பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / மனித உரிமை / மனித உரிமைகளின் வகைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மனித உரிமைகளின் வகைகள்

மனித உரிமைகள் பற்றிய தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

முன்னுரை

மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.

சாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகிவற்றிற்கு அப்பால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொதிந்திருக்கக் கூடிய பிறப்புரிமைகளை, மனிதனின் சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை, மனித உரிமைகள் என்று நாம் அழைக்கின்றோம். மனிதர்களுக்கு மனித உரிமைகள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்றும், இயற்கை உரிமைகள் என்றும், பிறப்புரிமைகள் என்றும், உள்ளார்ந்த உரிமைகள் என்றும் நாம் அழைக்கின்றோம். ஒவ்வொரு நாட்டிலும் அதற்கேற்ற, உரிய சட்டமியற்றும் வழிமுறைக்கு ஏற்ப இந்த மனித உரிமைகள் சட்ட வடிவம் பெறுகின்றது. டி.டி பாசு அவர்கள் மனித உரிமைகளை வரையறுக்கும் பொழுது "எவ்வித மறுபயனுமின்றி மனிதனாகப் பிறந்த காரணத்தினாலேயே அரசிற்கு எதிராக ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்கக் கூடிய குறைந்தபட்ச உரிமைகளே மனித உரிமைகள்" என்று குறிப்பிட்டுள்ளார். 1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைப்பெற்ற மனித உரிமைகள் குறித்த உலக மாநாட்டின் பிரகடனத்தில் "மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் என அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. மனிதனாகப் பிறந்த காரணத்தினால், ஒருவனுக்கு இயற்கையிலேயே உடன் பிறந்த உரிமைகள் மனித உரிமைகள். இந்த உரிமைகள் எந்த ஒரு சமுதாயத்தினாலோ, அரசினாலோ அல்லது அரசியல் அதிகார அமைப்புகளினாலோ உருவாக்கப்பட்டதல்ல. அதனால்தான் எந்த ஒரு அரசிற்கும், அதிகார அமைப்பிற்கும் மனித உரிமைகளை மீறுவதற்கான அதிகாரம் அளிக்கப்படவில்லை.

மனித உரிமைகளின் வகைகள்

மனித உரிமைகள் பொதுவாக பிரிக்கப்பட முடியாதவை. மேலும், அவை ஒன்றோடு ஒன்று சார்ந்து இருப்பவை. அதனால் பல்வேறு வகையான மனித உரிமைகள் இருப்பதற்கு சாத்தியமில்லை. முக்கியத்துவத்தின் அடிப்படையிலும், அனைத்து மனித உரிமைகளும் சமமான முக்கியத்துவத்தினை பெறுகிறது. அதனால்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் எவ்விதமான வகைப்பாடுகளும் காணப்படவில்லை.

 1. குடிமையியல் உரிமைகள்
 2. அரசியல் உரிமைகள்
 3. பொருளாதார உரிமைகள்
 4. சமூக உரிமைகள்
 5. கலாச்சார உரிமைகள்

மனித உரிமைக் கல்வி - தனி மனிதருக்கு உரிய உரிமைகள்

 • குடிமை உரிமைகள் (Civil Rights)
 • உயிர் வாழ்வதற்கான உரிமை
 • சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை
 • தேசிய இனத்திற்கான உரிமை
 • நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமை
 • வெளிப்படையான விசாரணைக்கான உரிமை
 • குற்றமற்றவர் என அனுமானிக்கப்படுவதற்கான உரிமை

(இலவச) சட்ட உதவிக்கான உரிமை

 • குற்றம் சுமத்தப்பட்டவர் முன்னிலையில் விசாரணை நடக்கவும், அவரே எதிர் வாதாடவும் உள்ள உரிமை
 • உறுதியளிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீறப்படும்போது குறைத்தீர்க்கும் அமைப்புகளை அணுகுவதற்கான உரிமை.
 • ஒரே குற்றத்திற்காக இருமுறை தண்டிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை

மேல்முறையீடு, மறுபரிசீலனை செய்வதற்குமான உரிமை

 • மதம் மற்றும் அரசியல் நம்பிக்கைகள் உட்பட கருத்து கொண்டிருக்க உரிமை
 • தனது வீட்டில் தனியாக இருக்க உரிமை
 • தன் மாண்பும் நற்பெயரும் காக்கப்படுவதற்கான உரிமை

நடமாட்ட சுதந்திரத்திற்கான உரிமை

 • நீதி தவறாக வழங்கப்படுகையில் நிவாரணம் பெறும் உரிமை
 • தன்னிச்சையாக நாடு கடத்தப்படாமல் இருப்பதற்கான உரிமை
 • ஒரு நாட்டில் நுழைவதற்கான உரிமை
 • ஒரு நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான உரிமை

அரசியல் உரிமைகள்

 • கருத்துகளை வெளியிட உரிமை
 • கூட்டம் கூடுவதற்கான உரிமை
 • சங்கமாகச் சேருவதற்கான உரிமை
 • வாக்களிப்பதற்கான உரிமை
 • அரசியல் பங்கேற்புகான உரிமை
 • பொதுப்பணிகளில் சம வாய்ப்பு பெறுவதற்கான உரிமை

பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள்

 • வேலைக்கான உரிமை
 • வேலையைத் தெரிவு செய்யும் உரிமை
 • சொத்து வைத்திருப்பதற்கான உரிமை
 • போதிய வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருப்பதற்கான உரிமை
 • கல்வி பெறுவதற்கான உரிமை
 • சமூகப் பாதுகாப்புக்கான உரிமை
 • ஆயுள் காப்பீட்டுக்கான உரிமை
 • சமூக, மருத்துவ உதவி பெறும் உரிமை
 • அறிவியல் முன்னேற்றங்களின் பலன்களை அனுபவிப்பதற்கான உரிமை
 • சுகாதாரம், பாதுகாப்புக்கான உரிமை

குழுக்களின் உரிமைகள்

 • சமய ஊதியத்திற்கான உரிமை (ஒரே வகைப்பட்ட வேலைக்கு சமமான ஊதியம்)
 • கூட்டாகப் பேரம் பேசுவதற்கான உரிமை
 • தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும், தொழிற்சங்கங்களில் சேர்வதற்குமான உரிமை

போராட்ட உரிமை

 • பணி நீக்கம் செய்யப்படுவதற்குமுன் முன்னறிவிப்புப் பெறும் உரிமை
 • பதவி உயர்வில் சம வாய்ப்பும், பாதுகாப்பான, சுகாதாரமான பணிச்சூழலில் பணிப்புரிவதற்குமான உரிமை
 • வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல், பயிற்சி பெறும் உரிமை
 • சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கான உரிமை
 • நியாயமான ஊதியத்திற்கான உரிமை
 • வரையறுக்கப்பட்ட வேலை நேரத்திற்கான உரிமை (வாராந்திர ஓய்வுக்கான உரிமை)

பெண்களுக்கான உரிமைகள்

 • சம ஊதியம் பெறுவதற்கான உரிமை
 • பாலியல் சமத்துவத்திற்கான உரிமை
 • தம்பதியருக்கிடையில் சமத்துவ உரிமை
 • சுரண்டலிலிருந்து பாதுகாப்புப் பெற உரிமை
 • கர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறு விடுப்புரிமை
 • குழந்தைகள், இளங்குற்றவாளிகளுக்கான உரிமைகள்

கல்விப் பெறுவதற்கான உரிமை

 • தொழிற்பயிற்சி மற்றும் வேலையிடைப் பயிற்சிகளை இலவசமாகப் பெற உரிமை
 • கைது செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள் புனர்வாழ்வுப் பெற உரிமை
 • மரண தண்டனை விதிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை
 • சித்திரவதை, சுரண்டல், கவனிக்கப்படாமையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமை
 • வேலைக்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் பாதுகாப்பு உரிமை
 • விளையாட்டு, பொழுதுபோக்கிற்கான வாய்ப்புப் பெறும் உரிமை
 • சமூக சேவைகளைப் பெறுவதற்கான உரிமை

சிறைக்கைதிகளின் உரிமைகள்

 • சிறைக்கைதியாகப் பதிவு செய்யபடுவதற்கான உரிமை
 • சிறைக் கைதிகளை வகைப்படுத்திப் பிரித்து வைப்பதற்கான உரிமை
 • சிறையில் தனியாகத் தங்கவைக்கப்படுவதற்கான உரிமை
 • போதிய காற்றோட்டம், வெளிச்சம், உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்குத் தேவையான வசதிகளுக்கான உரிமை
 • துணிமணிகள், படுக்கை, போதிய உணவு, தண்ணீர், மருத்துவ வசதி பெற உரிமை

பயிற்சி, விளையாட்டுக்கான உரிமை

 • கொடூரமான, கேவலமான தண்டனைகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை
 • அதிகாரிகளிடம் வேண்டுகோள் மற்றும் புகார்கள் கொடுப்பதற்கான உரிமை
 • குடும்பம், நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்கான உரிமை (கடிதத் தொடர்பு, நேர்காணல் மூலம்)
 • வெளியுலகச் செய்திகளை தொடர்ந்து பெறுவதற்கான உரிமை
 • சிறைச்சாலையின் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமை

மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை

 • சொந்த சொத்துக்களை வைத்துக் கொள்ளவதற்கான உரிமை
 • பெண் சிறைக் கைதிகள் பெண் அதிகாரிகளாலேயே பாதுகாக்கப்படுவதற்கான உரிமை

ஆதாரம் : லாயர்ஸ் லைன்

3.38461538462
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
M.ramakrishnan Oct 13, 2020 11:19 AM

Vary vary super

நாகநாதன் ப Jan 31, 2020 09:10 AM

பயனுள்ள பகுதி என்றாலும் உரிமை மீறுதல் துறையினரால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து தண்டிக்கப்படுவார்கள் சரி.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு என்ன தீர்வு எனது தாழ்மையான கருத்து என்னவென்றால் எந்த பதவியிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதகம் செய்தாரோ அந்த பதவி அவரிடம் பறிக்கப்படவேண்டும் அதற்க்கு மாறாக அவரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் தகுதியான யாராவது ஒருவருக்கு அந்த பதவியை வழங்க பரிசீலனை செய்ய அரசு முன் வரலாம்.இதன் மூலம் தவறு செய்யும் ஒவ்வொரு அதிகரிக்கும் வேலையை சரியா செய்யணும் என்ற பயம் வரும்.புகார்தாரை மதிக்க வேண்டும் என்ற தோன்றும் மக்களின் முழு பிரச்சனை அங்கே முழுமையாக மதிக்கப்படும் .மிக்க நன்றி .

சு.மணிகண்டன் Apr 21, 2018 08:21 PM

வணக்கம்,

இயலில் இயற்றும் உரிமை
இயன்றாலே நாட்டில் புதுமை
இயல்பில் இயற்றுவது கடமை
இயலாலே நில்லாது உரிமை

உயரிய நோக்கு உன்னதம்

நன்றியுடன் நற்பணிக்கு நல்வாழ்த்துக்கள். மணிகண்டன்.சு

ஜாவித் Nov 06, 2017 11:13 PM

வன்கொடுமை வழக்கு நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது குடியிருக்கும் வீட்டில் உரிமை கோர முடியுமா?

கலைவாணன் மங்கலேஷ் Dec 18, 2016 07:25 PM

மிகவும் பயனுடையதாக உள்ளது.நன்றி.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top