பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஒரிசா

ஒரிசாவில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.

புலேஹ்(ஒரிசாவின் நிலப்பதிவு வெப் போர்ட்டல்)

‘புலேஹ்’ என்பது ஒரு மென்பொருள். நிலப்பதிவு பற்றிய ஆன்லைன் தகவல்களைத் தருகிறது. ஒரிசா அரசின் நிலப்பதிவு இயக்குநரகம் மற்றும் சர்வேக்கள் துறையின் முன்முயற்சி இது. இந்த மென்பொருள், பத்திரங்களை மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்க உதவுகிறது. மற்றும் நிலச் சொந்தக்காரர்களுக்கான பதிவு உரிமைப் பிரதிகளைத் துல்லியமாகத் தரவும் உதவு செய்கிறது.

வழங்கப்படும் சேவைகள்-

 • ஒரிசாவின் 171 தாலுக்காவிற்கான ஆர்.ஓ.ஆர் தகவல் இப்பொழுது இணையத்தில் கிடைக்கிறது.
 • ஒரிசா மக்கள், தங்களின் ஆர்.ஓ.ஆர் விபரங்களை இணையம் மூலம் பார்வையிடலாம்.
 • வரைபடம்
 • நிலப் பட்டாவிற்கான விண்ணப்பம்
 • இதர சான்றிதழ்கள் வழங்குவதற்கான விண்ணப்பம்
 • நிலப்பதிவுகளை வழங்குவதற்கான விண்ணப்பம்.
 • நிலத்தை ஒப்படைப்பதற்கான விண்ணப்பம்
 • நிலத்தை ஒப்படைப்பதற்கான ஒரிசா அரசின் விதிகள்
 • விவசாய நிலத்தை மாற்றுவதற்கான ரையாத் விண்ணப்பம்.

மேலும் விவரங்களுக்கு: http://bhulekh.ori.nic.in/

விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்வதற்கான வலைதளம்

ஒரிசா அரசின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள வலை தளத்தின் மூலம், ஒரிசா மக்கள் இப்பொழுது தங்களுக்குப் பயன்படும் விண்ணப்பங்களை ஆன்லைனில் பெறலாம்.

குடிமக்கள் 166 வெவ்வேறு வகையான விண்ணப்பங்களை பி.டி.எப். பார்மட்டில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். போர்ட்டலில் கிடைக்கின்ற தகவல்கள் பின்வரும் துறைகளுடன் தொடர்புடையவை:

வணிகம் & போக்குவரத்து, உணவு சப்ளை மற்றும் நுகர்வோர் நலவாழ்வு, பொது நிர்வாகம், உள்துறை, தொழிற் துறை, சட்டம், பொதுமக்கள் புகார் பிரிவு & ஓய்வூதிய நிர்வாகம், வருவாய் & பேரழிவு நிர்வாகம், சுங்கம், ஊரக வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழிற்நுட்பம், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் வளர்ச்சி, சிறுபான்மையினர் & பின்தங்கிய வகுப்பினர், நல்வாழ்வுத் துறை சுற்றுலாத் துறை & கலாச்சாரம் மற்றும் பெண்கள் & குழந்தைகள் வளர்ச்சித் துறை.


மேலும் விவரங்களுக்கு: http://www.odisha.gov.in/

ஈ - சிசு

மின் - சிசு, என்னும் இந்தத் திட்டம் ஒரிசா ஆரம்பக் கல்வி நிகழ்வினால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதிரியான திட்டம், நாட்டிலேயே முதன் முறையாக இங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது:

 • குழந்தை கண்காணிப்பு அமைப்பு (சி.டி.எஸ்), மற்றும்
 • தலையீடு கண்காணிப்பு மற்றும் தகவல் அமைப்பு (ஐ.எம்.ஐ.எஸ்

சி.டி.எஸ் என்பது 14 வயதுக்குக் குறைவான குழந்தைகள் பற்றிய முழுமையான தகவல் திரட்டு. இது, அவர்களின் சமூக பொருளாதார நிலை குறித்த தகவல்களுடன் பிறப்பு, இறப்பு, நோய் பற்றிய விபரங்களையும் கொண்டிருக்கிறது. ஐ.எம்.ஐ.எஸ், சர்வ சிக்ஷா அபியானின் கீழ், 14 தலையீடுகளையும் ஆன்லைனில் கண்காணிக்க உதவுகிறது.

சிறப்பம்சங்கள்

பதிவுசெய்துள்ள, எப்பொழுதும் பதிவுசெய்யப்படாத, பள்ளியிலிருந்து பாதியில் விலகிக்கொண்ட, 6-14 வயதைச் சேர்ந்த குழந்தைகள் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது.

அரசு, பெற்றோர்கள், பொது மக்கள் போன்ற இவர்கள் பள்ளியில் தங்களின் குழந்தைகளின் நிலைமைகளை அறிய இந்த மென்பொருள் அனுமதிக்கிறது. மாவட்ட வாரியான பள்ளி பற்றிய தகவலைத் தருகிறது.


மேலும் விவரங்களுக்கு- http://opepa.odisha.gov.in/website/default.aspx

ஐ.டி.ஐ.எம்.எஸ்

வணிகம் மற்றும் போக்குவரத்துத் துறை தங்களின் செயல்முறை தானாக  இயங்குவதற்காக ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளது. அது ஒருங்கிணைந்த போக்குவரத்து தகவல் நிர்வாக அமைப்பு என்றழைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் முதன்மையான ஆர்.டி.ஏ அலுவலகங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சோதனைச் சாவடிகளிலும், பிற அலுவலகங்களிலும் அமல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மென்பொருள், இதன் பல்வேறு அங்கங்களின் மூலம் பின்வரும் செயல் முறைகளை கணினிமயமாக்கியுள்ளது.

 • சாரதி வழியாக ஓட்டுநர் உரிமம்
 • வாஹன் வழியாக மோட்டார் வாகனங்களுக்கான பதிவு வழங்குதல் மற்றும் பெர்மிட் வழங்குதல்.
 • சோதனைச் சாவடி கணினிமயமாக்கல் வழியாக மோட்டார் வாகன வரி வசூலிப்பு

ஓட்டுநர் உரிமம் வழங்குவது தொடர்பான, ஆன்லைன் விண்ணப்பங்களைத் தருவதற்கான, ஒரு வலைதளத்தைக்கூட இத்துறை உருவாக்கியுள்ளது.


ஒரிசா பதிவு தகவல் அமைப்பு (ஓ.ஆர்.ஐ.எஸ்)

ஓ.ஆர்.ஐ.எஸ் ஒரிசா பதிவு தகவல் மையம் கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு. இது ஒரிசா அரசின் வருவாய்த் துறையால் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆவணங்களைப் பதிவுசெய்ய, ஆவணங்களை உறுதி செய்ய, மற்றும் வில்லங்கச் சான்றிதழ் வழங்க இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. மாநில வருவாய்த் துறை, பதிவுத் துறை பிரிவு. இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ஆன்லைனில், ஜி2சி மற்றும் ஜி2ஜி சேவைகளை வழங்குகிறது. இந்த வலைதளத்தில், பின்வரும் வி2சி சேவைகள் கிடைக்கின்றன.


ஈ கிராம்

ஊரகத் தகவல் நுழைவாயில்

ஈ கிராம், ஊரகத் தகவல் நுழைவாயில். மாவட்ட ஆட்சியாளர் மற்றும் ஒரிசாவின் கஞ்ஜம் ஆர் டி ஏ வின் உற்சாகமான பங்கேற்பினால் எடுக்கப்பட்டுள்ள முன்முயற்சி. இந்தத் திட்டம், தகவல்களை இணையம் மற்றும் இன்ட்ராநெட் இணைப்புகளின் மூலம், அனைத்து 22 பிளாக்குகளுக்கும் என்.ஐ.சி மாலிலிருந்து என்.ஐ.சி நெட் பெர்ஹாம்பூர் மற்றும் டி.ஆர்.டி.ஏ வழியாக வழங்குகிறது.

இந்த நுழைவாயில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் நிலைமைகள் பற்றிய தகவல்களைத் தருகிறது, மற்றும் சமூகப் பாதுகாப்பு அளவு கோல்களையும் தருகிறது. தகவல்களை, உயர் அதிகாரிகள், மாநிலத் தலைமை அலுவலகத்திலிருந்தும், ஊரக வளர்ச்சி அமைச்சரகத்திலிருந்தும், ஜி.ஓ.ஐயிலிருந்தும் பெறலாம். பொதுமக்களும் எளிதாகப் பெறலாம்.

சிறப்பம்சங்கள்

 • பிளாக்குகள், தாலுக்காக்கள், மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சிகளைத் தெரிந்துகொள்ளவும், மதிப்பிடவும் உதவுகிறது.
 • விவசாய மற்றும் அது சார்ந்த பொருட்களின் தற்போது நடைமுறையில் உள்ள அரசு/சந்தை விலைகள் பற்றிய தகவல்களைத் தருகிறது.
 • பல்வேறு புதிய ஊரகத் தொழிற்நுட்பங்கள் பற்றிய தகவல்களைத் தருகிறது.

மேலும் விவரங்களுக்கு:http://ganjam.nic.in

இணைய வழிக் கல்வியறிவு (ஈ-லிட்ரஸி)

ஈ-லிட்ரஸி, தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்முயற்சி. இது தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் அடிப்படை மற்றும் குறிப்பிட்ட தனித் துறையில் பயிற்சி தருவதை ஏதுவாக்குகிறது. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கால அட்டவணையின்படி, அனைத்து மட்ட அரசு ஊழியர்களுக்கும் வருடம் முழுவதும் பயிற்சி தரப்படுகிறது.

இந்தப் பயிற்சி நிகழ்வின் சிறப்பம்சங்கள்:

 • அரசின் அனைத்து ஊழியர்களுக்கும் கணினி பயன்பாடு மற்றும் அப்ளிகேஷனின் பல்வேறு நோக்குகளும் கற்றுத் தரப்படும்.
 • தகவல் தொழில்நுட்பத் துறையினுள் தற்போதுள்ள திறமைகளைப் பொருத்தமான முறையின் மூலம் அதிகரிக்கச் செய்யலாம்.
 • எதிர்காலத்தில், அரசு வேலை நியமனத்திற்குக் குறைந்தபட்ச அளவு கணினி அறிவு தேவை. வேலை நியமன விதிகள் அதற்குத் தகுந்தாற் போல மாற்றியமைக்கப்படும்.
 • தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்புடைய பட்டய பட்டப் படிப்புகள் படிக்க விடுப்பட்டால் அது அனுமதிக்கப்படும்.
 • கணினி மையம் மற்றும் சாவடிகள் கிராம அளவு பயனாளர்கள் அளவுக்கு நீட்டிக்கப்படும். மேலும், அவர்களுக்குக் கணினி சார்ந்து பல்வேறு நோக்குகளில் பயிற்சி தரப்படும்.
 • கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு இணைய இணைப்புகளுடன் கூடிய கணினி வழங்கப்படும்.
 • பயனாளர்கள் உள்ளூர் மொழியைப் பயன்படுத்தும் வகையில் இருக்கும். அதோடு, அரசு வலைதளம் மூலமாக மின் சேவை போன்றவை பயனாளர்களின் வசதிக்காகச் செய்யப்படும்.
 • கணினி சேவையைக் குடிமக்கள் பயன்படுத்துவதற்கு வழிகாட்டும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
3.0
Bozi May 25, 2015 04:48 AM

Ah, i see. Well tht'as not too tricky at all!"

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top