பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மருத்துவ காப்பீட்டு திட்டம்

மருத்துவ காப்பீட்டு திட்டம் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பயன் பெற முடியும்.

இந்த திட்டத்தில் மருத்துவ சிகிச்சை முறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பராமரிப்பும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறப்புக்கு பிறகு தேவைப்படும் சிகிச்சைகளும், இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

காப்பீட்டு வரம்பு

ஒரு சில நோய்களுக்கான காப்பீட்டு வரம்பு 1 1/2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காப்பீட்டு திட்டத்தின் படி ஒரு குடும்பம் சிகிச்சைக்காக ஆண்டுக்கு1 லட்சம் வீதம் 4 வருடங்களுக்கு ரூ.4 லட்சம் பெற முடியும் என்பது சிறப்பு அம்சமாகும்.

புதிய திட்டத்தின் மூலம் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை உட்பட 1,016 சிகிச்சைகளுக்கு காப்பீட்டு தொகை பெறமுடியும். 113 தொடர் சிகிச்சை, 23

நோய் கண்டறிதல்

நோய் கண்டறிதல் முறை ஆகியவையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும், அறுவை சிகிச்சை தேவைப்படாதபோதும் மருத்துவ காப்பீட்டு தொகை பெறலாம்.

நோயாளிகள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள், மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நாளில் இருந்து 5 நாட்கள் செய்யப்படும் பரிசோதனை கட்டணம் உட்பட செலவு தொகை அனைத்தையும் இந்த திட்டத்தின் மூலம் பெறமுடியும்.

இந்த திட்டத்தில் பயன் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.

இதன்மூலம் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு வைத்தியசாலைகளில் கட்டணம் இல்லாமல் சிகிச்சை பெறலாம்.

இதுதொடர்பான விவரங்களுக்கு 1800 4253993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

ஆதாரம் : தமிழ்நாடு அரசு மக்கள் நலவாழ்வுத் துறை

3.33720930233
R.Rengaraj Oct 22, 2019 08:24 AM

காப்பீட்டு அட்டை பெறுவதற்கான வழிமுறைகள் என்ன

தங்கராஜ் Aug 06, 2019 02:49 PM

மருத்துவ காப்பீடு எண் உள்ளது. அட்டை பெருவது எப்படி

அ.வசந்தி Jul 23, 2019 02:48 AM

காப்பீட்டு அட்டை பெறுவதற்கான வழிமுறை என்ன

ரூஷோ Jul 19, 2019 09:28 PM

காப்பிட்டு திட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமணை தூத்துக்குடியில் எத்தனை

வேல்முருகன் May 03, 2019 12:59 PM

எனது குடும்ப அட்டை காப்பீடு திட்டத்தில் உள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top