অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ஆந்திரப் பிரதேசம்

ஆந்திரப் பிரதேசம்

பிரஜாவானி

உரிமை பெறுவதற்கான ஒரு மின் முயற்சி

பிரஜாவானி என்பது இணைய நிர்வாகத்தின் தொடக்க முயற்சி. இது தகவல் உரிமைச் சட்டத்திற்குச் செயல்முறை வடிவம் தருகிறது. மேலும், படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தருகிறது. பிரஜாவானி ஒரு தனித்துவனமான பொது-தனியார் கூட்டுத் திட்டம். இது குடிமக்கள் அரசு அலுவலகத்திற்குப் போகாமலேயே அரசுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகிறது. பல்வேறு துறைகள் சார்ந்த தகவல்கள் என்.ஐ.சி., ஏ.பி.வெப் சர்வர் வைத்துள்ள வலை தளம் மூலமாக கிடைக்கிறது.

பிரஜாவனி அமைப்பு, மக்களின் புகார் எந்த அளவில் இருக்கிறது என்பதைக் கண்டறிவதற்கு மட்டுமில்லாமல், இது மாவட்ட ஆட்சியருக்குப் பல்வேறு துறைகளின் செயல்திறன்களைக் கண்காணிக்கும் திறன் மிகுந்த, கருவியாகவும் பயன்படுகிறது.

சி.எ.ஆர்.டி. (CARD)

சி.எ.ஆர்.டி. என்றால் பதிவுத் துறையின் கணினி உதவியுடன் கூடிய நிர்வாகம். ஆந்திரப் பிரதேச அரசு, அனைத்துப் பதிவுச் சேவைகளையும் எலெக்ட்ரானிக் முறையில் வழங்குவதன் மூலம், வழக்கமான பதிவு முறையில் இருக்கும் பிரச்சினைகளை நீக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. பதிவுச் செயல்முறைகளைத் தெளிவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவுசெய்ய வேண்டும் என்ற அளவில் தொடங்கப்பட்டது. அத்தோடு, நடைமுறையைத் துரிதமாக்குதல், செயல்திறன், நிலைமாறாமல் தொடர்ந்து ஒரே மாதிரியாக இருத்தல், நம்பகத் தன்மை, போதுமான அளவு குடிமக்கள் பங்கேற்பை மேம்படுத்துதல். இத்யாதி. சி.எ.ஆர்.டி. தொடங்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் ஆந்திராவில் 80 சதவிகித நிலப் பதிவுகள் செயல்முறை எலெக்ட்ரானிக்கில் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர், 60 சதவிகித ஆவணங்கள், வில்லங்கச் சான்றிதழ்கள் மற்றும் விவாசாயப் பொருள்கள் சம்பந்தமான உறுதியளிக்கப்பட்ட பிரதிகள் போன்றவை எலெக்ட்ரானிக்கில் செய்யப்பட்டுள்ளன. சி.எ.ஆர்.டி. திட்டத்தின் வெற்றி கிராமப்புற விவசாய சமுதாயத்தினர்க்கு மிகச் சிறந்த நன்மைகளை அளிக்கும்.

இணையப் பஞ்சாயத்து

டி.ஐ.டியின், என்.ஐ.சி.யினால் நாட்டில் முதன்முறையாக ஆந்திராவில் இணையப் பஞ்சாயத்து அல்லது மின் அறிவை அடிப்படையாக் கொண்ட பஞ்சாயத்து அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னோட்டமாக, ஹைதராபாத் அருகிலுள்ள மேடாக் மாவட்டத்தின் ராமசந்திராபுரம் கிராமப் பஞ்சாயத்தின் அனைத்துச் செயல்களும் கணினிமயமாக்கப்பட்டதுடன், வலைதளம் பயன்படுத்தும்படியாகவும் அமைக்கப்பட்டுள்ளது. பிறப்பு இறப்புப் பதிவுகள், வீட்டு மதிப்பீட்டு வரிவசூல், வணிக உரிமம், முதியோர் ஓய்வூதியம், வேலை கண்காணிப்பு, நிதிக் கணக்கீடுகள் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கான எம்.ஐ.எஸ். போன்றவற்றிக்கு இணையத்தை அடிப்படையாகக் கொண்ட சேவைகள், கணினிமயமாக்கப்பட்ட இணையப் பஞ்சாயத்து முறையில் செய்யப்படுகிறது. கிராமத்தின் மக்களுக்கு, கூடுதல் சேவைகளான சந்தை விலைகள் மற்றும் விவசாயத்திற்கான ஆலோசனைகள் போன்றவை இணையப் பஞ்சாயத்திலிருந்து தரப்படுகின்றன. இந்தத் திட்டம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள டெந்துலுரு, பெடாபடு, அனந்தபூர் கிராமப் பஞ்சாயத்து போன்ற பல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஆந்திரப் பிரதேசத்தின் அனைத்துக் கிராமங்களிலும் படிப்படியாக நீட்டிக்கப்பட இருக்கிறது. மேலும், பொருத்தமான முறைகளில் மூலம், பிற மாநிலங்களிலும் இது விரிவாக்கப்பட இருக்கிறது.

இ-சேவா

ஆந்திரப் பிரதேச அரசு, இத்திட்டத்தை 2001 ஆகஸ்ட் 25ஆந் தேதியில் தொடங்கியது. இ-சேவா இரட்டை நகரமான ஹைதராபாத், செகந்திராபாதில் 1999இல் தொடங்கப்பட்ட டிவின்ஸ் திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு. தற்பொழுது 32 இ-சேவா மையங்கள் இரட்டை நகரங்களான ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு நாளும் காலை 8 மணியிலிருந்து, இரவு 8 மணி வரையிலும், விடுமுறைகளில் காலை 9.30 மணியிலிருந்து, 3.30 மணிவரை இயங்குகிறது. குடிமக்கள் பயன்படுத்திய சேவைகளுக்கான (தொலைபேசி, தண்ணீர், மின்சாரம், வரி போன்றவை) கட்டணத்தை இதில் செலுத்தலாம். வணிக உரிமங்களுக்காகப் பயன்படுத்தலாம். இந்த வசதியைப் பயன்படுத்தி அரசாங்க விஷயங்களை ட்ரான்ஸ்பர் செய்யலாம். இ-சேவா, முதலில் குடிமக்களிடமிருந்து அரைகுறையான ஆதரவைப் பெற்றபோதிலும், பிறகு பலமான நம்பிக்கையைப் பெற்றது. இதுவரை 2000 கோடி ரூபாய் அளவிற்கு மிகப்பெரும் வசூலை ஈட்டியுள்ளது. (2003 பிப்ரவரி இறுதிவரை) மிகக் குறைவான வசூல் என்பது 2001 ஆகஸ்டின் 43 லட்சம்தான். அரசாங்கம் இந்தத் திட்டத்தைக் கிராமப் புறப் பகுதிகளான மேற்குக் கோதாவரி மாவட்டம் உட்பட மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவச் செய்துள்ளது.

விரிவான தகவல்களுக்கு http://www.meeseva.gov.in/Meeseva/intro.html

ஓ.எல்.டி.பி (OLTP)

இத்திட்டம் 2002இல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தின் 16 அரசுத் துறைகளை ஒற்றை நெட்வொர்க்கில் இணைக்கிறது. அனைத்து அரசாங்கப் பதிவுகள், மாவட்டத்தில் அரசு நடைமுறைச் செயல்பாடுகளின் விவரங்கள் இவையனைத்தும் ஒற்றை ஆரக்கிள் 9: தகவல் தளத்தில் மையமாகச் சேமிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இந்தத் திட்டம், அரசாங்கத் துறையைப் பயன்படுத்துவர்களுக்கும் மக்களுக்கும் சேவைசெய்ய முயற்சிக்கிறது. தாத்நகர் மண்டலத்தில் உள்ள 10 கிராமங்கள், பிஜ்னேபற்றியில் ஒரு கிராமம், ஜத்சேர்லா மண்டலத்தில் ஒரு கிராமம், மஹபூப் நகர் மாவட்டத்தில் ஒரு கிராமம் என இத்திட்டம் சேவைசெய்கிறது. இந்தப் பகுதியில் உள்ள மக்கள், அரசுத் துறை சேவை நடவடிக்கைகளை, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இணையச் சுவடிகள் மூலம் திறன்படத் தொடர்பு கொள்ளலாம். இத்தகைய நடைமுறைகளை ஆங்கிலத்திலும் அதே போன்று தெலுங்கிலும் செய்யலாம்.

வாய்ஸ் (VOICE)

விஜயவாடா ஆன்லைன் தகவல் மையம்.

கணினி உட்கட்டமைப்பை, விஜயவாடா முனிசிபல் கார்ப்பரேஷனில் ஏற்படுத்தவும் கணினிச் சாவடிகளை விஜயவாடா நகரத்தின் முக்கியமான பொது இடங்களில் நிறுவிப் பொதுமக்களுக்கு நன்மை அளிக்க வேண்டுமென்பதற்காகவும் ‘வாய்ஸ்’ தொடங்கப்பட்டது. ‘வாய்ஸ்’ முனிசிபல் சேவைகளான கட்டிட அனுமதி, பிறப்பு, மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் இவற்றை விஜயவாடா மக்களுக்கு அளிக்கிறது.
இது சொத்து, தண்ணீர், நிலத்தடி, சாக்கடை வரி என இவற்றையும் கையாள்கிறது. வாய்ஸ் அமைப்பு மக்களுக்கு நெருக்கமான 5 இடங்களில் கணினிச் சாவடிகளைப் பயன்படுத்துகிறது.

இந்தப் பயன்முறை, ஊழலைக் குறைக்க உதவுகிறது, சேவைபுரிய வசதியளிக்கிறது. முனிசிபலின் நிதி நிலைமையை மேம்படுத்துகிறது.

சௌகர்யம்

சௌகர்யம் திட்டம், மக்களுக்கான அனைத்துச் சேவைகளையும் ஆன்லைன் முறையில் வழங்குவதற்காக, விசாகப்பட்டினம் முனிசிபல் கார்ப்பரேஷனில் 2000வது ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் மக்களின் அனைத்துச் சேவைகளையும் உள்ளடக்கியது. கட்டணங்களை ஆன்லைன் முறையில் செலுத்தும் வசதி மற்றும் ஆன்லைனில் புகாரைப் பதிவுசெய்தல் அல்லது கட்டடத் திட்டம் விண்ணப்பத்தைப் பதிவுசெய்தல், மேலும் இதற்காக அங்குமிங்கும் அலையாமல், நிலைமையை அங்கேயே தெரிந்துகொள்ளுதல் போன்ற வசதிகளைக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளுக்கும் இதில் வசதி இருக்கிறது. மருத்துவனைகள் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை ஆன்லைன் முறையில் வழங்குவதன் மூலம் சான்றிதழ்களை மக்கள் உடனடியாகப் பெற இயலும். இதில் வழங்கப்படும் இன்னும் பிற சேவைகள், முனிசிபல் கட்டணத்தை நெட்வொர்க் வங்கிகளின் மூலம் செலுத்துதல், சொத்துவரி செலுத்துதல், தண்ணீர் வரி டிஓ வணிக உரிமங்கள் விளம்பர வரி, குத்தகைக்கான வாடகை போன்றவை.

ராஜீவ் கிராம இணையத் திட்டம்

ஆந்திரப் பிரதேச அரசு, அரசின் சேவைகள் / பலன்கள் குடிமக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும், எந்தவிதத் தொல்லையின்றியும் ஒற்றைச் சாளர முறையில் கிடைக்க வேண்டும். குறிப்பாகக் கிராமப்புறப் பகுதியில் வசிக்கும் மக்களுக்குத் தொல்லையின்றி அரசின் பலன்கள் போய்ச் சேர வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு ராஜீவ் கிராம இணையத் திட்டத்தைத் தொடங்கியது. ராஜீவ் கிராம இணையத் திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்குக் கிடைக்கப் பெறும் பலன்கள்.

 • விவசாயம், கல்வி, சுகாதாரம் பற்றிய தகவல்கள் எளிதாகக் கிடைக்கின்றன.
 • சந்தை விலைகள், பயிரிடுவதற்கான முன்மாதிரிகள், வானிலை முன் அறிவிப்பு, விவசாய விரிவாக்கம்
 • தரம் பற்றிய பங்களிப்பு : விதைகள், உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் இத்யாதி.
 • விவசாய விற்பனை: விளைவித்த பொருள்களுக்கு நல்ல விலை பெறுதல் தேர்வு முடிவுகள், மின் கற்றுக்கொள்ளுதல்
 • சுகாதார விரிவாக்கம், தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும் முறை, டெலிமெடிசன். இத்யாதி
 • அனைத்துப் படிவங்களும் கிடைக்கும், நிலப் பதிவு பிரதிகள், விண்ணப்பங்கள், சான்றிதழ்கள்... இத்யாதி.
 • பில் வசூல் : மின் கட்டணம், தொலைபேசி... இத்யாதி.
 • தனியார் சேவை, இன்சூரன்ஸ், ஈகாமர்ஸ்.. இத்யாதி
 • ராஜீவ் பல்லே – பட்டா வின் பயன்முறை நிலைமை
 • குடும்பத்திற்குள் ஒருவருக்கு கணினிக் கல்வி

தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் 1148 கிராமப்பகுதி சேவை வழங்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மண்டலத் தலைமை அலுவலங்களிலும், கிராம அளவிலும் ஏற்கனவே செயல்பட்டுவருகின்றன. தற்போது ஆந்திரப் பிரதேச ஆன்லைன், அரசாங்க வலைதளம் மூலம் பின்வரும் சேவைகளை வழங்கி வருகிறது.

 • மின் கட்டணங்களை வசூலிப்பது.
 • இகிசான் (வீளீவீsணீஸீ) வலைதளம் மூலம் விவசாயத் தகவல்
 • கணினிக் கல்வி
 • பி.எஸ்.என்.எல். தொலைபேசிக் கட்டண வசூலிப்பு
 • அரசின் தொடர்பு எளிதாக கிடைப்பது : படிவங்கள் தகவல்கள், சான்றிதழ்கள்
 • விவசாயச் சந்தை விலைகள், மார்க்கெட்டிங், துறைக்கு உள்ளே, மற்றும் அக்மார்க் நெட்.
 • பாரத் திருமணச் சேவைகள்
 • தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் பிரிண்ட் செய்வது
 • வருவாய்ப் பதிவுகள் வழங்கும் முறை ராஜீவ் சென்டர்களின் மூலம் பின்வரும் கூடுதல் சேவைகள் கிராமப்புற மக்களுக்குக் கிடைக்கின்றன.

ஜீ2சி சேவைகள்

 • சொத்து வரி கட்டுதல்
 • பிறப்பு, இறப்பு சான்றிதழ்களைப் பதிவுசெய்தல்.
 • விண்ணப்பங்கள் விற்பனை, பதிவு மற்றும் வணிக உரிமங்களைப் புதுப்பித்தல்.
 • ஆர்.டி.சி. டிக்கெட்டுகளை விற்பனை / முன் பதிவுசெய்தல்.
 • டாக்ஸ் ரிட்டன் பதிவுசெய்தல், வரி செலுத்துதல்
 • போக்குவரத்துத் துறை தொடர்பான சேவைகள்.
 • பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் விற்பனை
 • ரயில் முன்பதிவு
 • பல்வேறு யாத்திரை மையங்கள், தங்குவதற்கான முன்பதிவு, தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவுசெய்தல்.

பி2சி சேவைகள்

 • ஐடியா செல்லுலார், ரிலையன்ஸ், ஏர்டெல் தொலைபேசி பில்களின் கட்டணத்தைச் செலுத்துவதோடு, புதிய இணைப்புகளுக்கான விண்ணப்பங்களும் தருதல்
 • வெஸ்டர்ன் யூனியன் மூலம் பண மாற்று வசதி
 • இணைய சேவை பொருள்கள் விற்பனை
 • கூரியர் சேவைகள் சுற்றுலா நடத்துபவர்களுக்கு டிக்கெட்டுகள் விற்பனை
 • ஆன்லைன் திருமணப் பதிவுகள்


© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate