பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

சண்டிகர்

சண்டிகரில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பற்றிய தகவல்.

இ-ஜன் சம்பர்க்

இ-ஜனசம்பர்க் திட்டத்தின் மூலம், மக்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்கள் மற்றும் சேவைகளை 70- இ-சம்பர்க் மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். இந்த மையங்கள், சண்டிகரில் உள்ள ஒவ்வொரு கிராமம் மற்றும் ஊராட்சி மையம் ஆகியவற்றில் உருவாக்கப்படும். இந்த மையங்களில், குடிமக்கள் தங்களது குறைகளையும் பதிவுசெய்து, அவற்றிற்கான விரைவான தீர்வையும் பெற முடியும்.

ஜசிடியின் பயன்கள் பொதுமக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதுதான் ஜன சம்பர்க்கின் இலக்கு. அதிலும் குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பம் மூலமாக மக்கள், சுலபமாக தகவல்களைப் பெறவும் குறைகளைக் கூறவும் அவற்றைத் தாமதமின்றித் தீர்த்துக்கொள்ளவும் இயலும். இது மட்டுமின்றித் தகவல் பெற உரிமைச் சட்டத்தின் (ஆர் டி ஜ) மூலம் அரசின் அனைத்துத் துறைகளிடமிருந்தும் தேவையான தகவல்களைப் பெறவும் முடியும். இவற்றைப் பொதுவான ஒரு மையத்தில் சுலபமாகப் பெற முடிவது இத்திட்டத்தின் சிறப்பு என்று கூறலாம்.

ஜன சம்பர்க்கின் எதிர்கால லட்சியம்

 • அரசின் நிர்வாக யந்திரத்தை, சமுகத்திலுள்ள அனைத்துப் பிரிவினர் குறிப்பாகப் பின் தங்கிய மக்களுக்கு அருகில் கொண்டு செல்வது.
 • குடிமக்களுக்கு அரசாங்கம் அளிக்கும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள, அவை சம்பந்தமான தகவல்களை ஒரே இடத்தில் திறனுள்ள விதத்தில் தருவது. இதனால், பல்வேறு சேவைகளைப் பெற, பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியதைக் குறைக்க முடியும். இதன் முக்கியமான பயன் என்னவென்றால், விலைமதிப்பற்ற நேரம் மிச்சமாகும்.
 • சேவைகள் குறித்த கோரிக்கை, பரிசீலனை மற்றும் சேவைகளைத் தருவது ஆகியன கால தாமதமின்றி நடக்கும். ஆதலால் அதிகமான எண்ணிக்கையில் மக்கள் பயன்பெற முடியும்.
 • தகவல் அளிப்பு சேவைகளை, வசதியான சூழ்நிலையில் பெற முடிவதால், இந்த சேவைகளைப் பெறுவது ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாகவே இருக்கும்.
 • தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்கு வலுச் சேர்ப்பது போன்றதாகும்.
 • சம்பர்க் மையங்களுக்கு அடுத்ததாக அரசு நிர்வாகம் இ-ஜன் சம்பர்க் மையங்களை உருவாக்கியது. இவற்றின் மூலம், குடிமக்களுக்குத் தேவையான தகவல்களைத் தரும் சேவைகளை செய்ய முடிகிறது. ஒவ்வொரு மையமும் இருவேறு வகையான சேவைகளை இந்த மையம் அளிக்கிறது. தகவல் தருவது மற்றும் குறைதீர்ப்பு மையமாகச் செயல்படுவது போன்றவைகளைக் கூறலாம். இவை இரண்டையும் சேர்த்துப் பார்த்தால், ஒரு குடிமகனுக்குத் தேவையான அரசு சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகள், தகவல்கள் ஆகியவற்றை இந்த மையம் அளிக்கிறது.

இந்த மையங்களில் அளிக்கப்படும் சேவைகளின் வகைகள்

 • அரசின் அனைத்துத் துறைகள் செயல்படும் விதம் பற்றிய தகவல்கள், மனுக்கள், ஆகிய அனைத்தும் இதில் கிடைக்கும். அதிலும் குறிப்பாகச் சாதாரண மக்களுக்குத் தேவையான, பிறப்பு/இறப்புச் சான்றிதழ்கள் மனு செய்ய வேண்டிய முறையுடன், அது சம்பந்தப்பட்ட மனு. தாமதமாகப் பதிவுசெய்தால் அல்லது கோரிக்கை விடுத்தால், அவற்றை எவ்வாறு செய்வது என்பது பற்றிய தகவல்களும் இருக்கும். இவை தவிர, காவல் நிலையத்தில் எப்படிப் புகார் பதிவுசெய்வது, மற்றும் இருக்கும் மக்கள் தொடர்புத் துறைகளான, பொதுப்பணித் துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள், நில ஆய்வுத் துறை, அரசு மொழியியல் பணிகள் பிரிவு போன்ற அலுவலகங்களில் ஏதாவது தேவையை நிறைவேற்றிக்கொள்ள, கோரிக்கைச் சமர்ப்பிக்க புகார் குறித்த விஷயங்களை எப்படிச் செய்வது, அவற்றிற்கான முறைகள், விண்ணப்பங்கள், மனுக்கள், இவற்றைச் சரியான முறையில் பூர்த்திசெய்ய வழிகாட்டுதல்கள் போன்ற தகவல்களும் இந்த இ-சம்பர்க் மையங்களில் கிடைக்கும்.
 • மக்களுக்கு மிகவும் தேவைப்படும் கல்வி மற்றும் உடல்நலம் சம்பந்தமான தகவல்கள், சேவைகள் ஆகியவற்றைப் பெற முடியும். உதாரணமாக, அரசு மருத்துவமனைகளில் அன்றாடம் இருப்பில் இருக்கும் ரத்தத்தின் வகைப்பிரிவுகள், எண்ணிக்கைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். கல்வியைப் பொறுத்தவரை, பொதுத் தேர்வுகளின் முடிவுகள், மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கக்கூடிய பல்வேறு வகைப்பட்ட கல்லூரிகள் போன்றவற்றை அறிந்துகொள்ளலாம். அதேபோல அரசு சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
 • போக்குவரத்துத் துறை மற்றும் சுற்றுலாத் துறை தொடர்புடைய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, அனைத்துப் பேருந்துத் தடங்கள், சுற்றுலா மையங்களின் விவரங்கள் போன்றவற்றை அறிந்துகொள்ள முடியும்.
 • பாஸ்போர்ட் எடுக்க வேண்டுமெனில் அது பற்றிய விவரங்கள், ஒரு வேளை விண்ணப்பித்து இருந்தால் அதன் நிலை, ரயில் நேரங்கள், பதிவுகள் பற்றிய விவரங்கள் போன்றவைகளைத் தெரிந்துகொள்ளலாம்.
 • அனைத்து அரசுத் துறைகளுக்கான வலையக விலாசங்களையும் இதிலிருந்து தெரிந்துகொள்ள முடியும்.

மற்றும் உள்ள அரசு சேவைகள் பற்றியும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
இதிலுள்ள அனைத்து சேவைகளும் இலவசம்தான். அதாவது தகவல்களைத் தெரிந்துகொள்வதாக இருக்கும் பட்சத்தில். ஒருவேளை அந்தத் தகவல்கள், விண்ணப்பங்கள், மனுக்கள் ஆகியன வேண்டும் என்றால், ஒரு பக்க நகலுக்கு மிகக் குறைந்த அளவு கட்டணம் வீதம் வசூலிக்கப்படும். குடிமக்கள், தங்களது புகார்கள், கோரிக்கை மனுக்கள், (இவை எந்தத் துறையை வேண்டுமானாலும் சார்ந்ததாக இருக்கலாம்) ஆகியவற்றைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்த மையங்களில் ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் விவரங்களுக்கு - :http://www.chandigarh.gov.in/egov_jsmpk
2.81081081081
நெவிகடிஒன்
Back to top