பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை / தேசிய கல்வி உதவி தொகைகள் வலைதளம்
பகிருங்கள்

தேசிய கல்வி உதவி தொகைகள் வலைதளம்

தேசிய கல்வி உதவி தொகைகள் வலைதளம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

மாணவர்கள் கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பித்தல், விண்ணப்பங்களைப் பெறல், பரிசீலனை செய்தல், உதவித்தொகை வழங்கும் ஆணையிடல், உதவித்தொகையைப் பட்டுவாடா செய்தல் ஆகிய அனைத்திற்கும் ஒற்றை இடத்தீர்வு வழங்கும் களமாக தேசிய கல்வி உதவித்தொகை நுழைத்தளம் (National Scholarship Portal) விளங்குகிறது. தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின்படி தீவிர இயக்கமாக மாற்றிச் செயல்பட்ட இந்தத் திட்டத்தில் தற்போது ஒன்பது அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் 21 பதிவுபெற்ற திட்டங்கள் இடம்பெற்றுள்ளன

இந்த ஏற்பாடு காரணமாக, மாணவிகள் தமது கல்வி உதவித் தொகையைப் பெறுவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. நடைமுறைகள் சுலபமாக்கப்பட்டு,  துரிதமாக வேலைகள் நடந்து, எவ்விதக் குறையும் இன்றி உதவித் தொகைகள் பயனாளி மாணவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றன.

இலக்குகளும் பயன்களும்

 • உரியகாலயத்தில் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை கிடைக்க செய்வது
 • மத்திய-மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவித்தொகைகளைப் பெற விண்ணப்பிக்கப் பொதுவான ஒரே நுழைதளம்.
 • மாணவர்கள் பற்றிய விரிவான வெளிப்படையான தரவுகள்
 • ஒரே மாணவரின் ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கான விண்ணப்பங்களைத் தனித்தனியாகிப் பரிசீலிக்க வேண்டியதில்லை.
 • பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் மற்றும் தகுதிகளை ஒன்றிணைத்தல்.
 • பயனாளி மாணவர்களுக்கு நேரிடையாக வங்கிக்கணக்கில் வரவு வைத்தல்.
 • எல்லா வகையான கல்வி உதவித்தொகைக்கும் பொதுவான ஒரே விண்ணப்பம்.
 • மாணவர்கள் இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி.
 • கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான நியதிகளின் அடிப்படையில் எந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கணினியே அறிவுறுத்தும் ஏற்பாடு.
 • ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைச் சமர்பிக்க முடியாது.
 • விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் அது பற்றிய விவரங்கள் குறுந்தகவல்  அல்லது மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கப்படும்.
 • மாணவர்கள் தாம் எந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை  பெறலாம் என்று தெரிந்து கொள்ளும் வசதி.
 • ஆன்லைன் பதிவு மற்றும் சமர்ப்பித்தல்.
 • விண்ணப்பம் எந்தக் கட்டத்தில் உள்ளது என்று தெரிந்துக் கொள்ளும் வசதி.
 • உதவித்தொகை பெறப்பட்ட / கணக்கில் வரவு வைக்கப்பட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ளும் வசதி.
 • புகார்களை பதியும் வசதி / புகார்களைப் பற்றிய மேல் நடவடிக்கைகளின் நிலவரம்பு பற்றி அறியும் வசதி.
 • கல்வி நிறுவனங்கள் தமது நிறுவனத்தையும்,  நிறுவனத்தில் வழங்கப்படும் பாடத்திட்டங்கள் விவரத்தையும் பதிவு செய்யும் வசதி.
 • ஆன்லைனில் சமர்ப்பித்து மாணவர்களின் விண்ணப்பங்களைக் கல்வி நிறுவனங்கள் பரிசீலித்து,  மேல்நடவடிக்கைக்கு அனுப்பும் வசதி.
 • மாநில அரசுகள் மாணவர்கள் சமர்ப்பிக்கும் விவரங்களைச் சரிபார்க்கும் வசதி.
 • விண்ணப்பங்களைப் பரிசீலித்து, பணத்தை அனுப்பும் வசதி.
 • பல்வேறு கல்விஉதவித் தொகை திட்டங்களைப் பற்றியும் மத்திய அரசு நேரடியாகக் கண்காணிக்கும் வசதி
 • உதவித்தொகைத் திட்டங்களுக்குத் தேவையான பணத்தை வழங்குவதற்கும், செலவினங்களைக் கண்காணிக்கவுமான வசதி.

விண்ணப்பித்தலும் புதுப்பித்தலும்

முதல் கட்டமாக,  மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை நுழைதளத்தில் 'மாணவர் பதிவு பக்கத்தில்' தமது விவரங்களைப் பதியவேண்டும்.

மாணவரின் பெயர், வசிக்கும் மாநிலம், புதிய விண்ணப்பமா அல்லது புதுப்பிக்கும் விண்ணப்பமா,  தந்தை / தாய் / பாதுகாவலர் பெயர், பிறந்த தேதி, சாதி, இனம், ஆதார் எண், மின்னஞ்சல்  முகவரி, கைபேசி எண், மாணவர் அடையாள அட்டை போன்ற விவரங்களைப் பதிந்து, சேமிக்க (SAVE) வேண்டும்.

சேமித்த பிறகு, மாணவர்களுக்குத் தற்காலிக அடையாள எண் (Temporary Id) ஒன்று வழங்கப்படும். அதற்குப் பிறகு பதியும் விவரங்களுக்கு மாணவர்கள் இந்தத் தற்காலிக அடையாள எண்ணையும், தமது பிறந்த தேதியையும் பயன்படுத்த  வேண்டும்.

விவரங்களைப் பதிந்து சமர்பித்தபின்னர், நிரந்தரப்பதிவு அடையாள எண் (Permanent Registration Id) மாணவர்களுக்குக் கிடைக்கும். அதன் பிறகு தமது விண்ணப்பங்கள் எந்தக்கட்டத்தில் உள்ளது என்று தெரிந்து கொள்ளவும், அடுத்தடுத்த ஆண்டுகளில் விண்ணப்பங்களைப் புதுப்பிக்கவும் நிரந்தர அடையாள எண்ணைப் பயன்படுத்த வேண்டும்.

புதுப்பிக்கும் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வங்கிக்கணக்கு எண் மற்றும் பிறந்த தேதி விவரங்கள் கேட்கப்படும். முந்தைய ஆண்டில் தரப்பட்ட நிரந்திர அடையாள எண் தெரியவில்லை என்றால்,  'அடையாள எண் மறந்து போனது" என்ற இணைப்பின் மூலம் திரும்பவும் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.

பள்ளி / கல்லூரி நிறுவனப் பதிவு

https://scholarships.gov.in/ என்ற நுளைவுதள முகவரிக்குச் செல்லவும்.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று, "find school/college என்ற இடத்தில் கிளிக்செய்து, உரிய கோடு எண் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அந்தப்பட்டியலில் பள்ளி/கல்லூரியின் பெயர் இல்லை என்றால், Register school/college என்ற பெட்டியில் கிளிக் செய்யவும். வெளிப்படும் விண்ணப்பப் படிவத்தில் விவரங்களை நிரம்பிச் சமர்ப்பிக்கவும்.

கல்வி நிறுவனங்களின் பதிவு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதும்,  சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஆமோதிப்பு  அலுவலர்,  விவரங்களைச் சரிபார்த்து அனுமதி வழங்குவார்.

அனுமதி வழங்கியதும், நுழைவுக்கான அடையாளக் குறியீடு, சந்தேகக் குறியீடு இரண்டும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்குக் குறுந்தகவலாக அனுப்பப்படும்.

ஆதாரம் : தேசிய கல்வி உதவித்தொகை வலைதளம்

3.06382978723
நெவிகடிஒன்
Back to top