பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அஸ்ஸாம்

அஸ்ஸாமில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.

கணிணிமயமாக்கப்பட்ட பாஸ்போர்ட் சேவை

 • விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தவுடன் ரசீதை உருவாக்குதல்
 • பழுதடைந்த மற்றும் தொலைக்கப்பட்ட பாஸ்போர்ட்கள் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் போன்ற சேவைகளைக் கையாளுதல்
 • பாஸ்போர்ட் பெற கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தின் தற்போதைய நிலையைப் பெறுதல்
 • ஏழு வடகிழக்கு மாநிலங்களுக்கு பாஸ்போர்ட் சேவை வழங்கும் கவுகாத்தி பாஸ்போர்ட் அலுவலகத்திற்கான பாஸ்போர்ட்களை அச்சிடுதல்.

தேசிய குடியுரிமைப் பதிவகம் (NRC)

 • தேசிய குடியுரிமைப் பதிவகத்தில் காகிதங்களில்  பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து குடியுரிமை சார்ந்த தகவல்களையும் டேட்டாபேஸ் வடிவில் மின்மயமாக்குதல்.
 • தகவல்கள் அனைத்தும் அந்தந்த மூல மொழிகளிலேயே தொகுக்கப்பட்டுள்ளன.
 • இந்த மென்பொருள் பலவகையான அறிக்கைகளை உருவாக்கும்.

கணிணிமயமாக்கப்பட்ட நிலஆவணப் பதிவு முறை

 • அஸ்ஸாமின் 27 மாவட்டங்களில் 20 மாவட்டங்களின் நிலஆவணப் பதிவு முறை கணிணிமயமாக்கப்பட்டுள்ளது.
 • தற்போது அஸ்ஸாமின் 6 மாவட்டங்களில்  உள்ள நில உரிமையாளர்களுக்கு நில உரிமை பட்டாக்கள் (ஜமபந்தி) வழங்கப்பட்டு வருகிறது.
 • கம்ரூப், தின்சுக்யா மற்றும் திப்ருகர் ஆகிய  மாவட்டங்களின் ஜமபந்தி விவரங்கள் இணையதள வழியாக பொதுமக்களின் பார்வைக்கு  வைக்கப்பட்டுள்ளது.

பிருத்வி - புவியியல் தகவல் அமைப்பு (ஜி.ஐ.எஸ்)

 • அஸ்ஸாமின் அனைத்து எல்லை வரைபடங்களும் இச்சேவை மூலம்  மின்மயமாக்கப்பட்டுள்ளன..
 • 12 மாவட்டங்களின் ஒன்றிய வாரியான எல்லைகள், மூன்று மாவட்டங்களின் கிராம எல்லைகள் மற்றும் கவுகத்தியின் வார்டு வரைபடங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன
 • கடைமட்ட அளவிலும் சிறப்பான திட்டமிடல் செய்வதில் பிருத்வி எனும் இணையதள ஜி,ஐ.எஸ் சர்வர் பேருதவி புரிகிறது.
 • வட்ட அளவிலான கடஷ்ட்ரல் வரைபட முறையை பெற்ற முதல் மாவட்டம் சோனிட்பூர் ஆகும்.
 • ஜி,ஐ,எஸ்-ன் நிலைகாட்டிகளை ( இரயில், சாலை,ஆறு, காடுகள், நீர் ஆதாரங்கள்  வடிகால் அமைப்பு மற்றும் இதர) அடிப்படையாகக் கொண்டு தேவைகளின்  அடிப்படையில் பயன்பாடு சார்ந்த வரைபடங்களைப் பெறலாம்.

உத்யோக் ரத்னா

 • மாவட்ட தொழில் மையங்களின் (DICs) செயல்பாடுகளை சிறந்த முறையில் கண்காணிக்க ஒரு திறன்மிகு திட்டமே உத்யோக் ரத்னா.
 • இது மாவட்ட தொழில் மையங்களின் பொது மேலாளர்களுக்கு உதவி செய்யும் இணையவழியிலான அமைப்பு. 20 அம்சத் திட்டம், தொழிற் கொள்கைகள், வரவு செலவு விவரங்கள், பிரதமரின் ரோஜ்கர் யோஜ்னா என பல்வேறு திட்டங்களின் மாதாந்திர அறிக்கைகளைப் பொது மேலாளர்கள் இதன் மூலம் பதிவு செய்யலாம்.
 • இதில் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் தொழிற்சாலைகளின் இயக்குநர் மற்றும் பொது மேலாளர்களுக்கு திட்டமிடுவதற்கு ஏற்ப அளிக்கப்படும்.

விதான் - நடுவர்மன்ற வழக்குகளின் நிர்வாக அமைப்பு

 • மாவட்ட நடுவர் மன்ற (மாஜிஸ்ட்ரேட்) அலுவலத்தின் கீழ் உள்ள அனைத்து நடுவர்மன்ற வழக்குகளையும் அன்றாடம் செயல்படுத்தும் ஒர் தானியங்கி அமைப்பு.
 • ஆன்லைன் மூலம் வழக்குகளின் நிலவரம் அறிதல் மற்றும் பல்வேறுபட்ட அறிக்கைகளை உருவாக்குதல்.

ஷாபத் -உறுதிமொழிப் பத்திரங்களின் நிர்வாக அமைப்பு

 • உதவி ஆணையரின் அலுவலகத்தில் நடுவர்மன்ற பிரிவின் கீழ் வரும் பிரமாண பத்திர ஆவணங்களை தானாகவே பராமரிக்கும் அமைப்பே ஷாபத் .

ஜன-சேவா - கணிணிமயமாக்கப்பட்ட குடிமக்கள் சேவை அமைப்பு

 • குடிமக்களின் பல்வேறு  அடிப்படை வசதி குறித்த  மனுக்களை பதிவு செய்யும் வசதி
 • குடிமக்கள் கீழ்க்கண்ட சேவைகளை எளிய வழியில் பெறலாம்: கடன் நிலுவைத் தள்ளுபடி சான்றிதழ், பாஸ்போர்ட்,மூத்த குடிமக்களுக்கான சான்றிதழ், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்/ சங்கங்களின் பதிவு மற்றும் புதுப்பித்தல், காலம் தாழ்த்தி பெறப்படும் பிறப்பு மற்றும் இறப்பு  சான்றிதழ், கருணைத் தொகை,ஆயுத உரிமம்,  திரைப் படம் எடுக்க அனுமதி, சான்றளிக்கப்பட்ட  நீதிமன்ற உத்தரவுகள், சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல், அஞ்சல் தலை விநியோகிக்கும்  உரிமை, வெடிபொருட்கள் வைத்திருக்க தடையில்லா சான்று,காவல் துறையில் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கியை திரும்பப் பெற விண்ணப்பம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி.

பரிஷோத் - கணிணிமயமாக்கப்பட்ட கடன் நிலுவைத் தொகை செலுத்தும் அமைப்பு

 • கடன் சம்பந்தப்பட்ட பதிவுகள், துரிதமுறையில் சந்தேகங்களுக்கு தீர்வு மற்றும் உரிய நேரத்தில் அறிக்கைகளை உருவாக்குதல்.
 • மாதாந்திர அடிப்படையில் கடனை திருப்பி செலுத்துவதன் தொகுப்பு விவரம் மற்றும் கடனுக்கான புதிய பதிவுகளை உருவாக்குதல்.

நதி அவஸ்தித்தி - கணிணிமயமாக்கப்பட்ட கோப்புகள் மேலாண்மை

 • இது ஒரு G2G (அரசிலிருந்து அரசுக்கு) பயன்பாடு,
 • துணை ஆணையரின் அலுவலகத்திற்கு வந்து செல்லும் அனைத்து கோப்புகளையும் கண்காணிக்கவும், ஒவ்வொரு கோப்பின் தற்போதைய நிலவரம் பற்றி அறியவும் அலுவலர்களுக்கு உதவுகிறது.

அனுஷ்ரவன்

வட்ட அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் மாதாந்திர அறிக்கைகளை (பெரும்பாலும் நில மற்றும் வருவாய் துறை பற்றிய ஆவணங்கள்) துரிதமாக சிறந்த முறையில் தயாரிக்க உதவுகிறது.

கீழ்க்கண்டவற்றுள் மாதாந்திர அறிக்கைகள் பெறப்படுகிறது.

 • தேங்கியுள்ள கோப்புகளின் முன்னேற்றம் மற்றும் தீர்வு.
 • நில ஆவணங்களில் இன்றைய தேதி வரை  செய்ய வேண்டிய திருத்தங்கள் பற்றிய பணிகளில்  ஏற்பட்டுள்ள முன்னேற்றம்.
 • ராஜா அதாலத்
 • குடியிருப்பில்லாத இடங்கள், புணரமைக்கப்பட்ட மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் பற்றிய விவரங்கள்.

மானப்-சம்பத்

கணிணிமயமாக்கப்பட்ட பணியாளர் தகவல் மேலாண்மை அமைப்பு

 • இது மாவட்ட நிர்வாகத்தின் மனிதவளத் துறைக்கு கீழ்க்கண்டவற்றை அளிக்கிறது
 • இன்றைய தேதி வரையிலான துறைவாரியாக தகவல் மேலாண்மை அமைப்பு
 • சந்தேகங்களைத் தெளிவுபடுத்துதல் மற்றும் அறிக்கைகள் பெறுதல்

கிரக-லஷ்மி

கணிணிமயமாக்கப்பட்ட பொது விநியோக முறை (PDS)

 • உணவு தானியம், சர்க்கரை,பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் இதர பட்டியலிடப்பட்ட பொருட்களின் இருப்பு நிலவரங்களை நிர்வகிக்க எளிய வசதி.
 • குடும்ப அட்டை தகவல்கள், நியாய விலை கடைகள் மற்றும் எண்ணெய் விநியோக மையங்கள் பற்றிய விவரங்கள் மற்றும்  இதர  அறிக்கைகளைப் பெறுதல். இது சிறந்த திட்டமிடுதலுக்கு உதவுகிறது

பாட்டான்

கணிணிமயமாக்கப்பட்ட சம்பளப்பட்டியல் தயாரிக்கும் முறை

 • இது குறித்த நேரத்தில் சிக்கலின்றி  சம்பள விநியோகத்தை நடைமுறைப்படுத்த உதவுகிறது.
 • ஆண்டு சம்பளக் கணக்கு,  ஆண்டு மொத்த ஊதிய  அறிக்கை, முந்தைய மாத ஊதிய  விவரம் போன்ற  சம்பள பட்டுவாடா பற்றிய அறிக்கைகளை இதன் மூலம் நிறுவனங்கள் குறித்த நேரத்தில் பெறலாம்.

அபியோக்

கணிணிமயமாக்கப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைப்பு

 • பொதுமக்கள் தங்கள் குறைகளை எந்த ஒரு சமுதாய தகவல் மையம் அல்லது பிரவுஸிங் சென்டர் வாயிலாக பதிவு செய்யலாம்.
 • அளிக்கப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆன்லைன்  வழியாக எந்த நேரத்திலும் அறியலாம்.

கிராமுன்னயான்

கணிணிமயமாக்கப்பட்ட டி.ஆர்.டி.ஏ (DRDA) திட்ட மேலாண்மை அமைப்பு

 • சுவர்ணஜெயந்தி கிராம்ஸ்வரோஜ்கர் யோஜ்னா மற்றும் இந்திரா குடியிருப்பு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் செயல்படும் பலதரப்பட்ட பணிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல் மற்றும் அறிக்கைகள் உருவாக்குதல்
 • அஸ்ஸாமின் பல்வேறு மாவட்ட கிராம வளர்ச்சி கழகங்களின் நிர்வாகத்தை கண்காணித்தல்.

டாக் - அஞ்சல் நிர்வாகப் பயன்பாடு

 • மாவட்ட நிர்வாகத்திற்குட்பட்ட  அனைத்து அலுவலகங்களுக்கும் வருகின்ற மற்றும் அலுவலகத்திலிருந்து அனுப்பப்படும் அஞ்சல்கள் குறித்த விவரங்களை பதிவு செய்தல் கணிணிமயமாக்கப்பட்டுள்ளது.
 • வாராந்திர/மாத இருமுறை/மாதாந்திர அடிப்படையில் அஞ்சல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கண்காணித்தல்.
 • அஞ்சல் குறித்த விவரங்களை ஆன்லைனில் பெறுதல்
 • குறிப்பிட்ட தேதியில் அனுப்பப்பட்ட அஞ்சல்கள் பற்றிய அறிக்கைகள் பெறுதல்.
 • சம்பந்தப்பட்ட அலுவலர்/அலுவலகத்திற்கு அஞ்சல்ளை அனுப்பிவைத்தல்.

மூலம் : தேசியதகவல்மையம்

3.0
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top