பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / மின்னணு பணப்பரிமாற்றம் / ஒருங்கிணைந்த பணம் செலுத்து ஊடுமுகம் / UPI - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் விளக்கங்களும் (FAQs)
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

UPI - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் விளக்கங்களும் (FAQs)

ஒருங்கிணைந்த பணம் செலுத்து ஊடுமுகம் (UPI) : அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் விளக்கங்களும் (FAQs) இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

UPI மற்றும் IMPS - வேறுபாடு

A. UPI என்பது IMPSல் இருந்து எவ்வாறு வேறுபட்டது?

  • UPI என்பது P2P இழுவைச் செயல்பாட்டை அளிக்கிறது.
  • வாணிக நிறுவனங்களுக்கு / கடைகளுக்குப் பணம் செலுத்துவதை எளிதாக்குகிறது.
  • பணிப்பரிமாற்றத்திற்கு ஒரே ஒரு செயலி
  • ஒற்றை கிளிக், இருகாரணி உறுதிசெய்தல்

பதிவு செய்தல்

A. UPI பயன்படுத்துவதற்கு முன்னர் ஒருவர் பதிவுசெய்து கொள்ள வேண்டுமா?

ஆம். ஒருவர் தமது PSPஐ பயன்படுத்தி பணம் செலுத்துவதற்கு முன்பாக, UPIஐ தனது வங்கிக் கணக்குடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.

B. யாருக்குப் பணம் தர வேண்டும் என்றாலும் அவரைப் பற்றிய விவரங்களையும் பதிவுசெய்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் எத்தகைய விவரங்கள் தேவை?

இல்லை. யாருக்குப் பணம் செலுத்துகிறோமோ அவருடைய விவரங்கள் UPI மூலம் பணம் செலுத்துவதற்குத் தேவையில்லை. ஏனென்றால், பணம் பெறுகிறவரின் மெய்நிகர்முகவரி (Virtual ID) வங்கிக்கணக்கு எண் + IFSC அல்லது கைபேசிஎண் +MMID அல்லது ஆதார் எண் மூலமாக பணம் செலுத்தப்படுகிறது.

இணைப்பதற்கான வங்கி கணக்கு

A. வங்கிக் கணக்கு அவசியமா? கடன் / பற்று அட்டை அல்லது வாலட் மூலம் இணைத்துக் கொள்ளலாமா?

UPIஐ வாலட் உடன் இணைக்க முடியாது. வங்கிக் கணக்குடன் மட்டுமே இணைக்க முடியும்.

B. வெவ்வேறு வங்கிக் கணக்குகளை இயக்க, ஒரே கைபேசியில் ஒன்றுக்கும் மேற்பட்ட UPI செயலிகளைப் பயன்படுத்தலாமா?

ஒன்றுக்கும் மேற்பட்ட செயலிகளைப் பயன்படுத்தி ஒரே வங்கியின் கணக்கையும் செயல்படுத்தலாம். அல்லது வெவ்வேறு வங்கிக் கணக்குகளையும் இயக்கலாம்.

பயனர் பதிவு

A. பணம் பெறுபவரும், பணம் பெறுவதற்காக UPI பதிவுசெய்ய வேண்டுமா?

மெய்நிகர் அடையாளத்துடன் (Virtual ID) பரிமாற்றம் நடந்தால், பணம் பெறுபவரும் மெய்நிகர் அடையாளம் ஒன்றைப்பெற்று, UPI உடன்பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், வங்கிக்கணக்கு +IFSC அல்லது கைபேசி +MMID, ஆதார் எண் ஆகியவற்றின்மூலம் பணப்பரிமாற்றத்திற்கு, பணம் பெறுபவர் UPI உடன் பதிவு செய்திருக்க வேண்டியதில்லை.

கைபேசி தொலைந்துப்போனால்

A. என்னுடைய கைபேசி தொலைந்துவிட்டால் என்னவாகும்?

கைபேசி தொலைந்துபோனால் அந்தத் தொலைபேசி எண்ணை பிளாக் செய்திடவேண்டும். எனவே அந்த எண்ணில் இருந்து எந்த பரிமாற்றத்தையும் தொடங்க முடியாது. ஒவ்வொரு பணப்படிமாற்றத்திற்கும் MPIN தேவை. அதை யாரிடமும் சொல்லிவிடக் கூடாது.

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக்கணக்கு

A. ஒரு மெய்நிகர் முகவரியுடன் பல வங்கிகளின் கணக்கை இணைத்துக் கொள்ள முடியுமா?

முடியும். பல வங்கிகளின் கணக்குகளையும் ஒரே மெய்நிகர் முகவரியுடன் இணைத்துக் கொள்ள முடியும். எனினும் சம்பந்தப்பட்ட PSPகள் வழங்கும் வசதியைப் பொறுத்து இது அமையும்.

பணப்பரிமாற்றத்திற்கான வெவ்வேறு வழிகள்

UPIஐ பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்வதற்கான வெவ்வேறு வழிகள் யாவை?

  • மெய்நிகர் அடையாளம் மூலமாக பணப்பரிமாற்றம்
  • வங்கிக் கணக்கு எண் +IFSC
  • கைபேசி எண் +MMID
  • ஆதார் எண்
  • பெறுதல் / தள்ளுகை, மெய்நிகர் அடையாளம் மூலமாக பணப்பரிமாற்றம்

மற்றவை

1. என்னுடைய கணக்கில் பணம் கழிக்கப்பட்டும் பணப் பரிமாற்றம் நடக்கவில்லை என்றால் என்ன செய்வது?

அவ்வாறு நிகழும் சந்தர்ப்பங்களில், உடனடியாக பணத்தை உங்கள் கணக்கிலேயே வரவு வைக்கும் வசதியை UPI அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் தொழில்நுட்பக் காரணங்களினால் மிக அரிதாகவே இதுபோல் நடக்கும்.

2. UPI மூலமாக ஒருவருக்குப் பணப்பரிமாற்றத்தை நடத்திவிட்டு, அந்தப் பணப்பரிமாற்றத்தை நிறுத்தி வைக்க முடியுமா? (Stop payment)

முடியாது. UPI மூலமாக ஒருமுறை பணம் பரிமாற்றினால் அது திரும்பவும் மாற்றத்தக்கதோ, நிறுத்தி வைக்கப்படக் கூடியதோ அல்ல.

3. UPI பணப்பரிமாற்றம் பற்றிய புகார்களை யாரிடம் தெரிவிப்பது?

எந்த வங்கியின் செயலியை வைத்திருக்கிறீர்களோ, அதன் மூலமாகவே புகார்களைப் பதிவு செய்யலாம்.

4. UPI மூலம் பணப்பரிமாற்றத்திற்கு உச்சவரம்பு உண்டா?

தற்போது, அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய் வரை UPI மூலம் பணம் பரிமாற்றிக் கொள்ளலாம்.

5. UPI செயலியை மாற்றினால், மீண்டும் பதிவுசெய்ய வேண்டுமா? அப்போது பழைய மெய்நிகர் அடையாளத்தையே தொடர்ந்து பயன்படுத்தலாமா?

UPI செயலியை மாற்றினால், மீண்டும் பதிவு செய்ய வேண்டும். ஆனால் அதே மெய்நிகர் முகவரியை / அடையாளத்தைப் பயன்படுத்துவது, சம்பந்தப்பட்ட PSP ஐப் பொறுத்தது.

6. MPIN மறந்து போனால் என்ன செய்வது?

MPIN மறந்து போனால் மீண்டும் புதிய MPIN உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

7. கைபேசி அல்லது சிம்கார்டை மாற்றிவிட்டாலும் UPI ஐப் பயன்படுத்த முடியுமா?

கைபேசி அல்லது சிம்கார்ட் அல்லது கைபேசி செயலி எதையாவது மாற்றி விட்டாலும் கூட மீண்டும் UPIயிடம் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

8. எல்லாவிதமான கைபேசி இயங்குதளங்களிலும் UPIஐப் பயன்படுத்த முடியுமா?

முடியும். தற்போது ஆண்ட்ராய்டு கைபேசிகளில் UPI வசதி கிடைக்கிறது. விரைவில் iOSஸிலும் அது வழங்கப்படும்.

9. என்னுடைய கைபேசியை வேறு ஒருவர் பயன்படுத்தும் போது பாதுகாப்பு இருக்குமா?

UPI மூலமாக எந்த ஒரு பணப்பரிவர்த்தனை ஆனாலும், அதற்கு PIN பதிய வேண்டும். அப்போதுதான் பரிவர்த்தனை நடக்கும்.

ஆதாரம் : http://www.npci.org.in/

3.15517241379
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top