অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ஆய்வுத் துறை (வங்கிக்குள்)

ஆய்வுத் துறை (வங்கிக்குள்)

அறிமுகம்

ஆய்வுத்துறை, உயர் நிர்வாகத்தின் கண்களாகவும், காதுகளாகவும் செயல்படுகிறது. வங்கிப் பணிகளுக்கான உயரிய பண்புகளோடு சுதந்திரமாக தன் கடமைகளை நிறைவேற்றி வருகிறது. வங்கி செயல்பாட்டின் நோக்கக் கருத்துக்களின் பேரில் வங்கியின் செயல்பாடுகள் சிறப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதிப்படுத்த உயர் நிர்வாகம் அதிகாரமளித்துள்ளது.

குறிக்கோள்

  • ஆய்வுத்துறை தன் அறிவு, திறமை மற்றும் தகுதியான தொழிற்பண்புகள் இவற்றை பயன்படுத்தி நடப்பிலுள்ள நடைமுறைகளின் நிறைவுகள், மற்றும் நம்பகத்தன்மைகளை கூர்ந்து ஆராயவும் மதிப்பீடு மற்றும் அறிக்கை செய்யவும், பின் தொடர் பணிகளை உறுதிபடுத்தப் படவேண்டும்.
  • சட்டங்கள், ஒழுங்குகள், உள்முக கொள்கைகள், நடைமுறைகள் மிக உன்னிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
  • சொத்துக்கள் சரியாக பராமரிக்க / பயன்படுத்த / பாதுகாக்கப்பட வேண்டும்.
  • நிதி நெருக்கடிகள் தவிர்க்கப்படவேண்டும்; செயல்முறைகள் மற்றும் நற்பெயர் இவற்றிற்கு ஏற்படும் இடர்வரவுகள், வராமல் தடுக்கப்பட வேண்டும்.
  • வங்கிகளின் அமைப்பு / செயல்பாடு / தொலைத்தொடர்பு பாதுகாப்பு இவற்றில் போதுமான பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
  • தரமான வாடிக்கையாளர் சேவை காலத்தே அளிக்கப்படவேண்டும்.

நோக்கங்கள்

ஆய்வுத்துறையும், ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டபோதே 1935ல் அமைக்கப்பட்டது. இதன் நோக்கங்கள் பின்வருமாறு

  • கிடைக்கக் கூடிய ஆதாரங்களுடன் அலுவலகங்கள் / கிளைகள் மற்றும் மத்திய அலுவலக துறைகள் இவைகளால், நிறைவேற்றப்பட்ட மற்றும் நிறைவேறக் கூடிய செயல்களை தெளிவான முறையில் வரையறை செய்தல்
  • செயல்திறனை மேலும் தீவிரப்படுத்த, பொருத்தமான முன்னேற்றம் பற்றி ஆலோசனை வழங்குதல்
  • தணிக்கை, செயல்பாடுகள் மற்றும் இதன் பல்வேறு முறைமைகளை மேற்பார்வை செய்தல்
  • அலுவலகங்கள் மற்றும் மத்திய அலுவலக துறைகளின் செயல்பாடுகள் குறித்து உயர் நிர்வாகத்துக்கு, கருத்துகளை அளித்தல்

ஆய்வுத் துறையின் அமைப்பு

வங்கி ஆய்வுத் துறையின் செயல்பாடுகள், முதன்மை பொதுமேலாளரின் நேரடி மேற்பார்வையில் செயல்படுகிறது. இவர் செயலாட்சி இயக்குநர் (ED) ஒருவருக்கு விவரம் அளிக்க வேண்டும் துறையின் செயல்பாடுகளுக்காக, கீழ்கண்ட உட்பிரிவுகள் உள்ளன.

  • திட்டமிடும் பிரிவு
  • தொடர்செயல் பிரிவு
  • கணக்குப் பரிசோசனை கண்காணிப்பு பிரிவு
  • தகவல் ஒழுங்குமுறை தணிக்கை பிரிவு
  • ஆய்வு மற்றும் தணிக்கை உபகுழு (IASC) பிரிவு
  • நிர்வாக பிரிவு

ஆய்வுக் குழுக்கள்

திட்டமிடும் பிரிவு

திட்டமிடும் பிரிவு, ஆண்டுக்கான ஆய்வுத்திட்டத்தை வரைந்து அதை அமல்படுத்தும் பொறுப்பை ஏற்கிறது. தற்போதைய வழக்கத்தின்படி வட்டார அலுவலகங்களில் 15-18 மாதங்களுக்கு ஒரு முறையும் மத்திய அலுவல துறைகளில் 24-30 மாதங்களுக்கு ஒரு முறையும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்சமயம் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 24 ஆய்வுகள் நடத்தப்படுகிறது. பொதுவாக மூன்று குழுக்கள் ஒவ்வொன்றும், பொது மேலாளர் ஒருவரை தலைமையாகக் கொண்டு அமைக்கப்படுகிறது. இந்தப்பரிவின் செயல்பாடுகள் கீழ் காணுபவைகளை உள்ளடக்கியது.

1.  ஆய்வுத் திட்டங்கள் மற்றும் செயலாக்கம் இவற்றிற்கான ஆண்டு நாட்காட்டியை தயார் செய்தல் – இவற்றிலிருந்து

(i) செயலாக்க இயக்குநர்களுக்கு செயலாக்க திட்டங்களை விவரமாக தெரிவித்தல் மற்றும் மேலாண்மை தணிக்கை அறிக்கை (MAR) செயலாக்க இயக்குநர், துனை ஆளுநர் இவர்களுக்கு அளித்தல்

(ii) தேவைப்படின் மேலாண்மை தணிக்கை அறிக்கையில், செயலாக்க இயக்குனர் / துனை ஆளுநர் செய்யும் பரிந்துரைகளின் பேரில் தொடர் நடவடிக்கை எடுத்தல்

2. ஆய்வுத் திட்டங்களின் அரையாண்டு மறுபார்வை

3. மாதத்திற்கு இரண்டுமுறை கிளை நிர்வாகக் குழு BLMC கூட்டங்கள்

4. துறையின் காலாண்டு நடவடிக்கை அறிக்கையை தயார் செய்தல்

5. ஆய்வுக் குழுக்களால் அளிக்கப்பட்ட சிறப்பு / இரகசிய குறிப்புகளின் பேரில் தொடர் நடவடிக்கை எடுத்தல்

6. ஆய்வு வழிகாட்டு முறைகளை காலத்திக்கேற்றவாறு புதிப்பித்தல்

7. வங்கியின் ஆண்டு அறிக்கைக்கு தேவையான உபகரணங்கள்/ தகவல்களை வழங்குதல்.

8. அணிவரிசையில் அமைக்கப்பட்ட பதிவேடுகளை பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல்

9. மத்திய அலுவலக துறைகள் மற்றும் ஆய்வுக்குழுக்களுக்கும் இணைப்பாக செயல்படுதல்

10. மற்றப் பிரிவுகளுக்கு சம்பந்தமில்லாத இதர நடவடிக்கைகளை கவனித்தல்

தொடர் செயல் பிரிவு

பல்வேறு ஆய்வு அறிக்கைகளின் உடன்பாட்டு நிலையை கவனிக்கும் செயலுக்குத் தொடர்செயல் பிரிவு பொறுப்பேற்கிறது.

நடப்பு முறைகளின்படி, ஆய்வு நடந்து முடிந்த 45 நாட்களுக்குள் தணிக்கை துறைகள் மற்றும் அலுவலகங்கள் தங்களது முதல் உடன்பாட்டை அனுப்பவேண்டும். பின் தொடர்ந்து வரும் உடன்பாடுகளை ஒவ்வொரு மாதமும் ஆய்வுத்துறைக்கு அனுப்பப்பட வேண்டும். நிறைவான மற்றும் இறுதியான உடன்பாடுகள் மூன்று மாதங்களுக்கு மிகாமல் செய்துமுடிக்கப்பட வேண்டும். நடப்பிலுள்ள நடைமுறைகளின்படி, முக்கியம் என்று அடையாளமிடப்பட்ட பத்திகளின் பேரில் பத்திவாரியான உடன்பாடுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பிற நடவடிக்கை என்று அடையாளமிடப்பட்ட பத்திகளின் உடன்பாடுகள் துறை தலைவர் / மண்டல இயக்குனருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். எல்லவற்றையும் உள்ளிட்ட உடன்பாடுகள் ஆய்வுத்துறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இந்தப் பத்திகளின் (பாரா) உடன்பாடுகள், தணிக்கையிடப்பட்ட அலுவலகம் / துறை இவற்றின் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மற்றும் தீர்க்கப்பட்டதாயிருக்க வேண்டும். உடன்பாடுகள் பெறப்பட்டவுடன் தொடர் செயல் பிரிவு அதை மதிப்பீடு செய்து தலைமைப் பொது மேலாளரின் இறுதி ஒப்புதலுக்கு வைக்கிறது. உடன்பாடுகள் ஆராயப்பட்ட பின்பு, பின்பற்றப்பட்டது, பின்பற்றப்பட தேவையில்லை அல்லது நிலுவையில் இருப்பவை என்று தரம் பிரிக்கப்படுகிறது.

பின்பற்றப்பட தேவையில்லை என்று பிரிக்கப்பட்ட பத்திகள், பின்பற்றப்பட்டது என்று தரம் பிரிக்கப்பட்டவைகளுடன் சேர்த்து வழக்கமாக அடுத்துவரும் ஆய்வின்போது பரிசீலிக்கப்படும். தேவைப்படும் நடவடிக்கைகள் குறிப்பிட்ட குறைந்த காலத்திற்குள் செய்து முடிக்க முடியாதவையாக இருந்தால், அவைகளும் இதனுடன் சேர்க்கப்பட்டு தகுந்த ஆயலின்போது பரிசீலிக்கப்படும். உடன்பாடுகளை ஆராய்வதற்காக மேலாளர் நேரடியாக பொதுமேலாளரின் கவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். இந்தப் பிரிவில் உள்ளடங்கிய மற்ற நடவடிக்கைகள் :

  • மேலாண்மை தணிக்கை மற்றும் நடைமுறை ஆய்வு அறிக்கைகளின் உடன்பாடுகள் காலத்தே பெறப்படுவதையும், ஆராயப்படுவதையும் கவனிக்கிறது.
  • செயல் இயக்குநர் குழுவால் நெருக்கடியானவை என்று அடையாளம் காணப்பட்ட பத்திகள் மற்றும் அதற்குரிய உடன்பாடுகளை ஆய்வு மற்றும் தணிக்கை உபகுழுவின் (IASC) முன் சமர்ப்பித்தலை கவனிக்கிறது.
  • உடன்பாடுகள் அறிக்கையின் காலாண்டு மறுபார்வையை செயல்படுத்துகிறது
  • எல்லா சுற்றறிக்கைகளின், காப்பு கோப்புகளை பராமரித்தல்
  • ஆய்வு அறிக்கைகளின் பேரில் உருவான ஒன்றிணைக்கப்பட்ட கருத்துகளின் கருத்துப் பதிவேட்டை பராமரித்தல்

தணிக்கை கண்காணிப்பு பிரிவு

உயர் மேலாண்மையின் தீர்மானத்திற்கு ஏற்ப, ஆய்வுத்துறையில், ஒரு தணிக்கை கண்காணிப்பு பிரிவு அமைக்கப்பட்டிருக்கிறது. 4 விரைவான தணிக்கையுடன் கூடிய கண்காணிப்பு குழுக்கள் (SNAM) அமைப்பதற்கு, கொள்கை அளவில் அனுமதிக்கப் பட்டிருக்கிறது. மேற்கண்ட அமைப்பின்படி மத்திய அலுவலக ஆய்வுத்துறை, உள்முக தணிக்கை நடவடிக்கைகளின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்கிறது. எல்லா வங்கி அலுவலகங்களின் இணக்கமான செயல்பாட்டை உறுதிசெய்வதற்காக, ஒருங்கிணைந்த தணிக்கை மற்றும் கட்டுப்பாடு சுய மதிப்பீடு தணிக்கை (CSAA) Control Self Assessment Audit இவைகளின் எல்லா நடவடிக்கைகளையும், ஒன்றாக்கவும் மற்றும் ஒத்த தரமுடையதாகவும் செய்வதற்காகவே இந்த மேற்பார்வை பணியை செய்கிறது. இந்த இலக்கை அடைவதற்கு இந்தத்துறை எங்கெல்லாம் அவசியப்படுகிறதோ அங்கெல்லாம் நேரடி ஆய்வுகளையும் மறைமுக கண்காணிப்புகளையும் செயல்படுத்துகிறது. அலுவலகங்களிலிருந்து நியமித்த கால இடையிவெளியில் பெறப்படும் விவர அறிக்கைகளின் மூலம் மறைமுக கண்காணிப்பு மேற்கொள்ளப் படுகிறது. இவைகளை ஆராய்ந்து தகுதியானவையென்று கருதப்படும் விவர அறிக்கைகளின் பேரில் தொடர் செயல் மேற்கொள்ளப்படும்.

வங்கிகளில் ஒருங்கிணைந்த தணிக்கை மற்றும் கட்டுப்பாடு சுயமதிப்பீடு தணிக்கை இவைகளின் நடைமுறை ஏற்பாடுகளை மேற்பார்வை செய்ய, நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகிறது. எப்பொழுதெல்லாம் அவசியம் என்று கருதுகிறதோ அப்பொழுது விரைவான தணிக்கையுடன் கூடிய கண்காணிப்பு குழுக்கள் (SNAM) நியமித்த கால இடைவெளியில் அலுவலகங்களில் நேரடி ஆய்வு மேற்கொள்ளும்.

தகவல் ஒழுங்குமுறை தணிக்கை பிரிவு

வங்கியில் முக்கிய தகவல் வசதிகளை நடைமுறைப்படுத்துவது குறித்து திட்டமிடுதல் மற்றும் செயலாக்கம் செய்வதே தகவல் ஒழுங்குமுறை தணிக்கைப் பிரிவின் முக்கிய பணியாகும். நேரடி ஆய்வுகள் தவிர, வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்தல், தணிக்கைக்கான உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை வழங்குதல் போன்ற பல்வேறு முன்னேற்றப் பணிகளையும் செய்வது அவசியமகிறது.

ஆய்வு, தணிக்கை உபகுழு (IASC) பிரிவு

ஆய்வு, தணிக்கை உபகுழு மற்றும் செயலாக்க இயக்குநர் குழு இவற்றின் நியமித்த கால கூட்டங்களை, ஒன்றிணைத்தல் மற்றும் ஏற்பாடு செய்தல் இந்தப்பிரிவின் பொறுப்பாகும். தற்சமயம் இந்தக் கூட்டங்கள் தோராயமாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்தப் பிரிவு, செயலாக்க இயக்குநர் குழு மற்றும் ஆய்வு தணிக்கை உபகுழு இவற்றை கூட்டுவதற்கான செயலாண்மைத் துறை சார்ந்த எல்லாப் பணிகளையும் செயல்படுத்துகிறது. மேற்கண்ட கூட்டங்களுக்கான நினைவுக் குறிப்பேடு தயாரித்தல், கூட்ட நடவடிக்கைகளை பதிவு செய்தல் மற்றும் பதிவு செய்தவைகளில் நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு செயல்களை இப்பிரிவு செயல்படுத்துகிறது.

நிர்வாகப் பிரிவு

வருகை, விடுமுறை, பணிப்பதிவேடு, நியமனம், மாற்றல், பயிற்சி, ஒழுங்குமுறை, அனுப்புதல், கணக்குப் புத்தகங்களை பராமரித்தல், உள்ளூர் போக்குவரத்துப்படி, விடுமுறை பயணப்படி சலுகை கோரல்கள் (LFC Claims), செய்தித்தாள், புத்தக மானியம், தொலைபேசி போன்ற நிர்வாக விஷயங்களை கவனித்துக்கொள்கிறது. அலுவலக மொழிக் கொள்கையை இந்தத் துறையில் அமல்படுத்துவதை ஆட்சிமொழிப் பிரிவு கவனிக்கிறது.

ஆய்வுக் குழுக்கள்

பொதுமேலாளர் ஒருவரை தலைமையாகக் கொண்ட, மூன்று ஆய்வுக் குழுக்கள் ஆய்வுகளை மேற்கொள்ளுகிறது. தணிக்கையின் தன்மைக்கேற்ப குழுவின் அமைப்பு தீர்மானிக்கப்படும். ஒவ்வொரு குழுவும் பொதுவாக 2 உதவிப் பொது மேலாளர்களையும் 3 முதல் 5 மேலாளர்களையும் கொண்டதாக இருக்கும். குழுவின் அங்கத்தினர்கள், பணிக்கு வருவதை பொருத்தும் குழுவின் தகுதியை பொருத்தும் குழுக்களுக்கிடையே மாற்றம் செய்யப்படுவர்.

ஆய்வு மற்றும் தணிக்கை உபகுழு

ஆய்வு மற்றும் தணிக்கை உபகுழு இவற்றின் உடன்பாடுகளை, குறித்த கால இடைவெளியில் மறுபார்வை செய்வதற்காக, மத்தியக் குழுவின், சிறுகுழு, 1992 ஜூன் 24ல் நடந்த இதன் கூட்டத்தில், ஆய்வு மற்றும் தணிக்கை உபகுழு ஒன்றை அமைக்க பரிந்துரை செய்தது. மேலும் உள்முக தணிக்கை மற்றும் ஆய்வுப் பயிற்சிகளின் திறனை மேம்படுத்தவும், செயல்பாட்டை சிறப்பானதாக்கவும், முக்கியத்துவம் அளிக்கும் நோக்கிலும் இக்குழு செயல்படுகிறது.

ஆய்வு மற்றும் தணிக்கை உபகுழுவில், கவர்னரால் நியமிக்கப்பட்ட மத்தியக் குழுவின் நான்கு இயக்குநர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.  துணை ஆளுநர், ஆய்வுப் பொறுப்பை கவனிக்கும் செயல் இயக்குநர், நிர்வாகப் பொறுப்பை கவனிக்கும் செயல் இயக்குநர் ஆகியோர் இதன் உறுப்பினர்களாவர். ஆய்வுத்துறையின் முதன்மை பொது மேலாளர் இந்த உபகுழுவின் உறுப்புச் செயலாளராக செயல்படுகிறார். மற்ற துணை ஆளுநர்களும் / செயல் இயக்குனர்களும் ஆய்வு தணிக்கை உபகுழுவின் கூட்டங்களுக்கு அழைக்கப் படுவர். இந்த உபகுழு வருடத்திற்கு 5 முதல் 6 முறை கூடும்.

ஆய்வறிக்கையில் தீர்வு காணப்பெறாதவை என்ற பத்திகளும் (பாராக்கள்) செயல் இயக்குநர் குழுவால் நெருக்கடியான பகுதி என்று அடையாளம் காணப்பட்டவைகளும், கலந்தாய்வு மற்றும் வழிகாட்டலுக்காக ஆய்வு தணிக்கை உபகுழுவின் முன் வைக்கப்படும். மேலும் மத்திய அலுவலக கட்டுப்பாட்டுத் துறையால் (அதாவது அரசு மற்றும் வங்கிக் கணக்குத் துறை) அபிப்பிராயம் கூறப்பட்டதும் வங்கியின் ஆண்டுக் கணக்கின் பேரில், சட்டப்பூர்வ தணிக்கையாளரால் அளிக்கப் பட்டதுமான அறிக்கையை ஆய்வு தணிக்கை உபகுழு (IASC) ஆராயும். மேலும் வெளிநாடுகளில் முதலீடு மற்றும் செயலாக்கத்துறை (DEIO) யின் வாணிக பரிவர்த்தனை அறை செயல்பாடுகளின் பேரில் வெளிமுக தணிக்கையாளரால் அளிக்கப்படும் அறிக்கையும் ஆராயும்.

ஆய்வு மற்றும் தணிக்கையை உபகுழு எல்லா நோக்கிலும் பரிசீலனை செய்கிறது. இந்த அமைப்பை முன்னேற்றமடையச் செய்ய தேவையான வழிகாட்டுதலையும் வழங்குகிறது.

செயலாக்க இயக்குநர்களின் குழு

எல்லா ஆய்வு அறிக்கைகளும் முதலில் செயலாக்க இயக்குநர்களின் குழுவால் பரிசீலனை செய்யப்படும். ஆய்வு அறிக்கைகளின் உடன்பாட்டு நிலையை, ஆய்வு கணக்குப் பரிசோதனை உபகுழுவிடம் ஆராய்வதற்காக வைக்குமுன், செயலாக்க இயக்குநர்களின் குழு தொடர்புடைய மண்டல இயக்குநர்/துறைத் தலைகளின் முன்னிலையில் பரிசீலனை / கலந்து ஆலோசனை செய்யும்.

இதன்பின், வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தும் மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் முக்கிய ஒழுங்கீனங்கள், மீறப்பட்ட விதிமுறைகள், தீர்மானிக்கப்பட்ட விதிமுறைகளை நடைமுறைபடுத்தாமை மற்ற நெருக்கடியான பகுதிகள் என்று செயலாக்க இயக்குநர்களின் குழுவால் அடையாளம் காணப்பட்டவைகள் ஆய்வுக் தணிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.

வங்கியில் ஆய்வின் வகைகள்

உள்முக ஆய்வின் செயல்களை மிக்கப் பயனுள்ளதாக உயர்த்தும் நோக்கில், குறிப்பிட்ட நோக்கங்களுடன் பல்வேறு வகையான ஆய்வுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தற்சமயம் கீழ்காணும் வகைகளில், ஆய்வுத் துறை மூலம் ஆய்வுகள் மேற்கொள்ள / ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது.

  • மேலாண்மை தணிக்கை மற்றும் ஒழுங்குமுறை ஆய்வு (MASI)
  • தகவல் ஒழுங்குமுறை தணிக்கை (ISA)
  • உடனுக்குடனான தணிக்கை (Concurrent Audit)
  • கட்டுப்பாடு சுயமதிப்பீடு தணிக்கை (Control and Self Assessment Audit)

மேலாண்மை தணிக்கை மற்றும் ஒழுங்குமுறை ஆய்வு

இந்த ஆய்வு முறையில் ஆய்வுக்குழுக்கள், ஏற்கனவே உள்ள ஒழுங்குமுறைகளின் நம்பகத்தன்மை, தகுதி இவைகளை கூர்ந்து ஆராய்ந்து, மதிப்பீடு செய்து விவரிக்கிறது. சட்டங்கள், ஒழுங்குமுறைகள், உள்முக கொள்கைகள், வழிமுறைகள், உன்னிப்பாக பின் பற்றப்படுவதை தொடர் செயலாக உறுதிசெய்கிறது. தீர்மானிக்கப்பட்ட வழிமுறைகள் மற்றும் மத்திய அலுவலக நெறிமுறைகளின்படி இப்பணிகள் மேற்கொள்ளப் படுகிறது. ஒழுங்கு முறை ஆய்வு நடத்துவதோடு அல்லாமல் ஆய்வுக்குழு மேலாண்மை தணிக்கை ஆய்வுகளையும் நடத்துகிறது. இதன்மூலம் வங்கியின் இலக்குகள் மிகப் பயனுள்ளதாகவும், அதிகாரப் பகிர்வு, துறைகள் / அலுவலகங்களில் வாடிக்கையாளர் சேவை, மேலாண்மைத் திறன் போன்றவற்றை சீர்தூக்கிப் பார்க்கிறது.

தகவல் ஒழுங்குமுறை தணிக்கை

கீழ்க் காணுபவற்றை சரிபார்ப்பதே தகவல் ஒழுங்குமுறை தணிக்கையின் நோக்கம்.

  • அதிக முக்கியத்துதம் வாய்ந்த, தகவல் ஒழுங்குமுறை ஆதாரங்கள் எல்லா அச்சுறுத்தல்கள் மற்றும் ஆபத்துக்குள்ளாகும் நிலையிலிருந்து முறையாக பாதுகாக்கப்பட்டிருக்கிறதா;
  • எந்திரமயமாக்கல் / கணிணிமயமாக்கலின் நடவடிக்கைகள், நம்பகத் தண்மையும், ஒருமைப்பாட்டையும் மற்றும் கிடைக்கும் ஆதாரங்கள் அதன் செயல்முறைகளை உறுதிபடுத்துவதாகவும் உள்ளதா;
  • ஒழுங்குமுறைகள் மிக்கப் பயனுள்ள வழிகளிலும் சிறப்பாகவும் பயன்படுத்தப்படுகிறதா;
  • ஏற்படுத்தப்பட்டிருக்கிற செயல்முறை கொள்கைகள் மற்றும் செயல் முறைகள் அதிகாரிகளால் கடைப்பிடிக்கப்படுகிறதா;
  • நடப்பிலுள்ள பாதுகாப்பு கட்டுப்பாடுகள், ஆதாரத் தகவல்கள் (Back up) பிற நடைமுறைகள், போன்ற தகவல்களுக்கு பேரழிவுகள் மூலம் இழப்பு வராமலும் அல்லது தவறாக தகவல்களை மாற்றுவதிலுமிருந்து தடுப்பதற்கு போதுமானதாக உள்ளதா.

தகவல் ஒழுங்குமுறை தணிக்கையின் நோக்கங்கள் பின்வருமாறு

  • கணிணிமய சூழலில் வங்கியின் மத்திய அலுவலக துறைகளும் வட்டார அலுவலகங்களும், தகவல்களை செயல்முறைபடுத்துவதை எல்லா நோக்கத்திலும் தகவல் ஒழுங்குமுறை தணிக்கை மறுபார்வை செய்கிறது.
  • மத்திய அலுவலகம் தகவல் தொழில்நுட்ப துறையின் மூலம் சுற்றறிக்கையாக வெளியிடப்பட்ட பொதுவான கொள்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுடன், பயன்படுத்தும் துறைகள் / மண்டல அலுவலகங்கள் இவற்றின் உடன்பாட்டு மதிப்பீடுகளும் இவற்றில் அடங்கும். மேலும் விற்பனையாளரிடமிருந்து பெறப்பட்ட கணிணி சார்ந்த உதிரிபாகம் / மென்பொருள் சேவைகளை மறுபரிசீலனை செய்து நடைமுறைப்படுத்துகிறது.
  • விற்பனையாளர் வழங்கும் தகவல் தொழில்நுட்ப ஒழுங்குமுறையின் நம்பகத்தன்மையை மதிப்பிடுகிறது, தினந்தோறும் நடக்கும் பணி ஒழுங்குகளின் நம்பகத்தன்மை மற்றும் தரம் ஆகிய இவ்விரண்டையும் தீர்மானிக்கிறது.
  • தடுமாற்றமான நேரங்களில், பிரச்சினைகளை சமாளிக்கும் அளவு, நெருக்கடி மேலாண்மையின் ஒட்டு மொத்த தயார்நிலை, போதுமானதாக இருக்கிறதா என்பதையும் மதிப்பீடு செய்கிறது.
  • தகவல் தொழில்நுட்ப ஒழுங்குமுறையை செயல்படுத்தும் மற்றும் நிர்வகிக்கும் அலுவல்களின், போதிய தகுதிகளை மதிப்பீடு செய்கிறது.
  • தணிக்கை குழுக்களால், ஒழுங்குமுறைகள் மற்றும் நடைமுறைகளின் கையேடுகள் பயன்படுத்தப்பட்டதின் நிலையை சரி பார்க்கிறது
  • வங்கியின் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல் தொழில் நுட்ப ஆதாரங்களின் விலை ஆதாய பகுப்பாய்வின் (cost benefit analysis) செயல்பாடுகளும் இதனுள் அடங்கும்
  • சொத்துக்களை பாதுகாக்கவும் தகவல் ஒருங்கிணைப்பை பராமரிக்கவும், நம்பகத்தன்மையையும் மற்றும் எளிதில் கிடைக்கக் கூடிய தன்மையையும் பயனுள்ள முறையில் வங்கியின் இலக்கை அடைவதற்கும் மற்றும் ஆதாரங்களை சிறந்த முறையில் பயன்படுத்தவும் தகவல் ஒழுங்குமுறைகளின் பயன்பாடு இருக்கிறதா என்பதை தீர்மானிக்க சான்றுகளை சேகரித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவை தகவல் ஒழுங்குமுறை தணிக்கையின் நோக்கங்களில் உள்ளடங்கும்.
  • தகவல் ஒழுங்குமுறை சூழலில், ஏற்கனவே இருக்கின்ற பல்வேறு பாதுகாப்பு கட்டுப்பாடுகளை அடையாளம் காணவும், போதிய அளவில் இருக்கிறதா என்பதை மதிப்பிடவும் இவை தேவைப்படும் இடங்களில் பரிந்துரைகள் வழங்குதலும், தகவல் ஒழுங்குமுறை செயல்பாட்டில் உள்ளடங்கும்.

உடனுக்குடனான தணிக்கை

பணிகளை மறு ஒழுங்குபடுத்துதல் / பணிகளை ஒன்றாக்குதல் – அமல்படுத்த பரிந்துரை செய்யும் குழு, இவற்றிற்கிடையில் மண்டல / மத்திய தணிக்கை பிரிவுகள் (RACs/CACs) மூடப்பட்டு, இவற்றின் பணிகள் ஆய்வு / கட்டுப்பாடு சுய மதிப்பு தணிக்கை / ஒருங்கிணைந்த தணிக்கை பிரிவுகளால் கவனிக்கப்படுகிறது. அதன் விளைவாக மண்டல தணிக்கை பிரிவு / மத்திய தணிக்கைப் பிரிவு ஆகியன 2004 ஜூலை 1 முதல் மூடப்பட்டு இவற்றின் பணிகள், மூன்றாகப் பிரிக்கப்பட்டது, அவையாவன

  • ஒருங்கிணைந்த தணிக்கை
  • கட்டுப்பாடு சுயமதிப்பு தணிக்கை மற்றும்
  • மேலாண்மை தணிக்கை.

கட்டுப்பாடு சுயமதிப்பு தணிக்கை(CSAA)

‘சர்மா செயற்குழு’ பரிந்துரையின் விளைவாக 1999 ஜூலை முதல் வங்கிகளில் கட்டுப்பாடு சுயமதிப்பு தணிக்கை (CSAA) அறிமுகப் படுத்தப்பட்டது. பல்வேறு துறைகள் ஒழுங்கான தற்பரிசோதனை மற்றும் பலவீனங்களை மதிப்பீடு செய்வதற்கு அதிகாரமளிப்பதே இதன் (CSAA) நோக்கமாகும். அதனால் சரியான நேரத்தில் மறுபரிசீலனை செய்யவும், திருத்தமான நடவடிக்கைகள் அறிமுகப் படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இதன் நோக்கமானது, குறுகிய கால இடைவெளிகளில் உள்முக கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்வதை எளிதாக்கவும் ஒழுங்கான ஆய்வின் முயற்சிகளையும் மற்றும் தணிக்கையின் அமைப்பையும் மேலும் வலுவூட்டுவதாகும். மண்டல / மத்திய தணிக்கை பிரிவுகள் (RACs/CACs) 2004 ஜூலை 1 முதல் மூடப்பட்ட பிறகு, கட்டுப்பாடு சுயமதிப்பு தணிக்கையின் நோக்கமும், பொறுப்புகளும், விசாலமாகப் பெரிதாக்கப்பட்டது.

சர்வதேச தர அமைப்பு 9001-2000 மற்றும் பிரிட்டீஷ் தரம் - 7799 நற்சான்றுகள்

வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிப்பிரிவுகள் / துறைகளுக்கு சர்வதேச தர அமைப்பின் 9001-2000 நற்சான்றுகளை பெற வங்கி தீர்மானித்திருக்கிறது. அதாவது பண நிர்வாகம், பொதுக்கடன் அலுவலகம், பொதுக் கணக்குத் துறை, வைப்புக் கணக்குத் துறை மற்றும் நிர்வாகம் மற்றும் ஊழியர் மேலாண்மை துறை, மனிதவள மேம்பாட்டு துறை ஆகியன. சர்வதேச தர அமைப்பு திட்டப் பணிகளை இணைக்கும் செயல் ஆய்வுத் துறையிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இது சம்பந்தமான பணிகளை ஒருங்கிணைக்க, ஒருங்கிணைந்த குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பின்னர் பிரிட்டீஷ் தர நற்சான்று BS-7799 (தகவல் பாதுகாப்பு சார்ந்த) பெறவும் தீர்மானிக்கப்பட்டது. ஆகையால் நற்சான்று சம்பந்தமாக தேவையான நடவடிக்கைகளும் அந்த தரத்தின் கீழ் தொடங்கப்பட்டது. ஆரம்பமாக கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் மண்டல அலுவலகங்களிலும் பணம் வழங்கல் மற்றும் வங்கியியல் துறைகளிலும் மத்திய அலுவலக துறைகளான பணநிர்வாகத்துறை (DM) மற்றும் அரசு வங்கிக் கணக்குத் துறைக்கும் (DGBA), சர்வதேச தரசான்று 9001-2000 ஐ பெறவும், வெளிநாட்டு முதலீடு இயக்கத்துறை (DEIO) மற்றும் உள்முக கடன் நிர்வாகத்துறை (IDMD) இவற்றிற்கு பிரிட்டீஷ் தரச்சான்று 7799 பெறவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate