பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வங்கி சாரா மேற்பார்வைத் துறை

வங்கி சாரா மேற்பார்வைத் துறை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

குறிக்கோள்

 • வங்கி சாரா நிதி நிறுவனங்களை நிதியியல் முறைகளின் ஒன்றுசேர்ந்த ஆரோக்கியமான பங்காக மேம்படுத்துவது.
 • அதன்மூலம் அவைகளில வைப்பு வைத்திருப்போர் நலன் கருதி மறைமுக பாதுகாப்பு தருவது

ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை கட்டமைப்பு

இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் ஜனவரி 1997 திருத்தப் பட்டப்படி, ஏனையவற்றிற்கிடையே கீழ்கண்டவைகளும் கூறுகிறது

 • வங்கி சாரா நிதி நிறுவனங்களின் நுழைவு குறித்து கொள்கை வகுத்தல்
 • குழுமமாக்கப்படாத அமைப்புக்கள் வைப்புநிதி பெறுவதை (சில விதிவிலக்குகள் தவிர) தடைசெய்தல்
 • சொத்துக்கள் பற்றிய விபரங்களுக்கான கட்டுப்பாடுகளை வகுத்திட ரிசர்வ் வங்கியின் அதிகாரம்
 • கட்டாயமாக பதிவுசெய்தல், சொத்துக்களை தயார்நிலை நிதியாக பராமரித்தல்
 • வைப்புநிதி பெறுவது பற்றிய அறிவுரைகள், விவேக ஒழுங்கீடு
 • வைப்பு நிதி பெறும் NBFCகளுக்கான பரந்துபட்ட நெறிமுறைகள் மூலம் கட்டுப்படுத்துதல்
 • பதிவு சான்றிதழ் ரத்துசெய்தல், வைப்புநிதி பெறுவதை தடைசெய்தல், சொத்து உரிமையை மாற்றுதல், குற்றவியல் புகார்களை மற்றும் சீர் செய்ய முடியாத நிறுவனங்களை மூடுவதற்காக மனுவை பதிவு செய்தல்.
 • ரிசர்வ் வங்கியின் பார்வையாளர்களை சில நிறுவனங்களில் நியமித்தல்

இந்த அடிப்படை சட்ட கட்டமைப்பின்கீழ், ரிசர்வ் வங்கி மேற்பார்வை கட்டமைப்பை NBFC க்காக உருவாக்கியிருந்தது,

a.  நேரடி ஆய்வுகள் (Camels Pattern)

b.  விவர அறிக்கைகளின்மூலம் தொலைநிலை கண்காணிப்பு

c.  சந்தை நுண்ணறிவு

d.  விதிகளை மீறிய நிகழ்வுகள் பற்றிய தணிக்கையாளரின் அறிக்கை

மேம்பாட்டு நடவடிக்கைகள்

 • இத்துறையில் அங்கீகாரமில்லாத மற்றும் மோசடியான நடவடிக்கைகளை அகற்ற சட்டம் இயற்ற மாநில அரசுகளுடன் ஒன்றுபட்டு செயல்படுதல்.
 • வைப்பு நிதியாளர்களுக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வை அளித்தல்,
 • வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் மற்றும் வைப்புதாரர்களுக்கான பயிற்சிகள்/ கருத்தரங்குகள்.
 • தீர்மானங்களில் உதவிட முறைசாரா ஆலோசனை குழு
 • NBFCன் சுய ஒழுங்குள்ள அமைப்புகளை துவங்குவதற்கு உதவி செய்தல்
 • NBFCன் பணியாளர்கள் மாநில அரசு மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல்

நடப்பு முக்கியத்துவம்

 • அங்கீகாரமில்லாமல் வைப்பு நிதி பெறுவதை வழக்கு தொடரக்கூடிய குற்றமாக கருத வேண்டி, புதிய சட்டம் கொணர்தல்
 • பலதரப்பட்ட மக்களுக்கு (NBFC களின் தணிக்கையாளர் உட்பட) கல்வி சார்ந்த பிரசாரம், பயிற்சி/கருத்தரங்கம் முதலியவற்றின் மூலம் பொது மக்கள் அறியும் வண்ணம் இன்னும் பெருமளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தல்
 • NBFC களின் சொத்து – பொறுப்பு / இடர்நேர் மேலாண்மைகளின் முறைகள் ஆகியவற்றை செயல் முறை படுத்தல்
 • தகவல் தெரிவித்தல் குறித்த நியமங்களை தீவிரமாக்கல், நிதி அறிக்கைகளுக்கு புதியவடிவம் கொணர்தல்
 • இணைய மயக்காக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பித்தல்

நிறுவன அமைப்பு

 • ஜூலை 1997ல் ஆரம்பிக்கப்பட்டது, இன்றுவரை 16 வட்டார  அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன
 • தகவல் பரிவர்த்தனை மற்றும் தொலைக்காட்சிக் கலந்தாய்வுக் கூட்டம் ஆகியவற்றிற்காக மத்திய அலுவலகமும் வட்டார அலுவலகங்களும் பெரும்பரப்பு வலையமைப்பில் (WAN) ஒன்றிணைக்கப் பட்டுள்ளன
 • வேகமான ஒருமுகப்பட்ட நடவடிக்கைக்காக ஒழுங்கீடு மற்றும் மேலாண்மை பணிகள் ஒருமைப்படுத்தப் பட்டுள்ளன.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

3.12195121951
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top