অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ஜார்கண்ட்

ஜார்கண்ட்

இ-நிபன்தன்

  • குறிப்பிட்ட பகுதிகள் மற்றும் நிலங்களைப் பதிவு செய்ய ஆகும் முத்திரைத்தாள் செலவு மற்றும் பதிவு கட்டணம் முதலியவற்றை ஆன்லைனில் கணக்கிடுதல்.
  • விற்பதற்கும் வாங்குவதற்கும் தடைசெய்யப்பட்ட நிலங்கள் அதாவது வில்லங்கமுள்ள நிலங்கள்,மலைப்பகுதிக்கு உட்பட்டவை,அரசாங்க நிலங்கள்,குத்தகை நிலங்கள் முதலியவற்றை ஆன்லைனில் தேடித் தெரிந்து கொள்ளுதல்.
  • வில்லங்கச் சான்றிதழ்,கிரயப்பத்திரத்தின் நகல் முதலியவற்றை ஆன்லைனில் பெறுதல்

க்யான்சிலா

  • ஆன்லைனில் துறை வாரியாக  அரசாங்க ஆவணங்கள்/பதிவேடுகளைத் தேடும் வசதி.
  • ஆண்டு மற்றும் ஆவணங்கள்/பதிவேட்டின் வகை வாரியாகவும் அவற்றைத் தேடலாம்.

ஆன்லைனில் குறை தீர்ப்பு

  • தீர்வு காணப்பட வேண்டிய குறைகளை ஆன்லைன்(இணைய வழி) மூலம் விண்ணப்பித்தல்
  • தாங்கள் அளிக்க வேண்டிய குறைகள்/புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலகம் /அதிகாரிகளுக்கு ஆன்லைனில் நேரடியாக தெரிவிக்கலாம்.

ஆன்லைன் அரசாங்க டென்டர்

  • மாநில அரசின் பல்வேறு துறைகளின் ஏல அறிவுப்புகளை தெரிந்து கொள்தல்
  • அனைத்து ஏல அறிவிப்புகளும் பி.டி.எஃப்  வடிவில் இருக்கும் மற்றும் எளிதில் பதிவிறக்கம் செய்து படிக்கும்படி இருக்கும்.
  • டென்டர் அறிவிப்புகளையும் அதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதியையும்  துறைவாரியாக தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் நில ஆவணங்கள்

  • தற்சமயம் இச்சேவை லோஹர்டாகா மற்றும் கிழக்கு சிங்புஹும் ஆகிய மாவட்டங்களுக்கு மட்டுமே உள்ளன.
  • காத்தா எண்,கஷரா எண்,நிலப்பரிமாற்றம் (வாங்குதல் மற்றும் விற்றல்),நில வரி முதலியவற்றை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.

ஜார்கண்ட் மாநில கிராமக் குறிப்பேடு

  • ஜார்கண்டில் உள்ள அனைத்து கிராமங்களைப் பற்றிய விளக்கமான விபரங்கள் அடங்கிய குறிப்பேடு
  • மாவட்ட வரைபடத்துடன் ஒவ்வொரு கிராமத்தினுடைய முழுத்தகவல்கள்

இ- நாக்ரிக் சேவா

  • சாதி,வருமானம்,பிறப்பு,இறப்பு,இருப்பிடச் சான்றிதழ் போன்ற குடியுரிமைச் சேவைகளுக்கு விண்ணப்பங்களைப் பெறுதல்
  • தேவைப்படும் சான்றிதழைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும்  பொழுது அதனுடன் சேர்த்து அனுப்ப வேண்டிய இதர ஆதாரங்கள்/சான்றிதழ்கள் குறித்த விபரங்கள்
  • விண்ணப்பித்த பின்னர் அதனை உறுதி செய்ய ஒரு எண் அளிக்கப்படும். அந்த எண்ணை இணையதளத்தில் அளித்து விண்ணப்பத்தின் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ளலாம்.
  • அரசு அதிகாரிகள்,சேவை மைய ஏஜென்சிகள் (SCAs),பொது மக்கள்/மனிதன் ஆகியோர் தனித்தனியே  ஆன்லைனில் தொடர்பு கொண்டு பயனடையும் வகையில் வசதிகள்.

பொது சேவை மையம்

  • மாவட்டம்/வட்டார வாரியாக செயல்படும் பொது சேவை மையங்களின் முகவரி மற்றும் அதனை நடத்துவோரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள்
  • சேவை மைய ஏஜென்சிகள் (SCAs),மாநில அரசுக்காக நியமிக்கப்பட்ட ஏஜென்சி(SDA), தேசிய அளவிலான சேவை ஏஜென்சிகள்  & தொண்டு நிறுவனங்கள் ஆகியவை குறித்த தகவல்கள் மற்றும் தொடர்பு முகவரிகள்

பொது சேம நல (GPF) கணக்கு

  • பொது சேம நல அக்கவுண்ட்டில் (ஜி பி எஃப்) உள்ள வைப்பு நிதி,மாதங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களையும் நிலவரத்தையும் அறிதல்.
  • இணையதளத்தில் பதிவு செய்த பின்னர்தான்  ஜி பி எஃப் நிலவரத்தை அறிய முடியும்.

குறுஞ்செய்தியில்(எஸ் எம் எஸ்) பொது சேம நல (GPF) கணக்கு

  • பி எஃப் கணக்குடன் தொடர்புடைய கருவூல வவுச்சர் எண் (TV எண்) மற்றும் தேதி உள்ளிட்ட விபரங்களை எஸ் எம் எஸ்-இல் பெறலாம்.
  • சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு உங்கள் ஜி பி எஃப் கணக்கில் பணம் கட்டப்பட்டதும் உறுதி செய்ய எஸ் எம் எஸ் வசதி.
  • ஊழியர்  இச்சேவையைப் பெற அவருடைய கைபேசி(மொபைல்) எண்ணைப் பதிவு செய்தல் அவசியம்

கடைசியாக மாற்றப்பட்டது : 6/17/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate