பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நேரடி அன்னிய முதலீடு

நேரடி அன்னிய முதலீடு தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

இந்தியாவில் விரைவுபடுத்தப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான உள்நாட்டு மூலதனம், தொழல்நுட்பம், திறமை பெறுதல் ஆகியவற்றுக்கு உதவுவதற்காக நேரடி அன்னிய முதலீட்டை பெருமளவில் ஈர்க்க வேண்டும்; மேம்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கமும், விருப்பமும் ஆகும். நேரடி அன்னிய முதலீடு என்பது portfolio முதலீட்டிலிருந்து மாறுபட்டதாகும். ஒரு நிறுவனம் அதன் முதலீட்டாளரைவிட அது அமைந்துள்ள நாட்டின் சொத்தாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை உண்டு என்ற தோற்றத்தை நேரடி அன்னிய முதலீடு ஏற்படுத்தும்.

நேரடி அன்னிய முதலீட்டிற்கான கொள்கைக் கட்டமைப்பை இந்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொள்கைக் கட்டமைப்பு வெளிப்படையானது, கணிக்கத்தக்கது, எளிதாக பிரிந்து கொள்ளத்தக்கது ஆகும். இந்தக் கொள்கைக் கட்டமைப்பு ஒருமுகப்படுத்தப்பட்ட நேரடி அன்னிய முதலீட்டுக் கொள்கை தொடர்பான சுற்றறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது. இது ஒவ்வொரு ஆண்டும் அப்போதைய சூழலுக்கேற்ப மாற்றியமைக்கப்படும். ஒழுங்கு முறை மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்படும். இந்திய அரசின் தொழில் மற்றும் வணிக அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறைதான் ஒவ்வொரு முறையும் நேரடி அன்னிய முதலீடு தொடர்பான கொள்கைகளை அறிவிக்கும்.

இந்தியாவில் யார் யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?

இந்தியாவில் வசிக்காத வெளிநாட்டவர் / இந்தியாவைச் சாராத நிறுவனங்கள் (பாகிஸ்தான் குடிமகன் மற்றம் பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தவிர) நேரடி அன்னிய முதலீட்டுக் கொள்கை விதிகளுக்குட்பட்டு இந்தியாவில் முதலீடு செய்யலாம்.

வங்கதேச குடிமக்களோ அல்லது வங்கதேசத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களோ அரசு வழியாக மட்டுமே முதலீடு செய்ய முடியும். நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளின் குடிமகன்களும் அங்கு வாழும் இந்தியர்களும் லாபத்தை தங்களது சொந்த நாட்டிற்கே எடுத்துச் செல்லும் விதிகளின் அடிப்படையில்தான் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும். இத்தகைய முதலீடுகள் வழக்கமான வங்கிகள் வாயிலாக பொதுவான அன்னிய செலாவணி மூலம்தான் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற விதிகளுக்குட்பட்டே பரிசீலிக்கப்படும்.

 • இந்தியாவில் முதலீடு செய்யத் தகுதியுடையவர்கள் பட்டியலிலிருந்து வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் 16.9.2003 முதல் நீக்கப்பட்டுவிட்டன. அதற்கு முன் இந்தியாவுக்கு வெளியில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு பெருநிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் கறுப்பு பட்டியலில் இல்லாத பட்சத்தில், நேரடி அன்னிய முதலீட்டுக் கொள்கையின் அடிப்படையில், வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனங்கள் என்ற அடிப்படையில், அரசு மூலமாக இந்திய அரசின் முன் கூட்டியே ஒப்புதல் பெற்றிருந்தாலோ, தானியங்கி முறை மூலமாக இந்திய ரிசர்வ் வங்கியிடம் முன் வட்டியே ஒப்புதல் பெற்றிருந்தாலோ இந்தியாவில் முதலீடு செய்ய முடியும்.

நேரடி அன்னிய முதலீடுகள் துறை சார்ந்த பயன்கள்

 • உலகளாவிய சில்லரை விற்பனை நிறுவனங்கள் புதிய முதலீடுகளை பெறும்போது,
 • குறுகிய காலத்தில 30-40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்போது,
 • தளவாடங்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், ஹவுஸ்கீப்பிங், பாதுகாப்பு ஆகிய பணிகள் மூலம்
 • மேலும் 40 - 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்போது,
 • தளவாடங்கள், குளிர்பதன கிடங்குகள், கிடங்குகளை அமைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படும்போது,
 • பல்வேறு வரிகளின் மூலமாக அரசுக்கு 2400 - 3000 கோடி வரை அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும்போது
 • காய்கறிகள் மற்றும் அழுகும் தன்மை கொண்ட பொருட்கள் வீணாவதை தடுக்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் உதவும் பட்சத்தில்,
 • நுகர்வோருக்கு 5-10% சேமிப்பை வழங்கும் போது
 • பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்போது.

புதிய விதிகள் சில்லரை வணிகம்

 • ஒற்றைத் தரப் பெயர் கொண்ட சில்லரை வணிகத்தில் 100% நேரடி அன்னிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது.
 • தரப் பெயருக்கு வெளி நாட்டு முதலீட்டாளர்தான் உரிமையாளராக இருக்க வேண்டும்.
 • ஒற்றைத் தரப் பெயர் கொண்ட பொருட்கள் மட்டும்தான் விற்பனை செய்யப்பட வேண்டும்.
 • விற்பனை செய்யப்படும் பொருட்களில் குறைந்தது 30% இந்தியாவில்தான் கொள்முதல் செய்யப்பட வேண்டும். குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கதர் மற்றும் கிராமத் தொழில் நிறுவனங்கள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோரிடமிருந்துதான் கொள்முதல் செய்யப்பட வேண்டும்.
 • இந்தியாவில் கொள்முதல் செய்யப்படும் பொருட்களின் அளவுகளுக்கு அவற்றை கொள்முதல் செய்யும் நிறுவனங்களே சான்றளிக்கலாம் அதை சட்டபூர்வமான தணிக்கையாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
 • மின் வணிகம் மூலமாக எந்த பொருளையும் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படாது.

சில்லரை வணிகம் சம்பந்தப்பட்ட விதிகள்

 • பலவகை தரப் பெயர் கொண்ட சில்லரை வணிகத்தில் 51% நேரடி அன்னிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது.
 • இந்த வகையில் இந்தியாவில் செய்யப்படும் நேரடி அன்னிய முதலீட்டின் அளவு குறைந்தது 10 கோடி டாலராக இருக்க வேண்டும்.
 • ஒட்டுமொத்த நேரடி அன்னிய முதலீட்டில் குறைந்தது 50% 3 ஆண்டுகளில் பின்புல உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் முதலீடு செய்யப்பட வேண்டும்.
 • 30% பொருட்கள் இந்திய சிறுதொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட வேண்டும். இந்த நிறுவனங்களின் தொழிற்சாலை, எந்திரங்கள் ஆகியவற்றின் மொத்த முதலீடு 10 லட்சம் டாலருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 • பலவகை தரப்பெயர் கொண்ட சில்லரை விற்பனை நிலையங்கள் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10 லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும். இவை நகர எல்லையிலிருந்து 10 கி.மீ. சுற்றளவை கவரும் வகையில் அமைய வேண்டும்.
 • மின் வணிகம் மூலமாக எந்த பொருளையும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது.
 • புதிதாக விளைவிக்கப்பட்ட வேளாண் பொருட்கள், காய்கறிகள், மலர்கள், தானியங்கள், பருப்பு வகைகள், கோழிப்பண்ணைப் பொருட்கள், மீன்கள், இறைச்சி ஆகியவை தரப் பெயர் இல்லாதவையாக இருக்கலாம்.
 • வேளாண் விளைப் பொருட்களை கொள் முதல் செய்வதற்கு அரசுக்கு மட்டுமே முன்னுரிமை உண்டு.

சில்லரை வணிக நிறுவனங்கள் விரும்புவது

 • மிகப் பெரிய சந்தை, செலவு செய்வதற்கான வருமானம் அதிகரித்து வருவது, செலவழிக்கும் சக்தி அதிகரித்திருப்பது ஆகிய காரணங்களால் இந்திய சில்லரை வணிக சந்தையின் மதிப்பு 45,000 கோடி டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.07547169811
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top