பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.

கணினிமயமாக்கம்

கணினி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்காளம், பல அரசாங்க துறைகள் மற்றும் மையங்களை கணினி மையமாக்கியுள்ளது. அவையாவன நிதிதுறை, தொழிலாளார்துறை, போக்குவரத்துதுறை, பஞ்சாயத்து மற்றும் கிராமப்புறமேம்பாட்டுதுறை, நிலம் மற்றும் நிலமேம்பாடு, சுற்றுலாதுறை, இளைஞர் சேவைமையம், முனிசிபாலிட்டி, உயர்கல்வி, சுற்றுசூழல் மற்றும் வீட்டுவசதி துறை ஆகும்.

பார்தாமன் என்னும் மாநிலத்தில், மாதிரி திட்டமாக தொடங்கிய "நில ஆவணங்களை கணினிமயமாக்கும்" திட்டமானது, வேறு மாநிலங்களிலும் கையாளப்படுகிறது. இதுவரை மேற்கு வங்காளத்தின் 341 பகுதிகளில் (பிளாக்) 238 பகுதிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. மேலும் கெடஸ்ட்ரல் வரைப்படங்களை கணினிமயமாக்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது, குறிப்பாக கூக்கிளி மாநிலத்தில், மாதிரி திட்டமாக, இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில், நில ஆக்ரமிப்பு தொடர்பான விசயங்களை கணினி மயமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் நிலஆக்ரமிப்பு தொடர்பான சர்ச்சைகள் மிக விரைவில் தீர்க்கப்படுகிறது. நில ஆக்கிரமிப்பு தொடர்பான விசயங்களை கணினி மயமாக்கியதால் நில ஆக்கிரமிப்பு பற்றி தெரியப்படுத்துதல், அறிவிப்புதல், நில அட்டவணை தயாரித்தல், நில மதிப்பு தயாரித்தல், மிக விரைவாகவும் நேர்த்தியாகவும் செய்யப்படுகிறது. இந்த திட்டமானது, இராஐராட்டில், புதிய நகாரட்சி உருவாக்கும் திட்டத்தில், நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு சோதனைத்திட்டமாக கையாளப்படுகிறது.

வீடியோ கருத்தரங்கு மருத்துவம் - மிட்னாபூர்

தொலை-மருத்துவம் என்பது உபயோகிப்பவர் மிக எளிதாக, நோயாளிகளை குணப்படுத்த உதவும், அதிநவீன தொழில்நுட்பமாகும். பூருளியா மாநில மருத்துவமனை மற்றும் பர்ட்லான் மருத்துவ கல்லூரியுடனும் இணையதளம் மூலம், உயர் மையங்களுக்கு அனுப்பப்பட்டு, நோய் தீர்க்கும் முறைகள் மற்றும் மருந்துகள் உடனுக்குடன் பெற்றுக்கொள்ளப்படும். தேவைப்பட்டால் நோயாளிகள் மற்றும் மருத்துவ அதிகாரிகள், மருத்துவ கல்லூரிகளில் உள்ள சிறப்பு மருத்துவர்களிடம் இணையதளம் அல்லது வீடியோ கருத்தரங்கு மூலம் ஆலோசனைகள் பெறலாம்.

"ஸ்மார்ட் கார்டு"

நாடெங்கும் ஒருமித்த நிலையை சாலை போக்குவரத்தில் கொண்டுவருவதற்காக, இந்திய அரசாங்கமானது, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மூலமாக " ஸ்மார்ட் கார்டு " சார்ந்த ஓட்டுனர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் திட்டத்தை " சாராதி " மற்றும் " வாகன்" உதவியுடன் கொண்டுவந்தது. " வெபெல்", மேற்கு வங்காளத்தை " ஸ்மார்ட் கார்டு " அமல்படுத்தப்பட்ட முதல் மாநிலமாக ஆக்கியது.

"ஸ்மார்ட் கார்டு" என்பது "கிரேடிட் கார்டு" போன்ற அளவும், அமைப்பும் கொண்ட ஒரு மின்னனு சாதனமாகும். இதனில் பொருத்தப்பட்டுள்ள நுண்புராசசர் தன் சொந்த தகவல்களை சேகரிப்பதற்கு மற்றும் படிப்பதற்கு மற்றும் எழுதுவதற்கு போதுமானதாகும்.

ஸ்மார்ட் கார்டு உபயோகங்கள்:

  • மிக எளிதாக தகவல்களை எடுப்பதற்கும்
  • அதனை எடுத்துச் செல்பவர்களின் வழியை கண்டறிய
  • கட்டுப்பாடு மிகுந்த மேம்படுத்தப்பட்ட சட்டம் பிறப்பிப்பதில்,
  • வரிமற்றும் அபராத தொகை செலுத்தியத்தற்கான தகவலை உடனுக்குடன் கார்டில் பதிவு செய்வதற்கு
  • பொய் தகவல் மற்றும் ஏமாற்று வேலைகளை தவிர்ப்பதற்கும்
  • நாடெங்கும் உபயோக்கிப்பதற்கும்

அரசாங்க துறைகளை கணினிமயமாக்குதல்

"வெபல்", மேற்கு வங்காள அரசாங்கத்தை கீழ்காணும் செயல்களுக்காக, கணினிமயமாக்கவுள்ளது. அவையாவன,

1. அரசு கோப்புகள் செல்வதற்கான முறை

2. அரசு துறையின் பணிபுரிபவர்களின் தகவல் தொகுப்பு மற்றும்

3. நிதி செலவுமுறை கண்காணிப்பு(அரசு துறை மற்றும் அரசு மையங்களில்) ஆகும். நிதிதுறை, தொழிலாளார்துறை, போக்குவரத்துதுறை, பஞ்சாயத்து மற்றும் கிராமப்புறமேம்பாட்டுதுறை, நிலம் மற்றும் நிலமேம்பாடு, சுற்றுலாதுறை, இளைஞர் சேவைமையம், முனிசிபாலிட்டி, உயர்கல்வி, சுற்றுசூழல் மற்றும் வீட்டுவசதி துறை ஆகியதுறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முனிசிபாலிட்டிக்கான "பூலோக தகவல் மையம்"

வெபெல், பூலோக தகவல் மையத்தை, 10 முனிசிபாலிட்டிகளில் அறிமுகப்படுத்துப்பட்டுள்ளது. பூஐலி, கர்சான்ங், பட்ஜ், கலிம்போன்ங் மற்றும் பிதான் நகர் ஆகிய முனிசிபாலிட்டிக்களில் "பூலோக தகவல் மைய" வேலைகள் முடிவடைந்துள்ளது.

தகவல் கியோஸ்க்ஸ்/வலைதளம் மூலம் பொது தொடர்பு

மேற்கு வங்காள அரசாங்க வலைதளம், அரசாங்கத்தின் புதிய திட்டங்கள் மற்றும் பல தேவையான தகவல்களை பொதுமக்களுக்கு அளிக்கிறது. மேலும் "வெபெல்", அரசாங்க துறைகளுக்கு, தனித்தனி வலைதளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

உயர்கல்வி துறை

வெபெல்" இத்துறைக்கான "தகவல் தொகுப்பை" உருவாக்கியுள்ளது. இதனை, உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள், தொடு திரை மூலம் கண்டு அறிந்து கொண்டு பயன் பெறலாம்.

சுற்றுலாத்துறை

வெபெல், சுற்றுலாதுறைக்காக வலைதளம் மற்றும் தொடுதிரை தகவல் உருவாக்கியுள்ளது. இந்த தளமானது, உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான தகவலை அளிக்கிறது.

தகவல் மற்றும் கலாச்சார துறை

வெபெல் இத்துறைக்காக, தொடுதிரை சார்ந்த தகவல் கியாஸ்கை உருவாக்கியுள்ளது. இது மக்களுக்கு பொது உபயோகம் மற்றும் தேவையை அளிக்கிறது. வெபெல் பிதான் நகர முனிசிபால்டிக்கான வலைதளத்தை உருவாக்கியுள்ளது. இது பல விண்ணப்ப படிவங்களை பெறுவதற்கு உதவுகிறது.

கணினி தொடர்பு

வெபெல் தனது '' ஐ.எஸ்.பி'' சேவையின் முலம் கார்ப்ரெட் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை மற்றும் பல நிறுவனங்களுக்கு, மிகச் சிறந்த இணையதனச் சேலையை, நியாமான விலையில் வழங்கிவருகிறது. இந்த சேவையானது, கிராமப்புறங்களுக்கும் பரவி, சமூகம் மற்றும் பொருளாதரம் நிலையானதாகவும், சரிசம வாய்ப்பு அளிப்பதாகவும் உள்ளது. இந்த சேவையானாது கற்றுக்கொள்வதற்கு புதிய வழிகளையும், அரசாங்கத்திடம் நல்ல தொடர்பையும் மற்றும் உடல்நல முன்னேற்றேத்திற்கான வழிகளையும் கண்டறிய உதவுகிறது. இந்த அதிவேக தகவல் சேவை மற்றம் வலைதள தொடர்பினால், கிராமப்புற இந்தியா, நகரபுற இந்தியாவாக மாறுவதற்கான முதல் படி.

கொல்கத்தா காவல் உள்-இணையதளம் மற்றும் கணிணி வலைச்சேவை

கொல்கத்தா காவல் நிலையம், வெபெல் டெக்னாலஜி லிமிடெப் நிறுவனத்திடம், 45 காவல் நிலையங்கள் மற்றும் 5 டிவிஷனல் அலுவலங்கள் மற்றும் 30 பட்டலியன் மற்றும் கிசி அலுவலங்களை கணிணி மையமாக்கும் வேலையை ஒப்படைத்தது. இதன் நோக்கமானது; தனா மற்றும் பட்டலியன் அலுவலகத்தின் வேலைகளை திறம்பட செய்வதற்கும், குற்றவியல் கட்டுபாட்டிற்கும், லால்பஜார் அலுவகத்தில் உள்ள மேல் அதிகாரிகளுடன் மிக நெருக்கமாக தொடர்பு கொண்டு, தினந்தோறும் ஆற்றக்கூடிய பணிகளை செவ்வனே செய்வதற்கும் ஆகும். மேலும் காவலர்களுக்கான, பயன்படும் மென்பொருள் தயாரிக்கும் பணியையும் 'வெபெல்' ஏற்றுக்கொண்டுள்ளது.

மேற்கு வங்காள மாநில முழுவதுமான வலைச்சேவை (WBSWAN)

மேற்கு வங்காளத்தின் தகவல், ஒலி மற்றும் ஒளி தொடர்பிற்கு முதுகெலும்பாக இருப்பது WBSWAN ஆகும். இந்த அரசாங்க வலைச்சேவை, கணினி-அரசாங்கத்தின் செயல்பாடுகளை இணையத்தள செய்முறை சார்ந்த தொழில்நுட்பத்தை கொண்டு புரிகிறது.

WBSWAN -ன் சிறப்பு அம்சங்கள்

- தகவல், ஒலி மற்றும் ஒளி தொடர்புக்கு வழிவகுகிறது. இதனால் கொல்கத்தாவில் இருந்து பல மாவட்ட தலைமை இடங்களையும் மற்றும் முக்கிய நகரங்களையும் இணைக்கலாம்.

- எல்லா பிளாக் (வளாகம்) தலைமையிடங்களையும், மாவட்ட தலைமையிடங்களுடன் இணைக்கலாம்.

- WBSWAN விரிவாக்கத்தின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துகள், வளாக தலைமை இடங்களுடன் இணைக்கப்படும்.

- மாநில தலைநகரம் மற்றும் மாவட்ட தலைமையிடங்களும், ஒளி கருத்தரங்கு மற்றும் பல்நோக்கு கருத்தரங்கு புரிவதற்கான வசதியை அளிக்கிறது.

WBSWAN சேவை மற்றும் பயன்கள்

- இந்த உள்வலைச்சேவையின் மூலம் அரசாங்க மற்றும் அமைச்சரக துறைகளுக்கு இடையேயும் மற்றும் ஒரே துறையில் உள்ள வெவ்வேறு அலுவலகங்களுக்கிடையேயும், இடையூர் அற்ற தொடர்பினை கொண்டு இருக்கலாம்.

- இந்த வலைச்சேவையானது, அரசாங்கத்திற்கும் குடிமகனுக்கும் உள்ள தொடர்பையும், அரசாங்கம் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் உள்ள தொடர்பையும் அதிகப்படுத்தி, மேலும் அரசாங்க தகவல்களை மிக எளிதாக பரவச்செய்தும், ஒரு ஒளிவுமறைவு இல்லாத நிர்வாகத்தை அளிக்கிறது.

மேலும் விபரங்களுக்கு.

ப்ரெய்லி –உதவி

"மேற்கு வங்காளத்தின் பார்வையற்றோர் பள்ளிக்கான, தகவல் தொழில்நுட்பம் தரும் ப்ரெய்லி கல்வி" என்னும் திட்டத்தின் கீழ், வெபெல் மீடிய டோரனிக்ஸ் லிமிடேட், 27 சிறப்பு பள்ளிகளிலும், மற்றும் 2 நூலங்களிலும், தகவல் தொழில்நுட்பம் தரும் ப்ரெய்லி கல்விக்கான அமைப்பை உருவாக்கிவருகிறது.

இந்த திட்டத்திற்கான நிதியுதவியை, இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பதுறை, தொடர்பு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம், மற்றும் மேற்குவங்காள அரசின் தகவல்தொழில்நுட்பதுறை, மற்றும் கூட்டுகல்வி விரிவாக்க துறை, வழங்குகிறது.

உள்கட்டமைப்பு மேம்பாடு

- பார்வையற்றோர் பள்ளிகளில், முன்னேற்றம் அடைந்த தொழில் நுட்பம் மற்றும் இணையதள வசதி ஆரம்பிப்பதின் மூலம் வெபெல் மீடீயாடோனாக்ஸ் லிமிடேட் தேசிய அளவிலான வலைசேவையை ப்ரெய்லி கல்வி திட்டத்தில் கொண்டுவர முடியும்

- இந்நிறுவனங்கள் ப்ரெய்லி கல்வி மற்றும் படிப்பதற்கான ப்ரெய்லி நுாலேடுகளை அதிகமான பார்வையற்றோர்க்கு வழங்கமுடியும்.

- ஒருங்கிணைந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பார்வையற்றோர், ப்ரேய்லியின் படிப்பதற்கான உதவி நுாலேடுகளை அச்சிட்டோ அல்லது மின்னனு நுாலகத்திலோ பெறலாம்.

- இந்த மையங்கள் தன் சொந்த குறிப்புகளை தயாரிப்பதுடன் இல்லாமல் மற்ற மையங்களில் குறிப்புகளை மாற்றிக் கொள்வதனாலும் தேசம் முழுவதும் ஒருமித்த ப்ரெய்லி கல்வி குறிப்புகள் உருவாக காரணமாகிறது.

மேலும் விபரங்களுக்கு .

பயனுள்ள தொடர்புகள்

http://www.wbgov.com/e-gov/English/EnglishHomePage.asp

http://www.itwb.org

http://www.webel-india.com

2.91489361702
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top