விபரம்
  • முந்தைய 5 பணப்பரிமாற்ற விவரங்கள்.
  • சுருக்கமான கணக்கு விபர அறிக்கையை இமெயிலிலோ அல்லது பேக்ஸ் மூலமோ பெறலாம்
  • வங்கி வழங்கும் பல்வேறு சேவைகள் பற்றிய விபரம்.
  • இணைப்பு கணக்குகளுக்கிடையே பணப்பரிமாற்றம்.
  • ‘பின்’ நம்பர் (ரகசிய எண்) மாற்றம் செய்தல்

பதிவு செய்யும் முறை

டெலிபேங்கிங் சேவையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தாங்கள் கணக்கு வைத்திருக்கும் கிளையில் சமர்ப்பிக்கவேண்டும்

  • 033-22428940 என்ற எண்ணிற்கு டயல் செய்து வாடிக்கையாளர்கள் தாங்களாகவே பின்நம்பரைப் (PIN) பெறலாம்
  • விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த 24 மணி நேரம் கழித்து காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்கண்ட எண்ணிற்கு டயல் செய்து ‘பின்’ நம்பரைப் பெறலாம்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி மொபைல்)

அளிக்கப்படும் சேவைகள் :

  • பண இருப்பு விபரம்.
  • சுருக்கமான கணக்கு விபர அறிக்கை,
  • பணப்பரிமாற்றம்,
  • செக்புக் பெற விண்ணப்பம், காசோலையை நிறுத்தி வைத்தல்

ஐஓபி வங்கி அளிக்கும் மொபைல் பேங்கிங் சேவையைப் பெற பதிவு செய்யும் முறை :

  • வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையைத் தொடர்பு கொண்டு மொபைல் பேங்கிங் சேவையைப் பெறலாம்.

கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்:

படி 1: மொபைல் பேங்கிங் சேவைக்கான விண்ணப்பத்தை வங்கிக் கிளைகளில் பெறலாம்

படி 2: டவுண்லோட் செய்த விண்ணப்பத்தை அச்சிட்டு பூர்த்தி செய்தபின் வங்கிக் கிளையில் கொடுக்கவும்.

படி 3: இருப்பிடச் சான்றிதழை இணைத்து வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

படி 4: முழுமையான பதிவிற்குப்பின் வாடிக்கையாளர் 2 எஸ்எம்எஸ்கள் பெறுவார்.

படி 5: மொபைல் பேங்கிங் சேவைக்கான எம்பின் (MPIN) நம்பர் 3 வேலைநாட்களுக்குள், நீங்கள் பதிவு செய்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

படி 6: எம்பின் (MPIN) நம்பர் பெற்றவுடன் ‘http://www.iobnet.mobi/’ என்ற இணையதளத்திற்குச் சென்று உங்கள் பயனாளர் ஐடி மற்றும் எம்பின் நம்பரைப் பதிவு செய்யுங்கள்.

படி 7: தற்போது நீங்கள் மொபைல் பேங்கிங் சேவையைப் பயன்படுத்தமுடியும்

ஆந்திரா பாங்க்

அளிக்கப்படும் சேவைகள்

1.எஸ்எம்எஸ் மூலம் தகவல் பெறும் வசதி

(i) குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணப் பரிமாற்றம்,

(ii) ஏடிஎம் மூலம் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணப் பரிமாற்றம்.

(iii) காசோலையை வங்கியில் வரவு வைத்தல்.

(iv) செக்புக் பெற விண்ணப்பம்,

(v) வைப்புநிதி தவணை நாள்.

(vi) ஒரு நாள் முடிவில் கணக்கில் உள்ள தொகை

2.விபரம் அறிதல்

(i) பண இருப்பு விபரம்.

(ii) சமீபத்திய 3 பரிமாற்றங்கள்.

(iii) காசோலையின் தற்போதைய நிலவரம்.

(iv) எஸ்எம்எஸ் பாஸ்வேர்ட் மாற்றம்

பதிவு செய்யும் முறை

விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டதற்கான கையொப்பத்துடன் மொபைல் பேங்கிங் சேவைக்கான விண்ணப்பத்தினை தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையில் வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை தாங்கள் கணக்கு வைத்திருக்கும் ஆந்திரா வங்கி கிளையிலேயே வாடிக்கையாளர்கள் பெறலாம். மேலும் ஆந்திரா வங்கி ஏடிஎம்கள் மூலமும் விண்ணப்பத்தினை பதிவு செய்ய முடியும்.

பாங்க் ஆப் இந்தியா

அளிக்கப்படும் சேவைகள்

  1. முந்தைய பணப்பரிமாற்ற விபரம்.
  2. பண இருப்பு விபரம்.
  3. சுருக்கமான கணக்கு விபர அறிக்கை

சேவையைப் பெறுவதற்கான வழிமுறைகள்

படி-1: வாடிக்கையாளர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தாங்கள் கணக்கு வைத்திருக்கும் கிளையில் சமர்ப்பிக்கவேண்டும்.

படி-2: நீங்கள் புதிய வாடிக்கையாளர்கள் எனில் உங்களுக்கான பயனாளர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் அஞ்சல் அல்லது கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

படி-3:

பயனாளர் ஐடி மற்றும் பாஸ்வேர்டைப் பயனபடுத்தி www.bankofindia.com என்ற இணைய தளத்திற்குச் சென்று உங்கள் எஸ்எம்எஸ் பாஸ்வேர்டைப் பதிவு செய்யுங்கள்.

படி-4: எஸ்எம்எஸ் பாஸ்வேர்டைப் பதிவு செய்தபின் நீங்கள் மொபைல் பேங்கிங் சேவையைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா

அளிக்கப்படும் சேவைகள்

கீழ்க்கண்ட செயல் நிகழும்போது எஸ்எம்எஸ் செய்தி அனுப்புதல்:

  1. ரூபாய் 5000 அல்லது அதற்கு மேல் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுதல் அல்லது கழிக்கப்படுதல்,
  2. கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வருதல் (பவுன்ஸ் ஆகுதல்),
  3. கணக்கில் உள்ள பணம், குறைந்தபட்ச தொகைக்கும் கீழ் இருத்தல்.
  4. நிரந்தர வைப்புத் தொகை முதிர்ச்சி அடையும் 7 நாட்களுக்கு முன்.

விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கு எண் மற்றும் 10 இலக்க மொபைல் போன் எண் ஆகியவற்றை தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையில் பதிவு செய்யவேண்டும்.

இங்கு கிளிக் செய்யவும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் மொபைல் பேங்கிங் சேவையைப் பற்றிய மேலும் விபரங்களுக்கு.

ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத்

அளிக்கப்படும் சேவைகள்

  1. பண இருப்பு விபரம்
  2. சுருக்கமான கணக்கு விபர அறிக்கை - சமீபத்திய 5 பரிமாற்றங்கள்
  3. எஸ்பிஐ அல்லது பிற வங்கிகளுக்கு பணப்பரிமாற்றம் செய்தல்.
  4. செக்புக் பெற விண்ணப்பம்
  5. பயன்பாட்டுச் சேவைக் கட்டணங்கள் செலுத்துதல்
  6. வணிக கட்டணம் செலுத்துதல்
  7. மொபைல் போன் டாப்அப் செய்தல்
  8. எஸ்பிஐ ஆயுள் காப்பீடு சந்தா செலுத்தல்.

விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையைத் தொடர்பு கொண்டு, மொபைல் வங்கிச் சேவையைப் பெறலாம்.

பதிவு செய்யும் முறை

பயனாளர் ஐடி பெற விண்ணப்பிக்கும் முறை

  1. < SBIREG > <மொபைலின் நிறுவன பெயர்> <மொபைல் மாடல் எண்> என டைப் செய்து 567676 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்க.,
  2. உங்கள் கைபேசியில் ஜிபிஆர்எஸ் வசதி இருக்குமானால் உங்களுக்கான பயனாளர் ஐடி, பாஸ்வேர்ட் மற்றும் மொபைல் பேங்கிங் செயலியை டவுண்லோட் செய்யத் தேவையான இணையதள முகவரி ஆகிய அனைத்தையும் பெறுவீர்கள்.
  3. இவ்வசதி தற்போது ஜாவா செயலிகொண்டுள்ள கைபேசிகளில் எஸ்எம்எஸ், ஜிபிஆர்எஸ் அல்லது வாப் வழியாகவும் இச்செயலி இல்லாத கைபேசிகளில் ஜிபிஆர்எஸ் வழியாகவும் செய்து தரப்படுகிறது

மொபைல் பேங்கிங் சேவைக்கான செயலியை கைபேசியில் டவுண்லோட் செய்தல்

  1. வாடிக்கையாளரின் மொபைல்போனில் ஜாவா செயலி இருக்க வேண்டும்,
  2. உங்களிடம் ஜிபிஆர்எஸ் இணைப்பு இருந்தால் குறுந்தகவல் மூலம் பெற்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தினை டவுண்லோட் செய்யலாம்.
  3. அல்லது வங்கியின் இணையதளத்திற்கு www.sbi.co.in செல்லுங்கள். இணையப் பக்கத்தில் ‘Services- Mobile Banking ' என்பதை கிளிக் செய்து டேட்டா கேபிள் அல்லது புளுடூத் வழியாக மொபைல் செயலியை டவுண்லோட் செய்யலாம்..
  4. மொபைல் போனின் வகையைப் பொறுத்து ‘applications’ அல்லது ‘games அல்லது ‘installations.’ என்று ஏதேனும் ஒரு இடத்தில் செயலி டவுண்லோட் செய்யப்பட்டிருக்கும்.

செயலியைப் பயன்படுத்துதல்

  1. மொபைல் பேங்கிங் செயலி டவுண்லோட் செய்தபின், ‘SBI Freedom’ என்ற ஐகானை கிளிக் செய்யுங்கள்.
  2. உங்கள் பயனாளர் ஐடியைக் கொடுக்கவும்,
  3. ‘Option’ என்பதைத் தேர்வு செய்து, ‘Login’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்,
  4. உங்களின் எம்பின்(MPIN) எண்ணை மாற்ற கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்.
  5. அவ்வாறு வரவில்லை எனில் 'Settings' சென்று ‘Change MPIN என்பதைத் தேர்வு செய்யவும்
  6. முதல் முறை செயலியில் நுழைந்தபின் எம்பின் எண்ணை மாற்ற வேண்டும்.,
  7. ‘Change MPIN என்பதைத் தேர்வு செய்யவும்.
  8. ‘Old MPIN என்பதன் கீழ் எஸ்எம்எஸ் மூலம் பெற்ற எம்பின் எண்ணை கொடுக்கவும்.,
  9. ஸ்க்ரோல் பட்டனைப் பயன்படுத்தி ‘New MPIN ‘ என்ற கட்டத்திற்கு செல்க.
  10. ‘New MPIN என்பதன் கீழ் உங்கள் புது எம்பின் எண்ணைக் கொடுங்கள் (6 இலக்க எண்.எழுத்துகள்),
  11. ‘confirm new MPIN என்ற கட்டத்திற்குச் செல்க. நீங்கள் தேர்ந்தெடுத்த புதிய எண்ணை மீண்டும் இங்கே கொடுங்கள்.
  12. ‘Option’ ஐ கிளிக் செய்து, ‘Change’ என்பதைத் தேர்ந்தெடுங்கள். பின்னர் “New MPIN setting successful” என்ற குறுந்தகவலைப் பெறுவீர்கள்.

விஜயா பாங்க்

அளிக்கப்படும் சேவைகள்

  1. பண இருப்பு விபரம்,
  2. சுருக்கமான கணக்கு விபர அறிக்கை,
  3. பணப்பரிமாற்றம்,
  4. பயன்பாட்டுச் சேவைக் கட்டணங்கள் செலுத்துதல்,
  5. திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்தல்,
  6. மொபைல் போன் டாப் அப் செய்தல்,
  7. கட்டணங்கள் செலுத்துதல் (அடுத்த கட்டம்)
  8. ஏடிஎம் மற்றும் வங்கிக் கிளைகள் இருக்கும் இடம் பற்றிய விபரம்.
  9. புதிய செக்புக் பெற விண்ணப்பம், காசோலையை நிறுத்தி வைத்தல் .

மொபைல் பேங்கிங் சேவையைப் பெற அடிப்படைத் தேவைகள்:

  1. வாடிக்கையாளர் வங்கியில் ஏடிஎம் அல்லது டெபிட் கார்டுடன் சேமிப்புகணக்கு அல்லது நடப்புகணக்கு வைத்திருக்க வேண்டும்.
  2. வாடிக்கையாளரின் மொபைல்போனில் ஜாவா செயலி இருக்க வேண்டும் மற்றும் கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு வசதியைக் கொண்டிருக்க வேண்டும்:
    • ஜிபிஆர்எஸ் (ஜென்ரல் பாக்கெட் ரேடியோ சர்வீஸ்) வசதி
    • புளுடூத்,
    • டேட்டா கேபிள் கொண்டு தகவல் பரிமாற்றும் வசதி

ஏடிஎமில் பதிவு செய்யும் முறை

  1. ஏடிஎம் இல், ஏடிஎம் கார்டை செலுத்தி ‘பின்’ நம்பரைக் கொடுக்கவும்,
  2. மெனுவில், ‘Mobile Banking Registration’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்கள் 10 இலக்க மொபைல் எண்ணைக் கொடுங்கள்.
  4. பதிவினை உறுதிப்படுத்த மீண்டும் மொபைல் எண்ணைக் கொடுங்கள்.
  5. உங்கள் கணக்கு எந்த வகை என்று <current> or அல்லது < SAVINGS > ’என்பதை தேர்ந்தெடுங்கள்
  6. உங்கள் பதிவினை உறுதி செய்தபின் “Your Mobile Number Registered successfully” என்பதை ஏடிஎம் திரையில் காட்டும் மற்றும் பிரிண்ட் செய்து கொடுக்கும்.
  7. வாடிக்கையாளர் கொடுத்த தகவல்களில் முரண்பாடு இருப்பின் “Registration Failure” என்று திரையில் காட்ட்ப்படும். “,
  8. முழுமையான பதிவிற்குபின் மொபைல் பேங்கிங் செயலியை டவுண்லோட் செய்யத் தேவையான இணையதள முகவரி மற்றும் கீழ்க்கண்ட இரு பாஸ்வேர்டுகளை குறுஞ்செய்தி வழியாக தன் வாடிக்கையாளரின் மொபைல் போனுக்கு வங்கி அனுப்பும்.

    (அ) செயலியின் பாஸ்வேர்ட்

    (ஆ) ஆக்டிவேஷன் கோட்/எம்பின் எண்

இந்த இணையதள முகவரியைக் கொண்டு, மொபைல் பேங்கிங் செயலி டவுண்லோட் செய்து கொள்ளலாம் அல்லது விபரங்களுக்கு அருகிலுள்ள வங்கிக் கிளையைத் தொடர்பு கொள்ளலாம்.

அலஹாபாத் வங்கியின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகள்

அலஹாபாத் வங்கி, வாடிக்கையாளர்களுக்காக கீழ்க்கண்ட வங்கிச் சேவைகளை கைப்பேசி குறுஞ்செய்தி வழியாக அளிக்கிறது:

  • வங்கிக்கணக்கில் இருக்கும் இருப்புத்தொகையை அறிந்துக் கொள்வதற்கு.
  • சிறு கணக்கறிக்கைப் பெறுவதற்கு (கடைசி 5 நடவடிக்கைகள் வரை)
  • காசோலைப் புத்தகம் வேண்டி கோரிக்கை அனுப்புவதற்கு.
  • கொடுக்கப்பட்ட காசோலைக்கான பண பட்டுவாடாவை நிறுத்துமாறு கோரிக்கை அனுப்புவதற்கு
  • காசோலை ஏற்பு நிலையை அறிந்து கொள்வதற்கு
  • நிரந்தர வைப்பு பற்றி விசாரிக்க

கைப்பேசி வங்கிச் சேவைகளைப் பெறுவதற்கான தகுதிகள்

  • அலஹாபாத் வங்கியில் கணக்கு வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.
  • அலஹாபாத் வங்கியில் கணக்கு வைத்திருப்பவருடைய கைப்பேசி, ஜி.பி.ஆர்.எஸ். வசதியினைக் கொண்டதாக இருக்கவேண்டும்.
  • கைப்பேசி வழி சேவைக்காக, வங்கியில் கணக்கு வைத்திருப்பவர், பயனாளிக்கான அடையாளச்சொல் மற்றும் அதற்கான கடவுச்சொல்லை வங்கியிடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.
  • இணையவழிச் சேவை பெறுவதற்கு பதிவு பெற்றவர்கள், அதற்கான அதே அடையாளச்சொல் மற்றும் கடவுச்சொல்லை, கைப்பேசி மூலமாக வங்கிச் சேவைகளை பெறுவதற்கும் பயன்படுத்தலாம்

பதிவு செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

  • கைப்பேசி வழி வங்கிச் சேவை அளிக்கக் கோரி அதற்குறிய விண்ணப்ப படிவத்தை நிரப்பி, கணக்கு இருக்கும் வங்கிக் கிளையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • பதிவு செய்வதற்காக உங்களுடைய கைப்பேசி எண்ணை வங்கிக்கு அளிக்க வேண்டும்.
  • வங்கி, வாடிக்கையாளருக்கு தங்களது எம்.பின் எண்ணை (மொபைல் அய்டண்டிபிகேஷன் நம்பர்) அளிக்கும்.
  • எம்பின் எண்ணைப் பெற்றவுடன், கைப்பேசி வழி வங்கிச் சேவையினை பெற்றதற்கான ஒப்புதலை வாடிக்கையாளர் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். அதன் பின் உங்கள் கைப்பேசியில் வங்கிச் சேவைகள் செயல்படுத்தப்படும். செயல்படுத்தப்பட்ட பிறகு உங்களுடைய கைப்பேசியிலிருந்து உங்களுடைய வங்கி கணக்கை நீங்கள் பெற முடியும்.
  • அலஹாபாத் வங்கியின் இணையவழிச் சேவை வசதியினை தாங்கள் பெற்றிருந்தால், இதற்கான கோரிக்கையை இணைய வழியாக கோரலாம்.
  • கைப்பேசி மூலமாக வங்கிச் சேவைகளை பயன்படுத்துவதற்கு முன்னர் வங்கியிடமிருந்து பெற்ற அல்லது -www.allbankonline.inஎன்ற இணைய முகவரியில் கிடைக்கும் வழிகாட்டி குறிப்புகளை தயவு செய்து படிக்கவும்

கைப்பேசியில் வங்கிச் சேவைகளை பெறுவதற்கு, 9795244444 என்ற எண்ணில் குறுஞ்செய்தி மூலம் அலஹாபாத் வங்கிக்கு கோரிக்கை அனுப்ப வேண்டும்- www.allbankonline.inஎன்ற முகவரியில் இருக்கும் சரியான படிவப்படி மட்டுமே குறுஞ்செய்தி கோரிக்கையினை அனுப்ப வேண்டும்

அலஹாபாத் வங்கியின் கைப்பேசி வங்கிச் சேவைகளைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்

மகாராஷ்டிரா வங்கியின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகள்

கீழ்க்கண்ட வங்கிச் சேவைகளை மகாராஷ்டிரா வங்கி, வாடிக்கையாளர்களுக்கு கைப்பேசி மூலம் அளிக்கிறது:

  • இருப்பு நிலவரம் அறிந்துக்கொள்ள
  • சிறு அறிக்கை – கடைசி 3 நடிவடிக்கைகள் வரை
  • காசோலை ஏற்பு நிலையை அறிந்து கொள்வதற்கு
  • வாடிக்கையாளர், தன்னுடைய சொந்த வங்கி கணக்குகளிடையே பணப்பரிமாற்றம் செய்து கொள்வதற்கு.
  • மகாராஷ்டிர வங்கிக் கிளைகள் இடையே இருக்கும் மற்ற வங்கிக் கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்வதற்கு.
  • வங்கிகளுக்கிடையே பணப்பரிமாற்றம் செய்வதற்கு.
  • காசோலைப் புத்தகம் தேவை என்று கோரிக்க அனுப்புவதற்கு.
  • கணக்கு அறிக்கைக்கான கோரிக்கை அனுப்புவதற்கு

பண பரிமாற்றத்திற்கான வரையறை

‘மஹா-மொபைல்’ வசதியினை பயன்படுத்தி தினசரி ரூ. 50,000 வரை வாடிக்கையாளர் பணப்பரிமாற்றம் செய்யமுடியும். தினசரி பணப்பரிமாற்றத்திற்கான வரையறையை வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப, ரூபாய் 50,000 வரை நிர்ணயித்துக் கொள்ளலாம்

இந்த வசதியை பெறுவதற்கு தேவையான தகுதிகள்

  1. அனைத்து வகையான சேமிப்பு கணக்கை கொண்டிருக்கும் தனிப்பட்டவர் அல்லது கூட்டு கணக்கை கொண்டிருப்பவர்கள் ‘தனித்தனியாகவோ அல்லது எஞ்சியிருப்பவர்’ என்ற அடிப்படையில் பராமரிக்கப்படும் கணக்குகள் .
  2. நடப்பு கணக்கை கொண்டிருக்கும் அனைத்து தனியார் வணிக நிறுவனங்கள் மற்றும் கடன் கணக்கு வைத்திருப்பவர்கள்

வசதியை பயன்படுத்துவதற்கான முன் தேவைகள்

கைப்பேசி வழி வங்கிச்சேவை மென்பொருளை பயன்படுத்துவதற்கு கீழ்க்கண்டவைகளை கண்டிப்பாக வாடிக்கையாளர் கொண்டிருக்க வேண்டும்:

  • ஞாபகத்திறன் கொண்ட, ஜாவா-வை இயங்கக்கூடிய கைப்பேசி
  • ஜிபிஆர்எஸ் தொடர்பு வசதியினைக் கொண்ட கைப்பேசி

கைப்பேசி வழி வங்கிச் சேவைகளுக்கான கட்டணங்கள்

தற்பொழுது, கைப்பேசி வழி வங்கிச் சேவைகளை கட்டணமில்லாமல் வங்கி அளிக்கிறது. ஆனால் காசோலைப் புத்தகம் பட்டுவாடா செய்வதற்கு அல்லது வாடிக்கையாளர் முகவரிக்கு நடவடிக்கைக்கான அறிக்கை சேர்ப்பதற்கு ரூபாய் 50-ஐ கூரியர் / அஞ்சல் கட்டணமாக வங்கி விதிக்கிறது.

கைப்பேசி வங்கிச் வசதிக்காக பதிவு செய்யும் முறை

படி – 1 : கைப்பேசி வழி வங்கிச் சேவை அளிக்கக் கோரி அதற்குறிய விண்ணப்ப படிவத்தை நிரப்பி, கணக்கு இருக்கும் வங்கிக் கிளையிடம் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் அருகாமையில் இருக்கும் கிளையிடமிருந்து விண்ணப்ப படிவத்தை பெற முடியும். கிளை மற்றும் இணைய வழியில் விண்ணப்பத்தை பரிசீலித்தபிறகு, கைப்பேசி வழிச் சேவைக்கான 4 இலக்க எம்பின் (MPIN) எண்ணை தபால் அல்லது கூரியர் மூலமாக நீங்கள் பெறமுடியும்

படி – 2 : உங்களுடைய கைப்பேசியில், வங்கியியலுக்கான மென்பொருளை நிறுவுதல்.

  • விருப்பம் – 1 : 9975494909 என்ற எண்ணிற்கு SMS BOMMOBILE என அனுப்பவும். கைப்பேசி வங்கிச்சேவைக்காக மகாராஷ்டிரா வங்கியில் உங்களுடைய கைப்பேசி எண் பதிவு செய்யப்பட்டிருந்தால், வங்கியியல் மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கான இணையத் தொடர்பு முகவரியை, குறுஞ்செய்தி மூலம் நீங்கள் பெறுவீர்கள், அதைப் பயன்படுத்தி உங்களுடைய கைப்பேசியில் வங்கியியலுக்கான மென்பொருளை பதிவிறக்கம் செய்ய முடியும்.
  • விருப்பம் – 2 : இணைய தளத்திலிருந்து கைப்பேசி வங்கிச்சேவை மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். https://www.mahaconnect.in என்ற இணையதளத்திற்கு சென்று பிற தொழில்நுட்பங்கள்: கைப்பேசி வங்கியியலுக்கான பகுதிக்கு சென்று “Download Mobile Banking Application” என்ற இணைய தொடர்பு மீது கிளிக் செய்யவேண்டும். உங்களுடைய கணிணியில் மென்பொருளை பதிவிறக்கம் செய்து அதற்குப் பிறகு மென்பொருளை உங்களுடைய கைப்பேசிக்கு யுஎஸ்பி டேட்டா கேபிள் அல்லது ப்ளுடூத் மூலம் நகர்த்த வேண்டும்.

படி – 3 : மஹா-கைப்பேசி வங்கிச்சேவை வசதிக்காக பதிவு செய்யும் முறை

  1. உங்களுடைய கைப்பேசியில் பதிவிறக்கம் ஆகியிருக்கும் மஹா கைப்பேசி மென்பொருளை திறக்க வேண்டும்.
  2. வங்கியில் பதிவு செய்யப்பட்ட உங்களுடைய கைப்பேசி எண் மற்றும் தபால் அல்லது கூரியர் மூலமாக உங்களுக்கு வங்கியால் அளிக்கப்பட்ட எம்பின்-ஐ உள்ளீடு செய்யவேண்டும் மற்றும் “பதிவு செய்” தேர்ந்தெடுக்கவேண்டும்.
  3. மஹா-மொபைலின் கால எல்லை மற்றும் நிபந்தனைகளின் சுருக்கம் உங்களுடைய கைப்பேசி திரையில் தெரியும். இப்பொழுது “ஒப்புகொள்க” என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  4. இலக்க எண்ணைக் கொண்ட கைப்பேசி வங்கியியலுக்கான மென்பொருள் கடவுச்சொல்லை அடுத்த திரையில் நீங்கள் அமைக்கவேண்டும். பிறகு மென்பொருள் கடவுச்சொல்லை இரு முறை உள்ளீடு செய்யவேண்டும். அதாவது முதல் மென்பொருள் கடவுச்சொல் பெட்டிக்குள் ஒருமுறையும் இரண்டாவது உறுதியளிக்கும் மென்பொருள் கடவுச்சொல் ஒரு முறையும் உள்ளீடு செய்யவேண்டும். பிறகு “சேவ்” தேர்ந்தெடுக்கவேண்டும்
  5. இணையம் மூலம் ஒப்புதல் பெறுவதற்காக ஜிபிஆர்எஸ் மூலமாக இணையத்திற்கு தொடர்பு கொள்ள மென்பொருளுக்கு அனுமதியளியுங்கள். பதிவுமுறைகள் முழுமையடைவதற்கு ஓரிரு நிமிடங்கள் ஆகும். அது வரையில் காத்திருங்கள்.
  6. முழுமையான பதிவு முடிந்த பிறகு, மகாராஷ்டிரா வங்கியால் அளிக்கப்பட்ட உங்களுடைய எம்பின் (MPIN) எண்ணை மாற்றிகொள்ளவும்.
  7. உங்களால் மாற்றியமைக்கப்பட்ட உங்களுடைய எம்பின் (MPIN) மற்றும் மென்பொருளுக்கான கடவுச்சொல்லை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும்.
  8. உங்களுக்கு எம்பின் (MPIN) எண் மறந்து போனால், வங்கியால் உங்களுக்கு மீண்டும் புதிய எண் அளிக்கப்படும். ஆனால் உங்களுடைய மென்பொருள் கடவுச்சொல்லை நீங்கள் மறந்து போயிருப்பின் மறுபடியும் புதியதாக மென்பொருளை பதிவிறக்கம் செய்து மீண்டும் பதிவிற்கான முறைகளை செய்ய வேண்டியிருக்கும்
  9. முழுமையான பதிவிற்குப்பிறகு கைப்பேசி வங்கிச்சேவை வசதிகளை நீங்கள் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

கனரா வங்கியின் கைப்பேசி வழி வங்கிச்சேவை வசதிகள்

கனரா வங்கி, கைப்பேசி வழி வசதிகளை இரு வழிகளில் அளிக்கிறது

  • குறுஞ்செய்தி மூலம் கோரிக்கைகள் அனுப்புதல் மற்றும் விசாரணை
  • குறுஞ்செய்தி மூலமாக விழிப்பு செய்திகள் தரும் வசதி

கைப்பேசி வழி வங்கிச் சேவைகள் பெறுவதற்கான தேவைகள்

  • குறுஞ்செய்தி - குறுஞ்செய்தி (ஜிஎஸ்எம் அல்லது சிடிஎம்ஏ) ஆகிய வசதிகளைக் கொண்டதாக கைப்பேசி இருக்க வேண்டும்.
  • உபயோகிப்பாளரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண் வங்கியில் பதிவாகியிருக்கவேண்டும்.

குறுஞ்செய்தி மூலம் கோரிக்கைகள் அனுப்புதல் மற்றும் விசாரணை மூலம் கிடைக்கும் வசதிகள்.

  • குறுஞ்செய்தி வழி வங்கிச் சேவைகளுக்கான பதிவு
  • முதன்மையான கணக்கை மாற்றுவதற்கு
  • CASA – வில் இருப்புத் தொகையைப் பார்க்க
  • கால வைப்புகளின் விவரங்களைப் பார்க்க
  • கொடுக்கப்பட்ட காசோலையின் ஏற்பு நிலையை அறிந்துக் கொள்ள.
  • வங்கி கணக்கு நடவடிக்கைகளின் சிற்றறிக்கையை பெற (கடைசி 5 நடவடிக்கைகள் வரை)
  • குறுஞ்செய்தி வழி வங்கிச் சேவைகளுக்கான பதிவிலிருந்து நீங்க

குறுஞ்செய்தி / மின்னஞ்சல் விழிப்பு வசதி மூலமாக கிடைக்கும் சேவைகள்

குறுஞ்செய்தி / மின்னஞ்சல் மூலமாக பின்வரும் நிகழ்வுகளில் வங்கி விழிப்புணர்வுச் செய்தியை அனுப்பும்:

  • பற்று / வரவு நடவடிக்கைத் தொகையானது ரூபாய் 10,000/- க்கு அல்லது வாடிக்கையாளரால் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு மேல் இருக்கும் பொழுது
  • வாடிக்கையாளரின் நடப்புக் கணக்கின் தற்போதைய இருப்புத் தொகை / கடன் மீது மாதமாதம் விழிப்பு செய்தி அனுப்புதல்
  • வாடிக்கையாளரின் நடப்பு வங்கி கணக்கில் இருக்கும் தொகை பற்று நிலையை அடையும்பொழுது அல்லது வரையறையை தாண்டும் பொழுது, இருப்புக்கு மேல் மிகைபணம் எடுப்பது பற்றிய விழிப்பு செய்தி அனுப்புதல்

குறுஞ்செய்தி மூலம் கோரிக்கை அனுப்புதல் / விசாரித்தல் வசதிக்காக பதிவு செய்துகொள்ளும் வழிமுறைகள்

  • உங்களுடைய கணக்கு இருக்கும் கிளையிடமிருந்து கைப்பேசி வழி சேவைக்கான விண்ணப்ப படிவத்தை பெறுதல்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை, கூடுதல் நகலுடன் சமர்ப்பித்தல்.
  • விண்ணப்ப படிவத்தை https://www.canarabank.in/downloads/applicationform_retail_combined.doc என்ற தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்யமுடியும்.
  • குறுஞ்செய்தி வசதியை கோருவதற்க்கு விண்ணப்ப படிவத்தில் நீங்கள் குறிப்பிட்டு கோரிக்கை விடுத்திருக்க வேண்டும்.
  • குறுஞ்செய்தி வசதியை பயன்படுத்துவதற்காக வங்கி கிளையிடமிருந்து உங்களுடைய வாடிக்கையாளர் அடையாள குறியீட்தை தெரிந்துக் கொண்டு அதை குறித்துக் கொள்ளுங்கள்
  • மின்னஞ்சல் முகவரி விவரம் மற்றும் கைப்பேசி எண் (நாட்டிற்கான குறியீட்டோடு) ஆகியவற்றை விண்ணப்பத்தில் மிகவும் சரியாக மாற்றமில்லாமல் குறிப்பிட வேண்டும்.
  • அனைத்து குறுஞ்செய்தி களும் ‘6161’ என்ற எண்ணுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.

வங்கிச் சார்ந்த சேவைகளுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதற்கான வழி முறைகள்

வரிசைஎண்

கட்டளைச் சொல்

செய்தி அமைப்பு

நோக்கம்

1.

CANREG
or
canreg

CANREG <Customer No>

முதலில் துவக்கப்பட்ட முதன்மைக் கணக்கிற்கான கைப்பேசி வழி வங்கிச் சேவைக்காக பதிவு செய்தல்.

CANREG <Customer No> <A/c No.>

நீங்கள் குறிப்பிட்டுள்ள முதன்மைக் கணக்கிற்கான கைப்பேசி வழி வங்கிச் சேவைக்காக பதிவு செய்தல் .

2.

CANACC
or
canacc

CANACC <Customer No> <Acct.No>

முதன்மை கணக்கு எண்ணை மாற்றுவதற்கு

3.

CANBAL
or
canbal

CANBAL <Customer No>

முதன்மை கணக்கின் இருப்பை விசாரிக்க

CANBAL <Customer No> <Acct.No>

மற்ற கணக்குகளின் இருப்பை விசாரிக்க

4.

CANTDQ
or
cantdq

CANTDQ <Customer No>

முதல் 3 கால வைப்பு கணக்குகளை பற்றி விசாரிக்க

CANTDQ <Customer No> <Acct.No>

ஒரு குறிப்பிட்ட கணக்கின் கால வைப்பு பற்றி விசாரிக்க

5.

CANCHQ
or
canchq

CANCHQ <Customer No> <Cheque No>

முதன்மை கணக்கிலிருந்து அளிக்கப்பட்ட காசோலையின் நிலையை விசாரிக்க

6.

CANTXN
or
cantxn

CANTXN <Customer No>

முதன்மை கணக்கின் கடைசி 5 நடவடிக்கைகள் பற்றி விசாரித்தல்

CANTXN <Customer No> <Acct.No>

மற்ற கணக்குகளின் கடைசி 5 நடவடிக்கைகள் பற்றி விசாரித்தல்

7.

CANDEL
or
candel

CANDEL <Customer No>

குறுஞ்செய்தி வசதியிலிருந்து தங்கள் பதிவை விலக்கிக்கொள்ள

8.

CANHLP
or
canhlp

CANHLP

அனைத்து கட்டளைச் சொல்களும் மற்றும் அவைகளின் செயல்பாடுகளின் பட்டியலையும் வங்கி கணினி அளிக்கும்

கனரா வங்கியின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகளைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

கனரா வங்கியின் தொலைதொடர்பு வழி வங்கிச் சேவைகள்

கனரா வங்கி மேலும் ஒரு கூடுதல் மதிப்புள்ள சேவையினை அளிக்கிறது. தொலைபேசி மூலமாக, வங்கி சார்ந்த நடவடிக்கைகளை வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பெறுவதற்கான வசதியை அளிக்கிறது. வங்கியால் அளிக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணிற்கு டயல் செய்து, வாடிக்கையாளர்கள் பெரும்பாலான வங்கி சார்ந்த நடவடிக்கைகளை செய்யமுடியும். தற்பொழுது தொலைதொடர்பு வழி வங்கிச் சேவைகள் நாள் முழுக்க கிடைக்கிறது. இந்த வசதியானது கனரா வங்கியின் இணைய வலையமைப்பில் இருக்கும் கிளைகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். கீழ்வரும் வசதிகளை, கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800 425 0018-ஐ அழைத்து, பின்வரும் வங்கியிலிருந்து சேவைகளைப் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

  • வாடிக்கையாளர்களின் அனைத்து விதமான கணக்குகளில் இருக்கும் இருப்புத் தொகையை அறிதல்,
  • கணக்கின் கடைசி 5 நடவடிக்கைகளின் விவரங்களை பெறுதல்
  • காசோலை ஏற்பு நிலையை அறிதல்
  • தொலைநகல், மின்னஞ்சல் அல்லது தபால் மூலமாக கணக்கு விவரங்களை கோருதல்
  • பணப்பரிமாற்றத்தை நிறுத்தக் கோரி கட்டளையிடுதல்.
  • வாடிக்கையாளர் கடன் சார்ந்த விவரங்கள்.
  • வங்கியைச் சார்ந்த தகவல் அளித்தல்.

தொலைத் தொடர்பு வழி வங்கிச் சேவைகளை பெறுவதற்கான வழிமுறைகள்

  • தொலைத் தொடர்பு வழி வங்கிச் சேவைகள் பெறுவதற்கு உங்களுடைய கணக்கு இருக்கும் கிளையிடம் விண்ணப்ப படிவங்களை, ஒரு நகலுடன் சேர்த்து சமர்பிக்க வேண்டும்.
  • கிளையிடமிருந்து விண்ணப்ப படிவங்கள் கிடைத்தவுடன், TPIN, மற்றும் FTPIN மைய அளவில் தயார் செய்து கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கமுடியும்.
  • முதல் முறையாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்த துவங்கும்போது, TPIN, FTPIN-ஐ மாற்றி கொள்ள வேண்டும்.

தேனா வங்கியின் கைப்பேசி வழிச் சேவைகள்

கைப்பேசி குறுஞ்செய்தி வாயிலாக தேனா வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு கீழ்கண்ட வங்கிச் சேவைகளை அளிக்கிறது

  • கணக்கின் இருப்புத் தொகையை அறிய
  • கணக்கின் நடவடிக்கை சிற்றறிக்கை பெறுவதற்கு
  • காசோலை ஏற்பு / செலுத்தப்பட்டதற்கான நிலையை அறிந்துக்கொள்ள.

குறுஞ்செய்தி வழி வங்கிச் சேவைகள் பெறுவதற்காக பதிவு செய்வதற்கான முறைகள்

மையவங்கி சார்ந்த கிளைகளின் அனைத்து வாடிக்கையாளர்களும் இணையம் மூலமான வங்கிச்சேவை வசதிகளை பெற முடியும்.

பதிவு செய்வதற்கான செயல்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

  1. இணைய தொடர்பு வழியாக வங்கி சேவைகளை பெற்று வருகின்ற வாடிக்கையாளர்கள், அதற்கென முறையாக குறிப்பிட்ட விண்ணப்ப படிவத்தை வங்கி கிளையிடம் சமர்ப்பிக்க வேண்டும். வாடிக்கையாளர், தான் இணைய வழி வங்கிச் சேவைகளை பெற்று வருபவர் என்றும் குறுஞ்செய்தி வழி வங்கிச் சேவைகள் தற்போது தேவை என்றும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கவேண்டும். தங்களுடைய வாடிக்கையாளர் குறியீட்டு அடையாளம் மற்றும் கைப்பேசி எண்ணை விண்ணப்பத்தில் தெரிவித்திருக்கவேண்டும். மற்ற வாடிக்கையாளர்கள், இணைய வழி வங்கிச் சேவைகளுக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்ணப்ப படிவத்தில் இணைய வழி மற்றும் குறுஞ்செய்தி வழி வங்கிச் சேவைகளின் தேவையை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
  2. இணைய வழி வங்கிச் சேவைகளுக்கு, வங்கியுடைய இணையதளத்தில் நுழைந்து, குறுஞ்செய்தி வழி வங்கிச் சேவைகளைப் பெறுவதற்க்கு CUSTOMIZE பகுதிக்கு கீழ் இருக்கும் SET SMS PASSWORD உட்பகுதியை அடைந்து கடவுச்சொல்லை அமைக்கவேண்டும்.
  3. கடவுச்சொல்லை அமைத்தப் பிறகு வாடிக்கையாளர் குறுஞ்செய்தி வழி வங்கிச் சேவைகளை பெற முடியும். வாடிக்கையாளரின் கைப்பேசி எண்ணிற்கு அதற்கான ஒப்புதல் அனுப்பப்படும்

கைப்பேசி வழி வங்கிச் சேவைகளுக்கான கட்டணங்கள்

  • தற்பொழுது இந்த சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன

சேவைகளை பெறுவதற்கான வழிமுறைகள்

இங்கே கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அமைப்பில் 9619141566 என்ற வங்கி கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். குறியீடுகளுக்குள்ளே < > அளித்திருக்கும் விவரங்கள் வாடிக்கையாளர்களால் உள்ளீடு செய்யப்படவேண்டும். <SMSPWD> என்பது வாடிக்கையாளர்களால் அமைக்கப்படும் கடவுச்சொல் மற்றும் <A/C NUMBER> என்பது வாடிக்கையாளரின் கணக்கு எண்ணாகும்.

வ. என்

வசதிகள்

கீழேகொடுக்கப்பட்டிருக்கும் கட்டளைச் சொற்களை 9619141566 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்ப வேண்டும்

1.

கணக்கில் இருப்புத் தொகை

DENRBAL < SMSPWD > < A/C NUMBER >

2.

குறு அறிக்கை

DENRTRAN < SMSPWD > < A/C NUMBER >

3.

காசோலை நிலை

DENRCHQSTATUS < SMSPWD > < CHQNUM > < ACCTNUM >

கைப்பேசி வங்கிச்சேவை வசதிகளைப் பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்வதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

கைப்பேசி மற்றும் விழிப்பு ஏற்படுத்தும் வங்கிச் சேவைகளுக்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளைப் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தேனாவின் தொலைபேசி வழி வங்கிச் சேவைகள்

தேனாவின் தொலைபேசி வழி வங்கிச்சேவை என்பது கேள்விகளுக்கு பதில் அளிக்கும் அடிப்படையிலான (ஐவிஆர்) முறையில் அமைந்துள்ளது. இந்த வசதியைப் பெறுவதற்கு, 18002336427 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிற்கு வாடிக்கையாளர் தொடர்பு கொள்ள வேண்டும். வங்கி தொலைப்பேசி மென்பொருள், வாடிக்கையாளர் தேர்ந்தெடுப்பதை பொருத்து ‘வாடிக்கையாளர் அடையாளக் குறியீடு’ மற்றும் கடவுச்சொல்லை அளிக்கும்படி கேட்கும். நிதிச் சார்ந்த நடவடிக்கைகளை செயல்படுத்த விரும்பும் பொழுது, நடவடிக்கைக்கான கடவுச்சொல்லை உள்ளீடு செய்யும்படி கேட்கும்

தற்பொழுது தொலைபேசி வழி வங்கிச் சேவைகளில் பின்வரும் வசதிகள் அளிக்கப்படுகின்றன:

  • அனைத்து கணக்குகளின் இருப்புத் தொகையை விசாரித்தல்
  • வங்கி கணக்கு நடவடிக்கைக்களுக்கான குறு அறிக்கை பெற (5 நடவடிக்கைகள் வரை)
  • மின்னஞ்சல் வழியாக கணக்கு அறிக்கை பெற (நடப்பு தேதி முதல் முந்தைய கடைசி 3 மாதங்கள் வரைக்குள் எந்த கால இடைவெளிக்கும் கோரலாம்)
  • தொலைநகல் வாயிலாக கணக்கு அறிக்கை பெற (கடைசி 9 நடவடிக்கைகள்)
  • கொடுக்கப்பட்ட காசோலையின் ஏற்பு நிலையை அறிந்துக் கொள்ள (செலுத்தப்பட்டது / செலுத்தப்படவில்லை)
  • காசோலைக்கு பணம் செலுத்துவதை நிறுத்தக்கோருதல்
  • வங்கியின் பண அட்டை (டெபிட் கார்ட்) நடவடிக்கைகளைப் பற்றி விசாரித்தல்
  • பணப்பரிமாற்றம் (வங்கியில் உள்ள சொந்த கணக்குகளிடையே)
  • பணப்பரிமாற்றம் செய்தல் (வங்கியில் உள்ள மூன்றாம் நபரின் கணக்குகளுக்கு)

தொலைபெசி வழி வங்கிச் சேவைகளுக்காக பதிவு செய்யும் முறைகள்

சேவையளிக்கும் மைய வங்கிக் கிளையின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதி கிடைக்கிறது. தொலைபெசி வங்கிச்சேவை விண்ணப்ப படிவத்தை வாடிக்கையாளர்கள் கிளையிடம் சமர்பிப்பது அவசியமாகும். இதற்காக இரண்டு கடவுச்சொற்கள் உருவாக்கப்படும். ஒன்று, நிதி சாரா நடவடிக்கைகளுக்கானது: மற்றொன்று நிதி சார்ந்த பரிமாற்ற நடவடிக்கைகளுக்கானது (“டிரான்சாக்சன்”). உருவாக்கப்பட்ட கடவுச்சொற்கள் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். கிளைகளிடமிருந்து வாடிக்கையாளர்கள் அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும்

தேனா வங்கியின் தொலைபேசி வழி வங்கிச் சேவைகளைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியன் வங்கியின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகள்

இந்தியன் வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு கைப்பேசி வழிச் வங்கிச் சேவையாக கீழ்க்கண்டவற்றை அளிக்கிறது

  • கணக்கில் இருக்கும் இருப்புத் தொகையை விசாரித்தல்.
  • கடைசி நடவடிக்கையின் விவரங்களைப் பெறுதல்.
  • கொடுக்கப்பட்ட காசோலை ஏற்புத் நிலையை அறிதல்
  • சொந்த கணக்குகளிடையே பணப்பரிமாற்றம் செய்தல்.
  • மற்ற இந்தியன் வங்கி கணக்குகளுக்கு, இந்தியன் வங்கி கடன் அட்டை கணக்குகளுக்கு மற்றும் மற்ற வங்கி கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்தல்

இந்திய ரிசர்வ் வங்கியின் நியதிகளின்படி, வாடிக்கையாளர் அதிகப் பட்சமாக ஒரு நாளைக்கு ரூபாய் 50,000 வரை மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யமுடியும்

கைப்பேசி வழி வங்கிச் சேவைகள பெற, பதிவு செய்வதற்கான வழி முறைகள்

கைப்பேசி வழி வங்கிச் சேவைகளுக்கான தேவைகள்

ஜிபிஆர்எஸ் / ஜாவா இயங்கக் கூடியதான கைப்பேசி

தகுதிகள்

கைப்பேசி வழி வங்கிச் சேவைகளை பெற்று வரும் வாடிக்கையாளர்களுக்கு புதிய J2ME கைப்பேசி வழி வங்கிச்சேவை வசதிகள் உடனடியாக கிடைக்கும். இந்த வசதியை பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்கு இருக்கும் கிளையிடம் கைப்பேசி வழி வங்கி சேவை கோரியிருக்க வேண்டும், அப்பொழுதுதான் அவர்கள் J2ME வசதியைப் பெற முடியும்

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தல்

வாடிக்கையாளர் தங்களுடைய கைப்பேசி மூலமாக “IndMobile” என வங்கியின் 9444394443 எண்ணுக்கு கோரிக்கை குறுஞ்செய்தி அனுப்பினால், வாடிக்கையாளருடைய கைப்பேசிக்கு மென்பொருள் பதிவிறக்கம் செய்வதற்கான இணையதள முகவரி இணைப்பு அனுப்பப்படும். USB/GPRS ஐ பயன்படுத்தி மேலும் வங்கியின் இணையத்தளத்திலிருந்தும் J2ME கைப்பேசி வங்கிச்சேவை மென்பொருளை பதிவிறக்கம் செய்ய முடியும்.

J2ME மென்பொருளை பதிவு செய்தல்

கைப்பேசியில் J2ME மென்பொருளை நிறுவுவதற்கான செயல்பாடுகள், வாடிக்கையாளர் மென்பொருளை திறந்ததும் தானாகவே ஆரம்பித்துவிடுகிறது, இதில் வாடிக்கையாளர் கைப்பேசி எண் மற்றும் 4 இலக்க எம்பின் (MPIN) ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். வாடிக்கையாளர், தன் விருப்பப்படி 6 இலக்கங்களைக் கொண்ட கடவுச்சொல்லைப் பதிவு செய்யவேண்டும். எம்பின் (MPIN), சிஐஎப் (CIF) மற்றும் கைப்பேசி எண்ணை முழுமையாக சரிபார்த்த பிறகு வங்கியின் கணினி பதிவு செய்ய ஆரம்பிக்கிறது மற்றும் அதே சமயத்தில் வாடிக்கையாளர் மற்றும் அவரால் சேர்க்கப்பட்ட பிற கணக்குகளையும் இணைக்கிறது.

இந்தியன் வங்கியினுடைய கைப்பேசி வழி வங்கிச் சேவைகளைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

ஜம்மு காஷ்மீர் வங்கியின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகள்

ஜம்மு காஷ்மீர் வங்கி, குறுஞ்செய்தி மூலம் விழிப்பு ஏற்படுத்துவதின் மூலமாக கீழ்க்கண்டவை பற்றிய வங்கிச் சேவைகளை அளிக்கிறது

  • கணக்கின் பற்று நடவடிக்கைகள் (ரூபாய் 500 – க்கு மேல்)
  • கணக்கின் வரவு நடவடிக்கைகள் (ரூபாய் 500 – க்கு மேல் )
  • கணக்கில் இருக்கும் இருப்புத் தொகை
  • கடன் தவணைகளுக்கான அறிவிப்புகள்
  • குறிப்பிட்ட கால வைப்புக்கான முதிர்ச்சி
  • கொடுக்கப்பட்ட காசோலையின் ஏற்பை நிறுத்தக் கோருதல்

குறுஞ்செய்தி சேவைகளுக்காக பதிவு செய்யும் வழிமுறைகள்

ஜம்மு காஷ்மீர் வங்கியின் கைப்பேசி வழிச் சேவைகளைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

கர்நாடக வங்கியின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகள்

கர்நாடக வங்கி, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு கீழ்கண்ட கைப்பேசி வழி வங்கிச்சேவைகளை அளிக்கிறது:

  • கைப்பேசி வழி வணிகச் சேவைகள் (எம்-காமெர்ஸ் அல்லது எம்-வணிகம்)
  • கைப்பேசி வழி குறுஞ்செய்தி விழிப்பை ஏற்படுத்தும் சேவைகள்

எம்-வணிகம்

வாடிக்கையாளர்கள் தங்களுடைய கைப்பேசி மூலம், கீழ்காணும் சேவைகளை எம்-வணிகச் சேவைகளின் கீழ் பெற முடியும்

  • பயன்பாட்டுக் கட்டணங்களை செலுத்தலாம்
  • கைப்பேசிக்கான ரீசார்ஜ் செய்தல்
  • சினிமா டிக்கெட்கள் முன்பதிவு
  • இணைய வாயிலான வணிகம் மற்றும் இன்னும் பிற

எம்-வணிகம் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

கர்நாடக வங்கியின் கைப்பேசி வங்கியியலுக்கான குறுஞ்செய்தி விழிப்பு சேவைகள் இரு கூறுகளைக் கொண்டுள்ளது:

  • குறுஞ்செய்தி விழிப்பை ஏற்படுத்தும் வசதிகள்: கர்நாடக வங்கி கைப்பேசி வழி வங்கிச் சேவையாக தங்களுடைய வாடிக்கையாளர்களை குறுஞ்செய்தி மூலமாக விழிப்பை ஏற்படுத்தி, தொடர்ந்து இந்த நடவடிக்கைகளை அறிவித்து கொடுக்கிறது.
    1. கணக்கு நடவடிக்கைக்கள் பற்றிய விழிப்பு (உங்களுடைய கணக்கில் பற்று/வரவு எது ஏற்பட்டாலும்)
    2. காசோலை ஏற்கப்படாமல் இருக்கும் போது விழிப்பு ஏற்படுத்துதல்
    3. காசோலைக்கு பணம் செலுத்தப்படும் பொழுது விழிப்பு
    4. காசோலை ஏற்பு சம்பந்தமானவைகள் மற்றும் இன்னும் பிற
      1. கைப்பேசி வழி வங்கிச்சேவை வசதி மூலம் உங்களுடைய கணக்கு இருப்பைப் பற்றி அறிய முடியும். தேவையான விவரங்களைப் பெறுவதற்கு 9880654321 என்ற எண்ணிற்கு, அதற்கான கட்டளைச் சொல்லுடன் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். கர்நாடக வங்கி கைப்பேசி வழியாக, கீழ்கண்ட சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது:
        1. KBAL: முதன்மைக் கணக்கு இருப்பு விசாரிக்க (“KBAL கடவுச்சொல் கணக்கு எண்”)
        2. KTRN: உங்களுடடைய கணக்கில் கடைசி 5 நடவடிக்கைகள் பற்றி அறிய (KTRN கடவுச்சொல் கணக்குஎண் )
        3. KPWD: குறுஞ்செய்தி கடவுச்சொல் மாற்ற (KPWD தற்போதைய கடவுச்சொல் புதிய கடவுச்சொல்)
        4. KSUS: குறுஞ்செய்தி வழி வங்கிச் சேவைகளிலிருந்து விலக (KSUS கடவுச்சொல்)\

மேற்கூறியதை தவிர, இணையம் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, புதிய கைப்பேசி குறுஞ்செய்தி விழிப்பு ஏற்படுத்தும் சேவைகள் அளிக்கப்படுகின்றன. இதன் மூலமாக அவர்களுடைய கணக்கின் அனைத்து முக்கியமான நடவடிக்கைகளைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளலாம். இந்த வசதியைப் பெறுவதற்கு, விழிப்பு ஏற்படுத்தும் குறுஞ்செய்தி விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கணக்கு இருக்கும் கிளையிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சேவைக்கு, மாத அடிப்படையில், ஒவ்வொரு குருஞ்செய்திக்கும் ரூபாய் 2/- கட்டணமாக விதிக்கப்படுகிறது.

பதிவு செய்யும் முறைகள்

  • இந்த வசதிகளைப் பெறுவதற்கு உங்களுடைய கணக்கு இருக்கும் கிளையை அணுகுங்கள்

கர்நாடக வங்கியின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகளைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

ஒரியன்டல் காமர்ஸ் வங்கியின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகள்

ஓரியண்டல் காமர்ஸ் வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி வங்கிச்சேவை வசதிகளை அளிக்கிறது. வங்கியின் எந்த ஒரு வாடிக்கையாளரும் இந்த வசதியை பெற முடியும். இந்த வசதிகள் இரண்டு வகையானவை: அதாவது தானியங்கு அடிப்படையில் விழிப்பு ஏற்படுத்துதல் மற்றும் மற்றொன்று கோரிக்கை அடிப்படையில் விழிப்பு ஏற்படுத்துதல்.

தானியங்கு அடிப்படையிலான சேவைகள்

வாடிக்கையாளரால் அளிக்கப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு தன்னுடைய வங்கி கணக்கின் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக தானியங்கு அடிப்படையில் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது: அவை கீழ்கண்டவைகளை உள்ளடக்கியது

  • குறிப்பிடும்படியான தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் பற்று / வரவு தொகைக்கு விழிப்பு ஏற்படுத்துதல்,
  • வெவ்வேறு வகையான கணக்குகளின் கீழ் பராமரிக்கப்படும் இருப்பு, குறைந்தபட்ச இருப்புக்கு கீழே செல்லும்பொழுது வாடிக்கையாளருக்கு தொடக்க நிலை விழிப்பு ஏற்படுத்துதல்,
  • காசோலை ஏற்பு தகவலுக்கான விழிப்பு ஏற்படுத்துதல்,
  • அனைத்து/குறிப்பிட்ட கணக்குகளுக்கு வாராந்திர இருப்பிற்கான விழிப்பு ஏற்படுத்துதல்,
  • விளம்பர விழிப்பு முக்கியமாக புதிய அறிமுகத்தைப் பற்றிய தகவல் / போரெக்ஸ் அளவீடு / கடன் இன்னும் பிற ஐய வினாக்களுக்கு
  • அதாவது இணைய வழி வங்கிச்சேவை, தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மூலம் பட்டுவாடா மற்றும் பிறவற்றின் போன்ற ஊடகங்களில் நடைபெறும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள்

கோரிக்கை அடிப்படையில் சேவைகள்

வாடிக்கையாளர் தன்னுடைய கைப்பேசியிலிருந்து அதற்கென ஒதுக்கப்பட்ட எண்ணிற்கு கோரிக்கை விடுப்பதின் மூலம் கீழே கொடுக்கப்பட்ட பல்வேறு வசதிகளை பெறலாம்:

  • ஒன்று / பல கணக்குகள் இருக்கும் பட்சத்தில் அவற்றிற்கான இருப்புத் தொகை
  • குறு அறிக்கைகள்

குறுஞ்செய்தி சேவைகளுக்காக பதிவு செய்யும் முறைகள்

  • மேற்கூறப்பட்ட கோரிக்கை அடிப்படையிலான சேவைகளைப் பெறுவதற்கு, வாடிக்கையாளர் தன்னுடைய கைப்பேசியிலிருந்து பின்வரும் கட்டளைச் சொல், அதனைத் தொடர்ந்து இடைவெளி மற்றும் 14 இலக்க கணக்கு எண்ணை 919915622622 என்ற கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பவேண்டும்.
  • கைப்பேசி குறுஞ்செய்தி விழிப்பு அடிப்படையிலான வங்கிச்சேவைகளுக்கான விண்ணப்ப படிவத்தை கணக்கு இருக்கும் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.

சேவைகளுக்கான கட்டணங்கள்

  • இந்த சேவைகளுக்காக வங்கி எந்த கட்டணமும் தற்பொழுது விதிக்கவில்லை. ஆனால் வாடிக்கையாளர் குறுஞ்செய்தி அனுப்புவதினால் கைப்பேசி நிறுவனம் விதிக்கும் கட்டணத்தை வாடிக்கையாளர் ஏற்க வேண்டியிருக்கிறது

இந்தியன் வங்கியின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகளைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகள்

பஞ்சாப் நேஷனல் வங்கி கீழ்வரும் கைப்பேசி வழி வங்கிச் சேவைகளை அளிக்கிறது

  • கணக்கு இருப்பு சரிப்பார்த்துக் கொள்ள
  • குறு கணக்கு அறிக்கைக்கான கோரிக்கையை அனுப்புவதற்க்கு
  • இணைய மூலமாக சிறு அறிக்கையை பெறுதல்
  • மூன்றாம் நபருக்கு பணப்பரிமாற்றம் செய்வதற்கு
  • கொடுக்கப்பட்ட காசோலைக்கான பணப் பட்டுவாடவை நிறுத்த
  • காசோலைப் புத்தகத்திற்கான கோரிக்கை அனுப்ப
  • கொடுக்கப்பட்ட காசோலையின் ஏற்பு நிலையை விசாரிக்க

கைப்பேசி வழி வங்கிச் சேவைகள் பெறுவதற்கான தேவைகள்

  • ஜிபிஆர்எஸ் வசதி கொண்ட கைப்பேசி இருக்கவேண்டும்.
  • வாடிக்கையாளரால் பயன்படுத்தப்பட்டு வரும் கைப்பேசியில் ஜிபிஆர்எஸ் இணைப்பை, இச்சேவையை அளித்து வரும் நிறுவனத்தாரிடமிருந்து பெற வேண்டும்.
  • ஜிபிஆர்எஸ் இணைப்பு பெற, கைப்பேசி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணோடு தொடர்புக் கொண்டு ஜிபிஆர்எஸ் ஐ இயக்க வேண்டும்
  • உங்களுடைய கைப்பேசியில் ஜிபிஆர்எஸ் இணைப்பு செயல்படுகிறதா என்பதை அறிந்துக் கொள்ள உங்களுடைய கைப்பேசி பிரவுசர் மூலமாக ஏதாவது இணையத்தளத்தை திறக்க வேண்டும் எ.கா. (www.google.com)

கைப்பேசி வழி வங்கிச் சேவைகளுக்காக பதிவு செய்யும் முறை

  • உங்களுக்கு அருகாமையில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கிளையிடமிருந்து விண்ணப்ப படிவத்தை பெறுங்கள்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு தேவையான ஆவணங்களை உங்களுடைய கணக்கு இருக்கும் கிளையிடம் சமர்ப்பிக்க வேண்டும்

பஞ்சாப் நேஷனல் வங்கி யின் (PNB) கைப்பேசி வழி வங்கி சேவைகளுக்கான வழிக்காட்டியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் (PNB) கைப்பேசி வழி வங்கிச் சேவைகளைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு இணைப்புகளுக்கும் செல்லவும்

https://mobile.netpnb.com/mbanking.html

http://netpnb.com/index.html

ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகள்

கீழ் வரும் சேவைகளை ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் அளிக்கிறது

  • பணப்பரிமாற்றம் செய்ய (NEFT-ஐ பயன்படுத்தி வங்கிக்குள் மற்றும் வங்கிகளுக்கிடையே)
  • சேவைகளை விசாரித்தல் (இருப்பை விசாரித்தல்/குறு அறிக்கை)
  • சேவைகளை கோருதல் (காசோலை புத்தகத்திற்கான கோரிக்கை)
  • கட்டணங்கள் செலுத்துதல் (பயன்பாட்டு கட்டணங்கள், கடன் அட்டை)
  • கைப்பேசி வழி வாணிகம் (எம்-காமெர்ஸ்) (கைப்பேசி டாப்அப், வாணிகத்திற்கான செலுத்துகள், எஸ்பிஐ ஆயுள் காப்பீட்டு பிரிமியம் போன்றவை)

கைப்பேசி மூலமான வங்கியியல் சேவைகள் பெறுவதற்கான தகுதிகள்

  • ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் (நடப்பு / சேமிப்பு) அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கைப்பேசி வழி வங்கிச் சேவைகள் கிடைக்கும்.
  • சேவைகளுக்காக வாடிக்கையாளர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஒரு வாடிக்கையாளர், கட்டணம் செலுத்துதல் மற்றும் வணிக செலுத்துதல் ஆகிய பணப்பரிமாற்றம், தினசரி அதிகப் பட்சமாக ரூபாய். 5000/- மற்றும் ரூபாய். 10000/- வரையும், ஒரு மாதத்திற்கு ரூபாய். 30,000/- வரையும் செய்யலாம்

கைப்பேசி வழி வங்கிச் சேவைகள் பெறுவதற்கான தேவைகள்

  • குறுஞ்செய்தி /ஜிபிஆர்எஸ் / வாப் போன்றவைக்காக ஜாவா இயங்கக்கூடிய கைப்பேசி
  • ஜிபிஆர்எஸ் இணைப்பைக் கொண்டுள்ள ஜாவா இயங்க இயலாத கைப்பேசி

மேலும் ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகள் பற்றி அறிய : http://www.statebankofmysore.co.in

  • தேவையான ஆவணங்களோடு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கணக்கு உள்ள வங்கிக் கிளையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஸ்டேட் பேங்க் ஆப் பாடியாலாவின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகள்

    ஸ்டேட் பேங்க் ஆப் பாடியாலா கீழ்வரும் கைப்பேசி வழி வங்கிச் சேவைகளை அளிக்கிறது

    • கணக்கிலுள்ள இருப்புத் தொகையின் விசாரணை
    • கடைசி 5 நடவடிக்கைகள் வரையான குறு அறிக்கை
    • ஸ்டேட் பேங்க் ஆப் பாடியாலாவில் உள்ள கணக்குகளுக்கு மற்றும் மற்ற வங்கிகளின் கணக்குகளுக்கு தொகை மாற்றுதல்
    • காசோலை புத்தகத்தின் தேவைக்காக கோரிக்கை அனுப்புதல் பயன்பாட்டு கட்டணங்கள் செலுத்துதல் (மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் மற்றும் இன்னும் பிற)
    • வாணிபத்திற்கான செலுத்துதல்கள்
    • கைப்பேசி டாப்அப்
    • ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆயுள் காப்பீட்டு செலுத்துதல்

    கைப்பேசி வழி வங்கிச் சேவைகளை பெறுவதற்கான தகுதிகள்

    • ஸ்டேட் பேங்க ஆப் பாடியாலாவில் கணக்கு வைத்திருக்கும் (நடப்பு / சேமிப்பு) அனைத்து வாடிக்கையாளர்களும் கைப்பேசி வழி வங்கிச் சேவைகளை பெறுவார்கள்
    • வசதிகளுக்காக வாடிக்கையாளர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

    கைப்பேசி வழி வங்கிச் சேவைகள் பெறுவதற்கான தேவைகள்

    • குறுஞ்செய்தி /ஜிபிஆர்எஸ் / வாப் போன்றவைக்காக ஜாவா இயங்கக்கூடிய கைப்பேசி
    • ஜிபிஆர்எஸ் இணைப்பைக் கொண்டுள்ள ஜாவா இயங்க இயலாத கைப்பேசி

    குறுஞ்செய்தி சேவைக்காக பதிவு செய்யும் வழிமுறை

    • இணைய தளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும்
    • தேவையான ஆவணங்களோடு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கணக்கு உள்ள வங்கிக் கிளையிடம் சமர்ப்பிக்க வேண்டும்

    ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூரின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகள்

    ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் கீழ் வரும் வங்கிச் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு கைப்பேசி மூலம் அளிக்கிறது

    • பண பரிமாற்றம் செய்ய ( நெப்ட்-ஐ பயன்படுத்தி வங்கிக்குள் மற்றும் வங்கிக்கு வெளியே)
    • விசாரிப்பு சேவைகள் (இருப்புத் தொகை அறிய / குறு அறிக்கை)
    • கோரும் சேவைகள் (காசோலை புத்தகத்தை கோருதல்)
    • கட்டணங்கள் செலுத்துதல் (பயன்பாட்டு கட்டணங்கள், கடன் அட்டைகள்)
    • எம்-வணிகம் (கைப்பேசி டாப்அப், வாணிகத்திற்கான செலுத்துதல்ககள், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆயுள் காப்பீட்டு செலுத்துதல், டாட்டா-ஸ்கை / பிக் டிவி கட்டணங்கள் மற்றும் இன்னும் பிற)

    கைப்பேசி வழி வங்கிச் சேவைகள் பெறுவதற்கான தகுதிகள்

    • ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் (நடப்பு / சேமிப்பு ) அனைத்து வாடிக்கையாளர்களும் கைப்பேசி வழி வங்கிச் சேவைகளை பெறுவார்கள்
    • சேவைகளுக்காக வாடிக்கையாளர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

    கைப்பேசி வழி வங்கிச் சேவைகள் பெறுவதற்கான தேவைகள்

    • குறுஞ்செய்தி / ஜிபிஆர்எஸ் / வாப் போன்றவைக்காக ஜாவா இயங்கக்கூடிய கைப்பேசி
    • ஜிபிஆர்எஸ் இணைப்பைக் கொண்டு ஜாவாவைக் கொண்டிராத போன்கள்

    குறுஞ்செய்தி சேவைகளுக்காக பதிவு செய்யும் முறைகள்

    • உங்களுக்கு அருகாமையில் இருக்கும் வங்கிக் கிளையிடமிருந்து விண்ணப்ப படிவத்தை சேகரித்துக் கொள்ளுங்கள்
    • தேவையான ஆவணங்களோடு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கணக்கு உள்ள வங்கிக் கிளையிடம் சமர்ப்பிக்க வேண்டும்

    கைப்பேசி வழிச் சேவைகளை நிர்வகிக்கும் வியாபார விதிகள்

    • ஒரு வாடிக்கையாளர் பணமாற்ற நடவடிக்கையாக தினசரி அதிகப் பட்சமாக ரூபாய். 50,000/- வரை மாற்றலாம், மற்றும் கட்டணம் / வணிகத்திற்கு செலுத்துதல் போன்றவற்றுக்காக ஒரு மாதத்திற்கு ரூபாய். 2,50,000/- வரை பணப்பரிமாற்றம் செய்யலாம்.
    • இவையனைத்தும் கட்டணமில்லா சேவையாகும். எனினும், குறுஞ்செய்தி / ஜிபிஆர்எஸ் இணைப்பிற்கான கட்டணங்கள் வாடிக்கையாளரைச் சேரும்

    சிண்டிகேட் வங்கியின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகள்

    சிண்டிகேட் வங்கி, கைப்பேசி மூலம் வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகளை இரு வழிகளில் அளிக்கிறது

    • குறுஞ்செய்தி விசாரிப்பு வசதிகள்
    • குறுஞ்செய்தி விழிப்பு ஏற்படுத்தும் வசதிகள்

    குறுஞ்செய்தி விசாரிப்பில்,பின் வரும் சேவைகள் வழங்கப்படுகின்றன்

    • குறுஞ்செய்தி வங்கியியலுக்கான பதிவுகள்
    • வங்கி கணக்கு இருப்பைத் அறிந்துக் கொள்வதற்கு
    • முதன்மை கணக்கை மாற்றுவதற்கு
    • கால இட்டு வைப்புகளின் விவரங்கள் அறிந்துக் கொள்வதற்கு
    • கொடுக்கப்பட்ட காசோலையின் ஏற்பு நிலையை அறிந்து கொள்வதற்கு
    • கொடுக்கப்பட்ட காசோலைக்கு பணம் செலுத்துவதை நிறுத்த கோரிக்கை அனுப்புவதற்கு
    • கடைசி 5 நடவடிக்கைகளின் விவரங்களை பெறுவதற்கு

    குறுஞ்செய்தி விசாரணை சேவை பெற பதிவு செய்யும் வழிமுறைகள்

    • கணக்கு உள்ள வங்கிக் கிளையிடமிருந்து குறுஞ்செய்தி தகவல் சேவைக்கான விண்ணப்ப படிவத்தை சேகரித்துக் கொள்ளவும்
    • தேவையான ஆவணங்களோடு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.
    • அதற்குப் பிறகு, குறுஞ்செய்தி மூலமாக பதிவு செய்வதற்கான செய்தி பெறும் அதே கைப்பேசி மூலமாக கீழே கொடுக்கப்பட்டவாறு குறுஞ்செய்தி விசாரிப்பிற்காக பதிவு செய்ய அனுப்ப வேண்டும்.
    • குறுஞ்செய்தி விசாரிப்பு சேவை பெறுவதற்கு விண்ணப்பத்தில் சரியாக, மாற்றமில்லாமல் கைப்பேசி எண்ணின் விவரங்களைக் (நாட்டின் குறியீடு எண்ணோடு) குறிப்பிட வேண்டும்.
    • அனைத்து குறுஞ்செய்திகளையும் ‘56767’ எண்ணுக்கு மட்டும் அனுப்ப வேண்டும்.

    குறுஞ்செய்தி விசாரிப்பு சேவைகளுக்காக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்வதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

    குறுஞ்செய்தி விழிப்பு வசதிகள்

    வாடிக்கையாளர்கள், குறுஞ்செய்தி மூலமாக விழிப்பு பெறுவதற்கு பதிவு செய்தியிருந்தால் சிண்டிகேட் வங்கியின் குறுஞ்செய்தி விழிப்பு சேவை, தானியங்கு முறையில் பின்வரும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை அனுப்புகிறது:

    • பற்று / வரவு நடவடிக்கைக்கான தொகை ரூபாய் 10000/- அல்லது வாடிக்கையாளாரால் குறிப்பிட்டுள்ள தொகைக்கு மேல் ஏற்படும்போது.
    • விழிப்பு ஏற்படுத்தும் வசதிக்காக பதிவு செய்திருக்கும் வங்கி கணக்குகளில் இருப்பு / கடன் மீது மாத விழிப்பு ஏற்படுத்துதல்.
    • கணக்குகள், பற்று இருப்பை அடையும்போது அல்லது வரையறை தாண்டும்போது, இருப்புக்கு மேல் எடுக்கும்போது விழிப்பு ஏற்படுத்துதல்

    குறுஞ்செய்தி விழிப்பு வசதி பெற பதிவு செய்துகொள்ளும் முறை

    • கணக்கு உள்ள கிளையிடமிருந்து குறுஞ்செய்தி வங்கியியலுக்கான விண்ணப்ப படிவத்தை சேகரித்துக்கொண்டு, படிவத்தை பூர்த்தி செய்து அதே கிளையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
    • குறுஞ்செய்தி விழிப்பு வசதிகளுக்காக விண்ணப்ப படிவத்தில், குறிப்பிட்டு நீங்கள் கோரியிருக்க வேண்டும்.
    • குறுஞ்செய்தி விசாரிப்பு சேவை பெறுவதற்கு விண்ணப்பத்தில் மிகவும் சரியாக, மாற்றமில்லாமல் கைப்பேசி எண்ணின் விவரங்களைக் (நாட்டின் குறியீடு எண்ணோடு) குறிப்பிட வேண்டும்

    சிண்டிகேட் வங்கியின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகளைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

    சவுத் இந்தியன் வங்கியின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகள்

    சவுத் இந்தியன் வங்கி, வாடிக்கையாளர்களுக்கு கைப்பேசி வழியாக கீழே கூறப்படும் வங்கிச் சேவைகளை அளிக்கிறது

    • உங்களுடைய வங்கி கணக்கின் இருப்பை பெறுவதற்கு
    • உங்களுடைய வங்கி கணக்கில் கிடைக்கக்கூடிய இருப்புடன் 4 நடவடிக்கைகளுக்கான விவரங்களைப் பெறுவதற்கு
    • கொடுக்கப்பட்ட காசோலையின் ஏற்பை விசாரித்தல் மற்றும் இன்னும் பிற

    குறுஞ்செய்தி விசாரணை சேவைக்காக பதிவு செய்யும் செயல்முறைகள்

    • அருகாமையில் இருக்கும் கிளையிடமிருந்து விண்ணப்ப படிவத்தை சேகரித்துக் கொள்ளவேண்டும்.
    • தேவையான ஆவணங்களோடு வங்கிக் கிளையில், பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

    சவுத் இந்தியன் வங்கியின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகளைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

    யூகோ வங்கியின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகள்

    யூகோ வங்கி, வாடிக்கையாளர்களுக்கு இரண்டு வழிகளில் கைப்பேசி மூலம் வங்கிச் சேவைகளை அளிக்கிறது

    • குறுஞ்செய்தி விழிப்பு சேவைகள்
    • கைப்பேசி வங்கிச் சேவைகள்

    யூகோ வங்கி பின் வரும் நடவடிக்கைகள் பற்றி விழிப்பு ஏற்படுத்தும் வகையில் குறுஞ்செய்தி அனுப்புகிறது

    • சம்பள வரவு
    • கணக்கில் ஏற்படவுள்ள பற்று
    • கணக்கில் ஏற்படவுள்ள வரவு
    • காசோலை ஏற்க்கப்படாமை
    • குறிப்பிட்ட வரையறைக்கு மேல் உள்ள இருப்பு
    • குறிப்பிட்ட வரையறைக்கு கீழ் உள்ள இருப்பு
    • கட்டணம் செலுத்துதல்/கட்டண பதிவிற்கான விழிப்பு (இ-வங்கிச்சேவை மூலமாக)

    குறுஞ்செய்தி விழிப்பு சேவைகளைத் தவிர, யூகோ வங்கி கீழ்கண்ட பிற வசதிகளையும் கைப்பேசி மூலமாக அளிக்கிறது

    • வங்கி கணக்கு இருப்பை அறிந்துக் கொள்வதற்கு
    • கடைசி மூன்று நடவடிக்கைகளின் விவரங்களை பெறுவதற்கு
    • கொடுக்கப்பட்ட காசோலையின் ஏற்பு நிலையை அறிவதற்கு
    • கணக்கு அறிக்கை பெறுவதற்கான கோரிக்கை அனுப்புவதற்கு

    குறுஞ்செய்தி விசாரணை சேவை பெற பதிவு செய்யும் முறை

    • அருகாமையில் இருக்கும் கிளையிடமிருந்து விண்ணப்ப படிவத்தை சேகரித்துக் கொள்ளவேண்டும்.
    • தேவையான ஆவணங்களோடு வங்கிக் கிளையில், பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

    யூகோ வங்கியின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகளைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

    எஸ் வங்கியின் கைப்பேசி வழி வங்கிச் சேவைகள்

    எஸ் வங்கி, வாடிக்கையாளர்களுக்கு கைப்பேசி மூலமாக வங்கிச் சேவைகளை இரு வழிகளில் அளிக்கிறது

    • கைப்பேசி வங்கிச் சேவைகள்
    • குறுஞ்செய்தி விழிப்பு சேவைகள்

    எஸ் வங்கி அளிக்கும் கைப்பேசி வழி சேவைகள்

    1. வங்கி கணக்கு இருப்பை அறிந்துக் கொள்ள
    2. கணக்கின் கடைசி 5 நடவடிக்கைகளை பெறுவதற்கு
    3. கொடுக்கப்பட்ட காசோலையின் ஏற்ப்பை அறிந்துக் கொள்ள
    4. கொடுக்கப்பட்ட காசோலைக்கான பண பட்டுவாடாவை நிறுத்தக் கோரிக்கை அனுப்புவதற்கு
    5. காசோலை புத்தகத் தேவையை பற்றிய கோரிக்கை அனுப்புதல்
    6. கணக்குடன் இணைக்கப்பட்ட நிரந்தர வைப்புகளின் விவரங்களைப் பெறுவதற்கு
    7. வங்கி கணக்கு அறிக்கை பெறுவதற்கு

    எஸ் வங்கி கைப்பேசி வங்கிச் சேவைகளைத் தவிர, பதிவு செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கீழே கூறப்பட்டிருக்கும் நடவடிக்கைகளுக்கும் குறுஞ்செய்தி விழிப்பு தகவல் அளிக்கிறது

    • பற்று விழிப்பு: உங்கள் கணக்கில் ஏற்படும் எந்த பற்றுக்கும் (குறிப்பிட்ட அளவுக்கு மேல்) தகவல் அளித்தல்
    • வரவு விழிப்பு: உங்கள் கணக்கில் ஏற்படும் எந்த வரவுக்கும் (குறிப்பிட்ட அளவுக்கு மேல்) தகவல் அளித்தல்
    • இருப்பிற்கான விழிப்பு: தொடர் இடைவெளியில் (நாள்/வாரம்/மாதம்) கணக்கு இருப்பு பற்றி உங்களுக்கு தகவல் அளித்தல்
    • சம்பள வரவு விழிப்பு: கணக்கில் சம்பளம் வரவு ஆகும் போது உங்களுக்கு தகவல் அளித்தல்
    • இருப்புக்கு மேல் எடுப்பது பற்றிய விழிப்பு: கணக்கு இருப்புக்கு மேல் பணம் எடுக்கும் போது தகவல் அளித்தல்
    • இருப்பு நிலைக்கு கீழ் விழிப்பு: கணக்கு இருப்பு குறிப்பிட்ட தொடக்க நிலை அளவுக்கு கீழ் செல்லும் போது தகவல் அளித்தல்

    குறுஞ்செய்தி விசாரணை சேவை பெற பதிவு செய்யும் முறை

    • அருகாமையில் இருக்கும் கிளையிடமிருந்து விண்ணப்ப படிவத்தை சேகரித்துக் கொள்ளவேண்டும்.
    • தேவையான ஆவணங்களோடு வங்கிக் கிளையில், பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

    கடைசியாக மாற்றப்பட்டது : 5/5/2020



    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate