பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (ATM)

தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (ATM) பற்றின தகலவல்கள்

1. தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் என்றால் என்ன?

ATM என்பது ஒரு கணினி மயமாக்கப்பட்ட இயந்திரம். இதன்மூலம் வங்கிகளின் வாடிக்கையாளர்கள், வங்கிக்கிளைக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமின்றி, தங்கள் வங்கிக் கணக்குகளை பார்க்கவும், பணத்தை எடுக்கவும் மற்றும் வேறு நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் உதவுகிறது.

2. ஒரு ATMஇல் எந்த வகையான அட்டைகள் பயன்படுத்தவேண்டும்?

பல்வேறு பரிவர்த்தனைகளுக்காக ATMகளில் ATM அட்டைகள்/பற்று அட்டைகள்/ கடன் அட்டைகள் மற்றும் முன்னரே பணம் செலுத்தப்பட்ட அட்டைகள் (பணம் எடுப்பதை அனுமதிப்பவை) ஆகியவை உபயோகப்படுத்தப்படும்.

3. ATMகளில் உள்ள சேவைகள்/வசதிகள் என்னென்ன ?

ATMகளில் பணம் எடுப்பதுதவிர கீழ்க்கண்ட சேவைகளையும்/வசதிகளையும் தருகிறது.

• வங்கிக்கணக்கு பற்றிய தகவல்
• பண வைப்பு
• பல்வேறு உபயோகங்களுக்கான கட்டணங்களை சீரான முறையில் செலுத்துதல்
• அலைபேசிகளுக்கு பேசுவதற்கான கட்டணங்களை செலுத்துதல்
• குறுகிய காலத்திற்கான பரிவர்த்தனைகள் அறிக்கை
• கடன் கணக்கு விசாரணை

அளிக்கப்படும் சேவைகள் வங்கிக்கு வங்கி வேறுபடும் அல்லது அத்தகைய சேவைகளை வழங்குவது அந்த இயந்திரத்தின் திறனைப் பொறுத்தும் உள்ளது.

4. ஒரு ATMயில் ஒருவர் எவ்வாறு பரிவர்த்தனை செய்யமுடியும்?

ஒரு ATMயில் பரிவர்த்தனையை நிகழ்த்த இயந்திரத்திற்குள் அட்டையை நுழைத்து மற்றும் தங்களது தனிப்பட்ட அடையாள குறியீட்டு எண்ணை (PIN-Personal Identification Number) பதிவு செய்யவேண்டும்.

5. இந்த அட்டைகள், நாட்டின் எந்த வங்கி ATMயிலும் பயன்படுத்தலாமா?

ஆம். இந்தியாவில் உள்ள வங்கிகளால் வழங்கப்படும் அட்டைகளை இந்தியாவில் உள்ள எந்தவொரு வங்கியின் ATMயிலும் பயன்படுத்தலாம்.

6. தனிப்பட்ட அடையாள குறியீட்டு எண் (PIN) என்றால் என்ன ?

தனிப்பட்ட அடையாள குறியீட்டு எண் (PIN) என்பது ATMமில் பயன்படுத்துவதற்காக உள்ள எண்களுடன் கூடிய கடவுச்சொல் ஆகும். இந்த தனிப்பட்ட அடையாள குறியீட்டு எண்ணை (PIN) ஒரு புதிய தனிப்பட்ட அடையாள குறியீட்டு எண்ணாக வாடிக்கையாளர்களால் மாற்றி அமைக்கப்படும். பல வங்கிகள் வாடிக்கையாளர்களை அடையாளகுறியீட்டு எண்ணை முதல் உபயோகத்திற்குப்பிறகு மாற்றுமாறு வலியுறுத்துகிறது. அடையாளகுறியீட்டு எண்ணை அட்டையில், அட்டை வைத்திருக்கும் உறையில் எழுதக்கூடாது. ஏனெனில் இவ்வாறு செய்யும்பொழுது அட்டை தொலைந்துபோனாலோ அல்லது திருடுபோனாலோ தவறான உபயோகத்திற்கான வாய்ப்புகள் உள்ளன.

7. அடையாளகுறியீட்டு எண் (PIN)ஒருவர் மறந்துவிட்டாலோ அல்லது அட்டை ATM இயந்திரத்தில் உள்ளே விழுந்துவிட்டாலோ என்ன செய்வது?

வாடிக்கையாளர், அட்டை வெளியிடும் வங்கியை அணுகி, மறந்துபோன எண்ணிற்கு பதிலாக புதியஎண்ணைபெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கலாம். ATM இயந்திரத்தில் உள்ளே விழுந்துவிட்ட அட்டையை மீட்டுஎடுத்துதர வங்கிக்கிளையை அணுகலாம். வேறு வங்கியின் ATM இயந்திரத்தில் உள்ளே விழுந்துவிட்ட அட்டைக்கும் இதே நடைமுறை பொருந்தும்.

8. அட்டை தொலைந்துபோனாலோ/திருடுபோனாலோ என்ன செய்யவேண்டும்?

வாடிக்கையாளர், அட்டை வெளியிடும் வங்கியை உடனே தொடர்புகொண்டு தவறிய/தொலைந்தபோன அட்டையை செயலற்றதாக்கிவிடலாம்.

9. ஒருநாளில் பணத்தை எடுப்பதற்கு அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வரம்புகள் உள்ளதா?

ஆம். வாடிக்கையாளர்கள் ATMமில் பணம் எடுக்க வங்கி வரம்பை நிர்ணயித்துள்ளது. அட்டையை அளிக்கும்பொழுதே, ATMமில் எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதை வங்கிகள் குறிப்பிட்டுள்ளன. ATM அமைந்துள்ள இடங்களில் இது தெளிவாக போடப்பட்டுள்ளது.

மற்ற வங்கிகள் ATMமில் பணம் எடுப்பதற்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூபாய் பத்தாயிரம் வரை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரம் ATM வைக்கப்பட்டுள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

10. மற்றவங்கி ATMகளின் பயன்பாட்டிற்கு வங்கிகள் ஏதேனும் சேவைக்கட்டணம் விதிக்கின்றனவா?

மற்றவங்கிகளின் ATMளிலிருந்து பணம் எடுப்பது மற்றும் இருப்புநிலை கேட்பது ஆகியவற்றிற்கு எந்த கட்டணமும் இல்லை. 1.4.2009லிருந்து ரிசர்வ் வங்கி மேற்கண்ட சேவைகளை ‘இலவச ATM அணுகு கொளை’யின்கீழ் இலவசம் என்று அறிவித்துள்ளது. எனினும் வங்கிகள் இத்தகைய இலவச பரிவர்த்தனைகளை ஒரு மாதத்திற்கு ஐந்து என்று வரையறுத்துள்ளன. இதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளில், வங்கிகள் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.20/- என்று வசூலிக்கும்.

11. ATMஇல் பணம் எடுத்துகொண்டிருக்கும்போது சிலசமயங்களில் பணம் வராது ஆனால் பணம் எடுத்ததாக கணக்கில் காண்பிக்கப்படுகிறது. இம்மாதிரி சந்தர்ப்பங்களில் என்ன செய்யவேண்டும்?

அட்டை அளிக்கும் வங்கியிடம் இதுபற்றி புகார் அளிக்கவேண்டும். இந்த நடைமுறை மற்ற வங்கிகளின் ATMகளில் நடத்தப்படும் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்.

12. இம்மாதிரி தவறான பற்றுகளுக்கு கணக்கில் மறுவரவுவைக்க வங்கிகளுக்கு அதிகபட்சமாக எத்தனைநாட்கள் தேவைப்படும்?

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, வங்கிகள் அம்மாதிரி தவறாக பற்றுவைக்கப்பட்ட தொகைகளை, அதிகபட்சமாக் 12 வேலைநாட்களுக்குள் மறுபடியும் வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கவேண்டும்.

13. 12 வேலைநாட்களுக்குமேல் ஆகும்பொழுது வாடிக்கையாளர்கள் நஷ்டஈடு பெற தகுதி உண்டா?

ஆம். 17.7.2009லிருந்து 12 வேலைநாட்களுக்கு மேல் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100/- வீதம் நஷ்டஈடு வாடிக்கையாளருக்கு வழங்கப்பட வேண்டும். இதுபற்றி வாடிக்கையாளர் எதுவும் கேட்காமலேயே அவரது கணக்கில் தொகை வரவு வைக்கப்படவேண்டும்.

14. ஒரு வேளை குறிப்பிட்டபடி நஷ்டஈடு வரவுவைக்கப்படாவிட்டால் வாடிக்கையாளர் என்ன தீர்வு பெறமுடியும்?

இத்தகைய அனைத்துவிதமான புகார்களுக்கும் வாடிக்கையாளர் வங்கி பதில் ஏதும் அளிக்காதபட்சத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த வங்கிக் குறைதீர்ப்பு ஆணையத்திடம் புகார் அளிக்கலாம்.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top