பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

மின்னணுப் பெட்டகம்

மின்னணுப் பெட்டகம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மின்னணுப் பெட்டகம் என்பது என்ன?

ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மின்னணு சேமிப்பு இடத்தை இந்தப் பெட்டகம் வழங்குகிறது.  குடிமக்களின் ஆதார் எண்ணுடன் இந்தப் பெட்டகம் இணைக்கப்படும். இந்தப் பெட்டகத்தில் மின்னணு ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்கமுடியும். வெவ்வேறு துறைகள் வழங்கும் மின்னணு ஆவணங்களையும் இதில் வைத்துக் கொண்டு URI (Uniform Resource Identifier) link மூலம் அணுக முடியும். இந்தத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மின்னணு கையொப்ப வசதியைப் பயன்படுத்தி மின்னணு ஆவணங்களில் கையெழுத்திடவும் முடியும்.

இந்தப் மின்னணுப் பெட்டகத்தை இணையதளம் மூலமாகவும், கைபேசி மூலமாகவும் அணுகமுடியும்.

மின்னணுப் பெட்டகத்தின் முக்கியமான கூறுகள்

ஒவ்வொரு குடிமகனின் மின்னணுப்பெட்டகக் கணக்கும் பின்வரும் பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும்.

 • பொருள் தாங்கிப் பலகை உங்கள் பெட்டத்தினுள் நுழையும் போது முதலில் திரையில் தோன்றும் இந்தப் பக்கத்தில் நீங்கள் வைத்துள்ள ஆவணங்களின் பட்டியல் தெரியும்.
 • உங்களுக்கு தரப்பட்டுள்ள ஆவணங்கள் - மின்னணுப் பெட்டகத்தில் பங்கேற்றுள்ள நிறுவனங்கள், அரசுத் துறைகள் போன்றவை உங்களுக்கு வழங்கியிருக்கும் ஆவணங்களை அணுகுவதற்கான URI LINK கள் இந்தப் பிரிவில் தெரியும்.
 • பதிவேற்றப்பட்ட ஆவணங்கள் : மின்னணுப் பெட்டகத்தில் நீங்கள் பதிவேற்றம் செய்து வைத்திருக்கும் ஆவணங்களை இந்த பிரிவு காட்டும். இத்தகைய ஆவணங்களுடன் நீங்கள் புதிய தகவல்களை சேர்க்கலாம், அவற்றில் மின்னணு கையொப்பமிடலாம். தேவைப்படுபவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
 • ஆவணப்பகிர்வு : மின்னணு பரிமாற்றம் மூலமாக நீங்கள் பிறருக்கு அனுப்பிவைத்திருக்கும் ஆவணங்களின் பட்டியல் இதில் தெரியும்.
 • செயல்பாடுகள்: மின்னணுப் பெட்டகத்தில் நீங்கள் இதுவரை மேற்கொண்ட செயல்பாடுகளின் விவரங்கள் இந்தப் பிரிவில் காணப்படும். நீங்கள் பதிவேற்றம் செய்திருக்கும் கோப்புகள், பதிவிறக்கம் செய்துள்ள கோப்புகள், மின்னணு கையொப்பம் போன்றவற்றின் விவரப் பதிவுகள் இங்கு இருக்கும்.
 • வழங்குநர்கள் : மின்னணுப்பெட்டகத்தில் வழங்குநர்களாகப் பதிவு செய்து கொண்டிருக்கும் துறைகள், முகமைகளின் பட்டியல் இந்தப் பிரிவில் இருக்கும். இந்தத்துறைகள் உங்களுக்கு ஏதேனும் ஆவணங்களை அனுப்பி இருந்தால் அதுபற்றிய விவரம்  URI LINK உடன் திரையில் தோன்றும்.

எப்படி பயன்படுத்துவது?

குடிமக்களுக்கு

 • மின்னணு பெட்டகத்தினுள் நுழைவதற்கு உங்கள் கைபேசி எண்ணைப் பதிவிட வேண்டும்
 • உங்கள் கைபேசிக்கு உடனே ஒரு கடவுச் சொல் (OTP) வரும்.
 • ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய OTP யை அதற்குரிய இடத்தில் பதிவிட வேண்டும். இப்போது உங்கள் மின்னணுப் பெட்டகக் கணக்கு உருவாக்கம் பெரும்.
 • மின்னணுப் பெட்டகக் கணக்கு வெற்றிகரமாக உருவாக்கப்டட பிறகு, நீங்களாகவே முன்வந்து உங்கள் ஆதார் எண்ணைப் பதிவிடலாம். இதன் மூலம் உங்களுக்கு கூடுதல் சேவைகள் கிடைக்கும்.
 • இவற்றை எல்லாம் முடித்த பிறகு, உங்களுக்கு பல்வேறு துறைகள், முகமைகள் மூலம் வந்திருக்கும் மின்னணு ஆவணங்களை நீங்கள் பார்க்க முடியும்.
 • உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு வரக்கூடிய வேண்டுகோள்களை ஏற்று உங்களது மின்னணு ஆவணங்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
 • இத்தகைய நடைமுறைகள் வெற்றிகரமாக நிறைவேறியதும் ஆதார் OTP மூலமாகவோ அல்லது பயன்படுத்துபவர் பெயர், கடவுச் சொல் ஆகியவற்றை அளித்தோ அல்லது சமூக வலைத்தள கணக்குகளின் மூலமாக உள்நுழைந்தோ உங்கள் மின்னணுப் பெட்டகக் கணக்கை நீங்கள் அணுகலாம்.

வழங்குநர்களுக்கு

 • வழங்குநர்கள் மின்னணுப் பெட்டக அமைப்பில் பதிவு செய்து வழங்குநர் அடையாளக் குறியைப் பெறவேண்டும்.
 • வழங்குநர்கள் ID கிடைத்த பிறகு, பெட்டகச் சேவை வழங்கும் அமைப்பின் API மூலம் தாங்கள் அனுப்பவிரும்பும் பெட்டகத்திற்கு XML வடிவில் மின்னணு ஆவணங்களை அனுப்பலாம்.
 • பெட்டகத்திற்கு அனுப்புவதற்காக பதிவேற்றம் செய்யப்படும் ஒவ்வொரு ஆவணத்திற்கு தனி URI இருக்கும். வழங்குநரின் அடையாளமும் இருக்கும்.  ஆதார் எண்ணின் அடிப்படையில் சென்று சேர வேண்டிய நகருக்கு ஆவணம் அனுப்பப்படும்.

வேண்டுகோள் வைப்பவர்களுக்கு

 • வேண்டுகோளை முன்வைப்பவர்களும் முன்கூட்டியே மின்னணுப் பெட்டக அமைப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
 • கோரப்படும் ஆவணம் ஆவண URI இன் துணைகோண்டு அணுகுப்பாதையின் வழியாக பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளப்படலாம்.

குடிமக்கள் மின்னணுப் பெட்டகத்தின் வெவ்வேறு உட்கூறுகள்

ஒவ்வொரு பெட்டகமும் பின்வரும் பிரிவுகளைக் கொண்டிருக்கும்

I) எனது சான்றிதழ்கள் - இதில் இரண்ட உட்பிரிவுகள் உள்ளன.

a. மின்னணு ஆவணங்கள் - பெட்டகம் வைத்திருப்பவர்களுக்கு அரசுத் துறைகளும், பிற முகமைகளும் வழங்கும் ஆவணங்கள் URI LINK உடன் ஒவ்வொரு ஆவணமும் பின்வரும் தகவல்களைக் கொண்டிருக்கும்

 • URI
 • ஆவணத்தின் பெயர்
 • வழங்கப்பட்ட நாள்
 • பகிர்வு விருப்பம்

b. பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள்

பெட்டகம் வைத்திருப்பவர் பதிவேற்றம் செய்திருக்கும் அனைத்து ஆவணங்களும் இந்த உட்பிரிவில் காணக்கிடைக்கும். ஒவ்வொரு ஆவணமும் பின்வரும் தகவல்களைக் கொண்டிருக்கும்.

 • ஆவணத்தின் பெயர்
 • பதிவேற்றிய நாள்
 • ஆவணத்தின் நிலை : மின்னணு கையொப்பமிடப்பட்ட ஆவணமா, இல்லையா என்பது
 • நடவடிக்கை : மின்னணுப் பெட்டகத்திலிருந்து ஆவணம் எதனையும் நீக்கவோ, அழிக்கவோ வேண்டுமா என்பது
 • விவரங்கள்
 • பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆவணத்தை மின்னஞ்சல் மூலம் பகிர்தல்.
 • மின்னணு கையொப்பம் : மின்னணு கையொப்பமிடப்பட்ட ஆவணம் குறியிட்டு காண்பிக்கப்படும்.

II) என்னுடைய விவரங்கள்

இந்தப் பிரிவில் குடிமகனின் அனைத்து விவரங்களும் (பெயர், பிறந்த நாள் பாலினம், வசிப்பிட முகவரி, மின்னஞ்சல், கைபேசி எண்) UIDAI தரவுகளில் உள்ளபடி இடம் பெற்றிருக்கும்.

III) என்னுடைய வழங்குநர்

ஆவணங்களை வழங்குபவரின் பெயர், வழங்கப்பட்டுள்ள ஆவணங்களின் எண்ணிக்கை போன்றவை இந்தப் பிரிவில் காட்சிப்படுத்தப்படும்

IV) என்னுடைய வேண்டுகோளாளர்

இந்தப் பிரிவில் வேண்டுகோளை முன்வைப்பவரின் பெயர்,  வேண்டப்படும் ஆவணங்களின் எண்ணிக்கை ஆகியன காட்சிப்படுத்தப்படும்.

V) விவரப்பகுதி

பதிவு செய்து கொண்டுள்ள அனைத்து வழங்குநர்கள் வேண்டுகோளாளர்களின் முழு பட்டியலும் URL உடன் காணப்படும்.

மின்னணுப் பெட்டகத்தில் ஆவணத்தை பதிவேற்றுவது எப்படி?

பதிவேற்ற வசதி “என்னுடைய சான்றிதழ்கள்” என்ற பிரிவில் செய்யப்பட்டுள்ளது.

 1. திரையில் தோன்றும் நிரலில் இருந்து ஆவண வகையை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் (SSLC சான்றிதழ், HSC சான்றிதழ். PAN CARD, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை)
 2. அந்த ஆவணத்திற்கு ஒரு பெயரைக் கொடுங்கள்.
 3. நீங்கள் தெரிவு செய்த ஆவண வகைக்கேற்ப மற்ற விவரங்களையும் நீங்கள் நிரப்ப வேண்டும்.
 4. உங்களுடைய கணினியில் இருந்து அந்த ஆவணத்தை தெரிவு செய்திடுங்கள்.  நீங்கள் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு ஆவணமும் 1 MB அளவிற்கு மிகாமல் இருக்க வேண்டும். PDF, JPG, JPEG, PNG, BMP, GIL வகை கோப்புகள் மட்டுமே ஏற்கப்படும்.
 5. உங்கள் ஆவணம் பற்றிய விவரத்தை 50 எழுத்துகளுக்கு மிகாமல் அளித்திடுங்கள்.
 6. பதிவேற்றுக (UPLOAD) என்ற பொத்தானை சொடுக்குங்கள். பதிவேற்றம் வெற்றிகரமாக முடிந்தவுடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் பட்டியலில் உள்ள இந்த ஆவணமும் இடம்பெற்றிருக்கும்.

மின்னணு பெட்டகத்தின் மூலம் ஆவணங்களை பகிர்வது எப்படி?

 • "மின்னணு ஆவணங்கள்” உட்பிரிவிலோ அல்லது “பதிவேற்ற ஆவணங்கள்” உட்பிரிவிலோ URI குறிப்பிடப்பட்டிருக்கும் பகிர்க (Share)  என்று எழுதப்பட்டிருக்கும் பொத்தானை அழுத்த வேண்டும்.
 • ஒரு உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் யாருக்கு ஆவணத்தை அனுப்ப வேண்டுமோ அவரது மின்னஞ்சல் முகவரியை பதிவிட்டு share பொத்தானை அழுத்த வேண்டும்.
 • ஆவணம் மின்னஞ்சல் மூலமாக போய் சேர்ந்துவிடும். ஆவணத்தைப் பெறுபவரின் மின்னஞ்சலில் அனுப்பியவர் பெயர், ஆதார் எண், அதன் வகை பற்றிய விவரம் ஆகிய அனைத்தும் இருக்கும்.
 • ஆவணத்தைப் பெற விழைபவர் அதற்கென தரப்பட்டுள்ள URI LINK ஐ பயன்படுத்தி ஆவணத்தைப் பெறலாம்

இது எப்படி பயன்படப்போகிறது?

சான்றிதழை ஒவ்வொரு முறையும் அப்படியே அனுப்புவது தவிர்க்கப்படும். மின்னணு ஆவணத்திற்கு உண்மைத் தன்மை கிட்டும். அரசாங்கம் வழங்கும் ஆவணங்களை தேவைப்படுவோர் மட்டுமே பார்க்க வசதி பிறக்கும். அரசுத்துறைகள், நிறுவனங்களின் நிர்வாக செலவினங்களைக் குறைக்கும்.  குடிமக்கள் சேவைகளை எளிதில் பெறுவதற்கு உதவும்.


மின்னணுப்பெட்டகம்

பதிவு செய்ய

மின்னணுப் பெட்டகம் உதவி மைய மின்னஞ்சல் : support@digitallocker.gov.in

ஆதாரம் : https://digilocker.gov.in/

3.04
நெவிகடிஒன்
Back to top