অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தேர்தல் ஆணைய கைபேசி செயலிகள்

தேர்தல் ஆணைய கைபேசி செயலிகள்

விஜில்(cVIGIL)

பொதுமக்களின் வசதிக்காகசி விஜில் (cVIGIL) எனும் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, நடத்தை விதிகள், தேர்தல் செலவு தொடர்பான விதிமீறல்களை புகைப்படம் அல்லது வீடியோவாக எடுத்து பதிவேற்றம் செய்யலாம். இந்த தகவல் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பெறப்பட்டு 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் தகவல் அனுப்பியவரின் கைபேசி எண்ணுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அவ்வப்போது குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இறுதியாக தேர்தல் அதிகாரியால் இறுதி நடவடிக்கை அறிக்கை அனுப்பப்படும். கைபேசி எண் இல்லாமல் வரும் தகவல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.

‘PwD’ - மாற்றுத்திறனாளிகளுக்கான கைபேசி செயலி

‘PwD’ என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில் சம்பந்தப்பட்ட வாக்காளர், தான் ஒருமாற்றுத்திறனாளி என்பதை அதில்உள்ள பிரிவுகள் அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் வாக்குச்சாவடியில் அவருக்கான வசதிகள் செய்யப்படும். இதுதவிர, வாக்காளர் பதிவு, முகவரி மாற்றம், திருத்தம் அல்லது நீக்கம், வாக்குச்சாவடி அமைவிடம், விண்ணப்பத்தின் நிலை ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம்.

suvidha-nomination - வேட்பாளர்களுக்கான செயலி

வேட்பாளர், அரசியல்கட்சிகளுக்கான கைபேசி செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ‘suvidha-nomination’ என்ற செயலியில், வேட்பாளர்களுக்கான மனுத்தாக்கல் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டபின், அவர்களுடைய ‘அபிடவிட்’களை பொதுமக்கள் இந்த செயலி மூலம்பார்க்கவோ, பதிவிறக்கம் செய்யவோ முடியும். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட 2 நாட்களில் இந்த விவரங்களை செயலியில் பெற முடியும்.

suvidha-permission

வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களுக்கான அனுமதிக்கு விண்ணப்பித்தல், உத்தரவு பெறுவதற்காக ‘suvidha-permission’ என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் விண்ணப்பித்தால், ஒவ்வொரு விண்ணப்பத்தையும் பெற்றுக் கொண்டதற்கான சீட்டு வழங்கப்படும். இணையதளம் அல்லது செயலியில் என இரண்டிலும் சீட்டு வழங்கப்படும். விண்ணப்பத்தை பதிவு செய்ததும் சம்பந்தப்பட்ட காவல் நிலையம், அனுமதியளிக்கும் அதிகாரிக்கு விண்ணப்பம் குறித்த தகவல் கைபேசிக்கு சென்றடையும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வேட்பாளர்களுக்கென ‘suvidha’ கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் வேட்பு மனுவின் நிலை, அபிடவிட், பிரச்சாரத்துக்கான அனுமதி, அதற்கான உத்தரவு, தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையின் போது சுற்றுவாரியாக வாக்குகள் மற்றும் இறுதி முடிவு ஆகியவற்றை கைபேசி எண்ணில் பெறலாம்.

'1950’ - வாக்காளர்களுக்கான செயலி

‘1950’ என்ற வாக்காளர்களுக்கு உதவும் கைபேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணின் உதவியுடன், வாக்காளர் விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம். புதிய வாக்காளர்பதிவு, திருத்தங்களை மேற்கொள்ளலாம், வாக்காளர் பட்டியல் தொடர்பான புகார்களையும் அளிக்கமுடியும். இதுதவிர விழிப்புணர்வு தகவல்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களையும் பெற முடியும்.

இந்த கைபேசி செயலிகளில், சிவிஜில், பிடபிள்யூடி, வாக்காளர்களுக்கு உதவும் 1950 ஆகிய செயலிகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. சுவிதா செயலிகள் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் நேரங்களில் செயல்பாட்டுக்கு வரும்.

ஆதாரம் : தி இந்து - தமிழ் நாளிதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/5/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate