பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நேரடி மானியத்திட்டம்

நேரடி மானியத் திட்டத்தில் வங்கிக் கணக்கு மாற்றம் பற்றின குறிப்புகள்

சமையல் எரிவாயு உருளை நேரடி மானியத் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள், தேவையெனில் தங்கள் வங்கிக் கணக்கை மாற்றிக்கொள்ள முடியும்

வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்து மானியத் தொகை பெறுவதற்கு, ஆதார் அட்டை கட்டாயமில்லை. ஆனால், சமையல் எரிவாயு இணைப்பு உள்ள வாடிக்கையாளர் பெயரில் வங்கிக் கணக்கு இருப்பது அவசியம்.

எப்படி இணைவது?

ஆதார் அட்டை இல்லாதவர்கள் சமையல் எரிவாயு புத்தகத்தின் முதல் பக்க நகல் (அல்லது) அண்மையில் பெற்ற சமையல் எரிவாயு உருளை தொகைக்கான ரசீது, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை விண்ணப்ப படிவத்துடன் இணைத்துக் கொடுத்தால் போதுமானது.

ஆதார் அட்டை உள்ளவர்கள் எரிவாயு இணைப்பு யாருடைய பெயரில் இருக்கிறதோ அவரது ஆதார் அட்டையின் நகல், சமையல் எரிவாயு புத்தகத்தின் முதல் பக்க நகல் (அல்லது) அண்மையில் பெற்ற சமையல் எரிவாயு உருளைக்கான ரசீது, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை விண்ணப்ப படிவத்துடன் இணைத்துக் கொடுக்க வேண்டும்.

வங்கிக் கணக்கை மாற்றலாம்

நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்காக வங்கியில் ஏற்கெனவே சேமிப்பு கணக்கு உள்ளவர்கள், ஊதியத்துக்காக வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள், பிரதமரின் மக்கள் நிதி (ஜன் தன்) திட்ட வங்கிக் கணக்கு உள்ளவர்கள் தங்களது வங்கிக் கணக்கு எண்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

ஊதியத்துக்காக வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறும்போது வங்கிக் கணக்கை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இது தவிர, வங்கிக் கணக்கை முடித்துக்கொள்பவர்கள், வேறு வங்கிக்கு மாற நினைப்பவர்கள் நேரடி மானியத்துக்காக அளித்த வங்கிக் கணக்கை மாற்ற முடியுமா?.

ஆனால், வாடிக்கையாளர்கள் அனைவரும் தேவையெனில், தங்களது வங்கிக் கணக்கை மாற்றிக் கொள்ள முடியும்

எப்படி மாற்றுவது?

நேரடி மானியத் திட்ட வங்கிக் கணக்கை மாற்ற நினைக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் விநியோகஸ்தரிடம் சென்று, எந்த வங்கிக் கணக்கில் மானியத் தொகையை பெற வேண்டுமோ அந்த வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலை சமர்பித்து மாற்றிக் கொள்ளலாம்

ஒரு முறை மட்டுமே அனுமதி

வங்கிக் கணக்கை மாற்ற நினைக்கும் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை விநியோகஸ்தர்களால் ஒரு முறை மட்டுமே நிறைவேற்ற முடியும்.

இரண்டாவது முறையாக வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கை மாற்ற நினைத்தால் சம்பந்தப்பட்ட எண்ணை நிறுவனங்களிடம் விண்ணப்பித்து, முறையான காரணங்கள் இருந்தால் மட்டுமே வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு எண் மாற்றப்படும்.

ஆதாரம் : திணமனி

2.93055555556
முத்து Sep 26, 2015 01:23 PM

எனக்கு மாணியம் வங்கிள் வரவில்லை ஏன்?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top