பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இமாசலப் பிரதேசம்

இமாசலப் பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.

இ-சமாதான்

ஆன்லைன் மூலம் பொது மக்கள் குறை தீர்ப்பு

 • உங்களின் குறைதீர்ப்பு விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஆன்லைன் மூலம் அனுப்புதல்
 • குறை தீர்ப்பு விண்ணப்பித்தின் தற்போதைய நிலவரத்தை/demand அறிந்து கொள்ளும் வசதி

உங்களின் குறை தீர்ப்பு மனுவை அளிக்க  http://himachal.nic.in/என்ற இணைப்பில் "eServices" என்பதை பார்க்கவும்

ஒருங்கிணைந்த சமூக தகவல் மையம்

 • முக்கியமான குடியுரிமை சேவைகள் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒருங்கே பெறுதல்.
 • உயர் நீதி மன்ற வழக்கு நிலவரப் பட்டியல்,சட்ட பேரவை நிகழ்வுகள்,பொது பயன்பாட்டுப் படிவங்கள், தேர்வு முடிவுகள்,வாக்காளர் பெயர் பதிவு,காவல் நிலையத்திற்கு ஆன்லைன் வழி புகார்கள் அனுப்புதல், ஓய்வு ஊதியர்களுக்கான உதவிகள், டென்டர் அறிவிப்புகள், நிரப்பப்பட வேண்டிய காலி இடங்கள்,மின் கட்டணம் செலுத்துதல், ரத்த தானம் செய்வோர் பட்டியல், ஆன்லைன் மூலம் பஸ் டிக்கெட் முன்பதிவு முதலிய சேவைகள்

மின்-அரசிதழ் (கெசட்)

 • மாநில அரசின்  அறிவிப்புகள் மற்றும் அரசிதழ் ஆகியவை ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்கும்
 • அறிவிப்புகள் மற்றும் அரசிதழ் ஆகியவற்றை தேதி மற்றும் துறை வாரியாகவும் அறிந்து கொள்ள முடியும்.
 • அறிவிப்புகள் மற்றும் அரசிதழ் பி.டி.எஃப் வடிவில் இருக்கும் மற்றும் எளிதில் பதிவிறக்கம் செய்து படிக்கும்படி இருக்கும்.

அறிவிப்புகள் மற்றும் அரசிதழைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

இமாச்சலப்பிரதேச காவல் துறை வலைதளம்

 • ஆன்லைன் மூலம் விபரங்களைப் பதிவு செய்தல் மற்றும் குறைபாடுகளைப் பதிவு செய்தல்
 • முதல் தகவல் அறிக்கையை (எப் ஐ ஆர் - FIR) ஆன்லைன் மூலம் தேடும் வசதி.
 • ஆன்லைன் மூலம் போக்குவரத்து துறை சம்பந்தப்பட்ட கட்டணங்களைச் செலுத்துதல்
 • மாநில காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்களைக் கண்டறிதல்.
 • 2006ம் ஆண்டு முதல் தண்டனைக்கு உள்ளானவர்கள்/ குற்றவாளிகள்/காணாமல் போனவர்கள்/திருட்டு/கொலை உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய ஆன்லைன் அரசாங்க இதழ்.

மேற்கண்ட சேவைகளைப் பயன்படுத்த இங்கே க்ளிக் செய்யவும்

ஆன்லைனில் பென்சன் சேவைகள் (ஓய்வு ஊதியம்)

 • நிதியாண்டுக்கான பென்சன் தொகை குறித்த விபரங்கள்
 • இத்தகைய  தகவல்கள் 2006-2007 நிதியாண்டு முதல் இன்றய தேதி வரை இருக்கின்றன.
 • பணி நீட்டிப்பு,நேரடி குடும்ப ஊதியம்,விடுதலை போராட்ட வீரர்களுக்கான பென்சன்,விடுதலை போராட்ட வீரர்களின் குடும்ப பென்சன்,கால அளவு நீட்டிப்பு பெற்று குடும்ப பென்சன் முதலியவற்றை  வாங்குவோர் குறிப்பிட்ட நிதியாண்டில் அவர்களுக்கு உரிய பென்சன் தொகையை தெரிந்து கொள்ளலாம்.

உங்களின் பென்சன் தொகையை தெரிந்து கொள்ள http://himachal.nic.inஎன்ற இணைப்பில் "eServices" என்பதை பார்க்கவும்

முதலமைச்சரிடம் கருத்துக்களைத் தெரிவிக்க

 • உங்களின் குறைகள், ஆலோசனைகள் & திட்டங்களை இமாச்சலப் பிரதேச முதலமைச்சருக்கு ஆன்லைன் மூலம் தெரிவிக்கலாம்.

ஆன்லைன் வாக்காளர் பட்டியல்

 • உங்களின் பெயரை அளித்து வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என  தேடும் வசதி.
 • வாக்களரின் பெயர், தந்தையின் பெயர், வயது,அடையாள அட்டை எண்,தொகுதியின் பெயர், வார்டு எண்,வாக்காளர் வரிசை எண் முதலிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைனில் ரத்ததானம் செய்வோர் பட்டியல்
 • ரத்தப்பிரிவிவு வாரியாக இரத்த தானம் செய்பவர்களின் விபரங்களை மாவட்ட வாரியாக அறிதல்.
 • சம்பா,கங்ரா, கின்னௌர், மாண்டி, சிம்லா, சிர்மௌர், சோலன் மற்றும் உனா ஆகிய மாவட்டங்களுக்கு தற்சமயம் இச்சேவை அளிக்கப்படுகிறது.
ஆன்லைன் அரசாங்க டென்டர் விபரங்கள்
 • மாநில அரசின் பல்வேறு துறைகளின் ஏல அறிவுப்புகளை தெரிந்து கொள்தல்
 • அனைத்து ஏல அறிவிப்புகளும் pdf  வடிவில் இருக்கும் மற்றும் எளிதில் பதிவிறக்கம் செய்து படிக்கும்படி இருக்கும்.

ஆன்லைனில் பஸ் டிக்கெட் முன்பதிவு

 • இணையதளத்தில் சென்று பதிவு செய்து பஸ் டிக்கெட்டை முன்பதிவு/ரத்து செய்தல்.
 • பஸ் புறப்படும் நேரத்திற்கு 12 மணி நேரம் முன்னதாக வரை பதிவு செய்யலாம்.
 • இணையதளத்தில் முன்னர் டிக்கெட்டை முன்பதிவு செய்த அதே பிரிவின் கீழ் சென்று ரத்து செய்யலாம்.

பஸ் டிக்கெட்டை முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்

தேர்வு முடிவுகள்

 • மாநில அரசு மற்றும் அதன் முகவர்களால் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளின் முடிவுகளை அறிவித்தல்.
 • நடுநிலைப்பள்ளி,மெட்ரிகுலேசன்,11 & 12ம் வகுப்புகள்,பட்டதாரிகள்,மாநில அரசின் பணியாளர் தேர்வாணையம்,பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளின் முடிவுகள்

வேலைவாய்ப்புச் செய்திகள்

 • ஆன்லைனில் பதிவு செய்து வேலை கிடைப்பதற்கு விண்ணப்பித்தல் மற்றும் வேலை வாய்ப்பு அளிக்க இருக்கும் நிறுவனங்கள், அவற்றில்  உள்ள காலிப்பணியிடங்கள் / வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களைப் பதிவு செய்தல்
 • மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகள் / வழிகாட்டுதல்கள். மேலும் சமீபத்திய வேலைவாய்ப்பு & காலிப் பணியிடங்கள் குறித்த தகவல்கள்

இணையதள டைரக்டரி (தொகுப்பகம்)

 • மாநில அரசு துறைகள்,நிறுவனங்கள்,மாவட்டங்கள் முதலியவற்றின் இணையதள முகவரிகளின் பட்டியல்
 • மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள்,கூட்டுறவு நிறுவனங்கள், ஆணையங்கள், நீதிமன்றங்கள், மாநில சட்ட சபை, கல்வி நிறுவனங்கள், மாவட்டங்கள் என ஒவ்வொரு  பிரிவுகளின் கீழ் இணையதளங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆன்லைனில் உணவகம் (ஹோட்டல்) முன்பதிவு

 • ஆன்லைனில் தேவைப்படும் ஹோட்டல்களை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி
 • கடன் அட்டைகள் (க்ரெடிட் கார்டு) மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம்.

ஹோட்டல்களை முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்

ஆன்லைனில் சம்பளம்

 • சம்பந்தபட்ட கருவூலத்திலிருந்து குறிப்பிட்ட நிதியாண்டில் தமக்கு அளிக்கப்பட்ட சம்பள விபரங்களை ஊழியர் அறிந்து கொள்ளலாம்.
 • ஊழியர் இத்தகைய தகவல்களைப் பெற இணையதளத்தில் ஊழியரின் குறியீட்டு எண்,பெயர் மற்றும் கருவூலத்தின் பெயரை அளிக்க வேண்டும்.

ஆன்லைனில் நீதிமன்றச் சேவைகள்

 • இமாச்சலப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் வாராந்திர மற்றும் மாதாந்திர வழக்குகளின் பட்டியல் மற்றும் விபரங்கள்
 • சிம்லா மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் வழக்கு நிலவரப் பட்டியல்.
 • இமாச்சலப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள்

உயர் நீதிமன்ற தீர்ப்புகளைக் காண இங்கே க்ளிக் செய்யவும்

ஆன்லைனில் மின் கட்டணம்

 • ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துதல்
 • வலைதளத்தில் பதிவு செய்த பின்னர் மின்சார கட்டணத்தைச் செலுத்தலாம்.

மின் கட்டணத்தைச் செலுத்த இங்கே க்ளிக் செய்யவும்

ஆன்லைனில் வாக்காளர் பதிவு

 • வாக்காளர் பட்டியலில், புதிய வாக்காளர்கள் ஆன்லைனில் தங்கள் பெயரை பதிவு செய்யலாம்
 • மேலும் பெயர் மற்றும் முகவரி திருத்தங்கள் புரிய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
இமாசல பிரதேசத்தின் உயர்நீதி மன்றத்தின் வழக்கு நிலவரம்

வக்கீல்கள், வழக்கு தொடர்புடைய பொது ஜனம் மற்றும் கீழ் நிலை நீதிமன்ற நீதிபதிகள் இமாசல பிரதேச உயர்நீதி மன்றத்தின் நிலுவையுள்ள மற்றும் முடிந்த வழக்குகள் பற்றி அறிந்து கொள்ள கூடிய ஒரு வலைத்தள தகவல் மையம். இந்த தகவலானது இமாசலபிரதேச உயர்நீதி மன்றத்தில், NIC -ஆல் உருவாக்கப்பட்டு அளிக்கப்படுகிறது.

வழக்கின் நிலைமையை கீழ் வருவன கொண்டு அறியலாம் :

 1. வழக்கு எண்
 2. தலைப்பு (வாதி/பிரதிவாதி பெயர்)
 3. வழக்கறிஞர் பெயர்
 4. கீழ்நிலை நீதிமன்ற குறிப்பு

இது மேலும் வழக்கு பற்றிய தற்போதைய நிலையை அளிக்கும்:

 1. வழக்காடுபவர் பெயர்
 2. வழக்கறிஞர் பெயர்
 3. வழக்கின் வகை
 4. தள்ளுபடி ஆன நிலை
 5. ஒத்திவைப்பின் நிலை
 6. கடைசியாக பட்டியல் இட்ட தேதி
 7. காத்திருப்பு நிலை
 8. அடுத்த வாய்தா
 9. டைரி எண்

இமாசல பிரதேச உயர்நீதிமன்ற வழக்கின் நிலையை அறிய இங்கே கிளிக் செய்யவும்

மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கு பட்டியல்
 • மாவட்ட நீதிமன்றத்தின் அன்றாட வழக்குகளை பட்டியல் இடும்
 • இது ஆங்கிலத்திலேயே கிடைக்கும்
 • பிலஸ்பூர், சம்பா, இமிர்பூர், கங்ரா, கின்னார், குறு மற்றும் வாகுஸ்பிடி, மண்டி, சிம்லா, சிரமார், சோலன் மற்றும் உனா மாவட்டங்களின் வழக்கு பட்டியல் ஆன்லைனில் கிடைக்க பெறும்

உங்கள் மாவட்டத்தின் வழக்கு பட்டியல் பெற இங்கே கிளிக் செய்யவும்

இ-ரோஜ்கர்

 • உங்கள் அருகாமையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து கொள்ளலாம்
 • பதிந்த உறுப்பினர்கள், தங்கள் குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்
 • வேலைவாய்ப்பு அளிப்பவர்களும், தங்களுக்கு தகுதியானவர்களை தேடி பெறலாம்
 • வேலை காலியிடங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்

மின் ஊதியம்

 • இமாசல பிரதேச அரசு ஊழியர்கள், தங்கள் ஊதிய குறிப்புகளை தேவையான கணக்கு வருடத்திற்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட கருவூலத்தில் பெறலாம்
 • இவர்கள் ஊழியர் எண், ஊழியர் பெயர் பூர்த்தி செய்து கருவூலத்தின் பெயரை கொடுக்க வேண்டும்
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான ஹெல்ப்லைன்
 • ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்கள் ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறியலாம்
 • இவர்கள் தங்கள் மாவட்ட பெயரை தேர்வு செய்து, தங்களின் பெயர் மற்றும் எண்ணை பூர்த்தி செய்தால் விவரங்கள் கிடைக்கப் பெறலாம்

உங்கள் ஓய்வூதியம் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்

2.88461538462
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top