பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறுஅறை வங்கி (KIOSK வங்கி)

சிறுஅறை வங்கி (KIOSK வங்கி) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம் என்பதை இந்திய ரிசர்வ் வங்கி இப்படி வரையறை செய்கிறது.  நலிந்த பிரிவினர், குறைந்த வருவாய் பிரிவினர், எளிதில் பாதிப்புக்கு உள்ளாக்ககூடியவர்கள் போன்றவர்களுக்கு தேவைப்படும் போது சரியான நேரத்தில் போதுமான கடனை அவர்கள் தாங்கிக்கொள்ளத்தக்க வகையில் அளித்தல் என்பதே இந்த வரையறை.

அனைவருக்குமான நிதிச்சேவை என்பதன் சாராம்சத்தில் சிறுஅறை வங்கிகள் மிக முக்கியமாக கருதப்பட்ட ஒன்றாகும். நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களுக்கென அடிப்படையில் உருவாக்கப்பட்டவை இவை. கிராமப்புறங்களில் வங்கிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால், வங்கிச்சேவைகள் கிராமப்புற மக்களைச் சென்றடைவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுஅறை வங்கிகள் முன்னணி தனியார்  பொதுத்துறை, கூட்டுறவு வங்கிகளின் ஆதரவுடன் செயல்படுவது எனவும் கணக்கில் பணம்  செலுத்துவது, பணம் எடுப்பது, பணம் கட்டுவது இதைத்தவிர நுண்கடன் காப்பீடு போன்றவற்றிற்கான வங்கிச் சேவைகளை அளிப்பதில் இத்தகைய சிறுஅறை வங்கிகள் முனையங்களாக செயல்படும் எனவும் கருத்தில் கொள்ளப்பட்டது.

இது எப்படி செயல்படுகிறது?

அலங்காரங்கள் ஏதுமில்லாமல் வங்கிக்கணக்கை ஒரு வாடிக்கையாளருக்காக தொடங்கலாம். வாடிக்கையாளரின் கைரேகை, புகைப்படம் போன்றவற்றை இதற்காக பதிவு செய்துகொள்ள வேண்டும். இத்தகைய விவரங்களுடன் பிற ஆவணங்களையும் சேர்த்து இணைப்பு வங்கியின் கிளைக்கு அனுப்பி உங்கள் வாடிக்கையாளரைத்  தெரிந்து கொள்ளுங்கள் என்ற வழிமுறையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். கணக்கு தொடங்கியவுடன் இணைய வசதி கொண்டசிறு அறை வங்கிகளின் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரத்துக்கும் மிகாமல் பணம் எடுக்வோ, செலுத்தவோ இயலும்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா - சிறுஅறை வங்கி

இந்தியாவில் மிக அதிகமான வங்கிக் கிளைகளைக் கொண்டிருக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி தகுதியுடைய தனிநபர்கள் / தன்னார்வ அமைப்புகள் / நிறுவனங்கள் (வங்கி சாரா நிதி நிறுவனங்கள்) தவிர பிற அமைப்புகள் அனைவருக்கும் வங்கிச் சேவை அளிப்பதற்காக கை கோர்க்கின்றன.

SBI சிறுஅறை வங்கிகள் பாதுகாப்பானவை. ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் அச்சிடப்பட்ட ஒப்புகைச் சீட்டு வாடிக்கையாளருக்கு கிடைக்கும். கணக்கு தொடங்கியதும் வங்கிச் சேவை பரிவர்த்தனை வழிமுறைகளை இணையத்தின் மூலம் செய்து கொள்ள முடியும். நுண் சேமிப்பு, நுண் கட்டணம் போன்றவற்றை சேமிப்புக்  கணக்கின் மூலமே செய்து கொள்ளலாம்.

SBI சிறுஅறை வங்கிகள் பற்றி அடிக்கடி வினவப்படும் கேள்விகள்

கேள்வி 1 : SBI  சிறுஅறை வங்கிகள்  பற்றி அடிக்கடி அளிக்கும் சேவைகள் யாவை?

ஆரம்பத்தில், SBI  சிறுஅறை வங்கிகள் பின்வரும் சேவைகளை வழங்கும்.

பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, பிற பகுதிகளில் SBI வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு பணத்தை மாற்றுவது.

SBI பிற சேவைகளையும் அதிகரித்து வழங்கலாம்.ஆனால் அடிப்படை சேவைகள் நிலைபெற்ற பிறகே பிற சேவைகளுக்கான பணிகள் துவங்கும்.

கேள்வி 2: SBI சிறுஅறை வங்கியில் பங்குதாரர் ஆவது எப்படி?

SBI உடனான ஒப்புந்தப்படி VLE வாடிக்கையாளர் சேவை முனையமாக இருக்கும். அனைத்துப் CSE அலுவலங்களுக்கும் இந்த வசதியும் பங்கேட்பும் இனையதள  இணைப்புடன் தரப்பட்டிருக்கும்.  இந்த வசதியைப் பெறுவதற்காக SCA மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

சில மாநிலங்களில் அங்கிகரிக்கப்பட்ட பகுதிகளில் சிறுஅறை வங்கிச் சேவைகளைச் செய்வதற்கு வேறுசில முகமைகளும் ஈடுபடுகின்றன.மத்திய பிரதேசத்தில் MYOXYGEN என்ற அமைப்பு இந்தச் சேவையை செய்கிறது.

கேள்வி 3 :உங்கள் வாடிக்கையாளருக்கு கிடைக்கவேண்டிய ஆதாயங்கள் என்ன?

சிறுஅறை வங்கி மாதிரியில் அலங்காரம் ஏதுமில்லா வங்கிக்கணக்கு

 • பொதுநோக்கு கடன் அட்டை (GCC) / கிசான் கடன அட்டை(ICCC)
 • குறுகிய கால் வைப்புநிதி / தொர்வைப்பு நிதி
 • வழக்கமான SBI சேமிப்பு கணக்கு
 • குறுகியகால வைப்பு நிதியின் மீது கடன் ரசீது (TDR)
 • இடைஞ்சலின்றி சேமிப்புக் கணக்கு தொடங்குவது
 • குறைவான (KYC) ஆவணங்கள்
 • வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை
 • பயணச் செலவு இல்லை
 • எளிய முறையில் பணம் செலுத்தலாம்/எடுக்கலாம்
 • தொடர்வைப்புநிதி, நிலையான வைப்புநிதிக் கணக்குகள் எளிதாக ஆரம்பிக்கலாம்.
 • எங்கிருந்து வேண்டுமானாலும் பணத்தை செலுத்தமுடியும்.
 • மாணியங்கள், கல்வி உதவித்தொகை, பிற பயன்கள் உங்கள் கணக்கில் நேரடியாக வந்து சேரும்.

கேள்வி 4 : வாடிக்கையாளர் என்னவிதமான பரிமாற்றங்களைச் செய்யலாம்?

 • அலங்காலம் ஏதுமில்லா கணக்கு என அழைக்கப்படும் இதில் குறைந்தபட்ச பணஇருப்புக்கு அவசியம் கிடையாது. கட்டணங்கள் ஏதும் விதிக்கப்படுவதில்லை.
 • அதிகபட்சமாக ரூ.50,000 வைத்துக் கொள்ளலாம். இதற்கு மேல் பணம் இருந்தால் அது வழக்கலான வங்கிக் கணக்காக  கருதப்படும். அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் கோரப்படும்.
 • குறைந்தபட்ச பண இருப்பு இல்லை
 • ஒரு நாளைக்கு ரூ.10,000 வரை கணக்கில் எடுக்கலாம், போடலாம், காசோலை புத்தகம் தரப்படமாட்டாது.
 • கணக்கு வைத்திருப்பவர் வங்கிக்கு நேரில் வந்து கடன் செலுத்தவும் கடன் பெறவும் முடியும்.
 • கையெழுத்து எதுவும் தேவையில்லை. மின்னனு முறையில் கைரேகையை பதித்து கணக்கில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
 • நீண்ட வங்கி நேரத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர்.

கேள்வி 5: CSp சிறுஅறை வங்கி மூலம் வருவாய்ப்பெருக்கம்?

புதிய கணக்கு தொடங்குவதன் மூலமும், ஒவ்வொருமுறை  பணம் செலுத்தும் போதும் / எடுக்கும் போதும்/ கடன் தொகை, பணப்பரிமாற்றத்தின் போதும் அல்லது மற்ற எந்த வங்கிச் சேவையின் போதும் நிங்கள் வருவாய் பெறலாம்.

இதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள அருகில் இருக்கும் SBI வங்கியையோ அல்லது உங்கள் பகுதி சேவை மைய முகாமை (SCA) யையோ அனுகலாம்.

தொடர்புடைய கையேடு

SBI KO பயன்படுத்துவோர் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.இந்த நுழைவாயில் தற்போதுள்ள வங்கிமுகவர்களும், புதியவர்களும் பதிவு செய்து கொள்ளலாம்.ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உதவிமையத்தை அணுகலாம்.

புதிய வங்கி இணையதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. (URL 164.100.115.10/ Banking).  வங்கித்தோழனில் பதிவுசெய்து கொள்வதற்கு இந்த இணைய தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.இது தொடர்பான சந்தேகங்களுக்கு உதவி மையத்தை அணுகலாம்.

சிறுஅறை வங்கி புதிய இணையதளத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்

 • புதிய BCA பதிவு ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு செயல்படும். www.apna.csc.gov.in என்ற நுழைவாயிலில் சென்று தங்கள் வங்கி அமைந்திருக்கும் பகுதியைத் தெரிவு செய்யவும்.
 • தற்போது செயல்பட்டுவரும் VLE யும் கூட இதில் பதிவு செய்து கொள்ளலாம், தரகுத்தொகை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
 • BCA களும் தங்கள் விவரங்களைப் புதுப்பிக்கலாம்.  பதிவின் போது விடுபட்ட தகவல்கள் ஏதுமிருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
 • தற்போது வங்கிமுகவர்களாக இருக்கும் VLEக்கள் அல்லது புதிதாக முகவர்களாக ஆகியவற்றை இந்தத்தளத்தில் இருந்து பெறலாம்.
 • தற்போதுள்ள BCA க்களும் கூட இந்த இணையதளத்தில் இருந்து TDS சான்றுகளை இந்த இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆதாரம் : http://apna.csc.gov.in/

Filed under:
3.14285714286
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top