பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உடனடியாகப் பணம் அனுப்பும் முறை (UPI)

உடனடியாகப் பணம் அனுப்பும் முறை (UPI) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த பணம் செலுத்து ஊடுமுகம் UPI என்பது, ஓரே கைபேசி செயலி மூலம் பல  வங்கிக் கணக்குகளையும் செயல்படுத்தும் வசதியாகும். பணம் அனுப்புவது, வியாபாரிகளுக்குப் பணம் செலுத்துவது உள்ளிட்ட பலவிதமான வங்கிச் சேவைகள் இந்த ஒற்றைத் தளத்தில் கிடைக்கின்றன. அதே போல மற்றவரிடம் எனக்குப் பணம் அனுப்பு என்று கேட்டுப் பெறக்கூடிய வசதியும் இதில் உள்ளது. இந்த UPI ஐ இந்திய தேசியப் பணம் வழங்கு கழகம் (NPCI) உருவாக்கியுள்ளது.

UPI இன் தனித்துவம்

 • கைபேசி மூலமாக 365 நாளும் இரவு பகல் எந்நேரமும் (24 * 7) இதன்மூலம் உடனடியாக பணம் அனுப்பலாம்.
 • பல்வேறு வங்கிக் கணக்குகளையும் அணுகுவதற்கு ஒரே ஒரு கைபேசி செயலி போதுமானது.
 • ஒற்றைக் கிளிக். இரட்டைக்காரணி அங்கீகாரம் – பணம் வழங்கு செலுத்து ஒழுங்காற்று அமைப்புகளின் நெறிமுறைகளுக்கு ஏற்ப எவ்வித இடர்ப்பாடும் இன்றி எளிதாகப் பணம் செலுத்தும் வலுவான அமைப்பு
 • வாடிக்கையாளர் தமக்கென மெய்நிகர் முகவரியை ஏற்படுத்திக் கொள்வதால், தன்னுடைய பற்று அட்டை அல்லது வங்கிக் கணக்கு எண் அல்லது IFSC போன்ற விவரங்களைத் தராமலேயே பணம் பெறவும் தரவும் முடியும்.
 • ஒரு ரசீதுக்குரிய கட்டணத்தை நண்பர்கள் பலர் பகிர்ந்து செலுத்த முடியும்.
 • சாமான்களைப் பட்டுவாடா செய்யும் போது பணம் செலுத்தும் வியாபார முறைகளில் ரொக்கப் பணத்திற்காக ஏ.டி.எம்களுக்கு அலையாமல் UPI மூலம் செலுத்தி விடமுடியும்.
 • வியாபாரிகள் / வாணிக நிறுவனங்களுக்கு ஒற்றைச் செல் மூலமாக பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றி விடலாம்.
 • பல்வேறு பணம் செலுத்துதல் / பணம் பெறுதல்களையும் முன்கூட்டியேத்திட்டமிட்டு வைக்கலாம்.
 • மின்கட்டணம், தொலைப்பேசிக்கட்டணம் போன்றவற்றையும், பார்கோடு மூலம் கட்டணம் செலுத்துவதையும் UPI  மூலம் எளிதாக செய்யலாம்.
 • நன்கொடை வழங்கல், மற்றவரிடம் இருந்து வசூல் செய்தல், பணம் விநியோகம் போன்றவற்றை எளிதாக்குகிறது.
 • பணப்பரிமாற்றம் குறித்து ஏதேனும் புகார் இருந்தால் அந்தக் கைபேசி செயலி மூலமாகவே அதனைப் பதிவு செய்யலாம்.

UPI ல் பங்கேற்போர்

 • பணம் செலுத்துபவரின் PSP
 • பணம் பெறுபவரின் PSP
 • பணம் செலுத்தும் வங்கி
 • பணம் பெறும் வங்கி
 • இந்திய தேசியப் பணம் வழங்குக் கடிதம் NPCI
 • வங்கிக் கணக்கு வைத்திருப்போர்
 • வணிகர்கள்

வங்கிகளுக்குக் கிடைக்கும் பயன்கள்

 • ஒற்றை கிளிக், இருகாரணி அங்கீகரிப்பு
 • எல்லாரும் பயன்படுத்தக் கூடிய பரிமாற்றச் செயலி
 • தற்போதுள்ள வங்கி வசதிகளே போதுமானது
 • பாதுகாப்பானது, புதுமையானது
 • தனித்த / ஒற்றை அடையாளத்திற்கு மட்டும் பணம் வழங்கல்
 • தடையற்ற வாணிகப் பரிமாற்றங்களுக்கு உதவுதல்

நுகர்வோருக்குப் பயன்கள்

 • எந்நேரமும் கிடைக்கும் வசதி
 • ஒரு நபரின் எல்லா வங்கிக் கணக்குகளுக்கும் ஒரே ஒரு செயலி போதுமானது
 • மெய்நிகர் அடையாளத்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது வேறு விவரங்களை தரத் தேவையில்லை.
 • ஒற்றைக் கிளிக் மூலம் அங்கீகரிப்பு
 • கைபேசி செயலி மூலமாகவே புகார்கள் தெரிவிக்கும் வசதி

வணிகர்களுக்குப் பயன்கள்

 • வாடிக்கையாளர்களிடம் இருந்து / ஒற்றை அடையாளம் உள்ளவர்களிடம் இருந்து எவ்விதத் தடையும் இன்றி நேரிடையாக பணம் பெறலாம்.
 • கடன் / பற்று அட்டைகளில் உள்ளது போல வாடிக்கையாளர்களின் மெய்நிகர் முகவரிகளைச் சேமித்து வைக்க வேண்டிய அவசியமில்லை
 • கடன் / பற்று அட்டைகள் இல்லாத வாடிக்கையாளர்களிடமும் ரொக்கமற்ற முறையில் UPI மூலம் எளிதாக வியாபாரம் செய்யலாம்.
 • மின்னனு வாணிக முறைக்கு ஏற்றது
 • COD வசூல் முறையில் உள்ள பிரச்சினை இதில் கிடையாது
 • வாடிக்கையாளருக்கு ஒற்றைக் கிளிக் / இருகாரணி அங்கீகரிப்பு வசதி உள்ளதால் எளிதாகப் பணத்தை பெறும் வசதி.

UPI ஐப் பதிவு செய்யும் முறை

 • வங்கிகளின் இணையதம் அல்லது கைபேசியின் செயலிக்கிடங்கில் (app store) UPI செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்
 • உங்களுடைய பெயர், மெய்நிகர் முகவரி, கடவுச்சொல் போன்ற விவரங்களைப் பதிந்து “புரோபைல் “ ஏற்படுத்திக் கொள்ளவும்
 • “சேர் / இணை / வங்கிக் கணக்கை நிருவகி” என்ற ஆப்ஷனுக்குச் சென்று வங்கியையும் கணக்கு எண்ணையும் மெய்நிகர் முகவரியையும் இணைக்கவும்.

Mpin உருவாக்குதல்

 • எந்த வங்கிக் கணக்கில் இருந்து பரிவர்த்தனை செய்ய விரும்புகிறீர்களோ அந்த வங்கியைத் தெரிவு செய்யவும். அப்போது கீழ்க்கண்ட ஆப்ஷன்கள் கிடைக்கும்
 • கைபேசி வங்கிச் சேவை பதிவு / Mpin உருவாக்கு
 • Mpin ஐ மாற்று
 • இவற்றில் முதலாவதைத் தெரிவு செய்தால் : வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியின் எண்ணுக்கு ஒற்றை முறை கடவுச் சொல் (OTP) வரும்.
 • அடுத்து உங்கள் பற்று அட்டையின் கடைசி ஆறு இலக்கங்களையும், காலாவதித் தேதியையும் பதிவிடவும்.
 • அடுத்து OTP ஐப் பதிவு செய்து உங்களுக்கு விருப்பமான நான்கு இலக்க Mpin ஐப் பதிவிடவும்.
 • வெற்றிகரமாக Mpin உருவாக்கப்பட்ட தகவல் வந்துவிடும்.
 • Mpin ஐ மாற்று என்பதைத் தெரிவு செய்யவும்
 • தற்போது உள்ள Mpin ஐயும் தொடர்ந்து புதிதாக மாற்றிக் கொள்ளவிரும்பும் Mpin ஐயும் பதிவிட்டுக் கிளிக்செய்யவும்.
 • புதிய Mpin மாற்றப்பட்ட அல்லது மாற்றப்படாத தகவல் வரும்.

UPI மூலம் பரிமாற்றம் செய்தல்

(அ) தள்ளுதல் (PUSH) மெய்நிகர் முகவரிக்குப் பணம் அனுப்புதல்

 • UPI செயலிக்குள் லாக் ஆன் செய்தல்
 • பணம் அனுப்பு / செலுத்து என்பதைத் தெரிவு செய்தல்
 • பணம் பெறுபவரின் மெய்நிகர் முகவரி எவ்வளவு பணம், ஆகிய விவரங்களைப் பதிவிட்டு எந்த வங்கிக் கணக்கில் இருந்து அத்தொகை பற்று செய்யப்பட வேண்டும் என்பதையும் தெரிவு செய்தல்.
 • பணம் செலுத்துவது பற்றிய விவரங்கள் சரிபார்க்கும் பொருட்டு கைபேசித்திரையில் தெரியும். அவற்றை சரிபார்த்துவிட்டு உறுதிப்படுத்தக் கிளிக் செய்தல்
 • அடுத்து MPIN ஐப் பதிதல்
 • வெற்றிகரமாகப் பணம் அனுப்பப்பட்டது (அ) பரிவர்த்தனை நடக்கவில்லை என்ற தகவல் கிடைக்கும்.

(ஆ) இழுத்தல் (PULL) பணத்தை கேட்டுப்பெறுதல்

 • UPI செயலிக்குள் லாக் ஆன் செய்தல்
 • பணம் பெறுதல் (பணம் தர வேண்டும் என்பதை தெரிவு செய்தல்
 • பணம் தருபவரின் / செலுத்துபவரின் மெய்நிகர் முகவரியையும், தனது எந்த வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவேண்டும் என்ற விவரங்களைப் பதிதல்
 • பணம் தர வேண்டுதல் விவரங்கள் பணம் தருபவரின் கைபேசி திரையில் தெரிதல்
 • பணம் தருபவர் அந்த விவரத்தை தன் கைபேசியில் கிளிக் செய்து தனது வங்கிக் கணக்கின் UPI செயலியைத் திறத்தல்
 • பணம் தர வேண்டுதலை ஏற்றல் அல்லது மறுத்தல்
 • பணம் தர வேண்டுவதை ஏற்றால், அதனை அங்கீகரிக்கும் விதமாக அவர் தனது Mpin ஐப் பதிவிடுதல்
 • பரிவர்த்தனை நிறைவு பெற்று பணம் செலுத்துபவருக்கு வெற்றிகரமாக பணம் செலுத்தப்பட்டது என்ற தகவல் வருதல்
 • பணம் கேட்டவருக்குத் தரப்பட்டது என்ற விவரமும் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது என்ற குறுஞ்செய்தியும் கிடைத்தல்.

ஆதாரம் : இந்திய தேசியப் பணம் வழங்கு கழகம்

2.94871794872
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top