பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மஹாராஷ்டிரா

மஹாராஷ்டிரா மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.

சரிட்டா

(முத்திரை பதிவுத் தகவல் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட நிர்வாகம்)

சரிட்டா என்பது ஜீ2சி-யு திட்டம், ஒவ்வொரு சப்ரிஜிஸ்டர் அலுவலங்களிலும், ஆவணப் பதிவுகளைக் கணினி முறையில் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. மேலும் இத்திட்டம் புனே, பதிவுத் துறையின் கீழ் இருக்கும் உயர் அலுவலங்களுக்கும் மாவட்ட இணை பதிவாளருக்கும், உரிய நேரத்தில தகவல்களை அப்டேட் செய்தும் தருகிறது. இது மொத்த மஹராஷ்டிராவையும் உள்ளடக்கி செயல்படுகிறது. இதில் 405 சப்ரெஜிஸ்டர் அலுவலகங்கள், 35 மாவட்ட அலுவலங்கள், 8 டிவிஷனல் அலுவலங்கள் மற்றும் புனேவில்  உள்ள தலைமை அலுவலகமும் அடங்கும்.

திட்டத்தின் நோக்கம்

 • தற்போதைய பதிவுச் செயல்முறைகளைக் கணினிமயமாக்குதல்
 • முன்கூட்டியே வரையறுத்து வைத்துள்ள பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, தானாகவே, சொத்தின் மதிப்பைக் கணக்கிடுதல்
 • வழக்குளில் தீர்ப்பு
 • ரசிது, மற்றும் பெண்டிங் பட்டியலை உருவாக்குதல்
 • பார்ட்டிகளுக்கு நோட்டீஸ் வழங்குதல்
 • பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களை ஸ்கேன் செய்தல்.
 • மற்றும் பேக்- அப், வசதியுடன் ஆவணங்களைப் பாதுகாத்தல்.
 • துறைகளின் அனைத்து மட்டங்களிலும், அனைத்து வகையான அறிக்கைகளையும் தயார் செய்தல்.
 • அலுவலகத்தின் எல்லைக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களின், மாஸ்டர் டேட்டாபேங்குகளைப் பராமரித்தல்
 • ரிப்போர்ட்டுகள் தேடுவது, பதிவு மற்றும் பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களின் உறுதியளிக்கப்பட்ட சான்றுப் பிரதிகள் போன்றவற்றைக் குடிமக்கள் பெற விரைவாகச் சேவை வழங்குதல்

வழங்கப்படும் சேவைகள்

 • அரசாங்கத்தின் கட்டளைக்கு உட்பட்ட 67 வகையான ஆவணங்களைப் பதிவு செய்தல்
 • பல்திறன் மென்பொருளை ஒரேநேரத்தில் 360 சைட் நெட்வொர்க்குகளுக்கும் பரப்புதல்
 • ஆவணங்கள் பதிவுசெய்யப்பட்டவுடன், 30 நிமிடங்களுக்குள் வழங்கப்படும் என்பதை உறுதி செய்தல்
 • ஆன்லைன் கண்காணிப்புடன் கூடிய பிழைகள் அந்தப் பதிவு மற்றும் ஆவணங்களில் விற்பவர், வாங்குவர், ஒப்புதல் அளிப்பவரின், கைரேகைகள், புகைப்படங்கள் பதிவுசெய்யப்படும்.
 • பொருள், ஸிரிங்க்-ரேவ் வடிவத்தில் தருவதால் பதிலளிப்பதற்கும் நிர்வாகத்திற்கும் எளிதாக இருக்கும்.
 • மதிப்புகளைப் பதிவுசெய்தல், ஸ்கேன் செய்து பாதுகாத்தல் நெட்வொர்க் மற்றும் செயல்முறைகள் கண்காணிப்பு அலகுகள் போன்றவற்றைக்கொண்டது.
 • பயன்படுத்துபவர்களுக்கான தொடர்பு முறை மராத்தி மொழியில் இருக்கும்.

அரசாங்கத்திற்காக : ஆவணப் பதிவுகள் சரசாரியாக ஒரு நாளைக்கு 16 முதல் 40 என்ற அளவில் உயர்ந்த உதவுகிறது. இதனால், பெரும் முதலீடு இல்லாமலே அரசுக்கு 10-15 சதவித வருவாய் அதிகமாகக் கிடைக்கிறது.

தொழில் துறைக்கு : உருவாக்குதல் - இயக்குதல் - மாற்றுதல் மெக்கானிசம் ஐ.ஜி.ஆர் சைட்டுகளில் எட்டு தனியார் துறைகள். முதலீட்டில் பங்குபெற்றுத் தங்களுடைய திட்டங்களைச் செய்ய அனுமதிக்கிறது. இதில் அவர்களுடைய கணினி உட்கட்டமைப்பை, செலவுகளைப் பங்கிட்டுக்கொள்ளும் அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பொதுமக்களுக்கு : வழக்கமாக ஆவணங்களைப் பதிவுசெய்ய எடுத்துக்கொள்ளப்படும், பல நாள்கள் என்ற அவகாசத்திலிருந்து, 30 நிமிடங்களாகக் குறைந்துள்ளது. மேலும் அரசு அதிகாரிகளின் தேவையும் குறைந்துள்ளது. வழக்கமான பதிவில் உள்ள தொல்லைகளும் இதில் குறைந்துள்ளன.

ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்புகள்

 • மஹாராஷ்டிராவில் ஐ.ஜீ. ஆரின் 360 சைட்டுகளிலும் இந்த மென்பொருளைப் பரப்பியுள்ளது.
 • ஐ.ஜி.ஆர் அதிகாரிகளுக்கு, ரிஜிஸ்ட்ரார், சப்-ரெஜிஸ்டர் அலுவலங்களில் பயிற்சி.
 • முன்னோட்டம் குறைந்தபட்சப் பதிவு ஆவணங்களோடு நடக்கிறது (10,000) பழைய ஆவணங்களை ஸ்கேன் செய்தல் (10 லட்சம்) அந்த ஆவணங்கள் பாதுகாக்கவும் தகவல்களை மீண்டும் பெறவும் குறுந்தகடுகளில் சேமிக்கப்படுகிறது.
 • மாநிலம் முழுவதுமான 360 சைட்டுகளை இணைப்பிற்காக நெட்வொர்க் வடிவம்.
 • சைட்டுகளின் செயல்பாடுகளைத் திறன்படத் கையாள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் நிர்வாகம் செய்தல்.

டிஜிட்டலில் பணம் செலுத்தும் முறை

ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஐ.டி- யைக் கருவியாகப் பயன்படுத்தித் தற்போதிருக்கும் கூட்டுறவு அமைப்புகளின் உற்பத்தித்திறனை உயர்த்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. கிராமப்புற வர்த்தகம், தனது அன்றாட வியாபாரச் செயல்பாடுகளுக்கான பல்திறன் கொண்ட தீர்வைத் தர வேண்டும் என்ற பார்வையுடன் தான் இது தொடங்கப்பட்டது. கிராமப்புற இந்தியனை இணைப்பது, தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கிராமப்புற வர்த்தகத்தில் ஒளிவுமறைவற்ற தன்மையை அதிகரிப்பது போன்றவை ஆகும்.

கிராமப்புறப் பகுதியில், அதிகப்படியான மக்கள் வாழ்கிறார்கள். தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் அவர்களுக்குக் கிடைப்பதில்லை போன்ற பல பிரச்சினைகள் அவர்களுக்கு இருக்கின்றன. அவற்றை மனத்தில்கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் குவிமையம் ஸ்பார்ட் அட்டை வசதிகளின் மூலம் ஊரகக் கூட்டறவின் பில்லிங் மற்றும் வசூலை மேம்படுத்துவது. உரிய நேரத்தில் பணம் பட்டுவாடாவும் செய்வது. பில்லிங் மற்றும் பண வசூல், ஸ்மார்ட் அட்டைகள் மூலம் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் அட்டையைப் பணத்தைச் செலுத்துவதற்கும் கூட்டுறவுக் கடை மற்றும் இதர கடைகளில் நுகர்வோர் பொருள்களை வாங்குவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது கூட்டுறவு உறுப்பினர்களால் கொடுக்கப்படுகின்ற பால்,  கரும்பு போன்ற பொருள்களுக்கான பணம் திரும்பக் கிடைக்கின்ற கால அவகாசத்தைக் குறைகின்றது.

சேது (SETU)

குடிமக்கள் உதவி மையங்கள்

அரசாங்கச் செயல்முறைகளுக்கு, வெளிப்படையான தன்மை, எளிதில் அணுகும் விதம், செயல்திறன்கள் தருவதை நோக்கமாகக்கொண்டு சேது திட்டம் தொடங்கப்பட்டது. மறைமுகமாக வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதும் இதன் மற்றொரு இலக்கு. எஸ்.இ.டி.யு. அல்லது மக்கள் உதவி மையங்கள். அரசாங்க அலுவலகத்திற்கு சான்றிதழ்கள், அனுமதிகள், அபிடவிட் ஆத்தன்டிகேஷன் (ணீஸீtலீமீஸீtவீநீணீtவீஷீஸீ) மற்றும் பிற சேவைகளைப் பெறப்போகிறவர்களுக்காக, ஒரே இடத்தில் சேவை செய்யும் மையமாக விளங்குகிறது. சேது சொசைட்டி, சேது மையங்களை நிர்வகிக்கிறது. எஸ்.இ.டி.யு. என்பது ஒரு சொசைட்டி. இது குடிமக்களின் தேவைகளைச் சரியாக புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக, பொது நிர்வாகத்தின் சிறப்பையும் ஒளிவுமறைவற்ற தன்மையும் உருவாக்குகிறது.

சேது 28 மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் 298 தாலுகா இடங்களிலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த மையங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் தொடர்புடைய அனைத்துச் சேவைகளையும் தருகிறது. மிகவும் முக்கியமான அடிக்கடி வழங்கப்படும் சான்றிதழ்களான,  இருப்பிடச் சான்றிதழ், நேஷனாலிட்டி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வயது உறுதிசெய்தல், சால்வன்சி, நன்னடத்தைச் சான்றிதழ், வருவாய் மற்றும் தொழில் போன்ற வசதிகளைத் தருகிறது.

வார்னா வயர் கிராமத் திட்டம்

தகவல்தொடர்புத் தொழில் நுட்பத்தின் பலன்களை, கிராமப்புற இந்தியாவிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனே வார்னா திட்டம் தொடங்கப்பட்டது. கிராமத்தில் நடக்கும் பல்வேறு வகையான வியாபாரங்களுக்கு, இணைப்புத் தருவதும், தகவல் மையம் மூலம் மக்களுக்கு தகவல் தருவதும் இவற்றின் சேவைகளில் சில.

இந்தத் திட்டம், வெவ்வேறான பயிர்த் தொழில், முதன்மையான பயிர் வளர்ப்புப் பயிற்சிகள், கரும்பு வேளாண்மைப் பயிற்சிகள், பூச்சி மற்றும் நோய்த் தடுப்பு, விற்பனைத் தகவல்கள், பால் மற்றும் கரும்பு ப்ராசஸின் தகவல்கள் போன்ற தகவல்களைக் கிராம அளவில், விவசாயிகளுக்குக் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுதான் தொடங்கப்பட்டுள்ளது.

விவசாயத் தயாரிப்புச் சந்தை, விவசாயத் திட்டங்கள், பயிர்த் தொழில் நுட்பம், கிராமத் தகவல் முறை, வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புத் திட்டம், கல்வி, தொழில் கல்வி வழிகாட்டுதல் போன்றவை பற்றிய தகவல்கள் தரும் மையமாகவும் இது இருக்கிறது. விவசாயத்திற்கான வயர் வழி நிர்வாகத்திற்கு அனுமதிக்கிறது. மேலும் இணையம் மூலமாக விற்பனைசெய்யவும் அனுமதிக்கிறது. இந்த முறையின் மூலம் நிலப் பத்திர ஆவணங்கள்கூடக் கிடைக்கின்றன.

பிரவாரா கிராம ஐ.டி. திட்டம் (பிரகதி)

பிரகதி திட்டம் 1999இல் தொடங்கப்பட்டது. அஹமத் நகரில் உள்ள 100 கிராமங்கள் 2.5 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை இவற்றை வயர்லஸ் மேன் சொல்யூஷன் மூலம் இணைக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம், கிராமப்புற மக்கள் உரிமை பெறுவதும், அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதுதான். இது ஏழு வழித் திட்டம். உள்ளூரில் ஐ.டி அமைப்புகளை ஸ்தாபித்தல், அரசுத் திட்டங்களைப் பற்றிய தகவலைப் பரவச்செய்தல். விவசாயப் பொருட்களின் விற்பனை, சுகாதாரம், கல்வி, அக்ரோ பிராசஸிவ், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றின் மூலம் கிராமத்திற்கு உதவுகிறது. 10 கி.மீ சுற்று வட்டத்திற்குள் இருக்கிற அனைத்து உயர்நிலைப் பள்ளிகளையும் ஆசிரியர்களும் ஊழியர்களும் தொடர்பில் இருக்க வேண்டுமென்பதற்காக இணைக்கிறது. மேலும் கற்றுக்கொடுத்தலில் நவீன முறைகள் அறிமுகப்படுத்தவும் செய்கிறது. மேலும் குழந்தைகளுக்கான கணினியை அடிப்படையாகக் கொண்ட கல்வி, அவர்கள் பகல் நேரத்தில் வேலைசெய்ய வேண்டி வருவதால் அவர்களுக்கு வசதியான நேரத்தில் கற்றுத்தருகிறது. விவசாயிகள், விவசாய வல்லுநர்களுக்கு கிரிஷி விக்யான் கேந்த்ராவில் தொடர்புகொண்டு, புதிய விவசாய நுட்பங்களையும், விற்பனைப் பொருள்களை எவ்வாறு சேமித்துவைப்பது. பேக்செய்வது என்பது பற்றியும் தெரிந்துகொள்ளலாம். கிராமத்தில் இருக்கும் சுகாதார நல வல்லுநர்கள், மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு மருத்துவர்களைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். இதன் மூலம் சிறப்பான சிகிச்சை தர முடியும். குறிப்பாக அவசரக் காலங்களில் மக்களின் வீட்டுக்கே சென்று மருத்துவம் செய்யலாம்.

பிரவாரா பற்றி மேலும் தெரிந்துகெள்ள www.kvk.pravara.com ஐக் கிளிக் செய்யவும்.

கல்யாண் - தோம்பிவலி முனிசிபல் கார்ப்பரேஷனின் குடிமக்கள் உதவி மையம்

கே.டி.எம்.சி. ஒரு ஜீ2சி.யு திட்டம். இதன் நோக்கம் 21-ஆம் நூற்றாண்டின் மின் நிர்வாக முனிசிபல் கார்ப்பரேஷனாக உருவாக்குவது, ஒரு முறையைக் கண்டறிந்து முனிசிபல் கார்ப்பரேஷனை, உயர்ந்தபட்ச அளவு ஒளிவுமறைவற்ற தன்மையுடைய, பொறுப்பான மற்றும் தரமான நிர்வாகமாகவும் குடிமக்களின் சேவை கொண்டதாக மாற்ற வேண்டும் என்பதுதான்.

இந்தத் திட்டம் 12 லட்சம் பேர்களுக்கு சேவைபுரிகிறது. தானே மாவட்டத்தின் கல்யாண், தோம்பிவலி குடிமக்களுகளுக்கு, குடிமக்கள் உதவி மையம் மூலம் சேவைகளை வழங்குகிறது. மேலும் தகவல் போர்ட்டலை நடத்திவருகிறது. கே.டி.எம்.சி. அனைத்துச் சேவைகளையும் தானாகவே பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட குடிமக்கள் சேவை ஆன்லைனில் கிடைக்கிறது.

திட்டத்தின் நோக்கங்கள்

 • குடிமக்கள் தொடர்பான நடைமுறைகளில் மையமாக்கப்பட்ட இன்டர் ஃபேஸைத் தருதல்
 • அனைத்து அரசாங்க வேலைகளிலும் வெளிப்படையான தன்மையும் பொறுப்புடமையும் அறிமுகப்படுத்தப்படுதல்.
 • உயர் நிர்வாகத்திற்காக, தீர்மானம் எடுக்க உதவும் முறையைக் கண்டறிதல்.
 • குடிமக்களுக்கு வழங்கும் சேவைகளில், செயல்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்துதல்.

வழங்கப்படும் ஆன்லைன் சேவைகள்

விசாரணைகள்

 • விண்ணப்பங்களின் நிலைமை
 • உணவு உரிமங்களின் நிலைமை
 • சொத்துக் கட்டணங்கள்
 • தண்ணீர்க் கட்டணங்கள்

வேண்டுகோள்கள்

 • பிறப்புச் சான்றிதழ்
 • இறப்புச் சான்றிதழ்

டவுன்லோடு பட்டியல்

 • மதிப்பீட்டுத் துறை : 09
 • நகரப் பொறியாளர் : 01
 • உணவு உரிமத் துறை : 18
 • தோட்டம் & மரத்தோப்புகள் : 01
 • சுகாதராரத்துறை :13
 • விற்பனை உரிமத் துறை :17
 • டவுன் பிளானிங் : 07
 • வார்டு அலுவலகம் : 01
 • தண்ணீர்த் துறை : 11

ஆன்-லைனில் பணம் செலுத்துதல்

 • மின் பணம் செலுத்துதல்

குத்தகை & அறிவிப்புகள்

சாலைப் போக்குவரத்து, கட்டிடங்கள், சாக்கடை, மரங்கள், பொது சுகாதாரம், மருத்துவமனை, உணவு, தண்ணீர் சப்ளை போன்ற 22 வகையான புகார்களை இதில் பதிவுசெய்யலாம். இத்யாதி. தனது முந்தைய புகாரின் நிலைமையைப் பற்றிக்கூட அறிந்துகொள்ளலாம். மக்கள் சாசனம் ஆன்லைனில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அது புகார் எவ்வளவு காலத்திற்குள் சரிசெய்யப்படும் என்பதைப் பற்றிய விவரம் தெரிவிக்கும் கே.டி.எம்.சி.யில் கிடைக்கும் சேவைகளைப் பயன்படுத்தத் தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் தெரிந்துகெள்ள http://www.kdmc.gov.in/

ரோஜ்கர் வாஹினி

வலைதளம் ரோஜ்கர் வாஹினி : இது மஹாராஷ்டிரா அரசாங்கத்தின், வேலைவாய்ப்பு, சுய வேலைவாய்ப்புத் துறைகளுக்காக உருவாக்கப்பட்டது. தொழில் பயிற்சி வழிகாட்டுதல், வேலைவாய்ப்புகள், மற்றும் வேலை தேடுபவர்களுக்குச் சுய வேலை வழிகாட்டுதல் போன்ற இலவசச் சேவைகளைச் செய்கிறது. இது புள்ளிவிவரத் தகவலைச் சேகரித்து, தொகுத்து, திட்டக் கமிஷனுக்கும் பிற திட்டக் குழுவிற்கும் தருகிறது. இது மனித சக்தியைத் (மேன்பவர்) திட்டமிடுவதற்கு உதவுகிறது.

போர்ட்டல் டிஸைன், ஆறு முதன்மையான சப்சைட்டுகளைக் கொண்டுள்ளது. விண்ணப்பதாரர் பகுதி, வேலைதருபவர் பகுதி, சுய வேலை, தகவல் உரிமை மற்றும் காம்கர் கட்டா. விண்ணப்பதாரர் பகுதி, பதிவுசெய்து கொள்ளும் வசதியையும் வேலை விளம்பரங்கள், தொடர்புகொள்ள வேண்டிய துறை விவரங்கள், சாத்தியமுள்ள வேலைகள் பற்றிய ஆலோசனைகள், ஊனமுற்ற நபர்களுக்கான சிறப்புத் தகவல்கள் போன்ற தகவல்களை அப்பேட் செய்துகொள்ளும் வசதியையும் தருகிறது. விண்ணப்பதாரர்கள் அல்லது பதிவுசெய்த இளைஞர்கள், வேலை தேடுவது சம்பந்தமான போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், புத்தகம், பப்ளிகேஷன்கள், செய்தித்தாள், டி.வி. ரேடியோ நிகழ்ச்சிகள் சம்பந்தமான தகவல்கள் இங்கே கிடைக்கும்.

சுய வேலைவாய்ப்பு சப்-சைட்டுகள், துறை மற்றும் சுய வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் செயல்பாடுகளையும் பார்த்துக்கொள்கிறது. வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, சுய வேலைவாய்ப்புத் திட்டங்களைப் பற்றிய வழிகாட்டுதலையும் ஆலோசனையையும் தருதல், அவர்கள் விரும்பினால் செய்யக்கூடிய சிறிய அளவு வியாபாரங்களுக்குப் பயிற்சி விவரங்கள் தருதல் போன்றவற்றைச் செய்கிறது. போர்ட்டல் அனைத்துப் பொருத்தமான திட்டங்கள், வியாபாரங்கள் மற்றும் அதனுடைய நடைமுறைகள் ஆவணங்கள் பற்றிய விவரங்கள், என்.ஐ.சி. ஏஜென்சிகளின் முழுத்தொடர்பு விவரங்கள் போன்ற தகவல்களையும் தருகிறது. வங்கியாளர் பகுதி, கடன் உதவி, அது சார்ந்த நடைமுறைகளுக்கான ஆலோசனைகளைத் தருகிறது. சுய வேலை வாய்ப்பிற்காகப் பணிபுரியும் என்.ஜி.ஓக்களின் விவரங்கள். பதிவுசெய்யப்பெற்ற சேவா சொசைட்டிகளின் விபரங்கள் போன்ற தகவல்களும் இதில் கிடைக்கின்றன.

காம்கர் கட்டா, சப் சைட் (துணை இணையம்) வணிக வேலைவாய்ப்புத் தளங்களைப் போன்றது. இங்கே நர்ஸ், வீட்டு உதவியாளர்கள், டிரைவர்கள், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் தங்கள் சுய குறிப்பைப் பதிவுசெய்து வைத்துவிட்டு வேலை தருபவரைத் தேடலாம். வேலை தருபவர்கள், தங்களது தேவைகளைப் பதிவுசெய்யலாம். உதாரணமாகத் தோட்டக்காரருக்கான தேவைகள், வீட்டு உதவிகள், நர்ஸ், வாட்ச்மேன், போன்றவற்றிருக்கான தகுதிகள் கொண்ட வேலை தேடுபவர்களையும் அவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

இந்தப் போர்ட்டல், கிராமப்புறப் பகுதிகளின் சேவை வழங்கும் மையங்களிலிருந்து கிடைக்கும். இது எளிமையாகப் பயன்படுத்தக் கூடியது. கிராபிக்கல் யூசர் இண்டர்பேஸ்  உள்ளூர் மொழியில் இருப்பதால், அரைகுறையாகப் படித்தவர்களுக்கும், ஏன் படிக்காதவர்களுக்கும் கூட சேவைபுரிகிறது. போர்ட்டலோடு தொடர்புகொள்ள மிகக்குறைவாக மவுஸ் கிளிக்குகளும் கீபோர்டுடன் மிகக் குறைந்த செயல்பாடுகளுமே போதுமானவை. செயல்படுவதற்குரிய வழிகாட்டி அதில் இருக்கும் பயன்படுத்துபவர் அந்த பக்கங்களின் மூலம், இந்தச் செயல்பாட்டை எளிமையானதாகவும் விரைவானதாகவும் செயல்படுத்தும்படியானதாகவும் ஆக்கிக்கொள்ளலாம். போர்ட்டிலின் கிராபிக்கல் யூசர் இன்டர்ஃபேஸ், தொடுதிரையுடன் கூடியது. பார்வையாளர்கள் கியோஸ்க்கின் மூலம் இதைப் பெற்றுக்கொள்ள முடியும்.

3.02105263158
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top