பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஹரியானா

ஹரியானாவில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.

கணினி நிர்வாக முயற்சிகள் - ஹரியானா

ஹரியானா பதிவுத்துறை தகவல் முறை (ஹாரிஸ்)

‘ஹாரிஸ்’ உருவாக்கப்படக் காரணமே, சரியான நேரத்தில் பதிவுசெய்ய உதவுவது, வெளிப்படையான, நம்பகத்தன்மையுள்ள நில வர்த்தகத்தை உறுதி செய்வது ஆகியவற்றை ஒற்றைச் சாளர முறை வழியாக சேவைகளாக அளிக்க வேண்டும் என்பதுதான்.

பத்திரப் பதிவுகள் மூலம் கிடைக்க வேண்டிய வருவாயைக் கண்காணிக்க இது ஒரு கருவியாகப் பயன்படும். ஹாரிஸ் முறை, உபயோகிப்பாளர் எளிதில் அறியக்கூடிய சாளரங்கள் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்திப் பத்திரங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். இதனோடுகூடப் பல்வேறு வகையான பாதுகாப்பு முறைகளைச் சரிபார்த்தல், வாங்குபவரது புகைப்படங்களைப் பாதுகாப்பாகச் சேமிப்பது, பத்திரப் பதிவுக்கான கட்டணம், பதிவுச் சான்றிதழை அச்சில் எடுத்துக்கொள்வது, இவை தவிர தேவைப்படும் பல்வேறு புள்ளிவிவரங்கள் ஆகியவற்றைப் பெற முடிவது ஆகியனவற்றைச் செய்ய முடியும்.

ஹாரிஸ் மூலம் பத்திரப் பதிவு முறைகளில் வெளிப்படைத் தன்மையும் எளிமையாக்கப்பட்ட முறைமைகளும் இந்த கணினி மூலமான பத்திரப் பதிவு முறை, விரைவாகப் பதிவுகள் நடக்கிறதா, நம்பகத்தன்மையுடனும் தொடர்ந்து ஒரே மாதிரியாகவும் பயன்படுகிறது என்பதைக் கண்காணிக்க, எம்ஐஎஸ் அறிக்கைகள் உருவாக்கப்படுகின்றன.

தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் அலுவலகங்களில் பத்திரங்களின் சிடி-ரோம்கள் பாதுகாக்கப்படுகின்றன. இப்போதைய நிலவரப்படி, அசையா சொத்துக்கள் விற்பனை, தினப்படி முறையில் வருவாய்த் துறையினால் நடத்தப்படுகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் (ரேவாரி, பவால், கோஸ்லி) மற்றும் துணை தாசில்தார் அலுவலகம் இருக்கும் தாருஹேராவிலும் ஹாரிஸ் அமலாக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அரசின் வரிவருவாய் அதிகரித்தது. இதுமட்டுமின்றி, ஆவணங்களைச் சரியானபடி பராமரிப்பதும் சுலபமாகி இருக்கிறது.

ஹாரிஸ் திட்டத்தின் நோக்கங்கள்

 • பத்திரப் பதிவு செயல்முறைகளில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவருகிறது.
 • பத்திரப் பதிவு நடைமுறைகளை எளிதாக்குவது.
 • பத்திரங்கள் பதிவு விஷயத்தில் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் அளிப்பது.
 • நடப்பவைகளைக் கண்காணிக்க எம்ஐஎஸ் அறிக்கைகள் தயாரிப்பது.
 • இந்த முறை நிலையாக, நம்பகத்தன்மையுடன், விரைவாகச் செயல்படுவதை உறுதி செய்வது
 • பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தப் பத்திரங்களைப் பற்றிய தகவல்களைக் கணினி மூலம் நேரடியாகப் பதில் பெற வசதி ஏற்படுத்துவது.
 • ஒப்பந்தப் பத்திர ஆவணங்களில் உபயோகப்படுத்தும்.
 • பத்திரப் பதிவின்போது கையெழுத்திட்ட சாட்சிகள், நிலம் வாங்கியவர் மற்றும் விற்றவர் போன்றவர்களின் புகைப்படங்களைக் கணினியில் சேமித்துவைப்பதன் மூலம் போலிகளைத் தவிர்ப்பது.
 • கணக்காய்வாளருக்குப் பணியை இலகுவாக்கும் வகையில் கணக்கு அறிக்கைகளைச் சிறந்த முறையில் தயார் செய்வது.
 • பதிவுசெய்யப்பட்ட பத்திரங்களின் விவரங்களை சிடிரோம்களில் பதிவுசெய்து நிரந்தரமான ஆவணங்களாகப் பராமரிப்பது.

ஹாரிஸ் பற்றி மேலும் அறிந்துகொள்ள: http://www.nic.in/projects/haryana-registration-information-system-haris

ஜமபந்தி நில உரிமை விவரங்களின் ஆவணங்கள்

அரியானாவின் வரிவருவாய்த் துறை, இணையதளத்தின் உதவியுடன் ஜமபந்தி திட்டத்தைத் துவக்கியது. இதன் நோக்கம், அனைத்து நிலங்களின் முழு விவரங்களை வலையக விலாசம் ஒன்றின் மூலம் அனைவரும் அறியத் தருவதாகும். இதன் மூலம், பல சேவைகளையும் மக்களுக்குத் தர முடியும். நில ஒப்பந்த ஆவணங்களில் அடங்கியுள்ள நிர்வாக விஷயங்கள் என்று எடுத்துக்கொண்டால்,

 • ஜமபந்தி என்ற நில உரிமை விவரங்கள்
 • உரிமைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் பதிவு.
 • காஸரா கிர்த்வாரி

இப்போது, இந்த மூன்று விதமான விவரங்களின் நகல்களையும் குடிமக்கள் மேற்குறிப்பிட்ட வலையக விலாசத்தில் இருந்து எடுத்துக்கொள்ள முடியும். இந்த வலையக விலாச வசதியை ஏற்படுத்தியதற்குக் காரணமே, மேற்படி ஆவணங்களைப் பற்றி, நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தெரியுமாறு செய்வதுதான். இதன் ஆரம்ப கட்டமாக, பஞ்ச்ருலா தாசிலில் உள்ள 26 கிராமங்களின் நில உரிமை விவரங்களை மேற்படி வலையக தளத்தில் பதிவுசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து படிப்படியாக மாற்ற தாசில்களில் உள்ள நிலங்களைப் பற்றிய உரிமை விவரங்களையும் மேற்படி வலையக தளத்தில் காண்பதற்கு வழிவகை செய்யப்படும்.
வரிவருவாய்த் துறை தகவல் தொழில்நுட்ப வசதிகளை 1991இலிருந்து உபயோகித்து வருகிறது. அந்த ஆண்டில்தான் முதன்முதலாக ஆரம்ப கட்டத் திட்டமாக ரேவாரியில் கணினிமயமாக்கம் துவக்கப்பட்டது.

ஜமபந்தி பற்றி மேலும் அறிய: http://jamabandi.nic.in/

அரியானா அரசின்-விண்ணப்பங்கள் மற்றும் நடைமுறைகள் பற்றிய வலையதளம்

தேசிய தகவல் தொழில்நுட்ப மையத்தின் (என்ஐசி) உதவியுடன் அரியானா அரசு விண்ணப்பங்கள் மற்றும் நடைமுறைகள் பற்றிய வலையதளம் ஒன்றை உருவாக்கியது. இதில், அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளில் உள்ள பல்வேறு விதமான அலுவலகங்களின் மூலம் மக்களுக்குத் தரப்படும் சேவைகள்/திட்டங்கள் பற்றியும் அவற்றைப் பெறுவதற்கு எந்த வகையான விண்ணப்பங்கள் மற்றும் நடைமுறைகள் இருக்கின்றன. இவற்றை எப்படிப் பெறுவது, எப்படி பூர்த்திசெய்வது போன்றவற்றைப் பற்றிய தகவல்கள் இந்த வலையதளத்தில் இருக்கும்.
இந்த வலையகதளத்தில் கிடைக்கக்கூடிய விவரங்கள்.

 • அனைத்து விதமான திட்டங்கள்/சேவைகள் பற்றிய விளக்கங்கள்.
 • இந்தத் திட்டங்களை/சேவைகளைப் பெறும் வழிமுறைகள்
 • எங்கே செல்வது?
 • யாரைச் சந்திக்க வேண்டும்?
 • நேரம்/காலக்கெடு.
 • கட்டணங்கள்
 • எவையெல்லாம் தேவை என்பது பற்றிய விவரங்கள்
 • விண்ணப்பித்த பின், எத்தனை நாட்களுக்குள் பதிலைச் சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து எதிர்பார்க்கலாம் போன்ற விவரங்கள்.

இப்போதைய நிலவரப்படி, இந்த வலையகதளத்தில் அரசாங்கத்தில் 20 துறைகள்/ ஆணையகங்கள் /குழுமங்கள் போன்றவை உள்ளன. மீதமுள்ள துறைகள் விரைவில் இதில் சேர்க்கப்படும்.
இப்போது வலையகத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் துறைகள்/ஆணையகங்கள்/குழுமங்கள் போன்றவை பற்றிய விவரங்கள் வருமாறு.
1. விவசாயத் துறை 2. வன அபிவிருத்திக் குழுமம் 3. சுற்றுச்சூழல் நலத்துறை 4. சமூகநீதி மற்றும் உரிமை அளிப்புத் துறை 5. தேர்தல் ஆணையம் 6. காதி கிராமத் தொழிலகக் குழுமம். 7. தொழில் சார்ந்த கல்வி 8. தொழிற்சாலைகள் 9. போக்குவரத்துத் துறை 10. பொருளாதாரம் & புள்ளிவிவரக் கணக்கியல் ஆலோசகர் 11. நிதித்துறை 12. உடல் நலம் 13. உணவு மற்றும் விநியோகத் துறை 14. அரியானா மாநிலச் சட்ட சேவைகள் ஆணையகம் 15. அரியானா மின்வாரிய சீரமைப்புக்கமிஷன் 16. அரியானா வீட்டுவசதித் துறை 17. இயக்குநர், விநியோகம் மற்றும் ஒழுங்கமைவு 18. அரியானா பண்டக சாலை குழுமம் 19. மலர் மற்றும் கனிகள் வளர்ச்சித் துறை 20. எச்எஸ்ஏஎம்வி.

மேலும் அறிந்துகொள்ள  http://haryanaforms.nic.in
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top