பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உத்தரகண்ட்

உத்தரகண்ட் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.

ஆன்லைன் சேவைகள்

ஆன்லைனில் விண்ணப்பப் படிவங்கள்

அளிக்கப்படும் சேவைகள்:

  • துறைவாரியாக பொது பயன்பாட்டுப் படிவங்கள்
  • அரசு உத்தரவுகள்
  • அரசாங்க டெண்டர் அறிவிப்புகள்

ஆன்லைனில் வேலைவாய்ப்புச் செய்திகள்

அளிக்கப்படும் சேவைகள்:

  • ஹிந்தி மொழியில் வேலைவாய்ப்புச் செய்திகளைப் பெறுதல்

ஆன்லைனில் அரசுச் செய்திகள்

அளிக்கப்படும் சேவைகள்:

  • ஹிந்தி மொழியில் அரசாங்க செயல்பாடுகள்  குறித்த செய்திகள்

ஆன்லைனில் தேர்வு முடிவுகள்

அளிக்கப்படும் சேவைகள்:

  • 10ம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டம் வரை தேர்வு முடிவுகளைப் பெறுதல்

ஆன்லைனில் சந்தை நிலவரம்

அளிக்கப்படும் சேவைகள்:

  • டெஹராடூன்,ஹல்த்வானி,ருத்ராப்பூர் மண்டிகளின்  வேளாண் விளை பொருட்களின் தற்போதைய விலைப்பட்டியல்
  • ஹிந்தியில் விலைப்பட்டியல்  பெறுதல்

ஆன்லைனில் வானிலை அறிக்கை

அளிக்கப்படும் சேவைகள்:

  • அதிகபட்ச/குறைந்தபட்ச வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதம் பற்றிய செய்திகள்

தேவ்பூமி

உத்தரகண்ட் நிலவிவர ஆவணங்கள்

உத்தரகண்ட் அரசாங்கம், குடிமக்களுக்குப் பயன்படும் விதத்தில் நிலவிவர ஆவணங்களின் வலைதளம் ஒன்றை, 2006 நவம்பர் 6ஆம் தேதி ஆரம்பித்தது. இந்த வலையக விலாசத்தின் பெயர் “தேவ்பூமி”. இதன் நோக்கம், மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இருக்கும் அனைத்து நிலங்களின் முழு விவரங்களையும் இணையதளத்தில் கிடைக்கச் செய்வதுதான்.
இந்த இணையதள வலையகத்தைத் துவக்கியதன் மூலம், மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது நிலங்கள் பற்றிய விவரங்களை, இணைய தளத்தின் உதவியுடன், எப்போது வேண்டுமானாலும், எங்கே இருந்தாலும் பார்த்து அறிந்துகொள்ள முடியும். இந்த வலையகத்தில் இருக்கும் அனைத்து விவரங்களும் இந்தி மொழியில்தான் பதிவுசெய்யப்படுகின்றன. வேண்டிய விவரங்களைத் தேடுவது மிகவும் சுலபமாக்கப்பட்டுள்ளது. வேண்டிய நில விவரத்தை அதன் சொந்தக்காரர் பெயர் அல்லது பகுதியின் எண் ஆகியவற்றின் மூலமே தேடிப் பெற முடியும். இந்த எண்ணுக்கு முன்னால் எந்த மாவட்டத்தில், எந்தக் கிராமத்தில் இந்த நிலம் இருக்கிறது என்பதைப் பதிவுசெய்ய வேண்டும்.

இந்த வலையகத்தில்,  16,618 ரெவின்யு கிராமங்களில் உள்ள நில விவரங்கள் காணப்படுகின்றன. இவற்றில், 78,21,462 கூட்டாக மற்றும் தனியாக நிலங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த நிலங்கள் பற்றிய ஆவணங்களின் எண்ணிக்கை 13,03,916. ‘தேவ் பூமி’ வலைதளம் இருப்பதால் விவசாயிகளுக்குப் பெரும் லாபங்கள் உண்டாகும். விவசாயிகள், இனி, தங்களது நில விவகாரங்கள் குறித்த விவரங்களை அறிய கிராம அதிகாரிகள் பின்னால் அலைய வேண்டியதில்லை. இப்போதைக்கு இணையதளத்தில் நில விவரங்களைத்தான் பார்க்க முடியுமே தவிர, இதுதான் சரியான விவரம் என்று அரசின் முத்திரை பெற்ற நில விவர ஆவணங்களைப் பெற முடியாது. இது பொதுவான இணையதளத்தில் கிடைக்காது. குறிப்பிட்ட நில விவரங்களைப் பெற வேண்டுமானால், அந்தந்தக் கிராமத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று, நில ஆவணங்கள் கணினி மையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
இது போன்று மிகச் சரியான நில ஆவணங்களை (ஆர்ஓஆர்) பெறுவதற்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் என்ன? ஆர்ஓஆர்இன் முதல் பக்கத்திற்கு ரூ.15/- மட்டும்தான். அடுத்தடுத்து வரும் பக்கங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.5/- மட்டுமே.

3.09523809524
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top