பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.

இணையவழி கல்வி உதவித் தொகை

அளிக்கப்படும் சேவைகள்:

 • BC & SC/ST மாணவர்களின்கல்வி உதவித் தொகையை அவர்களின் வங்கி கணக்கிற்கு இணைய வழியாகநேரடியாகசெலுத்துதல்
 • கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்ப படிவங்கள் பெறுதல்
 • இத்திட்டதிற்கான வங்கிகளின் மைய அலுவலர்களின் பெயர்ப்பட்டியல்
 • OBC & SC/ST  கல்வி உதவித் தொகைச் செயல் திட்டங்களை நிர்வகிக்கும் மைய அலுவலர்களின் பெயர்ப்பட்டியல்

பூ-லேக்- உ.பி

அளிக்கப்படும் சேவைகள்:

 • வீட்டுப்பட்டாவின்நகல்/பிரதி
 • மாவட்டவாரியானகிராமங்களின்பட்டியல்
 • அனைத்துகிராமங்களின்விவரங்கள்
 • மண்ணின்வகைகள்குறித்தவிவரங்கள்.

சேவைகளைப்பெற: http://bhulekh.up.nic.in

கோஷ்வானி

அளிக்கப்படும் சேவைகள்:

 • 73 கருவூலங்களின் மாதாந்திர பணப்பட்டுவாடா விவரங்கள் பெறுதல்
 • திட்ட ஒதுக்கீடு மற்றும் செலவினங்கள் பற்றிய விவரங்களை  ஒதுக்கப்பட்ட தொகை முதல் பயன்படுத்தப்பட்ட தொகை வரையிலான தகவல்களை வவுச்சர் அளவில் நிதித்துறை அதிகாரிகள் பெறுதல்
 • தொகுதி(DDO) வாரியாக செலவின அறிக்கைகளை நிதித்துறை மற்றும் துறைத்தலைவர்கள் பெறுதல்
 • கன்யாதான் யோஜ்னா திட்டத்தின் செலவின அறிக்கைகளை பெறுதல்
 • திட்ட ஒதுக்கீடு  சாரா இதர செலவினங்கள் பற்றிய விவரங்களைப் பெறுதல்

சேவைகளைப்பெற: http://koshvani.up.nic.in

நீதிமன்ற வழக்குத் தகவல்கள் அமைப்பு

அளிக்கப்படும் சேவைகள்:

 • நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் உத்தரவுகள்
 • விசாரணைத் தீர்வு
 • வழக்கின் நிலை

சேவைகளைப்பெற: http://courtcases.up.nic.in/

போக்குவரத்திற்கான ஆன்லைன் சேவைகள்

அளிக்கப்படும் சேவைகள்:

 • டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனப்பதிவு பெற தேவையான விண்ணப்ப படிவங்கள்
 • டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனப்பதிவு குறித்த கட்டணம் மற்றும் வரி விவரம்
 • விண்ணப்பங்களை நிரப்ப வழிகாட்டிகள் மற்றும் பொதுவான சந்தேகங்களும் அதன் விளக்கங்களும் (FAQ)
 • பாதுகாப்பான சாலைப் பயணத்திற்கு பின்பற்ற வேண்டிய குறிப்புகள்

சேவைகளைப்பெற: http://www.uptransport.org

நியுக்தி ஆன்லைன் சேவை

அளிக்கப்படும் சேவைகள்:

 • மாவட்ட வாரியாக பணியமர்த்தப்படும் அலுவலர்களின் பெயர்ப்பட்டியல்
 • பயிற்சி மற்றும் பணியிடை மாற்றத்திற்கான விண்ணப்பங்கள்
 • முக்கியமான அரசு உத்தரவுகள் மற்றும் சுற்றறிக்கைகள்
 • நீதிமன்ற வழக்குகளுக்கான மைய அலுவலர்களின் பட்டியல்

சேவைகளைப் பெற: http://niyuktionline.upsdc.gov.in/

ஜி.ஐ.ஸ் (G IS) அடிப்படையிலான அட்லஸ் (வரைபடம்)

சமூக பொருளாதார நிலைகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டு உலகத் தகவல் அமைப்பு ஜிஐஸ் (GIS) அட்லஸ் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இது  சுமார் 100 செயல் விளக்க வரைபடங்கள் கொண்டு இரு மொழிகளில் உள்ளது. இந்த அட்லஸ் இணைய தளத்தில் உள்ளது. எனவே சாங்கியாகி பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 4000 வகையான நிலைக்காட்டிகளின் அடிப்படையிலான 'ஆன்லைன் வழியிலான விசாரணைகள்' சாத்தியமாகிறது. இத்தகைய பயன்பாடு திட்டமிடுதல் துறை அலுவலர்களே தங்கள் கைப்பட செயல்விளக்கப் படம் வரைவதால் ஏற்படும் நேர விரயத்தை வெகுவாகக் குறைக்கிறது.

லோக்வானி

லோக்வானி என்ற திட்டம், 2004இல் துவங்கப்பட்டது. இதன் நோக்கம், அரசுத் துறைகள் மற்றும் சேவைகளில், குடிமக்களுக்கு ஏதேனும் குறைகள், புகார்கள் இருந்தால் அவற்றை அரசுக்குத் தெரியப்படுத்த, கணினி மையங்கள் உருவாக்கப்பட்டன. அவர்களது புகார்கள், விண்ணப்பங்களுக்கான பதில்கள், 15 நாட்களுக்குள் கிடைப்பதற்குதான் இந்த ஏற்பாடு.
மக்கள் அரசுடன் தொடர்புகொள்ள வேண்டுமானால் அரசு அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்பதை மாற்றி அமைத்த திட்டம் இது என்று கூறலாம்.
வளர்ச்சிப் பணிகள் எந்த அளவில் உள்ளன என்பது பற்றிய விவரங்கள், பொது விநியோகக் கடைகளை நடத்தும் வியாபாரிகளுக்கு, அரசாங்கம், எந்தெந்தப் பொருட்களை எவ்வளவு அனுப்பியிருக்கிறது என்ற விவரங்கள், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு, அரசு அனுப்பிய பணத்தொகை போன்றவை அனைத்து மக்களும் கண்டறியக்கூடிய அளவில் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் மிகப் பரவலான சேவை, அதிக மக்கள் பயன்படுத்திய சேவை என்று பார்த்தால், பொதுமக்களின் குறை தீர்க்கும் சேவைதான். 2006 டிசம்பர் 31ஆம் தேதிவரை 82,000 புகார்கள், அரசால் இந்த மையங்கள் மூலம் பெறப்பட்டு இருக்கின்றன. இவற்றில், 76,500 புகார்கள் விசாரிக்கப்பட்டுத் தீர்வு காணப்பட்டு இருக்கின்றன. அதாவது 93% குறை தீர்ப்பு இருந்திருக்கிறது.

இவற்றைத் தவிர, நிலங்கள் பற்றிய விவரங்கள் பிறப்பு/இறப்புச் சான்றிதழ்கள் எஸ்சி/எஸ்டி சான்றிதழ்கள், வீட்டு வேலையாட்களுக்கான அடையாளச் சான்றிதழ்கள் போன்றவற்றை ஒற்றைச் சாளர முறையில் அளிப்பது போன்ற சேவைகள் அளிக்கப்படுகின்றன. உ.பி.யில் உள்ள 50 மாவட்டங்களில் லோக்வானி அடிப்படையில் குடிமக்களுக்கான சேவைகள் அளிக்கப்படுகின்றன.

3.04225352113
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top