பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / ஸ்மார்ட் நகரங்கள் / ஸ்மார்ட் நகருக்கான தொலைநோக்குப் பார்வை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஸ்மார்ட் நகருக்கான தொலைநோக்குப் பார்வை

ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கத்திற்கான தொலைநோக்குப் பார்வை குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

இந்தியா நகரமயமாக்கல் பாதையில் வெகுவேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் இப்போது 7936 நகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் 3770 கோடி பேர் வாழ்கின்றனர். அடுத்த 15 ஆண்டுகளில் அதாவது 2030 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 60 கோடியாக அதிகரிக்கும். அதுமட்டுமின்றி இந்தியாவின் 78 மாநகரங்கள் மெட்ரோபாலிட்டன் (10 லட்சத்திற்கும் அதிகம் பேர் வாழும் நகரம்) நகரங்களாக மாறியிருக்கும். இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 60 விழுக்காட்டையும், வேலைவாய்ப்பில் 70 விழுக்காட்டையும் இந்த மாநகரங்கள் தான் உருவாக்கும் என்றாலும் வீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மோசமான நிலையில் தான் இருக்கும். இதனால் நீடித்த வளர்ச்சியும், பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். திட்டமிடப்படாத வளர்ச்சியின் தழும்புகளை நமது நகரங்கள் தொடர்ந்து சுமந்து கொண்டிருக்கும்.

இந்தியாவில் இன்னும் பெரும்பாலான நகரங்கள் மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளன என்றபோதிலும், அவை தான் உற்பத்தி மற்றும் சொத்துக்களை உருவாக்கும் கருவிகளாக உள்ளன. நகரமயமாக்கல் மற்றும் வீட்டு வசதி சேவைகள் துறை, பயன்பாடு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் படைக்கப்பட்ட புதுமைகள் போன்றவற்றால் ஏற்படுத்தப்பட்ட சொத்துக்களின் காரணமாக, மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டிருக்கிறது.

ஸ்மார்ட் நகர இயக்கம்

ஸ்மார்ட் நகர இயக்கத்தை பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார். உள்ளூர் பகுதி மேம்பாடு மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சிறப்பான பயன்களை ஏற்படுத்துவதன் மூலம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது, பொருளாதார வளர்ச்சியைப் பெருக்குவது ஆகியவைதான் ஸ்மார்ட் நகர திட்டத்தின் நோக்கமாகும். மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் நகரங்கள் இயக்கத்தின் முதன்மை நோக்கம் என்பது, இத்தகைய நகரங்களில் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்துதல், குடிமக்களுக்கு சிறப்பான வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்தித்தருதல், தூய்மையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உருவாக்குதல் ஆகியவையாகும்.

ஸ்மார்ட் நகர இயக்கத்தின் முக்கிய அம்சங்கள்

 • மாநகர மேம்பாடு (புதிய அம்சங்களைச் சேர்த்தல்),
 • மாநகரப் புதுப்பித்தல் (மறு உருவாக்கம்),
 • மாநகர விரிவாக்கம் (நகரப் பகுதிகளை விரிவுபடுத்துதல்) மற்றும்
 • நகரத்தின் வளர்ச்சிக்காக நகரம் முழுவதிலும் ஸ்மார்ட் தீர்வுகளைப் பயன்படுத்துவதாகும்.

விரிவான விளக்கங்களும் பயன்படுத்தும் முறைகளும்

 • மாநகர மேம்பாடு என்பது ஏற்கெனவே கட்டப்பட்ட பகுதிகளை ஸ்மார்ட் ஆனதாகவும், இன்னும் சிறப்பானதாகவும், வாழக்கூடிய தன்மைகொண்டதாகவும் மாற்றுதல். இந்தப் பணிக்காக அந்த நகரத்தில் மக்களுடன் ஆலோசனை நடத்தி 500 ஏக்கருக்கும் அதிக பரப்பு அடையாளம் காணப்படும்.
 • மாநகர புதுப்பித்தல் என்பது ஏற்கெனவே கட்டப்பட்டு வலுவிழந்த நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றிவிட்டு, மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு வசதிகளுடன் புதிய குடியிருப்புப் பகுதிகளை உருவாக்குவது ஆகும். இதற்காக 50 ஏக்கருக்கும் கூடுதலான நிலம் தேவைப்படும். இந்த நிலங்கள் குடிமக்களுடன் கலந்தாலோசனை நடத்தி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் அடையாளம் காணப்படும்.
 • மாநகர விரிவாக்கம் என்பது 250 ஏக்கருக்கு மேல் காலியாக உள்ள பகுதிகளில் புதுமையான திட்டமிடல், நிதியுதவி மற்றும் செயல்பாட்டுத் திட்டங்கள் போன்ற திட்டங்கள் மூலம் காலியாக உள்ள பகுதிகளை மேம்படுத்துவதற்கான ஸ்மார்ட் தீர்வு ஆகும். இந்தப் பகுதிகளில் ஏழை மக்களுக்கு கட்டுபடியாகும் வகையில் வீடுகளைக் கட்டுதல், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்குத் தேவையான தீர்வுகளை ஏற்படுத்துதல் ஆகியவையும் இதில் அடங்கும்.
 • ஒட்டுமொத்த நகர மேம்பாடு என்பது தொழில்நுட்பம், தகவல் போன்றவற்றைப் பயன்படுத்தி, ஏற்கெனவே உள்ள கட்டமைப்பு வசதிகளை இன்னும் சிறப்பானதாக மாற்றுவது ஆகும். உதாரணமாக, போக்குவரத்துத் துறையில் ஸ்மார்ட் தீர்வுகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயண நேரத்தையும், பயண செலவுகளையும் குறைக்க முடியும். இது உற்பத்தித் துறையிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும்.
 • கழிவு நீரை சுத்திகரித்தல், குடிநீர் பயன்பாட்டை அளவிடுவதற்காக ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துதல், சிறப்பான நீர் மேலாண்மை ஆகியவை இதற்கான பிற உதாரணங்கள் ஆகும். சாதாரணமாக உள்ள நகரங்களை வளர்ச்சியை ஊக்குவிக்கும் கருவிகளாக மாற்றுவதற்கு இந்த ஸ்மார்ட் தீர்வுகள் வகை செய்கின்றன. முறையாக திட்டமிடப்பட்டு, கட்டப்பட்டு, சேவை செய்யப்படும் நீடித்த மற்றும் ஸ்மார்ட் நகரங்கள், கட்டுமானத்துடன் தரப்படுத்துதல், தானியங்கிமயமாக்குதல் மற்றும் சேவைகள் ஆகியவற்றோடு ஒருங்கிணைக்கப்பட்டு, உயர்தரத்தில் இணைக்கப்படும் .
 • போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி சிக்கனம், பயோலிக் கட்டுப்பாடுகள், ரோபோட்டிக்ஸ், புதுப்பிக்கவல்ல எரிசக்தி, சூரிய ஒளி மேப்பிங், ஸ்டீரியோ லித்தோ கிராபிக்ஸ், நானோ தொழில்நுட்பம் ஆகியவை ஸ்மார்ட் நகரங்களின் அடையாளங்களாக இருக்கும். ஸ்மார்ட் நகரம் என்பது புதிய முன்னுதாரணங்களின் பேருருவாகவும், சூழலியல் மற்றும் மனித செயல்பாடுகளின் பிணைப்பாகவும் அமையும்.

மாநகரங்களை ஸ்மார்ட் ஆக்குதல்

மாநகரங்கள் என்பவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பல்வேறு அமைப்புகளைக் கொண்டதாகும். பல்வேறு முகமைகள், துறைகள், அமைப்புகள் ஆகியவை மாநகரங்களுடன் தொடர்பு கொண்டவையாக இருக்கும். இவற்றை வழக்கமான முறையில் கையாள்வதும், செயல்படுத்துவதும் மிகவும் சிக்கலான ஒன்றானவையாக மாறி வருகின்றன. புதிய வழிகள், முறைசார்ந்த மாற்றங்கள், தொழில்நுட்பம் ஆகியவை, அவற்றின் செயல்பாடுகளையும் விரிவாக்கும்.

மாநகர திறனையும், சேவை மற்றும் செயல்பாடுகளையும் விரிவாக்கும். மாநகர சேவை மற்றும் மேலாண்மையில் தகவல் தொழில்நுட்பத்தை இணைத்தால், அது நகர்ப்புற சவால்களை சமாளிப்பதற்கான ஸ்மார்ட் தீர்வுகளை உருவாக்குவதற்கும், மாநகர மக்களின் வாழ்க்கையை நிம்மதியானதாகவும், நீடித்ததாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றுவதற்கும் உதவியாக இருக்கும். ஒரு நகரத்தின் புதுமை உருவாக்கம், கற்றல், அறிவுசார் மற்றும் படைப்பு சார்ந்த அணுகுமுறை ஆகியவற்றையும், அந்த நகரத்தின் உற்பத்தித் திறன் மற்றும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்காக தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் நகர இயக்கம் பயன்படுத்துகிறது. அடிப்படை சேவைகளை வழங்குதல், எரிசக்தி மேலாண்மைக்காக வழங்குதல் ஆகியவற்றுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் நகர இயக்கம் பயன்படுத்துகிறது. நெருக்கடியான நேரத்தில், போக்குவரத்து நெரிசல் மற்றும் குழப்பங்களை தவிர்க்க, ஸ்மார்ட் போக்குவரத்துத் தீர்வுகளை வழங்குவதற்காக அறிவுசார் போக்குவரத்து அமைப்பு ஸ்மார்ட் நகரங்களில் ஸ்மார்ட் தீர்வுகள் உருவாக்கப்படும்.

அதிநவீன உட்கட்டமைப்பு மற்றும் பல்வேறு வகையான வசதிகளின் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவைகள், கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல், வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாக்குதல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், வாழும் சூழலை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக வயர்லஸ் கருவிகள், தகவல் மையங்கள், சக்திவாய்ந்த பகுப்பாய்வு மையம் ஆகியவற்றை உள்ளடக்கிய மின்னணு உட்கட்டமைப்பு வசதிகளும், ஸ்மார்ட் நகரங்களில் உருவாக்கப்படும்.

தொழில்நுட்பத்தில் நிகழ்த்தப்பட்ட கண்டுபிடிப்புகளின் மூலம், நமக்கான நிலப்பரப்பு, எரிசக்தி, நேரம் ஆகியவை பல மடங்காக உயர்ந்துள்ளன. மைக்ரோ சிப்புகள், மைக்ரோ கம்ப்யூட்டர்கள், மைக்ரோ வேவ், நானோ தொழில்நுட்பம் ஆகியவற்றின் எதார்த்தமான பயன்பாடுகள் மூலம் நகர்ப்புற சேவைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. புதிய வடிவிலான எரிசக்திகள், புதுப்பிக்கவல்ல எரிசக்தி, சுழற்சிமுறை ஆகியவை நகர்ப்புற சேவைகளில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தத்துவங்கள் ஆகும். சமூகம், கணிணி உலகம், e-topia ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு, உட்புறம் - வெளிப்புறம், தனியார் - அரசு, இங்கு - அங்கு, நகரம் - கிராமப்புறம், இன்று - நாளை போன்ற எல்லைகளைத் தகர்த்து வருகின்றன. ஆன்லைன் முறையில் தகவல்களை பறிமாறுதல், உரையாடுதல், டயனமிக் நெட்வொர்க்குகள், மிதக்கும் கணிணிகள் ஆகியவற்றைக் கொண்டதாக இன்றைய உலகம் மாறிக்கொண்டிருக்கிறது.

தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் கொண்ட கட்டமைப்பு சேவைகள்

ஒரு ஸ்மார்ட் நகரம், அதன் குடிமக்களுக்கு தண்ணிர், துப்புரவு, கழிவு நீர் அகற்றல், திடக்கழிவு மேலாண்மை, எரிசக்தி, போக்குவரத்து ஆகிய சேவைகளை ஸ்மார்ட் மற்றும் அறிவுசார் கட்டமைப்பின் மூலம் வழங்குகிறது. புதுமையை கண்டுபிடிப்பதற்கான ஆதரவு மற்றும் தகவல் தொழில்நுட்ப உலகில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியவற்றின் உதவியுடன் அறிவுசார், கணித கட்டமைப்பை உருவாக்குவதிலும் ஸ்மார்ட் நகரம் கவனம் செலுத்துகிறது. நகரங்களில் கட்டிடங்கள் இருக்கும் என்பதால், அவை ஸ்மார்ட் ஆனதாகவும், ஏராளமான பசுமையானதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. புதுமைகளை கண்டறிதல் மற்றும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள செயல்பாடுகளைப் புதுப்பித்தல் ஆகியவற்றின் மூலம் எரிசக்திப் பயன்பாட்டை குறைப்பது சாத்தியமாகும். பொது கட்டமைப்பில் மற்ற அனைத்து சேவைகளையும் இணைப்பதன் மூலம் பயன்படுத்தப்படாத நிலப்பகுதியே இல்லை என்ற நிலை உருவாக்கலாம். உள்ளூர் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்த ஆன்லைன் கலந்தாய்வுகளுக்கு தேவையான பொதுமக்கள் பங்கேற்பு, நிர்வாகம், ஆன்லைன் கலந்தாய்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்க தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் உதவுகிறது.

ஸ்மார்ட் சிட்டி தத்துவத்தின் அம்சங்கள்

ஸ்மார்ட் எரிசக்தி

மாநகரங்களில் எரிசக்தி சேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் பெருமளவில் கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது. இது தவிர, மின்சாரத்தின் பயன்பாட்டை குறைக்க நேரிட்டதால் நான்கில் ஒரு பங்கு
மின்சார தேவையும் ஏற்பட்டுள்ளது. இதற்காக, எரிசக்தி அமைப்புகள் ஸ்மார்ட் ஆனதாகவும், நீடிக்கத் தக்கவையாகவும் மாற்றப்படவேண்டும்.

 • பயன்பாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்துதல்,
 • மின்உற்பத்தித் திறனை அதிகரித்தல்,
 • நுகர்வோர் சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்துதல்

ஆகியவற்றின் மூலம்தான் பெரும்பாலான மின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டு நிறுவனங்கள் வெற்றியை எட்ட முடியும். மின்தொகுப்பில் திறனை மேம்படுத்தவும், ஸ்மார்ட் மீட்டர்கள், இணையதளங்கள் ஆகியவற்றின் மூலம் நுகர்வோரின் மின்சாரப் பயன்பாட்டை மேலாண்மை செய்வதில், அவர்களை தீவிரமாக பங்கேற்க வைத்தல் ஆகியவற்றுக்காக இந்த நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்கின்றன.

மின்சார தொகுப்பின் திறனை மேம்படுத்துவதற்காக, புதிய தொழில்நுட்பங்களை மின் நிறுவனங்கள் புகுத்தி வருகின்றன. புதுப்பிக்கவல்ல எரிசக்தியை மின் தொகுப்புடன் இணைப்பதற்காக புதிய தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் உருவாக்கி வருகின்றன. ஒரு நேரத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்திக்கொள்வதற்கு வசதியாக, அவற்றை சேமித்து வைப்பதற்கான கருவிகளையும் மின்சார நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன.

இத்தகைய எரிசக்தி அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் மின்சாரத்தை மிச்சப்படுத்துவதுடன், மின்சார செலவுகளையும் குறைக்க முடியும். அதுமட்டுமின்றி மின்உற்பத்தியை அதிகரிப்பதற்கான தேவையும் குறைகிறது. மின் வளங்களில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா என்பதை எதிர்ப்பார்த்துகாத்திருந்து அவ்வாறு ஏற்பட்டால் அதை உடனடியாக சரிசெய்தல், நுகர்வோருக்கு அதிகாரம் அளித்தல், மின்சார வாகனங்களையும், எரிசக்தியையும் புதுப்பிக்கவல்ல ஆதாரங்களுடன் இணைத்தல் ஆகியவற்றுக்கும் இது வகை செய்கிறது. ஸ்மார்ட் எரிசக்தி என்பது ஒருங்கிணைந்த அளவிடக்கூடிய, வீடுகள் முதல் வணிக நிறுவனங்கள் வரை பயன்படுத்தவல்ல எரிசக்தி அமைப்பை குறிக்கிறது.

இந்த அமைப்புக்கு புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆதாரங்கள் பெரும் உதவியாக உள்ளன. ஒரு ஸ்மார்ட் எரிசக்தி அமைப்பு பயன்பாட்டுக்கு வரும்போது, அதில் உள்ள சென்சார்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளின் மூலம் எரிசக்தி விலை உள்ளிட்ட தகவல்களை இரு வழிகளில் பரப்ப வாய்ப்பு ஏற்படுகிறது. பகுப்பாய்வு மற்றும் தானியங்கி கட்டமைப்பின் மூலம் நாம் அனுப்பும் தகவல்களை உத்திகளாக மாற்றி, வளங்களை மிகவும் சிறப்பானதாக மாற்றுகிறது. ஸ்மார்ட் மின் தொகுப்புகளை ஏற்படுத்தும்போது, அவை எதிர்பாராத மற்றும் இயற்கை சீற்றங்களை தாங்கும் சக்தி கொண்டவையாக உள்ளன.

அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இத்தகைய மின்தொகுப்புகள் எத்தகைய பிரச்சினைகள் வரும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கக் கூடியவை என்பதால், ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும்போது அதற்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிந்து சரிசெய்துவிடும். இதனால், மின்தடை என்பது இல்லாமல் போய்விடும். இதற்காக நாம் செய்யும் செலவும் மிகக் குறைவாக இருக்கும். மின்சாரத்தை எவ்வாறு மேலாண்மை செய்யலாம் என்பது குறித்த தகவல்களும் இந்த அமைப்பில் வழங்கப்படுவதால், அவர்களுக்கு மின்சாரத்தை சேமிக்க பல வாய்ப்புகள் கிடைக்கின்றன. சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் ஆகிய புதுப்பிக்கவல்ல எரிசக்தியை மின்தொகுப்புடன் இணைப்பதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடிகிறது. அதுமட்டுமின்றி, நகரங்கள் மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய முடியும்.

ஸ்மார்ட் பயன்பாடுகள்

அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உயர்தரமான குடிநீர் விநியோகம், வடிகால், கழிவுநீர் அகற்றல், கழிவு மேலாண்மை ஆகியவற்றை வழங்குவதுதான் ஸ்மார்ட் பயன்பாடுகளின் நோக்கமாகும். குடிநீர் விநியோகத்திற்காக, SCADA அமைப்பு போன்ற தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் விநியோகத்திறனும், வெளிப்படைத் தன்மையும் அதிகரிக்கிறது. திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிற பயன்பாடுகளிலும் இந்தப் பயன்கள் கிடைக்கின்றன. தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படும் 3 தொட்டி மறுசுழற்சி அமைப்பு, பயன்படாத குப்பைகள், மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகள், மக்க வைக்கவேண்டிய குப்பைகள் ஆகியவற்றை தனித்தனியாக மேலாண்மை செய்ய உதவுகிறது. இதன் மூலம் குப்பைகள் குறைவதால், அதை அகற்றுவதற்கான செலவுகளும் குறைகின்றன. பூங்காக்கள் மற்றும் புல்வெளிகளுக்கு தண்ணிர் பாய்ச்சும் அமைப்பு செயற்கைக்கோள் மூலம் இயக்கப்படுவதால், தண்ணிர் பயன்பாடும், அதை செலுத்துவதற்கான மின்சாரமும் குறைகிறது.

ஸ்மார்ட் போக்குவரத்து

ஸ்மார்ட் நகரங்களில் அறிவுசார் போக்குவரத்துத் தீர்வுகள் மூலம் தடையில்லாத, பாதுகாப்பான திறமையான, பொதுப் போக்குவரத்து மேலாண்மை செய்யப்படுகிறது. போக்குவரத்து கட்டமைப்பு மற்றும் டாக்சிகள், ஆட்டோக்கள், சரக்குப் போக்குவரத்து, சிக்னல் அமைப்பு, வழிகாட்டும் பலகைகள், வாகனங்களை நிறுத்துதல் ஆகியவற்றுக்கான திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போதும் இதேபோன்று பயனுள்ள முடிவுகள் கிடைக்கின்றன.

அறிவுசார்ந்த சமுதாய கட்டமைப்பு செயல்திட்டங்கள்

சுகாதாரம், கல்வி, பொழுதுப்போக்கு மற்றும் பிற அருகாமை சேவைகளை அமைக்கும்போது, அவை மின்சாரத்தையும், மின்பொருட்களையும், மாசு வெளியேற்றத்தையும் கட்டுப்படுத்தும்.

ஸ்மார்ட் நகரங்களில் முக்கிய சேவைகள்

எரிசக்தி

 • எரிசக்தி கட்டமைப்பு,
 • ஸ்மார்ட் மின்தொகுப்பு
 • ஸ்மார்ட் மீட்டர்கள்,
 • ஸ்மார்ட் கட்டிடங்கள்
 • புதுப்பிக்கவல்ல எரிசக்தி தொகுப்பு
 • மின்சார வாகனங்கள்
 • மின்சாரத் தரத்தைக் கண்காணித்தல்
 • எரிசக்தி பாதுகாப்புத் திறன் மற்றும் கண்காணிப்பு
 • பயோநிக் கட்டுப்பாடுகள்
 • அறிவுசார் மேலாண்மை / பராமரிப்பு,
 • தகவல் மேலாண்மை அமைப்பு

பொதுப் பயன்பாடுகள்

 • குறைந்த இழப்பு மற்றும் கசிவுடன் கூடிய தண்ணிர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகள்
 • அறிவுசார் கணக்கீடு மற்றும் பணம் செலுத்துதல்
 • கழிவு மேலாண்மை
 • வருவாய் சாராத குடிநீர் இழப்புகளைக் கட்டுப்படுத்துதல்
 • பரவலைத் தடுக்கும் முறைகளைப் பயன்படுத்தி கசிவை அடையாளம் காணுதல்,
 • பம்ப்புகள் மற்றும் வால்வுகளில் அழுத்தத்தை சமாளித்தல்,
 • மின்பயன்பாட்டைக் குறைத்தல்

ஸ்மார்ட் போக்குவரத்து

 • உருவக மாதிரிகளை ஏற்படுத்துதல்
 • ஸ்மார்ட் அட்டைகள்
 • ஸ்மார்ட் சிக்னல்,
 • போக்குவரத்துக் கட்டுப்பாடு,
 • மாறுபட்ட வழிகாட்டி பலகைகள்,
 • செல்பேசி உதவியுடனான வரைபடங்கள் / பாதைகள்,
 • வழிகண்டுபிடிப்பு முறைகள்
 • தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உதவியுடன் கூடிய போக்குவரத்துக் கட்டுப்பாடு பாதுகாப்பு,
 • விபத்து கண்காணிப்பு,
 • தடயவியல் ஆய்வுகள்
 • உட்கட்டமைப்பு, ஒருங்கிணைப்பு, பராமரிப்பு, தகவல் மேலாண்மை அமைப்பு மற்றும் மேலாண்மை

அறிவுசார்ந்த சமுதாய கட்டமைப்பு செயல்திட்டங்கள்

 • அறிவுசார் சமுதாய திட்டமிடலுக்கு வழிகாட்டுதல்
 • கல்வி மற்றும் சுகாதார கட்டமைப்பு
 • கலப்பு நிலப்பயன்பாடு,
 • ஸ்மார்ட் அருகாமை

ஸ்மார்ட் மற்றும் பசுமை கட்டடங்கள்

 • ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுச்சூழல் நடவடிக்கைகள்
 • ஸ்மார்ட் கட்டிடங்கள்
 • கட்டிட தகவல் மேலாண்மை
 • மாநகர நிர்வாக மையம்
 • சுற்றுச் சூழல் மேலாண்மை
 • தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு மையம்

தொலைத்தொடர்பு கட்டமைப்பு பொதுசேவை மற்றும் நிர்வாகம்

 • நிலத் தகவல் அமைப்பு, மின்னணு வரைபடம் தயாரிப்பு, எஸ்.டி.ஐ, ஜியோபோர்ட்டல், ஜி.ஐ.எஸ். சார்ந்த சொத்து ஆவணங்கள், திட்ட ஆவணங்கள் மற்றும் பரிமாற்றங்கள்
 • ஆன்லைனில் கட்டிட திட்ட வரைபடத்திற்கு ஒப்புதல்
 • அகண்ட அலைவரிசை மேம்பாடு
 • வீடுகளில் தானியங்கி வசதி மற்றும் இன்டர்நெட் வசதி தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப ஆதரவு மற்றும் பயிற்சி சிறு வணிகங்களுக்கான வணிக மையங்கள்
 • பொதுப் பாதுகாப்பு அமைப்புக்கான ஒருங்கிணைக்கப்பட்ட இணையதளம்
 • மின்னணு வணிக மையம், தானியங்கி சேவை அளிக்கும் வசதி
 • ஒருங்கிணைக்கப்பட்ட பில்லிங்
 • தட்பவெப்பநிலை

தெரு மின்னணு வணிகம் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஜியோபோர்ட்டல், செல்பேசி / மின்நிர்வாகம் வகையில், உயர்தரமான திட்டமிடல் செய்யப்படவேண்டும்.

ஸ்மார்ட்டான அருகாமைப் பகுதி மூலம் உட்கட்டமைப்பு திறன், தண்ணீர் பராமரிப்பு, எரிசக்தி சிக்கனம், இயற்கை வளப்பாதுகாப்பு ஆகியவற்றை சாதிக்க முடியும்.

ஸ்மார்ட் மற்றும் பசுமை கட்டிடங்கள்

ஸ்மார்ட் மற்றும் பசுமை கட்டிடங்களை அருகாமைப் பகுதிகளில் உருவாக்குவதன் மூலம்,

 • மின்சாரத்தை 30 விழுக்காடுவரை மிச்சப்படுத்துதல்,
 • கரியமில வாயு வெளியேறுவதை குறைத்தல்,
 • குறைந்த மின்சாரத்தில் அதிக மின்சாரப் பயன்பாடுகளை வழங்குதல்

ஆகியவற்றை சாதிக்க முடியும். இத்தகைய நகரமும், கட்டிடங்களும், மிகவும் வசதியாகவும், அறிவு சார்ந்ததாகவும், ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் இருக்கும் என்பதுடன், கட்டிடங்களில் இப்போதுள்ள ஜன்னல் கண்ணாடிகளில் இருந்து ஸ்மார்ட் ஜன்னல்களை உருவாக்க முடியும். இது கட்டடத்திற்குள் வெப்பம் ஊடுருவுவதைத் தடுக்கும். சென்சார் மூலம் இயங்கும் ஃபோட்டோ வோல்டிக்செல் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி தொழில்நுட்பம் மூலம் குளிரூட்டிகளுக்கான மின்சாரத்தையும், மின்கட்டமைப்பையும் குறைக்க முடியும்.

தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உதவியுடன் கூடிய பொது சேவைகள்

தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் மூலம் அரசு துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பையும், மின் நிர்வாகத்தையும் மேற்கொள்ள முடியும். ஒரு நகரில் உள்ள பல்வேறு துறைகள், குடிமக்கள் உள்ளிட்டோரிடையே தகவல்களை பகிர்ந்துகொள்வதற்கு இவை பேருதவி செய்யும்.

சூழலியலை நோக்கி

ஸ்மார்ட் நகரம் நம்மை சூழலியல் மற்றும் நீடித்த வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்கிறது. நிலம், பசுமை பரப்புகள், காற்று, நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், எரிசக்தியை சேமிக்கவும், திடக்கழிவு மேலாண்மை, கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல், சுற்றுச் சூழல் மேலாண்மை ஆகியவற்றுக்கு இதுதான் மிகச் சிறந்த வழியாகும். ஸ்மார்ட் நகரங்களில் வழங்கப்படும் முக்கிய சேவைகள் மற்றும் அதனால் ஏற்படும் நீடித்த தன்மை குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

மின் நிர்வாகம்

"என்னைப் பொறுத்தவரை மின் நிர்வாகம் செலவு குறைந்த சிறப்பான நிர்வாக முறை என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. நீடித்த வளர்ச்சிக்கு முக்கிய தேவையான நல்லாட்சியின் முக்கிய என்பது எளிமையான அம்சம்தான் மின் ஆளுமை" - பிரதமர் நரேந்திர மோடி. ஏதேனும் ஒரு நகரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடிமக்கள் சேவைகள் வழங்கப்பட்டால், அது தொடர்பான விசாரணைகள், பதிவு, விண்ணப்பப் படிவத்தைத் தாக்கல் செய்தல், கட்டணம் செலுத்துதல், குறைகளைத் தீர்த்தல் ஆகியவற்றுக்கு அதிகாரிகளை தொடர்பு கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த நடைமுறைகளை மேற்கொள்ள குடிமக்களுக்கு அதிக நேரம் பிடிக்கும். குடிமக்கள் சேவைகளைப் பெறுவதற்கான E-Gateway வசதி உருவாக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்த விஷயத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டிருக்கிறது. நகராட்சி நிர்வாகத்தில் இந்த சேவை பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதுடன், பல மாநகராட்சிகளில் தொலைவு, வகுப்பு, பாலினம் ஆகிய தடைகளை உடைத்து சேவை வழங்குவதில் அமைதிப் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வசதியின் மூலம் எந்தவொரு குடிமகனும் தீர்க்க வேண்டிய பிரச்சினையை செல்பேசி மூலம் படம்பிடித்து அதை குறுஞ்செய்தி மூலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்ப முடியும். இந்த அமைப்பில் உள்ள வசதி புகாரை பதிவு செய்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளும். குறிப்பிட்ட காலத்திற்குள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அதுகுறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் E-Gateway அமைப்பில் வசதி செய்யப்பட்டுள்ளது.

மின் நிர்வாக சேவை எவ்வாறு மும்பையில் ஜி.ஐ.எஸ். வரைபடமாக்கல் முறையின் மூலம், 60 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் கீழ்க்கண்டவையும் அடங்கும்.

 • குறைதீர்ப்பதற்கான தளம்
 • நகரமைப்புக்கான அனுமதி மற்றும் உரிமம்
 • குடிநீர் மற்றும் சொத்து வரி நிர்வாகம்
 • பொதுப்பணி - மதிப்பீடு மற்றும் பணம் செலுத்துதல்
 • ஆக்ட்ராய் வரி மேலாண்மை
 • பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்
 • சொத்துப்பதிவு
 • நில சேவைகள் மற்றும் குடிசைப் பகுதி கணக்கெடுப்பு
 • ஜி.ஐ.எஸ். உட்கட்டமைப்பு சார்ந்த நிலத் தகவல்

ராஜ்கோட் மாநகராட்சி பல்வேறு குடிமக்கள் சேவைகளை செல்பேசியுடன் இணைத்துள்ளது. மொபைல் நிர்வாகம் என்று அழைக்கப்படும் இத்திட்டத்திற்கு RTE (Responsive, Intelligent, Transparent and Effective) 6T6670) பெயரிடப்பட்டிருக்கிறது.

மின்னணு அடிப்படையிலான நிர்வாக அமைப்புகள், நகர்ப்புறங்களில் புதிய சமூகவியலை உருவாக்கி வருகின்றன. வெளியேற்றம் மற்றும் உள்ளடக்கம் குறித்த சிந்தனையை இவை மறு வரையறை செய்து வருகிறது.

பொதுப் போக்குவரத்து வசதிகளில் தடையற்ற பயணம் செய்தல், பொது இடங்களை அணுகுதல், பணம் செலுத்துதல் மற்றும் சமூக சேவைகளைப் பெறுவதற்கு போக்குவரத்து ஸ்மார்ட் அட்டைகளை பயன்படுத்தும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் அலுவலகங்கள், வங்கிகள் அல்லது அரசுத் துறைகளுக்கு செல்ல வேண்டிய தேவையில்லாமல் போய்விட்டது.

நகரப் பாதுகாப்பு, போக்குவரத்து உருவக உருவாக்கம், சொத்துப்பதிவு, வரிவிதிப்பு போன்றவற்றில் புதுமையான, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத முறைகளைக் கையாள்வதற்கு மின்னணு புரட்சி உதவி செய்கிறது. நகர்ப்புறங்களில் வழங்கப்படும் அனைத்து சேவைகள் மற்றும் அமைப்புகளில் ஸ்மார்ட் சிப்கள், ஸ்மார்ட் கருவிகள் பயன்படுத்தப்படுவதையும், அதன் மூலம் அந்தச் சேவைகள் மிகவும் ஸ்மார்ட்டாகவும், அறிவுசார்ந்தவையாகவும் வழங்கப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

இந்த அமைப்புகளில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதை நாமே கண்டறிந்து, சரிபார்க்க மின்னணு அமைப்புகள் உதவுகின்றன. நகர்ப்பகுதிகளில் அனைத்து செயல்பாடுகளும் மின்னணு முறைக்கு மாறிவிட்டதால் எதிர்காலம் ஏற்கெனவே நம்முன் வந்துவிட்டது.

இந்திய நகரங்களில் பாதுகாப்பு மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது ஆகும். இது பல்வேறு நிலைகளில் பல்வேறு துறைகளையும், பல்வேறு சேவை அமைப்புகளையும் உள்ளடக்கியதாகும். பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர்கள், வரம்பு காரணமாக ஒரு துறையிலிருந்து இன்னொரு துறைகளுக்கு அலைகழிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்கவும், உதவி வழங்கவும், பொது தளமாக அவசர உதவி மற்றும் பாதுகாப்பு மையத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். ஒருங்கிணைந்த தகவல் மற்றும் கட்டளை தளத்தை ஏற்படுத்துவதற்கு மின்னணு மயமாக்கலும், கட்டமைப்பு தொழில்நுட்பமும் இயற்கை சீற்றங்கள், மனிதர்களால் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள், குற்றங்கள், விபத்துகள், காவல்துறை உதவி, தீ விபத்து, மருத்துவம், போக்குவரத்து நெரிசல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

விரிவான அவசர உதவிகளைப் பெறுவதற்கு இந்த தளம் உதவும். பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள், ஆபத்துகள், பேரழிவுகள் ஆகியவற்றை எதிர்கொள்ள rapidity, robustness, redundancy, resourcefulness, reformability and recoverability ஆகிய ஆறு R-கள் மிகவும் முக்கியமானவையாகும்.

இந்தியாவில் உள்ள ஸ்மார்ட் நகரங்கள், சமூகத்தில் உள்ள ஏழைகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் அமைப்புசாரா துறையினரின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். இவற்றை உள்ளூர் கலாச்சாரம் மற்றும் தட்ப வெப்ப நிலையுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். ஸ்மார்ட் நகரங்களில் உள்ள கட்டிடங்கள் சர்வதேச தரத்திலும், கண்ணாடி கட்டிடங்களாகவும் இருப்பதைவிட, மிகவும் முக்கியமானது என்னவென்றால், பசுமை, பொது இடங்கள், அடிப்படை சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகள், கட்டுப்படியாகும் வகையிலான வீட்டு வசதி, பொதுப் போக்குவரத்து, குடிநீர் விநியோகம், துப்புரவு வசதி, பொதுக் கழிப்பிடங்கள், புதுப்பிக்கவல்ல எரிசக்தி, திட்ட மற்றும் திரவ கழிவு மேலாண்மை ஆகியவைதான். ஸ்மார்ட் நகரம் என்பது வேலைவாய்ப்பு வழங்குதல், வாழ்வாதாரம் வழங்குதல், வலிமையான உள்ளூர் பொருளாதாரத்தை வழங்குதல், கலாச்சாரங்களை வெளிப்படுத்துவதற்கான மையம், கற்றல் மற்றும் தகவல் தெரிவித்தல் வசதிகள் ஆகியவற்றைக் கொண்டதாக அமையவேண்டும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
3.17391304348
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top