অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுத் துறை

பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுத் துறை

பணிகள்

ரிசர்வ் வங்கி பொருளாதார ஆய்வில் ஒரு உயர்ந்த பாரம்பரியம் கொண்டது. இதன் பொருளாதார பகுப்பாய்வு மற்றும் கொள்கைத்துறை:

  • இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் அடிப்படை விஷயங்கள் மற்றும் பிரச்சினைகள் (உள்நாடு மற்றும் பன்னாடு) குறித்து பகுப்பாய்வு செய்கிறது
  • இந்திய பொருளாதார பண்புகள் குறித்த புள்ளி விவரம் மற்றும் தகவல்களை வழங்கும் முதன்மை ஆதாரமாக விளங்குகிறது.

அவை

பணம் மற்றும் கடன்களின் மொத்த அளவு ஏற்றுமதி இறக்குமதி நிலுவை, வெளிநாட்டு கடன் பற்றிய புள்ளி விவரங்கள், உள்நாட்டுக் கடன், அரசு நிதிநிலை புள்ளி விவரங்கள், பணப் புழக்கம், மற்றும் நிதிச் சேமிப்பு பொருளாதார கொள்கை ஏற்படுத்தல், பணவியல், வங்கி மற்றும் நிதிக் கொள்கைகள் உருவாக்குதல் ஆகிய இந்த பகுதிகள் பற்றி அறிவுரைகள் / உதவிகள் வழங்குவது மற்றும் தன் கருத்தை தெரிவிப்பது, மேலும் ரிசர்வ் வங்கியின் பொருளாதார நூல் வெளியீடுகளைத் தயார் செய்கிறது.

உரிய நேரத்தில், தரமான, தகவல்களை தருவதை பொருத்தவரையில் ரிசர்வ் வங்கி சர்வதேச தரத்திற்கு ஒத்திருக்கிறது. இத்தகைய தகவல்கள் பல்வேறு வெளியீடுகள் மற்றும் இணையதளம் மூலமாக குறித்த காலத்தில் பரவலாக்கப்படுகிறது.

இத்துறை 6 முக்கிய வெளியீடுகளை வெளியிடுகிறது - வருட வெளியீடு (வருடாந்திர அறிக்கை, பணம் மற்றும் நிதி அறிக்கை, வங்கியல் மற்றும் நிதியின் போக்கு மற்றும் முன்னேற்ற அறிக்கை, மாநில அரசுகளின் நிதிபற்றிய அறிக்கை), மாதவெளியீடு (புள்ளிவிவர பிற்சேர்க்கை) மற்றும் வருடத்திற்கு மும்முறை வெளியிடப்படும ஆய்வுப் பத்திரிகை (பிரத்தியேகமான ரிசர்வ் வங்கி செய்தி இதழ்). இத்துடன், ஆய்வு அறிக்கைகள் பணியாளர் ஆய்வறிக்கைதொடரில் வெளியிடப்படுகிறது. இந்த வெளியீடுகள் பகுப்புத்திறன் மற்றும் உள்ளடக்கம், சந்தையில் பங்கெடுப்போர், பகுப்பய்வாளர்கள், கல்வியாளர்கள், மற்றும் சர்வதேச சமுதாயம் ஆகியவர்களுக்கு தகவல் தரும் ஆவணங்களாக நிறுவப்பெற்றுள்ளன.

தனது ஆராய்ச்சி பகுப்பாய்வுகள் மூலம் ரிசர்வ் வங்கியின் கொள்கை வடிவமைப்பிற்கு உதவுவதுடன் சர்வதேச நிதி அமைப்பு நாட்டின் கலந்தாய்வுகள், தரப்படுத்தும் முகமைகளுடனான கருத்துப் பரிமாற்றங்கள், ஆகியவற்றிலும் இணைந்து செயலாற்றுகிறது. மேலும் அரசிற்கு கொள்கை சார்ந்த உதவி, பொருளாதார கருத்தாய்வு (Economic Survey) நிதியமைச்சரின் நிதிநிலை அறிக்கை பேச்சு, பாராளுமன்ற கேள்விகள் ஆகியவை சம்பந்தமான பின்னணி விபரங்களை தருகிறது. ஆய்வை மேம்படுத்துகிறது. மற்றும் கருத்தரங்கு, இணைந்த ஆய்வுகள் அறக்கொடை திட்டங்கள் ஆகியவை மூலம் பொருளாதாரம் குறித்த முக்கிய விஷயங்களில் வெளி வல்லுநர்கள் கருத்தை பெறுகிறது.

17 பல்கலைகழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ரிசர்வ் வங்கியில் ஏற்படுத்தப்பட்ட ஆய்வு இருக்கைகள், ஆய்வு மாணவருக்கு உதவும் திட்டங்கள் குறிப்பிட்ட ஆய்வுத்திட்டங்கள், வெளியீடுகள் ஆகியவற்றிற்கு உதவும் சிறப்பு நிதி உதவிகள் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.

பெரும்பொருளாதாரம், வங்கியில் மற்றும் நிதியியல் ஆகியவற்றில் புகழ்பெற்றவர்கள் உரை ஆற்றும் இரண்டு வருடாந்திர உரை நிகழ்ச்சிகளான் சி.டி. தேஷ்முக் மற்றும் எல்கே.ஜா நினைவு சொற்பொழிவுகளையும் ஏற்பாடு செய்கிறது.

தெற்காசிய கூட்டமைப்பு மத்திய வங்கி கவர்னர்கள் மற்றும் நிதிச் செயலாளர்கள் ஆகியோரின் வலை இணைப்பான தெற்காசிய கூட்டமைப்பு நிதி (SAARC FINANCE) குறித்த பணிகளையும் ஒருங்கிணைக்கிறது. மத்திய அலுவலகத்தில் ஒரு சிறந்த நூலகத்தையும் பராமரிக்கிறது.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

கடைசியாக மாற்றப்பட்டது : 7/12/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate