பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / ஸ்மார்ட் நகரங்கள் / ராஷ்ட்ரபதி பவன் - சீர்மிகு பாரம்பரிய நகரியம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ராஷ்ட்ரபதி பவன் - சீர்மிகு பாரம்பரிய நகரியம்

ராஷ்ட்ரபதி பவன் சீர்மிகு பாரம்பரிய நகரியமாக திகழ்வதைப் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

உலக நாடுகளில் அரசுத் தலைவர்களின் குடியிருப்பு மாளிகைகளில், நமது குடியரசுத் தலைவர் மாளிகையாகிய ராஷ்ட்ரபதி பவன் மிகப் பெரிய கம்பீரமான கட்டுமானங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பிரிட்டிஷ் கட்டிடக் கலை வல்லுநரான சர்.எட்வின் ஒட்யன்ஸ் வடிவமைக்கப்பட்ட இந்த இந்திய மற்றும் மேற்கத்திய கட்டுமானக் கலைகளின் சீரிய கலவையாகத் திகழ்கிறது. இந்தியாவில் ஆட்சிபுரிந்த பிரிட்டிஷ் வைசிராய்கள் வசிப்பதற்காக இந்த மாளிகை கட்டப்பட்டது.

இந்த மாளிகை 1950 ஜனவரி 26ஆம் தேதியன்று ராஷ்ட்ரபதி  பவன்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சுமார் 330 ஏக்கர் விரிந்து பரந்த நிலத்தில் ஐந்து ஏக்கர் பரப்பில் ராஷ்ட்ரபதி பவன் கட்டப்பட்டுள்ளது. ஆங்கில எழுத்து H வடிவில் 195 மீட்டர் நீளமும் 165 மீட்டர் அகலமும் கொண்ட இந்த மாளிகையில் இங்குள்ள தாழ்வாரங்களின் மொத்த நீளம் இரண்டரை கிலோமீட்டர். 227 பெருந்துரண்களில் நிற்குமாறு நான்கு தளமாகக் கட்டப்பட்டுள்ள இந்த மாளிகையில் மொத்தம் 37 நீருற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. ராஷ்ட்ரபதி பவனில் 340 அறைகள் உள்ளன.

சிறப்பம்சங்கள்

இந்து, பெளத்த, சமண சமய மரபுகளைக் குறிக்கும் ஆலய மணிகள் அழகுற அலங்கரிக்கப்பட்டு இந்திய மரபைப் பறைசாற்றுகின்றன. ராஷ்ட்ரபதி பவனின் முன்புறத்தில் சம இடைவெளியில் தூண்கள் அமைக்கப்பெற்ற 200 மீட்டர் நீள முற்றம் இந்த முற்றத்தைக் கடந்து சென்றால் வரும் கட்டிட முன் வாயிலில், கம்பீரமான அசோகத் தூண் சிற்பம் காட்சியளிக்கிறது. ராஷ்ட்ரபதி பவனில் மூவாயிரம் பேர் அலுவல் புரிகின்றனர். குடியரசுத் தலைவரின் எஸ்டேட் என்று சொல்லப்படுகின்ற அந்த வளாகத்திற்குள் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையின் வரவேற்பு அலுவலகம், விரிந்து பரந்த மண்டபம் ஆகும். பார்வையினருக்கு அனுமதிச் சீட்டு வழங்கும் இந்த இடத்தில் இருந்து, பளிங்கு மண்டபத்தை பார்வையிடலாம். பிரிட்டிஷ் காலத்து கலைப் பொருள்கள், சிற்பங்கள் மற்றும் வைசிராய்களின் ஒவியங்களும் இந்த பளிங்கு மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ராஜஸ்தானத்து ஜெய்சால்மர் நகரின் புகழ்பெற்ற மஞ்சள் நிற பளிங்குக் கல்லால் ஆன இந்த மண்டபத்தின் நடுநாயகமாக விளங்கும் புத்தரின் சிலை மிகவும் எழிலானது. கலை நயம்மிக்க சரவிளக்கும் நம் கண்ணைக் கவரும். நம்நாடு சுதந்திரம் பெற்றதும் 1947 ஆகஸ்ட் 15 அன்று புதிய அரசு இங்கேதான் பதவி ஏற்றது. 1800க்கும் 1947க்கும் காலத்தில் வெளியான இடைப்பட்ட மிக அரியதான இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட குடியரசுத் தலைவர் மாளிகையின் நூலகம் அறிவுக் கருவூலமாகத் திகழ்கிறது.

வைசிராய்களின் ஆட்சிக் காலத்தில் நாட்டிய அரங்கமாகத் திகழ்ந்த பெரிய கூடம் தற்போது அசோகா மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபத்தில்தான் தற்போது குடியரசுத் தலைவர் மாளிகையின் அனைத்து சம்பிரதாய விழாக்களும் நடைபெறுகின்றன. இந்த மண்டபத்தின் மேல் விதானத்தில் தீட்டப்பட்டுள்ள பதேஷ் அலி ஷாவின் ஒவியங்கள் மிகச் சிறப்பானவை.

சுற்றுலாத்தளமாக மாற்றம்

ராஷ்ட்ரபதி வருணிக்கப்படும் முகல் தோட்டம், 15 ஏக்கர் பரப்புடையது. இங்கே 120 வகையான செடி, கொடி மரங்கள் உள்ளன. இத்தோட்டம்  பவனின் ஆன்மா என செவ்வகத் தோட்டம், நீண்ட தோட்டம், வட்டத் தோட்டம் என மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி, இந்த மாளிகையை ஓர் அதிகார பீடம் என்ற நிலையில் இருந்து மாற்றி, அதன் செயல்பாடுகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். எனவே குடியரசுத் தலைவர் மாளிகையை மக்கள் அனைவரும் சுற்றிப் பார்த்து வருவதற்கு ஏற்ப நடைமுறைகளை மாற்றியமைத்துள்ளார். இதற்கென பல மின்னணு நிர்வாக முறைகள் அமலுக்கு வந்துள்ளன. குடியரசுத் தலைவரின் இணைய தளம் துடிப்புடன் இயங்கும் நிலையில் உள்ளது. கூட்டங்கள், பார்வையாளர்கள் வருகைக்கு அனுமதி போன்றவை மின்னணு நிர்வாகம் மூலம் நடைபெறுகின்றன.

டிஜிட்டல் தொழில்நுட்பம்

சீர்மிகு நகரம் என்றாலேயே, நகர்ப்புற வசதிகளின் தன்மையையும் தரத்தையும் மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பங்களை விரிவாகப் பயன்படுத்துவதே ஆகும். போக்குவரத்து, மின்சக்தி, சுகாதாரம், குடிநீர் வழங்கல், கழிவுகள் அகற்றல் போன்றவை முக்கியத்துவம் பெறும். எனவே ராஷ்ட்ரபதி தளமாக பவனை ஒரு சீர்மிகு நகரியமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

குடியரசுத் தலைவர் செயல்படும் பல்வேறு மாளிகையில் துறைகளும் அலுவல் முறையைப் பின்பற்றுகின்றன. இதனை தேசியத் தகவலியல் மையம் உருவாக்கியுள்ளது. இதனால் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு பெருகி, காலவிரயம் தவிர்க்கப்பட்டு, வெளிப்படைத் தன்மை அதிகரித்துள்ளது. கோப்புகளைப் பராமரிப்பது பணியாளர்களின் வருகைவிடுப்பு விவரங்கள் பராமரிப்பதுபோன்றவை இ.அலுவல் முறைப்படி நடைபெறுகின்றன. இணையதளம் வாயிலாக, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அலுவல் ரீதியாக வருவோர் பதிவு செய்யும் விவரங்கள், குடியரசுத்தலைவர் செயலகத்துடன் ஒன்றிணைக்கப்படுகின்றன. இதன் காரணமாக பாதுகாப்புக் கட்டுப்பாட்டு அறைக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்து விடுகிறது. அரசு அலுவலர்கள் தங்களுடைய செல்பேசிகளைப் பதிவு செய்திருந்தால், அவற்றின் மூலமும் வருகை / சந்திப்புகள் இறுதி செய்யப்படுகின்றன. பாதுகாப்புக்கு எந்தவிதக் குந்தகமும் இன்றி இந்தச் செயல்கள் விரைந்து  நிறைவேறிவிடுகின்றன.

குடியரசுத் தலைவர் மாளிகையில் செயல்படும் முக்கியத் துறைகள் யாவும் துரிதமான கம்பியில்லாத இணைய வசதி பெற்றுள்ளன. குடியரசுத் தலைவரின் எஸ்டேட்டுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே அங்கு வசிப்போருக்கு கல்வி, மருத்துவம், சேவை, பொழுதுபோக்கு போன்றவை குறித்த தகவல்கள் மிக எளிதாகக் கிடைத்துவிடுகின்றன. மேலும் இங்கு பணியாற்றுகின்ற, குடியிருக்கின்ற அனைவருக்கும் ராஷ்ட்ரபதி பவன் ஸ்மார்ட் மாற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது.

வங்கிக் கடன் அட்டைகள் போல எல்லா விதமான பரிவர்த்தனைகளுக்கும் இந்த அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விரிந்து பரந்த குடியரசுத் தலைவர் எஸ்டேட்டுக்குள் சென்று வர மிதி வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், பயன்படுத்துவோருக்கு உடல் ஆரோக்கியம்  தருவதாகவும் இந்த ஏற்பாடு உள்ளது.

குடியரசுத் தலைவர் இணையதளம்

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பல்வேறு சம்பிரதாய விழாக்கள், பண்பாட்டு நிகழ்வுகள் போன்றவற்றுக்கு அழைப்பிதழ் அனுப்பும் முறையும் மின்னணு  மயமாகிவிட்டது. குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழி இத்தகவல்கள்  சென்றடைவதுடன், அழைப்புப் பெற்று வருகை தர இருப்போர் தமது விருப்பத்தையும் மின்னணு முறையிலேயே தெரிவிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுவிட்டது. தேசியத் தலைநகர் தில்லி எல்லைக்கு அப்பாலும் அழைப்புகளை அனுப்பவும் இந்த வழியே பின்பற்றப்படுகிறது. இதற்கென கூடுதல் ஆள் தேவையோ வேறு செலவுகளோ கிடையாது. விழா நடத்துவோர், சிறப்பு வெளியிடுவோர் போன்றவர்கள், குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தி கேட்டுக் கடிதங்கள் எழுதும் முறை முற்றிலும் மாறிவிட்டது. இணைய தளம் வாயிலாகவே தற்போது குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தி வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். இத்தகைய கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் குறுஞ்செய்தி / மின்னஞ்சல் வழியாக பதில்கள் அனுப்பப்பட்டு விடுகின்றன.

இதுபோலவே குடியரசுத் தலைவரை விழாக்களுக்கு அழைக்கும் முறையும் இணையம் வாயிலாகவே நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையின் சீர்மிகு நகரியத் திட்டத்தில் ஐபிஎம் இந்தியா நிறுவனமும் இணைக்கப்பட்டுள்ளது. மாளிகையின் முக்கியமான பகுதிகளும் சேவை அமைப்புகளும் மின்னணு வரைபடமாக்கப்பட்டுள்ளன. மாளிகையின் மின்சாரம், தண்ணீர் போன்றவற்றின் தேவைகளும் விநியோக முறையும் இதன் மூலம் கண்காணிக்கப்படும். மின்சார நுகர்வை டிஜிட்டல் மீட்டர்கள் மூலம் கண்காணிக்கும் பணி ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. பார்வையாளர்களுக்கு அனுமதிச் சீட்டில், "பார்கோட்" என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பார்வையாளரின் அனைத்து விவரங்களும் அதில் பதிவு செய்யப்படுவதால், பாதுகாப்பு அலுவலர்கள் எந்த நிலையிலும் சரிபார்த்துக் கொள்ள முடியும். மேலும் வாகனப் போக்குவரவு, வாகன நிறுத்தும் வசதிகள், நிர்வாகம் போன்றவையும் இதனால் எளிதாகிவிட்டது. இந்த நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் முதலாவது சீர்மிகு நகரியம் என்ற பெருமையை குடியரசுத் தலைவர் மாளிகையும், எஸ்டேட்டும் பெற்றுவிடும்

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
2.97297297297
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top