অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மொபைல்வழி சேவைகள்

மொபைல்வழி சேவைகள்

கைப்பேசி: தகவல் சேர்ப்பு ஊடகமாக முன்னேறி வருகிறது

கைப்பேசிகள், இன்றைய நிலையில், பேச்சு மற்றும் எழுத்துவடிவ செய்திகளை அனுப்புவதற்கும், பெறுவதற்குமான தகவல் தொடர்பு சாதனமாக மட்டும் இல்லை. நகரங்களில் மற்றும் ஊரக பகுதிகளில் வசிப்பவருக்கும் இடையே நிலவும் தகவல் தொடர்பு வேறுபாட்டை களைவதில் ஒரு வலிமையான தொழில்நுட்பமாக இது அறியப்படுகிறது. மின்னணு தொடர்பு, மின்சார பற்றாக்குறை, மற்றும் குறைந்த படிப்பறிவு போன்ற தடைகளை கடந்து, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 20 ஆண்டுகளுக்குள் கைபேசிகள் குக்கிராமங்களையும் சென்று அடைந்திருக்கிறது. மேலும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நேரிடை மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்பை இது உருவாக்கியிருக்கிறது

இதனுடைய முன்னேற்றத்தின் இரண்டாவது கட்டமாக, பலவிதமான சேவைகளை அளிக்கும் ஊடகமாக இது அறியப்படுகிறது. ஒருவர் தங்களுடைய கைப்பேசியைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையை வேறொரு கணக்கிற்கு மாற்றமுடியும். ஒரு சராசரி குடிமகனுக்கு, குடியுரிமை மற்றும் வணிகச் சேவைகளை அளிப்பதற்காக அரசு மற்றும் தனியார் துறைகள் கைப்பேசிகளை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. சமீபத்தில் வணிக அடிப்படையிலான வங்கிகள், கைப்பேசி வழியாக வங்கிச் சேவைகளை அளிப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. அமைச்சகங்கள் குழுவினால் உருவாக்கப்பட்ட “கைப்பேசி வழியான நிதிச் சேவைகளை அளிப்பதற்கான செயல்முறை அடிப்படைக்கான (Framework for delivering financial services through mobile phone)” அனுமதியை இந்திய அரசாங்கம் அளித்துள்ளது. இந்தியாவில் மூன்றாம் தலைமுறை கைப்பேசி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியப் பிறகு (2010 – ன் இறுதியில் பரவலாக கிடைக்கக் கூடிய சேவையாக இருக்கும்), பயனாளிகள் தங்களுடைய கைப்பேசி மூலமாக உடல்நலம், கல்வி, வேளாண்மை, தகவலளிப்பு சம்மந்தப்பட்ட சேவைகளை பெற இயலும்.

தொலைபேசி /மொபைல்போன் வழி சேவைகள்

சேவை அளிப்பவர் அளிக்கப்படும் சேவைகள் சேவைகளைப் பெறுவது எப்படி
கிஸான் கால் சென்டர் வேளாண் சார்ந்த
சந்தேகங்களும்
அதற்கான தீர்வுகளும்
1551 - என்ற எண்ணை அழைக்கவும்
இந்திய அரசின்  ஊரகவளர்ச்சித்துறை அமைச்சகம தேசிய ஊரக வேலைவாய்ப்பு
உறுதியளிப்புத் திட்டம் (NREGS)
பற்றி தகவல் பெற மற்றும்
புகார் கொடுக்க
1800110707 - என்ற எண்ணை அழைக்கவும்
சமூகநலம் மற்றும் தொழிலாளர் துறை, டெல்லி மாநில அரசு பிச்சையெடுக்கும்
குழந்தைகளை மீட்டு வருதல்
1098 - என்ற எண்ணை அழைக்கவும்
இரயில்வே பணியாளர் தேர்வாணையம், சென்னை விண்ணப்பத்தின் நிலை,
பணியிடத்திற்கான கல்வித்தகுதிகள்  மற்றும் தேர்வுமுடிவுகள் குறித்த தகவல் பெற
6161 - என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புக
இந்திய இரயில்வே இரயில்வே பணியாளர் மீது
லஞ்ச/ ஊழல் புகார் கொடுக்க
155210  - என்ற  இலவச எண்ணை அழைக்கவும்
இந்திய இரயில்வே பிஎன்ஆர் (PNR)  நிலவரம்,
பயணத்தில் இருக்கும் இரயிலின் நிலை,
இருக்கை வசதி நிலவரம்
& கட்டண விவரம் அறிய
139 - என்ற எண்ணை அழைக்கவும் பின்னர் 4 இலக்க வண்டி எண் அல்லது 10 இலக்க பிஎன்ஆர் எண்ணை பதிவு செய்க
இந்திய இரயில்வே பிஎன்ஆர் (PNR)
நிலவரம் மற்றும்
பயணத்தில் இருக்கும்
இரயிலின் நிலை அறிதல்
9773300000 - என்ற எண்ணை அழைக்கவும்
மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) 10 மற்றும் 12ஆம் வகுப்பு
தேர்வுகள் பற்றி உடல் ஊனமுற்ற குழந்தைகளின்
சந்தேகங்களுக்கு
விளக்கம் பெற
மாணவர்கள் அழைக்க வேண்டிய எண்கள்
டெல்லி : 9717882074
மும்பை : 9967800337
மும்பை : 9833950896
மும்பை : 9819209623
மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) 10 மற்றும் 12ஆம் வகுப்புத்
தேர்வு முடிவுகள்
011 24357270  - என்ற எண்ணை அழைக்கவும்
மத்திய நலவாழ்வுத் துறை
ஆம்புலன்ஸ் மற்றும்  
நோயாளிகளுக்கான
சுகாதார உதவி
அழைக்க வேண்டிய எண்:
102 or 1099
இந்திய உச்ச நீதிமன்றம் வழக்கறிஞர்களும் முறையீட்டாளர்களும்    நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளின் தற்போதைய நிலவரத்தை தொலைபேசி மூலம் அறிந்து கொள்ளுதல் அழைக்க வேண்டிய எண்:
- 011-4362062 &
011 4360112
பிற மாநிலங்களில்
வேளாண் துறை, மத்திய பிரதேச அரசு வேளாண்மை, தோட்டப்பயிர் வளர்ப்பு, மீன்பிடித்தல் கால்நடைவளர்ப்பு, பால்பண்ணை அமைத்தல் முதலியவற்றில்  விவசாயிகளின் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் 18002334433  - என்ற எண்ணை அழைக்கவும்
வேளாண் துறை, ஹரியானா மாநில அரசு விவசாயிகளின் வேளாண் சார்ந்த பிரச்சனைகள் 9915862026 - என்ற எண்ணுக்கு எஸ்.எம். எஸ் அனுப்புக
ஹரியானா மாநில அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் பற்றி தகவல் பெற மற்றும் புகார் கொடுக்க 18001802023 - என்ற எண்ணை அழைக்கவும்
மத்தியப் புலனாய்வு அமைப்பு, இமாச்சலப் பிரதேச அரசு ஊழல் அதிகாரி மீது புகார் செய்ய 09418153535 - - என்ற எண்ணை அழைக்கவும்.  (அல்லது)  09418153535 என்ற எண்ணுக்கு ஊழல் அதிகாரி விவரங்களுடன் எஸ் எம் எஸ் அனுப்புக
மத்தியப் புலனாய்வு அமைப்பு, ஆந்திரப் பிரதேச அரசு மத்திய அரசு ஊழியகள், பொதுத்துறை வங்கிகள், மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் புகார் செய்ய 040 24732768 (ஹைதராபாத்)
0891 2783333 (விசாகப்பட்டினம்)  - என்ற எண்களை அழைக்கவும்
“ஜான்காரி” பீகார் மாநில அரசு தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி தகவல் அறிய, முதலாம் மற்றும் இரண்டாம் மேல்முறையீடுகளின் நிலை அறிய தகவல் பெறும் மனுக்கள் மற்றும் முதலாம் மற்றும் இரண்டாம் மேல்முறையீடுகளை  பதிவு செய்ய 155311 என்ற எண்ணை அழைக்கவும்.
மனுக்களின் நிலை அறிய  155310- என்ற எண்ணை அழைக்கவும்
கர்நாடக அரசின் மாநில பியூசி கல்வித்துறை 12ஆம் வகுப்பு  மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் தேர்வுகள் பற்றிய கவுன்சிலிங் 080-23366778   (அல்லது)
080 23366779 - என்ற எண்ணை அழைக்கவும்
(03 p.m. to 4.30 p.m)
அவசர கால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (EMRI),ஹைதராபாத் நோயாளிகளுக்கான மருத்துவ உதவி 108 - என்ற எண்ணை அழைக்கவும்
டெல்லி சட்ட ஆலோசக ஆணையம் சட்ட ஆலோசனை மற்றும் உதவி அழைக்க வேண்டிய எண்:
-12525 (இலவச அழைப்பு)
-23070345 & 23073132
கேரளா சட்ட ஆலோசக ஆணையம் சட்ட ஆலோசனை மற்றும் உதவி அழைக்க வேண்டிய எண்:
- 9846 700 100
மும்பைப் பெருநகர முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC) திடக்கழிவு மேலாண்மை ,வெள்ள நீர் வடிகால்,சாக்கடை, சாலை மற்றும் போக்குவரத்து,தொழிற்சாலைகள், லைசென்ஸ் சம்பந்தப்பட்டவிஷயங்கள்,தண்ணீர் விநியோகம,பூச்சி/கிருமி கட்டுப்பாடு,கட்டிடங்கள்,ஆக்கிரமிப்பு...குறித்த புகார்களை முறையீடு செய்தல் அழைக்க வேண்டிய எண்:
-1916
மும்பைப் பெருநகர முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC) ரூ.20,000 வரையிலான சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி செலுத்துதல் எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டிய எண்- 57575
“Dr எஸ் எம் எஸ்” கோழிக்கோடு மாவட்டம், கேரளா எந்நேரத்திலும் செயல்படக்கூடிய அருகிலுள்ள  சுகாதார சேவை மையங்கள், மருத்துவமனைகள் குறித்த தகவல்கள். மேலும் ரத்த வங்கிகளைத் தொடர்பு கொள்ள வழிகாட்டி, பரிசோதனை மையங்கள், தனியார் மருத்துவ மனைகள், சிறப்பு மருத்துவ மையங்கள்,
மாவட்டத்தில் உள்ள சிறப்பு மருத்துவ நிபுணர்கள்,அறுவை சிகிச்சை வசதிகள், செயற்கை சுவாசக்கருவிகள்  குறித்த தகவல்களையும் பெறலாம்
முழு விலாச விபரங்களுடன் எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டிய எண்- 09446460600
கூர்கான் காவல் துறை,ஹரியானா அரசு விபத்து மற்றும் அபாய காலத்தில் காவல்துறை உதவி பெற எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டிய எண்- 9717595423

கடைசியாக மாற்றப்பட்டது : 7/23/2020© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate