பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / அரசு திட்டங்களும் கொள்கைகளும் / பிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம்
பகிருங்கள்

பிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம்

பிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம் (பிரதமமந்திரி உஜ்வாலா யோஜ்னா) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கும் பெண்களுக்கு சமையல் எரிவாயு வழங்கும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் திட்டமாகும் இது.

திட்டத்தின் தேவை

இந்தியாவில் ஏழைகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கிடைப்பதில்லை. எரிவாயு உருளைகளில் பெரும்பகுதி நகரங்களிலும், சிறு நகரங்களிலும் உள்ள வசதி படைத்தோருக்கும், மத்தியதர வர்க்கத்தினருக்கும் மட்டுமே பரவலாக வழங்கப்பட்டு வருகிறது. விறகு, வறட்டி  போன்ற பாரம்பரிய எரிபொருள்களைக் கொண்டு சமையல் செய்வதனால் பெண்கள் மோசமான உடல் நல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி தூய்மையற்ற எரிபொருள்களைப் பயன்படுத்துவதன் காரணமாக இந்தியாவில் 5 லட்சம் பேர் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே ஏற்பட்டு விடும் பெரும்பாலான மரணங்கள் இதயநோய், பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு, நுரையீரல் புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்களினால் ஏற்பட்டுள்ளன. நுரையீரல், சுவாச நோய்களுக்கு ஆளாகும் சிறுகுழந்தைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்திருக்கிறது. வீட்டுக்குள் புழங்கும் தூய்மையற்ற காற்று இதற்கு ஒரு காரணமாகிறது. வல்லுநர்களின் கூற்றுப்படி, வீட்டுக்குள் இருக்கும் திறந்த அடுப்பில் இருந்து வெளியேறும் புகையை சுவாசிப்பது ஒருமணி நேரத்தில் 400 சிகரெட்டுகளைப் புகைப்பதற்கு சமமானதாகும்.

வறுமைக் கோட்டிற்குக் கீழிருக்கும் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு தருவதன் மூலம் நாட்டிலுள்ள அனைவருக்கும் சமையல் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.  இந்த முயற்சி பெண்களுக்கு அதிகாரம் வழங்கி உடல் நலத்தையும் பாதுகாக்கும். சமையல் நேரத்தை மிச்சப்படுத்தி சமையலுக்காக செலவிடப்படும் மட்டு மீறிய உழைப்பையும் குறைக்கிறது.  சமையல் எரிவாயு வழங்கும் செயல் முறையில் ஊரக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

பயனாளிகள்

வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ள 5 கோடி குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. தகுதியுள்ள குடும்பங்களைக் கண்டறியும் முயற்சி மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்படும். சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்பு SECC-2011 (வாரகம்) படி குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு இடர்ப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள நபர் அல்லது குடும்பம் வறுமைக் கோட்டிற்கு (BPL) கீழ் இருப்பதாகக் கருதப்படும் நகர்புற ஏழைகளை அடையாளம் காண்பதற்கு தனிவகையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் குடும்பங்களில் இருந்து மட்டுமே பயனாளிகள் தெரிவுசெய்யப்படுவார்கள் என்றாலும் சமூகத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ்மக்கள், நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு முன்னுரிமை தரப்படும். BPL குடும்பங்களுக்கு புதிய இணைப்புகள் வழங்கும்போது ஜனவரி 1, 2016 நாளின்படி குறைவான எரிவாயு இணைப்புகளைக் கொண்டுள்ள மாநிலங்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தில் இருக்கும் பெண்ணின் பெயரில் வழங்கப்படும்.

திட்டத்தின் கால அளவு

இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறைப்படுத்தப்படும், 2016-2017, 2017-2018, 2018-2019 நிதியாண்டுகளில் நாடு முழுவதும் நடைமுறையில் இருக்கும்.

குடிமக்களுக்கு கிடைக்கும் ஆதாயங்கள்

இந்தத் திட்டத்தின் கீழ் 5 கோடி BPL குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு ஒவ்வொரு இணைப்பிற்கும் ரூ.1600 நிதி உதவி வழங்கப்படும்.  நிரிவாகச் செலவிற்காக இத்தொகையில் எரிவாயு உருளை, ரெகுலேட்டர், விவரப்புத்தகம், பாதுகாப்பான எரிவாயுக் குழாய் ஆகியவற்றை வழங்குவதும் அடங்கும்.

இந்தத் திட்டத்திற்கான வரைமுறைகளை செயல்படுத்துதல்

  • வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன்னிடம் சமையல் எரிவாயு இணைப்பு இல்லை என்றால் அதனைக் கோரி விண்ணப்பிக்கலாம்.  இதற்காக பிரத்யேகமாக உள்ள விண்ணப்பப்படிவம் சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடம் கிடைக்கும்.  நிறைவு செய்த விண்ணப்பத்தை எரிவாயு முகவரிடம் கொடுக்கும் போது முகவரி, ஜன்தன் வங்கிக் கணக்கு, ஆதார் எண் ஆகியவற்றை அந்தப் பெண் குறிப்பிட வேண்டும். (ஆதார் எண் இல்லாதவர்களுக்கு எண் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்)
  • சமையல் எரிவாயு கள அலுவலர்கள் விண்ணப்பத்தை SECC-2011 தரவுகளுடன் ஒப்பிட்டுக் காண்பார்கள். விண்ணப்பதாரர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் நிலையில் வாழ்பவர் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு பெயர், முகவரி போன்ற விவரங்களை இதற்கென ஒருவாக்கப்டடுள்ள OMC இணையதளத்தில் சேர்ப்பிப்பார்கள்.
  • OMC க்கள் புதிய எரிவாயு இணைப்பு கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மின்னணு இயக்க முறையில் தளராத கவனத்துடன் மேற்கொள்ளும் பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு தகுதியானவர்களுக்கு புதிய எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
  • இணைப்புக் கட்டணத்தை அரசே ஏற்கும். சமையல் அடுப்புக்கும், முதல் எரிவாயு உருளைக்குமான தொகையை மாதத் தவணையில் செலுத்துவதற்கான வாய்ப்பை OMC தரும். ஒவ்வொரு எரிவாயு உருளைக்கும் தரப்படும் மானியத்தொகையிலிருந்து இந்தத் தவணை கழித்துக் கொள்ளப்படும். மாநில அரசாங்கமோ, தொண்டு நிறுவனங்களோ, தனிநபர்களோ அடுப்பிற்கும், முதல் எரிவாயு உருளைக்கும் ஆகக்கூடிய செலவை ஏற்றுக் கொள்ள விரும்பினால் OMC  இன் ஒருங்கிணைப்புடன் அவ்வாறு செய்யலாம். ஆனால் இது பிரதமமந்திரி உஜ்வாலா யோஜ்னா திட்டத்தின் கீழ் மட்டுமே பெட்ரோலியம் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படும். வேறு எந்தத் திட்டத்தின் கீழும் இந்த உதவியைச் செய்ய இயலாது.
  • நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்களை நடத்தி இணைப்புகளை OMC வழங்கலாம். ஆனால் இவை, பொதுமக்கள் பிரதிநிதிகள், அந்தந்தப் பகுதியில் உள்ள பெரிய மனிதர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற வேண்டும்.
  • வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு வெவ்வேறு அளவுடைய எரிவாயு உருளைகளை (14.2 kg, 5 kg) கள நிலவரத்திற்கேற்ப வழங்குவதற்கு இந்தத்திட்டம் வகை செய்யும்.
  • இந்தத்திட்டத்தின் கீழ் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் மலைவாழ் மக்களுக்கும் நன்மை கிடைக்கும். வடகிழக்கு மாநிலங்கள் முன்னுரிமை மாநிலங்களாக நடத்தப்படுகின்றன. ஜம்மு காஷ்மீர், உத்ராகண்ட், சிக்கிம், அசாம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், அருணாசலபிரதேசம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதிலுள்ள இடையூறுகளை இத்திட்டம் திறம்படகளையும்.
  • மேலும் தகவல்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்.1800233555 அல்லது 1966 (24X7 உதவி எண் - LPG வாடிக்கையாளர்களுக்கு)

ஆதாரம் : http://www.pmujjwalayojana.com/

2.95161290323
நெவிகடிஒன்
Back to top