பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வங்கி சேமிப்பின் வகைகள்

வங்கி சேமிப்பு பற்றிய முக்கிய குறிப்புகள்

இந்கிய வங்கித்துறை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மக்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு பல வகையான திட்டங்களை வழங்கி வருகின்றனர். வங்கிகளில் வழங்கும் சேமிப்புக் கணக்குகள் வாடிக்கையாளரின் வயது, வருமானம் மற்றும் பாலின அடிப்படையில் பல வங்கிகள் வெவ்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும் இத்தகைய கணக்குள் வங்கிக்கு வங்கி மாறுபடலாம், ஆனால் அவர்களின் நோக்கம் ஒன்றாகவே இருக்கும்.மேலும் இந்திய வங்கி அமைப்பில் இருக்கும் சில வகையான வங்கிக் கணக்கு வகைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன

மூத்த குடிமக்கள் சேமிப்பு வங்கி கணக்கு

பெயருக்கு ஏற்றார் போல் மூத்த குடிமக்கள் சேமிப்பு வங்கி கணக்கு வாடிக்கையாளர் தேவைக்கேற்றார் போல 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கானது. இதில் பல்வேறு நன்மைகள் உள்ளது, அவை நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் (FD) பிரத்யேக வட்டி விகிதம், குறைவான கட்டணங்கள் ஆகியன அடங்கும்.

பெண்கள் சேமிப்பு கணக்கு

பல வங்கிகள் பெண்களின் பொருளாதார தேவை, முதலீடு மற்றும் வாழ்க்கைத் தேவைகளுக்காக பிரத்யேக வங்கிக் கணக்கை வடிவமைத்துள்ளனர். சில வங்கிகள் அதிக பண வரம்பு மற்றும் பணம் திரும்பப் பெரும் சலுகைகள் போன்றவற்றை வழங்குகின்றன.

சாதாரண சேமிப்பு கணக்கு

சாதாரண சேமிப்புக் கணக்கை யாரும் திறக்கலாம். சராசரியாக காலாண்டிற்கு குறைந்த பட்ச தொகையை வைப்பு வைக்க வேண்டும். தவறினால் தண்டனை பணம் வசூலிக்கப்படும். சாதாரண சேமிப்புக் கணக்கில் கணக்குப் புத்தகம், இணைய வங்கி வசதி, தொலைபேசி வங்கி வசதி, காசோலைப் புத்தகம் மற்றும் பற்று அட்டை போன்ற அம்சங்கள் உள்ளன.

கட்டணமில்லாத அடிப்படை வங்கிக் கணக்கு

இந்த வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள் குறைந்த பட்ச வைப்புத் தொகை வரம்பு கொண்டவர்கள் அல்லது வரம்பு அற்றவர்கள். பெருவாரியான மக்களைச் சென்றடைவதற்காக ரிசர்வ் வங்கியால் இந்த திட்டம் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் இந்த திட்டத்தில் சில கட்டுப்பாடுகள் உள்ளன அது வங்கிக்கு வங்கி மாறுபடுகின்றன.

மாணவர் சேமிப்பு கணக்கு

சில வங்கிகள் மட்டுமே மாணவர் சேமிப்பு கணக்கு வசதியினை வழங்குகின்றன. இதில் குறைந்த பட்ச வைப்பு தொகை இருக்காது அல்லது மிகவும் குறைந்தபட்ச தொகை இருந்தால் போதுமானது.

என்.ஆர்.ஐ தொடர்பான கணக்குகள்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, இந்திய வங்கி அமைப்பில் தனி இடம் உண்டு இவர்களுக்கு தரப்பட்ட வங்கி சேவைகள் வழங்கப்படுகிறது. இதில் சேமிப்பு கணக்குத் திட்டங்கள் உள்ளன. அவைகளை பற்றி பார்போம்.

என்.ஆர்.இ. சேமிப்பு கணக்கு

இந்த கணக்கில் ரூபாய் மதிப்பு வடிவில் பராமரிக்கப்படலாம். இக்கணக்கை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்களின் பெயர்களில் துவங்கலாம்.

என்.ஆர்.ஒ. சேமிப்பு கணக்கு

ரூபாய் மதிப்பு வடிவிலும், நடப்பு கணக்காகவும், சேமிப்பு கணக்காகவும், தொடர் கணக்காகவும், நிரந்தர வைப்பு கணக்காகவும் என்.ஆர்.ஒ. சேமிப்பு கணக்கில் துவங்கவும்/வைக்க முடியும். இந்தியாவில் குடியிருப்பவர்களுடன் கூட்டுக் கணக்காகவும் வைத்துக் கொள்ளலாம். என்.ஆர்.ஒ. கணக்கிற்கு வேறு வங்கிக் கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யலாம், இந்தியாவில் வசிப்பவர்கள் கூட வெளிநாடு வாழ் இந்தியரின் என்.ஆர்.ஒ. கணக்கில் பணம் செலுத்தலாம்.

கேள்வி பதில்

1. வங்கிகள் அரசாங்கத்தின் துறைகள், அரசாங்கச் செயல் திட்டங்கள் பெயரில் சேமிப்புக் கணக்கு தொடங்கலாமா?

அரசாங்கத்தின் துறைகள், அரசாங்கச் செயல் திட்ட நடவடிக்கைகள் பெயரில் சேமிப்புக் கணக்கு தொடங்க இயலாது. ஆனால் சில அரசாங்க நிறுவனங்கள் பெயரில் கணக்கு தொடங்கலாம்.

2. மேற்குறிப்பிட்ட அரசாங்க நிறுவனங்கள் யாவை?

கீழ்க் கண்ட நிறுவனங்கள் அவற்றுள் அடங்குவன.

1) வங்கிகளில் கடன் உதவி பெறும் முதன்மைக் கூட்டுறவுக் கடன் வழங்கும் சங்கங்கள்

2) கதர் மற்றும் கிராமத் தொழில் குழுமங்கள்

3) வேளாண் பொருட்கள் அங்காடிக் குழுக்கள்

4) 1860ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் அல்லது அதனையொத்த நடைமுறையில் இருக்கும் மாநில அல்லது யூனியன் பிரதேசச் சட்டங்களால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள்

5) கம்பெனிகள், கம்பெனிகள் சட்டம், 1956இன் 25ஆவது பிரிவின்கீழ் மத்திய அரசிடமிருந்து அல்லது இந்தியக் கம்பெனிகள் சட்டம் 1913இல் காணப்படும் பிரிவுகளின் அடிப்படையில், உரிமங்கள் பெற்று ‘லிமிடெட்’/ தனியார் லிமிடெட் என்னும் சொற்களைக் கொண்டிராத எல்லாக் கம்பெனிகளும்

6) மேலே சொல்லப்பட்ட முதல் பிரிவில் அடங்காத 1961ஆம் ஆண்டு வருமான வரிச்சட்டத்தின் கீழ் வரி விலக்களிப்பட்ட எல்லா நிறுவனங்களும்

7) மத்திய மாநில அரசாங்கங்களில் பல்வேறு செயல் திட்டங்கள்/ செயல்முறைகள் ஆகியவற்றை நிறைவேற்ற ஏற்படுத்தப்பட்டு நிதியோ, மானியமோ வழங்கப்பட்டு, சேமிப்புக் கணக்குத் தொடங்க மத்திய மாநில அரசாங்கங்களின் அனுமதி பெற்ற எல்லா மத்திய மாநிலத் துறைகள், அமைப்புகள் மற்றும் முகமைகள்.

8) ஊரகப் பகுதிகளில் குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாடு (DWCRA)

9) உறுப்பினர்களுக்கு சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத சுய உதவிக் குழுக்கள் (SHGs)

10) உழவர்கள் கூட்டுக் குழுக்கள், விகாஸ் வாலன்டீர் வாஹினி (VVV)

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

3.04301075269
து.கருப்பையா Aug 12, 2020 02:18 AM

வெரிகுட்

DHEENATHAYALAN Oct 13, 2019 09:45 AM

குழுக்கள் அமைக்க வேண்டும் யாரை
தொடர் கெள்ளவேண்டும் தெரியாமல் இருக்கிறனை தொடர்பு வேண்டும்

முத்து ரமேஷ் Jan 07, 2017 01:19 PM

ஓரே வங்கியில் இரு சேமிப்புக் கணக்கு வைத்துக்கொள்ள முடியுமா?

TASNA May 27, 2015 12:51 PM

கருத்துக்கு நன்றி. தங்களுக்கு தெரிந்த தகவல்களை இங்கே பகிருங்கள்.

s.ravisankar May 27, 2015 11:49 AM

வட்டி விகிதங்களை சொல்லி இருக்கலாம்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top